திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)
இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இதனுடைய பகுதி 1 மற்றும் 2 ,3 கதைகளின் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.
(tamil love stories)மாலினி சுருளி இடம் நீ மது மற்றும் புகை இந்தப் பழக்கம் உனக்கு இருக்கிறதா என்று கேட்டாள். நான் எப்போதுமே மது மற்றும் புகைப்பழக்கம் என்னிடம் இல்லை. மது மற்றும் புகைப் பழக்கம் எனக்கு பிடிக்காது என்று சுருளி கூறினான். இதைக் கேட்ட மாலினிக்கு மிகவும் சந்தோஷம். இருவரும் அந்த பூங்காவில் இருந்து வெளியே வந்தனர். வழக்கம்போல தனது பணிக்காக பேருந்தில் ஏறி வேலைக்கு சென்றாள். சுருளி தனது பணிக்காக வேலைக்கு சென்றான். ( Tamil love stories)
இரண்டாம் நாள் அன்று சுருளி தனது வேலையை நல்லபடியாக முடித்தான். அவரது காரில் பயணித்த பயணிகள் அனைவரும் சுருளி நண்பருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கார் ஓட்டுநர் மிகவும் சிறப்பாக காரை இயக்கினார் என்று தெரிவித்தனர். இதைக் கேட்ட சுருளியின் நண்பர் சுருளியை அழைத்து பாராட்டினார். வேலைக்கு வந்த இரண்டு நாட்கள் தான் ஆகிறது அதற்குள் உனக்கு பயணிகளிடம் நல்ல பெயர் கிடைத்துவிட்டது என்று வெகுவாக பாராட்டினர். இதை கேட்ட சுருளி சந்தோஷமடைந்தான். மாலைப் பொழுதில் வழக்கம் போல இருவரும் சந்தித்துக் கொண்டனர். தனது நண்பர் என்னை பாராட்டினார் என்று சந்தோஷமாக கூறினான்.( Tamil love stories)
இருவரும் சந்தோசமாக காதலித்துக் கொண்டிருந்தனர். இப்படியே ஒரு மாதம் சென்றது. தனது முதல் மாத சம்பளத்தை வாங்கி மாலினிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சுருளி ஆசைப்பட்டான். அன்று சம்பளம் வரும் நாள். காலைப் பொழுதில் சுருளி மாலினியிடம் இன்று எனக்கு முதல் மாத சம்பளம் வருகிறது கண்டிப்பாக நான் உனக்கு ஏதாவது வாங்கித் தரவேண்டும் என்று சொல்லி கூறினான். உனக்கு என்ன வேண்டுமோ கேள் என்று சுருளி கேட்டான். இதைக்கேட்ட மாலினி நீ அன்பாக எதை வாங்கி கொடுத்தாலும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று பதில் கூறினாள். சுருளி சரி என்று கூறினான். இருவரும் தங்களது பணிகளுக்கு சென்றனர்.(tamil love stories)
சுருளி அன்று முழுவதும் எப்பொழுது மாலை நேரமாகும் என்று காத்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக மாலைப்பொழுது வந்தது சுருளி தனது முதல் மாத சம்பளத்தை வாங்கினான். முதல் மாத சம்பளத்தை வாங்கி கொண்டு மாலினிக்கு ஒரு புடவையை வாங்கி கொடுக்கலாம் என்று முடிவு செய்தான். புடவைக் கடைக்கு சென்றான். மாலினிக்கு எந்த நிறம் பிடிக்கும் என்று சுருளிக்கு தெரியாது. புடவைக் கடைக்கு சென்றதும் பட்டுப்புடவையை காட்டுங்கள் என்று கூறினான். அதில் பச்சை நிறத்தில் ஒரு புடவை வாங்கினான். அதை எடுத்துக்கொண்டு இருவரும் வழக்கம்போல் சந்திக்கும் இடத்திற்கு சென்றான். சுருளி வருவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது.( Tamil love stories)
மாலினி சுருளிக்காக காத்துக் கொண்டிருந்தாள். சுருளி மாலினியை கண்டதும் மிகவும் நேரம் ஆகிவிட்டதா என்று கேட்டான். அதற்கு மாலினி நீ எனக்காக எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறாய் நான் உனக்காக சிறிது நேரம் கூட காத்துக்கொண்டு இருக்க மாட்டேனா என்று மாலினி கூறினாள். இதைக் கேட்ட சுருளி நமக்காகவும் ஒரு பெண் காத்து கொண்டு இருக்கிறாளே என்று சந்தோசம் அடைந்தான். நான் எனது முதல் மாத சம்பள பணத்தில் உனக்காக ஒரு புடவை வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறேன் என்று சந்தோசமாக கூறினான். எங்கே அதை காட்டு என்று மாலினி கேட்டாள். சுருளி அந்த புடவையை எடுத்து மாலினி கையில் கொடுத்தான்.( Love story)
மாலினி எனக்கு பச்சை நிறம் பிடிக்கும் என்று உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டாள். அதற்கு சுருளி இந்த கலர் உனக்கு கண்டிப்பாக பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வாங்கிக்கொண்டு வந்தேன் என்று கூறினார். எனக்கு கண்டிப்பாக தெரியும் எனக்கு பிடித்ததை தான் வாங்கி கொண்டு வருவாய் என்று மாலினி கூறினாள். அந்த பட்டுப் புடவையின் விலையைப் பார்த்தால் புடவையின் விலை சுருளி பாதி சம்பளம் ஆகும். இதைப் பார்த்துவிட்டு மாலினி ஏன் அதிக விலைக்கு புடவையை வாங்கினாய் என்று கேட்டாள். அதற்கு சுருளி எனக்கு அம்மா என்று யாரும் இல்லை. என் அம்மாவிற்கு நான் புடவை எடுப்பதற்கு விலையை பார்ப்பேனா என்று சுருளி சொன்னான்.( Love story)
இதைக் கேட்ட மாலினியின் கண்களில் தண்ணீர் வந்தது. ஏன் அழுகிறாய் என்று சுருளி கேட்டான். இல்லை இது ஆனந்த கண்ணீர் என்று மாலினி கூறினாள். நானும் உனக்காக ஒன்று வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று மாலினி கூறினாள். சுருளிக்காக ஒரு சட்டை வாங்கிக்கொண்டு வந்தாள். இந்த சட்டை உனக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று மாலினி கூறினாள். சுருளி அந்த சட்டையை வாங்கிப் பார்த்தான். அந்த சட்டை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவருக்கும் சந்தோஷம். சரி நேரமாகிவிட்டது செல்லலாம் என்று மாலினி கூறினாள். சுருளி மாலினியை பார்த்து நாளைக்கு நீ வரும்பொழுது இந்த புடவையை கட்டி கொண்டு வா என்று சுருளி கூறினான்(love stories)
சரி என்று மாலினி கூறினார். மாலினியின் வீட்டிற்குச் சென்றதும் இந்தப் புடவையின் ஏது என்று மாலினியின் தாய் கேட்டார். நான் பணி பார்க்கும் அலுவலகத்தில் வாங்கிக் கொடுத்தார்கள் என்று மாலினி கூறினாள். சரி என்று மாலினியின் தாயார் சொன்னார். மறுநாள் காலை பொழுது விடிந்தது. மாலினி தனது கையால் உணவை சமைத்தால். சமைத்த உணவை சுருளிக்காக இன்னொரு டிபன் பாக்ஸில் எடுத்து வைத்தாள். சுருளி வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு, மாலினி சமைத்த உணவை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டாள். சுருளி மாலினி வாங்கி கொடுத்த சட்டையை அணிந்துகொண்டு வந்தான்.(tamil love stories)
இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் வந்து நின்றனர். புடவை உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று சுருளி கூறினான். சட்டை உனக்கு பொருத்தமாக இருக்கிறது என்று மாலினி கூறினாள். வா கோயிலுக்கு சென்றுவிட்டு பிறகு பணிக்கு செல்லலாம் என்று மாலினி கூறினாள். இருவரும் கோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு கொண்டிருக்கும் பொழுது. மாலினியின் பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் அவரது தந்தை அந்த கோவிலுக்கு வந்தனர். மாலினி மற்றும் சுருளி ஒன்றாக நின்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தனர். சுருளி மாலினியின் நெற்றியில் திருநீர் வைத்தான். அப்போது மாலினியின் தந்தை அவர்கள் இருவரையும் பார்த்து விட்டனர்.( Tamil Love)
எதுவும் கண்டுகொள்ளாமல் அப்படியே வீட்டுக்கு திரும்பிவிட்டார். மாலினியின் தந்தை. வீட்டிற்கு சென்றதும் தனது மனைவியிடம் மாலினியை பற்றி கூறினார். கண்டிப்பாக நம் மாலினி இவ்வாறு செய்ய மாட்டாள் என்று மாலினியின் தாயார் கூறினார். மாலைப்பொழுதில் மாலினி வரட்டும் அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று இருவரும் முடிவு செய்தனர். மாலினி மற்றும் சுருளி கடவுளை வேண்டி விட்டு ஒரு சிறுவர் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மாலினி நான் உனக்காக சமைத்து எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறேன் என்று கூறினாள். என்னால் நம்ப முடியவில்லை நீ சமைத்தாய் என்று கூறுகிறாய் என்று நகைச்சுவையாக சுருளி சொன்னான்.
பிறகு அந்தக் டிபன் பாக்ஸ் எடுத்து அவனிடம் கொடுத்தாள். சுருளி அதை சாப்பிட்டு விட்டு மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று மாலினிடம் கூறினான். மிகவும் அழகாக இருக்கிறது என்று மாலினியை பாராட்டினான். சுருளி சாப்பிட்டு முடித்ததும். இருவரும் தங்கள் பணிகளுக்குச் சென்றனர். பணிகளை முடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் சந்தித்தனர். சற்று நேரம் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். மாலைப் பொழுது ஆனது மாலினியின் வீட்டில் அவளின் தந்தை மாலினி எப்பொழுது வீட்டிற்கு வருவாள் என்று காத்துக் கொண்டிருந்தனர். மாலினி சுருளி பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மாலினி வீட்டிற்கு சென்றாள். அவளின் தந்தை மாலினி உன்னிடம் சற்று பேச வேண்டும். முகத்தை கழுவிக் கொண்டுவா என்று கூறினார். மாலினிக்கு திடீர் சந்தேகம் அப்பா எப்பொழுதும் இவ்வாறு பேச மாட்டார் என்று நினைத்தாள். முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து நின்றாள். அப்பா எதை கேட்க போகிறார் என்று ஒருபுறம் பதட்டமாக இருந்தாள். மாலினியின் தந்தை பேசத் தொடங்கினார். மாலினி யார் அந்தப் பையன்.....( தொடரும்)
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளை கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
https://telegram.me/realtamilstories
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1
0 Comments
thanks for your comments