திருடனுக்கும் காதல் மலரும் (தமிழ் சிறு காதல் கதைகள்)

திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இதனுடைய பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.

.                  (Tamil love stories)

யார் அந்த பையன் என்று மாலினியின் தந்தை கேட்டார். நீங்கள் யாரைப் பற்றி கேட்கிறீர்கள் அப்பா என்று மாலினி கேட்டாள். அப்பாவிடம் பொய் சொல்லாதே. நீ ஒரு பையனுடன் கோவிலில் நின்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாய். அந்தப் பையன் உனக்கு திருநீர் வைத்துவிட்டான். நான் இதைப் பார்த்தேன்.
மாலினியின் தாய் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். ஆம் நான் இவர்கள் இருவரையும் கோயிலில் பார்த்தேன் என்று மாலினியின் தந்தை கூறினார்.(tamil love stories)

அதற்கு மாலினியின் தாய் ஆம் நமது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முறை என்னிடம் கூறினார். நானும் சரி கூட வேலை பார்ப்பவர் என்று நினைத்துக் கொண்டேன். என்று மாலினியின் தாயார் கூறினார். சொல் மாலினி அது யார் என்று அவர் தந்தை கேட்டார். மாலினியின் மனதில் உண்மையை சொல்லி விடலாமா? இல்லை வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். சரி சொல்லி விடலாம் என்று நினைத்தால். சொல் மாலினி அது யார்? என்று அவர் தந்தையும் தாயும் மீண்டும் மீண்டும் கேட்டனர். நான் சொல்கிறேன் அப்பா என்று மாலினி கூறினாள். அவர் பெயர் சுருளி என்று மாலினி கூறினாள்.(tamil love stories)

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றோம் என்று மாலினி கூறினாள். இதைக் கேட்ட மாலினியின் தந்தை மற்றும் தாய் என்ன சொல்கிறாய் நீ என்று கோபமாக கேட்டனர். மாலினியின் தந்தை எதுவும் பேசாமல் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். மாலினியின் தாய் ஏன் இவ்வாறு செய்தாய் என்று அழுதபடி கேட்டார். அதற்கு மாலினி அவர் மிகவும் நல்லவர் அப்பாவைப்போல் நல்ல குணம் உடையவர் என்று கூறினாள். மாலினி அந்த அறைக்குச் சென்று அப்பா வெளியே வாருங்கள் தங்களுடன் நான் பேச வேண்டும் என்று கூறினாள். நான் உன்னுடன் பேச மாட்டேன் என்று அவரது தந்தை கூறினார். இல்லையப்பா நான் உங்களுடன் கண்டிப்பாக பேச வேண்டும் என்று மாலினி மீண்டும் மீண்டும் கூறினாள்.(tamil love stories)

கதவைத்திறந்து மாலினியின் தந்தை வெளியே வந்தார். என்னிடம் என்ன பேச வேண்டும் என்று கோபமாக கேட்டார். நீங்கள் ஒரு முறையாவது அவர்களை சந்தித்து பாருங்கள் கண்டிப்பாக அவரை உங்களுக்கு பிடிக்கும் என்று மாலினி மன்றாடினாள். நீங்களும் அம்மாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டீர்கள். என்று மாலினி கூறினாள். ஆம் அதற்கு என்ன என்று கோபமாக அவர் அப்பா கேட்டார். ஒருமுறை அவரை வந்து சந்தியுங்கள் அப்பா என்று மீண்டும் மீண்டும் கூறினாள். சரி நாளை நான் அவரை சந்திக்கிறேன் என்று மாலினியின் தந்தை கூறினார். மிகவும் நன்றி அப்பா என்று மாலினி கூறினாள்.(tamil love stories)

இரவு நேரம் வந்தது மாலினி சாப்பிடாமல் தனது அறைக்குச்சென்று பூட்டிக் கொண்டாள். மாலினியின் தாய் நாளைக்கு அந்தப் பையனைப் பார்த்து என்ன பேசப் போகிறீர்கள் என்று கேட்டாள். நாளைக்கு நான் சென்று அந்தப் பையனை நேரில் விசாரிக்கிறேன். என்று கூறினார். இந்தப் பையன் நல்லவனாகவும் நல்ல குணங்கள் கொண்டவனாக இருந்தால் இவர்களின் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என்று என் மாலினியின் தந்தை கூறினார். உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் என்று மாலினியின் தாய் கூறினார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் மாலினி எப்பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருந்தாள்.(tamil love stories)

காலைப் பொழுது விடிந்தது மாலினி வழக்கம்போல புறப்பட்டு தயாராக நின்றாள். அம்மா அப்பா தயார் ஆகி விட்டாரா என்று மாலினி கேட்டாள். தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று அவரது தாய் கூறினார். இருவரும் புறப்பட்டு சாப்பிட்டு பேருந்து நிலையத்திற்கு சென்றனர். மாலினியின் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியாமல் சுருளி வழக்கம் போல மாலினியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். மாலினி உடன் அவரது தந்தை வருவதைப் பார்த்தான். சுருளி என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு நின்றபடியே இருந்தான். சுருளியின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒருவேளை நாம் காதலிக்கும் செய்தி அவர்களுக்கு தெரிந்து விட்டதா! என்று ஒருபக்கம் நினைத்துக் கொண்டிருந்தான்.(tamil love stories)

இருவரும் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். சுருளி மாலினியை கண்டதும் சந்தோஷமடைந்தான். ஆனால் மாலினி உடன் அவரது தந்தை வந்ததை கண்டு திகைத்து நின்றான். மாலினி சுருளி இடம் இவர்தான் எனது தந்தை என்று அறிமுகப்படுத்தினாள். அப்பா இவர்தான் சுருளி என்று கூறினாள். என்ன ஆயிற்று என்று சுருளி கேட்டான். நம் காதலிக்கும் செய்தி வீட்டிற்கு நான் சொல்லிவிட்டேன் என்று மாலினி கூறினான். சுருளி நான் உன்னிடம் தனியாக பேசவேண்டும் என்று மாலினியின் தந்தை கூறினார். சரி வாருங்கள் பேசலாம் என்று சுருளி கூறினார். இங்கு நின்று பேச வேண்டாம் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு சென்று விடலாம் என்று மாலினியின் தந்தை கூறினார்.(tamil love stories)

மூன்று பேரும் கோவிலுக்குள் சென்றனர். சுருளி மாலினியின் தந்தை இருவரும் தனியாக ஒரு புறம் அமர்ந்தனர். மாலினி ஒருபுறம் தனியாக அமர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள். மாலினியின் தந்தை சுருளி இடம் நீங்கள் யார் உங்களைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டார். சுருளி அவனைப் பற்றியும் அவன் வேலை செய்யும் இடத்தைப் பற்றியும் கூறினான். சுருளி சொல்வதையெல்லாம் மாலினியின் தந்தை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒருபுறம் மாலினி இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியாமல் குழப்பமாக கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள்.(tamil love stories)

சுருளி நீ உன்னைப் பற்றி கூறிவிட்டாய் நீ ஒரு கார் ஓட்டுனர் சரியா என்று மாலினியின் தந்தை கேட்டார். ஆம் என்று சுருளி பதில் கூறினார். உனக்கு அப்பா அம்மா சொந்த பந்தங்கள் என்று யாரும் கிடையாது. உனக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இருக்கிறதா என்று மாலினியின் தந்தை கேட்டார். ஆம் எனக்கு யாரும் இல்லை, சொந்த வீடுகூட கிடையாது! என்று சுருளி பதில் கூறினான். பிறகு எந்த தைரியத்தில் எனது மகளை நீ காதலிக்கிறாய் என்று மாலினியின் தந்தை கோபமாக கேட்டார். மாலினியை எனக்கு பார்த்ததும் பிடித்தது. ஒரு மாத காலம் அவளின் பின்னால் சுற்றித் திரிந்தேன். பிறகுதான் அவளிடம் பேச ஆரம்பித்தேன். மாலினி என்னிடம் பேச மிகவும் தயங்கினாள்.(tamil love stories)

எனது நல்ல குணங்களைக் கண்டு தான் மாலினி என்னைப் பிடித்திருக்கிறது என்று கூறினாள். அவள் என்னை பிடித்து இருக்கிறது என்று சொல்லவே நீண்டகாலம் எனக்கு ஆகிவிட்டது. என்று சுருளி கூறினான். உங்களின் காதல் ஒரு பக்கம் இருக்கட்டும் நீ எப்படி என் மகளை வைத்து காப்பாற்றுவாய் என்று கேட்டார். உங்களின் மகளை நான் நல்லபடியாக  வைத்துக் காப்பாற்றுவேன் என்று சுருளி தன்னம்பிக்கையுடன் கூறினான். இதைக்கேட்ட மாலினியின் தந்தை என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரு பத்து நிமிடங்கள் அவகாசம் கொடு என் பதிலை கூறுகிறேன் என்று மாலினியின் தந்தை  கூறினார். மாலினியின் தந்தை யோசிக்க ஆரம்பித்தார்.(tamil love stories)

ஒருபுறம் மாலினி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் பதட்டமாக இருந்தால். சுருளி இவர் என்ன கூற போகிறார் என்று தெரியாமல் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான். ஒருபுறம் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாலினி என்ன ஆனது என்று கை சைகையால் கேட்டாள். சுருளி அதற்கு சற்று பொறுமையாக இரு என்று பதில் கூறினான். மாலினியின் தந்தை ஒரு பக்கம் நின்று யோசித்துக் கொண்டிருந்தார். சுருளி இடம் அவர் வந்தார் நான் யோசித்து விட்டேன். எனது மகளை உனக்கு கட்டி வைக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்று கூறினார். நீ என் மகளை கைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தால்......( தொடரும்)

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.

மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1

Post a Comment

0 Comments