பறக்கும் கம்பளி (tamil kids stories)

பறக்கும் கம்பளி (tamil kid's stories)

ஒரு ஊரில் சுகு எனும் சிறு வயது சிறுவன் ஒருத்தன் இருந்தான். இவனுக்கு கதைகள் கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும். அந்த ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அவர் சிறு வயதில் குழந்தைகளை அழைத்து கதை சொல்வார். சிறு பிள்ளையான சுகு தினமும் அந்த பாட்டியிடம் கதை கேட்க செல்வான். அந்த பாட்டி தினமும் ஒவ்வொரு கதைகளாக சிறு பிள்ளைகளுக்கு சொல்லி விடுவார்கள். கதை மிகவும் அழகாகவும் குழந்தைகளுக்குப் புரியும்படி தெளிவாக எடுத்துச் சொல்வார். இதன் காரணமாகவே அந்த குழந்தைகள் அந்த பாட்டியிடம் சென்று கதைகள் அதிகமாக கேட்பார்கள். அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் கதை சொல்லும் பாட்டி என்று சொன்னால்தான் தெரியும்.

                    (Tamil kids stories)

இப்படியே தினமும் கதை சொல்லிக்கொண்டு பாட்டி இருந்தார்கள். சுகு இரவு சாப்பிட்டவுடன் கதை கேட்க அந்த பாட்டியிடம் சென்றுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து பிறகு வீட்டுக்கு வருவான். ஒருமுறை இந்த பாட்டி மந்திர கம்பளி எனும் தலைப்பில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். சிறு பிள்ளையான சுகு அந்த பாட்டு எந்த கதை சொல்கிறார்களோ அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவான். அன்று இரவு அனைத்து குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து பாட்டியிடம் கதை கேட்க ஆவலாக இருந்தனர். வீட்டில் இருந்து வெளியே வந்த பாட்டி குழந்தைகளால சாப்பிட்டீர்களா என்று கேட்டார். அனைத்து குழந்தைகளும் நாங்கள் சாப்பிட்டோம் பாட்டி என்று பதில் கூறினர்.( Tamil kids stories)

பாட்டி இன்று எந்த கதை சொல்லப் போகிறீர்கள் என்று குழந்தைகள் ஆவலாக கேட்டனர். இன்றைக்கு நாம் மந்திர கம்பளி இந்தத் தலைப்பில் ஒரு கதையைப் பார்க்கலாம் என்று கூறினார். ஒரு ஊரில் ஒரு சிறு பையன் இருந்தான் அவன் சிறு வயது முதலே பெற்றோர் சொல்லும் பேச்சை கேட்காமல் குறும்புத் தனமாக நடந்து கொள்வான். தனது பெற்றோர்களிடம் அடம்பிடித்து எது வேண்டுமோ அதை வாங்கிக் கொள்வான். ஒருமுறை அந்த சிறுவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் கம்பளி ஒன்று பறந்து செல்வதைக் கண்டான். அதைக் கண்டதும் அந்த சிறுவனுக்கு மிகவும் பிடித்தது. அதைப்போல் நானும் பறக்க வேண்டும் என்று நினைத்தான்.(tamil kids stories)

தனது தந்தையிடம் சென்று அப்பா அதேபோல் கம்பளியை வாங்கித் தாருங்கள் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். கம்பளி எல்லாம் பறக்காது என்று அவன் தந்தை அவனுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்தச் சிறுவன் கேட்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற அவன் தந்தை நான் உனக்கு நாளைக்கு வாங்கி தருகிறேன் என்று அவனை சமாளித்தார். அந்த டிவியில் கம்பளி எங்குவேண்டுமானாலும் பறந்து செல்லும் தன்மையுடையது. இவ்வாறு பேசிக்கொண்டே அந்த பாட்டி அன்று கதையை முடித்தார். இந்த கதையை கேட்ட பிறகு அங்கு இருந்த குழந்தைகள் அனைவரும் கைதட்டினர். வழக்கம்போல சுகு அந்தக் கம்பளி நம் கையில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க ஆரம்பித்துவிட்டான்.(tamil kids stories)

கதையை கேட்ட பிறகு சுகு தனது வீட்டிற்குச் சென்றான். படுக்கை அறைக்கு சென்று அந்த கம்பளி எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன் படுத்து உறங்கிவிட்டான். அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான். பிறகு சுகு ஒரு நாள் வெளியே நடந்து கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் ஆடு இருப்பதால் அதை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு செல்வான். வழக்கம்போல சுகு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றான். காட்டுப் பகுதிக்கு சென்ற பிறகு அவன் கண்களில் ஏதோ ஒன்று மின்னுவது போல கண்டான். தூரத்தில் இருந்து பார்த்ததால் அவனுக்கு சரியாகப் புலப்படவில்லை.(tamil kids stories)

அருகில் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தான். அவன் அருகில் சென்றதும் அது ஒரு கம்பளி போல இருந்தது. உடனே அவனுக்கு நினைவுக்கு வந்தது பாட்டி அன்று ஒரு மந்திர கம்பளி பற்றி சொன்னார்கள் அதுபோலவே இது இருக்கிறது என்று ஆச்சரியமாக பார்த்தான். அந்த கம்பளியை அவன் கையில் எடுத்தான். இது பறக்குமா என்று ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் சுகு 10 வயது சிறுவன் என்பதால் அவனுக்கு எதுவும் புலப்படவில்லை. சரி என்று அந்த கம்பளியை  தோளில் போட்டுக்கொண்டு ஆடுகளை மேய்க்க சென்றான். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு உறக்கம் வந்தது அந்த கம்பளியை விரித்து அதன் மேல் படுத்துக்கொண்டான்.(tamil kids stories)

திடீரென அந்த கம்பளி மேலே எழுந்தது. சுகு உறங்கிக் கொண்டு இருந்ததால் கம்பளி மேலே எழுந்தது அவனுக்குத் தெரியவில்லை. சுகு கண்விழித்து பார்த்தான். நான் எப்படி மேலே இருக்கிறது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். ஆடுகள் எதுவும் காணவில்லை. பதறிப்போன சுகு ஆடுகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் இவன் இரண்டு அடிக்கி மேலே உட்கார்ந்து இருந்ததால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆடுகளை தேட வேண்டும் என்று நினைத்தான். பாட்டி சொன்ன கதை இவனுக்கு ஞாபகம் வந்தது. கம்பளி பறக்க வேண்டும் என்று அந்த பாட்டி கூறினார்கள். அதேபோல் கம்பளி இடம் ஆடுகள் இருக்கும் இடத்திற்கு என்னை கூட்டிக்கொண்டு செல் என்று கூறினான்.(தமிழ் குழந்தைகள் கதை)

அந்த மந்திர கம்பளி திடீரென பறக்க ஆரம்பித்தது. ஆடுகள் இருக்கும் இடத்திற்கு வேகமாக சென்றது. ஆடுகளையும் பார்த்தபிறகு சுகுவிற்கு மிகவும் சந்தோஷம். ஆனால் அதை விட பெரிய சந்தோசம் என்னவென்றால் இந்த கம்பளி பறக்கிறது என்று ஆச்சரியப்பட்டான். மீண்டும் கம்பளியிடம் அந்த மலை உச்சிக்கு நான் செல்ல வேண்டும் என்று கூறினார். அதேபோல் அந்த கம்பளி அங்கு பறந்து சென்றது. மலைக்கு சென்ற பிறகு நமது ஊர் எப்படி இருக்கிறது என்று சுற்றிப் பார்த்தான். அந்தக் கம்பளியின் உதவியுடன் வேகமாக பறக்க ஆரம்பித்தான். கம்பளி மிகவும் வேகமாக அங்குமிங்கும் சென்று வந்தது.(தமிழ் சிறுவர்களின் கதை)

இரவு பொழுது வந்ததால் சரி கம்பளியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லலாம் என்று நினைத்தான். கம்பளி என்னைக் கீழே இறக்கி விடு என்று கூறினான். அதேபோல் அந்த கம்பளி அவனைக் கீழே இறக்கி விட்டது. ஒருபுறம் கம்பளியை மடித்துக்கொண்டு சுகு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றான். அந்தக் கம்பளி இடம் போகும் வழியில் பேசிக்கொண்டே சென்றான். வீட்டிற்கு சென்று ஆடுகளை கட்டிவிட்டு கம்பளியை ஒரு ஓரமாக வைத்தான். திடீரென சுகு எழுந்திரு,  சுகு எழுந்திரு என்று யாரோ கூப்பிடுவது போல் உணர்ந்தான். சுகு எழுந்திரு நேரம் ஆகிவிட்டது என்று மீண்டும் அந்தக் குரல் கேட்டது. யார் அது என்று கண் விழித்துப் பார்த்தான்.(tamil kids stories)

சுகு எழுந்திரு நீ பள்ளிக்குச் செல்ல நேரமாகி விட்டது என்று அவனது தாய் கூறினார். திடீரென எழுந்து அமர்ந்த சுகு அம்மா எனது கம்பளி எங்கே என்று கேட்டான். கம்பளியா அது எங்கே இருக்கிறது என்று அவனது தாய் கேட்டார். இல்லை அம்மா நான் ஆடு மேய்த்து விட்டு கம்பளியை இங்கு கொண்டு வந்தேன் என்று சுகு கூறினான். நம்மிடம் எங்கு ஆடு இருக்கிறது என்று அவனது தாய் கேட்டார்.
தூக்கத்தில் உலராமல் எழுந்து தெளிவாக பள்ளிக்கு செல்லும் வழியைப் பார் என்று அவனது தாய் கூறினார். சுகுவிற்கு அப்போதுதான் தெரிந்தது நாம் இதுவரை கண்டது கனவு என்று. எழுந்து அமர்ந்த பின்பு கனவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கம்பளிய நம்மிடம் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். பிறகு பள்ளிக்குச் சென்றான்.
பள்ளிக்கு சென்ற பிறகு தனது நண்பர்களிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினான். பாட்டி சொன்னது போல் நடந்து விட்டதா என்று ஆச்சர்யமாக அவன் நண்பர்கள் அனைவரும் கேட்டனர். இல்லைடா! இது எல்லாம் எனது கனவில் வந்தது என்று சுகு கூறினான். அன்று இரவு அந்த பாட்டியிடம் சென்று அவன் கண்ட கனவை பற்றி அந்த பாட்டியிடம் கூறினான். அதற்கு அந்த பாட்டி நான் சொல்லும் கதைகளை மகிழ்ச்சியாக கேட்டுவிட்டு உறங்க செல், நீ அதில் வரும் கதாபாத்திரமாக உன்னை நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். சரி பாட்டி என்று சொல்லிவிட்டு  சுகு தன் வீட்டிற்குச் சென்றான்.

பறக்கும் கம்பளி உங்களிடம் இருந்தால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்..

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிரவும். இதுபோன்ற கதையை உடனுக்குடன் கேட்க வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள நமது telegram chennal join செய்து கொள்ளவும். வேறு எந்த மாதிரியான கதைகள் வேண்டும் என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.

https://telegram.me/realtamilstories

Post a Comment

0 Comments