இந்த சண்டைகள் எதற்கு? ( Tamil stories)

இந்த சண்டைகள் எதற்கு?

 ஒரு ஊரில் மாறன் என்று ஒருத்தன் இருந்தான். அவன் எந்த ஒரு வேலைக்கும் செல்ல மாட்டான். அவன் ஒரு சோம்பேறி. எப்போது பார்த்தாலும் வீட்டிலேயேதான் கிடப்பான் வெளியே சென்று சுற்றி வருவான் ஆனால் எந்த ஒரு வேலைக்கும் சென்று அங்கு யாரும் பார்த்தது இல்லை. ( Tamil stories)

இவனதுு தாயார் எப்போது இவன் திருந்த போகிறான் என்றதும் மிகவும் கவலையுடன் இருப்பார். ஆனாலும் கூட மாறன் எந்த ஒரு கவலையும் இன்றி வீட்டிலேதான் இருப்பான் முற்றிலும் ஒரு சோம்பேறியாக இருப்பான்.

இவரது தாயார் மிகவும் மனம் வருத்தம் அடைந்தார். சரி என்ன செய்வது என்று இவரது தாயார் ஆலோசித்துக் கொண்டிருந்தார். இவனுக்கு ஒரு கால்கட்டு போட்டால் ஆவது திருந்துவான் என்று நம்பிக்கையுடன் இருந்தார். அக்கம்பக்கத்தினர் அக்கா மாறனுக்கு ஒரு திருமணம் செய்தால் என்ன? என்று கேட்டனர்.(tamil stories)

 திருமணம் செய்தால் ஆவது அவன் வேலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று அக்கம் பக்கத்தினர் அவனது தாயாரிடம் கூறினார். அதுவும் சரிதான் என்று மாறனின் தாயார் அவர்கள் பக்கத்து ஊரில் ஒரு பெண்ணை பார்த்து இவனுக்கு மணம் முடிக்க திட்டம் தீட்டினார். அதுபோலவே மாறனுக்கு திருமணம் நடைபெற்றது. இப்படியே சில நாட்கள் கழிந்தன.

 மாறனின் மனைவி எப்பொழுது பார்த்தாலும் வீட்டிலேயே இருக்கின்றாயே எங்காவது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உள்ளதா என்று திட்டினாள். அதற்கு மாறன் அதைப் பற்றி தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அப்படி என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறாய் என்று மனைவி கேட்டபோது நான் விரைவில் ஒரு ஆடு வாங்கலாம் என்று நினைக்கிறேன் என்று மாறன் கூறினார். அதற்கு அவரது மனைவி ஆடா அது எதற்கு என்று ஆச்சரியமாய் கேட்டாள். சற்று உட்கார் நான் சொல்கிறேன் என்று சொன்னான்.(Tamil stories)

 ஒரு ஆட்டை வளர்த்தால் அது வளர்ந்து பின்பு நான்கைந்து குட்டிகள் போடும் என்றார். பிறகு அந்த ஆடுகளும் வளர்ந்து குட்டிகளை போடும் பிறகு அந்த ஆட்டை எல்லாம் விற்றுவிட்டு ஒரு மாட்டை வாங்கலாம் என்றான். ஒரு மாட்டை வாங்கி மேய்ந்தால் அது நன்றாக வளர்ந்து பால் கரக்கும் அதை வைத்து நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்றான். 

யோசனைை நன்றாக இருக்கிறது என்று அவன் மனைவி கூறவே அப்படியே பக்கத்து ஊரில் உள்ள எனது அம்மாவிற்கு தினமும் ஒரு லிட்டர் பால் தரலாமே என்று கூறினார். இதைக் கேட்டவுடன் மாறனுக்கு மிகவும் கோபம் வந்தது என் தாயார் எது கேட்டாலும் நீ செய்ய தர மறுக்கிறாய் உன் தாயாருக்கு மட்டும் தான் பால் கொடுக்க வேண்டுமா என்று கோபத்துடன் கூறினான்.(tamil stories)

 இப்படியே இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்தார் மாறா உனது மாடு எனது வீட்டு தோட்டத்தில் மேய்கிறது என்றேன் சண்டை பிடித்தான். 

இதைக்கேட்டட மாறன் ஆச்சரியத்துடன் நான் இன்னும் மாடு வாங்கவில்லையே பிறகு எப்படி உனது தோட்டத்தில் வந்து மேய்ந்து இருக்கும் என்று கூறினான். 
இதற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரன் வாங்காத மாட்டிற்காக ஏன் இப்படி இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று கேட்டார். மாறன் சற்று யோசித்து ஆமாம் என்று சிரித்துக் கொண்டான். 

இனிமேலாவது வேலைக்கு செல்லும் வழியை பார் மாறா என்று பக்கத்து வீட்டுக்காரர் கூறினார். ஆனால் நமது மாறன் திருந்துவானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 இதுபோலத்தான் இன்னும் நமது வீடுகளில் தேவையில்லாத சண்டைகள் தான் அதிகமாக நடைபெறுகிறது. வீட்டில் போடும் சண்டைக்கு சற்று கூர்ந்து ஆராய்ந்தால் எந்த ஒரு அர்த்தமும் இருக்காது. அந்த சண்டை எதற்கு போட்டும் என்று நமக்கே சிரிப்புதான் வரும். 

இந்தக்் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும் மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்.

Post a Comment

0 Comments