திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் (tamil love stories)
பகுதி - 15

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.


நான் யோசிப்பதற்கு சில நிமிடங்கள் தேவைப்படுகிறது என்று  மாலினியின் தந்தை கேட்டார். சரி இருவரும் சென்று அமர்ந்து யோசித்து பாருங்கள், யோசித்து விட்டு உங்களது முடிவை கூறுங்கள் என்று மாலினியின் மாமா கூறினார். சுருளி நீ கவலைபடாதே! அவர்கள் நல்ல பதிலாகத்தான் கூறுவார்கள் என்று மாலினியின் மாமா கூறினார். நானும் அவர்கள் கூறும் வார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று  சுருளி கூறினான். (Tamil love stories)

மாலினியின்  தந்தை மற்றும் தாய் இருவரும் யோசித்து விட்டு வந்து நீங்கள் கூறுவது சரிதான் சுருளியை நாங்கள் மாப்பிள்ளையாக மனப்பூர்வமாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதைக் கேட்டதும் சுருளி மிகவும் சந்தோஷமடைந்தான். நான் ஒரு திருடன் என்பதை உங்களிடம் கூறாதது எனது தவறுதான் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று சுருளி கூறினான். போனதெல்லாம் போகட்டும் இனிமேல் நீயும் மாலினியும் நன்றாக வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று மாலினியின் தந்தை கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மாலினியின் மாமா நீங்கள் இதைத்தான் கூறுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். (Tamil love stories)

நீங்கள் யார் என்று புரிய வைக்கத்தான் உங்களுடைய பழைய கதைகள் அனைத்தையும் சொல்ல வேண்டியதாக போய்விட்டது. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று  மாலினியின் மாமா கேட்டார். நீங்கள் கூறியது எனக்கு சரியாகத்தான் பட்டது எனக்கு எந்தவித ஒரு வருத்தமும் இல்லை என்று மாலினியின் தந்தை கூறினார். இவர்களின் திருமணத்திற்கு கண்டிப்பாக என்னை அழைப்பீர்களா! என்று நகைச்சுவையாக மாலினியின் மாமா கேட்டார். நீங்கள் தான் வந்து எல்லாவற்றையும் செய்து தரவேண்டும் என்று மாலினியின் தந்தை கூறினார். வீட்டில் மாலினி தனியாக காத்துக் கொண்டிருப்பாள் உடனடியாக அங்கு செல்லலாம் என்று சுருளி கேட்டான். (Tamil love stories)

சரி விரைந்து செல்லலாம் என்று மாலினியின் தந்தை கூறினார்.  அங்கிருந்து மிகவும் வேகமாக மாலினியின் தந்தை தாய் சுருளி மூன்று பேரும் வேகமாக காரில் புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் மாலினியின் தந்தை சுருளி இடம் உனது வீட்டு வேலைகளை விரைவாக முடித்துவிடு! அடுத்த சுப முகூர்த்தத்தில் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம் என்று மாலினியின் தந்தை கூறினார். இதைக் கேட்டு சுருளி நான் முன்கூட்டியே அவர்களிடம் கூறி விட்டேன் இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்து விடும் என்று சுருளி கூறினான். (Tamil love stories)

மூன்று பேரும் பேசிக்கொண்டே வீட்டை வந்து அடைந்தனர். மாலினி தனது அறையில் அழுதபடியே அமர்ந்து இருந்தாள். மாலினி சுருளியை முதலில் பார்த்தாள். என்ன ஆயிற்று சுருளி ஏன் வருவதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என்று மாலினி அழுதபடியே கேட்டாள். சுருளியின் பின்னால் மாலினியின் தந்தை மற்றும் தாய் இருவரும் நின்று கொண்டிருந்தனர். என்னவாயிற்று என்று யாராவது கூறுங்கள் என்று மாலினி அழுதபடி கேட்டாள். சுருளி எல்லாம் நல்லபடியாக பேசி முடித்துவிட்டோம். அடுத்த முகூர்த்தத்திலேயே எனக்கும் உனக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது என்று சுருளி மகிழ்ச்சியாக மாலினியிடம் கூறினான். (Tamil love stories)

இதைக் கேட்ட மாலினி மிகவும் சந்தோஷமடைந்தாள். அப்பாவும் அம்மாவும் மிகவும் வேகமாக மாமாவின் வீட்டிற்கு சென்றனர். அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பயமாக விட்டது. அங்கு என்ன நடந்தது என்று கூறுங்கள் என்று மாலினியின் கேட்டாள். அங்கு நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சுருளின் கூறினான். மாலினியின் தந்தையை பார்த்து நீங்கள் இருவரும் என்ன பேசி சமாதானத்திற்கு  வந்தீர்கள் என்று கேட்டான். மாலினியின் மாமா கூறியது அனைத்தும் உண்மைதான் நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். இவர் என்னை காதலித்ததற்கு முன்னால் ஒரு சில திருட்டு தொழிலில் ஈடுபட்டிருந்தார் அது உண்மைதான் என்று மாலினியின் தாயார் கூறினார். (Tamil love stories)

இதைக் கேட்ட மாலினி மிகவும் அதிர்ச்சியாக அவளின் தந்தையை பார்த்தால். திடீரென்று மாலினி சற்று கோபம் அடைந்தாள். ஏன் அப்பா நீங்கள் ஒரு திருடனாக இருந்த தானே அம்மாவை காதலித்து திருமணம் செய்தீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் சுருளியை திருடன் என்று கூறும்போது எனக்கு மிகவும் மன வேதனை அடைந்தது. உடனே சுருளி மாலினி அமைதியாக இரு எல்லாவற்றையும் அங்கேயே பேசி முடித்து விட்டோம். இனிமேல் என்ன நடக்கப் போகிறதோ? அதை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்று சுருளி கூறினான். (Tamil love stories)

சரி நான் எதுவும் பேசவில்லை எல்லாம் நன்மைக்கே என்று நான் எடுத்துக் கொள்கிறேன் என்று மாலினி கூறினாள். ஒருவழியாக எல்லா பிரச்சனைகளும் முடிந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று மாலினியின் தந்தை சுருளியை பார்த்து கேட்டார். இன்னும் ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்து விடும் அதற்கு அடுத்ததாக திருமண வேலைகளை ஆரம்பித்து விடலாம். அதற்கு முன்பு நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள் என்று சுருளி கேட்டான். திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டு வேலையை மட்டும் முடித்துவிட்டு சொல்லுங்கள் என்று மாலினியின் தந்தை கூறினார். (Tamil love stories)

நீங்கள் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வீட்டிற்கு புறப்பட்டு சென்று அங்கு செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு  சுருளி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். மாலினி, தந்தை மற்றும் தாயை பார்த்து மிகவும் நன்றி என்று கூறினாள். நாங்கள் தான் உனக்கு நன்றி சொல்லவேண்டும் நாங்களாக ஒரு மாப்பிள்ளை பார்த்து இருந்தாலும் கூட இந்தளவிற்கு பார்த்திருக்க மாட்டோம். அவர் இப்பொழுதே எங்களைப்பற்றி கவலைப் படுகிறார்கள் உண்மையிலேயே சுருளி ஒரு நல்ல மனிதன் என்று மாலினியின் தந்தை கூறினார். (Tamil love stories)

ஒரு மாதத்திற்கு பின்பாக சுருளி தனது வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டான். இருவருக்கும் திருமண பொருத்தம் என்பது மிகவும் சரியாக இருந்தது மாலினியின் தந்தை கூறியது போலவே சுப முகூர்த்த நன்னாளில் மாலினிக்கும் சுருளிக்கும் நல்லபடியாக திருமணம் நடைபெற்று முடிந்தது. மாலினியின் மாமா இருவருக்கும் ஆசீர்வாதம் செய்து வைத்தார் ஒருவழியாக உங்களது திருமணம் நல்லபடியாக நடைபெற்று முடிந்தது இனிமேல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மாலினியின் மாமா அன்பாக வார்த்தைகள் கூறினார். கண்டிப்பாக மாமா நாங்களும் நல்லபடியாக வாழ்ந்து காட்டுவோம் என்று மாலினி கூறினாள். (Tamil love stories)

திருமணம் முடித்துவிட்டு சுருளி மாலினியும் சுருளின் வீட்டிற்குச் சென்றனர். திருமணம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பிறகு அந்த ஊரில் இருந்த ஊர் மக்கள் அனைவரும் சுருளி ஒரு திருடன் என்பதை மறந்துவிட்டார்கள். சுருளி நல்லபடியாக உழைத்துக் கொண்டே இருந்தான். அவன் அயராத உழைப்பினால் ஒரு வருடத்திற்கு பிறகு அவரிடம் சொந்தமாக நான்கு கார்கள் வைத்து சந்தோசமாக வாழ்ந்து வந்தான். அந்த ஊர் மக்கள் யாராவது வந்து உதவி கேட்டால் சுருளி பழைய எல்லாவற்றையும் மறந்து அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். (Tamil love stories)

மாலினியின் தந்தை எதிர்பார்த்ததைவிட  ஒரு படிக்கு மேலாகவே சுருளி மாலினியை நன்றாக வைத்து பார்த்துக் கொண்டி இருக்கிறான். அந்த ஊரில் அனைவரும் போற்றும் ஒரு நல்ல மனிதனாக சுருளி வாழ்ந்து வருகிறான்.

***சுபம்***

இத்துடன் இந்த காதல் கதை நிறைவு பெறுகிறது. மீண்டும் இதே போல் ஒரு தொடர்கதையில் சந்திக்கலாம். இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் இதுபோன்ற கதைகளை கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

Post a Comment

0 Comments