திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும். 

.                    (Tamil love story)
உங்கள் முடிவை கூறுங்கள் என்று மாலினியின்  மாமா கேட்டார். அதற்கு மாலினியின் தாய், எனக்கு எனது மகளின் விருப்பமே முக்கியம். என்று மாலினியின் தாய் கூறினார். நீங்களும் கண்டிப்பாக வேண்டும் என்று மாலினியின் தாய் கூறினார். மாலினியின் மாமா சற்று நேரம் யோசித்து விட்டு விருப்பமில்லாமல் இவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் அவர்களது வாழ்க்கை நரகமாகிவிடும். விருப்பப்பட்டவர்களையே 
திருமணம் செய்து கொள்ளட்டும் என்று    மாலினியின் மாமா கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.( Tamil love stories)

மாலினியின் மாமா சென்றதும். சுருளியை பார்த்து விரைவாக உங்களது வீட்டு வேலைகளை முடியுங்கள். சீக்கிரமாக உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மாலினியின் தாய் கூறினார். சரி என்று கூறிவிட்டு சுருளி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்றதும் வீட்டு வேலையை விரைவாக முடிக்க சொல்லி அங்கு வேலை செய்பவர்களிடம் கூறினான். மறுநாள் காலைப் பொழுது விடிந்தது. வழக்கம்போல சுருளி மாலினி இருவரும் சந்தித்துப் பேசினர். மாலினி சுருளி இடம் நேற்று என் மாமா திடீரென பெண் கேட்க வந்ததும் நான் சற்று பயந்து விட்டேன்.( Tamil love story)

ஆமாம் நீ எப்படி சரியாக அந்த நேரத்தில் அங்கு வந்தாய் என்று கேட்டாள். உன் தந்தை தான் என்னை நேரில் பார்க்க காலையில் வந்தார். பேருந்து நிலையத்திற்கு வந்ததும் என்ன! கூற போகிறார் என்று தெரியாமல் சற்று பயந்தேன். உனது தந்தை  இன்று மாலை 5 மணியளவில் எங்களது வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும் என்று கூறினார். நான் அவரிடம் மறுபேச்சு பேசாமல் வீட்டிற்கு வர சம்மதித்தேன். அங்கு வந்த பிறகுதான் எனக்குத் தெரியும் உன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார் என்று, நானும் சற்று பயந்து விட்டேன் உனது அப்பாவும் அம்மாவும் என்ன கூறப் போகிறார்கள் என்று தெரியாமல் குழம்பி நின்றேன். ஆனால் திடீரென உனது தந்தை இவர்தான் எனது மாப்பிள்ளை என்று கூறுவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை மாலினி என்று சுருளி கூறினான்.(தமிழ் காதல் கதைகள்)

எனது தந்தை காலைப்பொழுதில் வேகமாக யாரையே பார்க்க வேண்டும். என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார் அவர் வந்தது உன்னைப் பார்க்கத்தான் என்று நினைக்கிறேன் அதுவும் சரிதான் என்று மாலினி கூறினாள். இன்று என் அப்பா உன் வீட்டைப் பார்க்க வர வேண்டும் என்று என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். அவர் எதற்கு அங்கு வரவேண்டும் என்று சுருளி ஆச்சரியமாகக் கேட்டான். நான் வாழப்போகும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்கத்தான் எனது தந்தை வருகிறார் என்று கூறினாள். சரி வரட்டும் என்று சுருளி கூறினான். இருவரும் நின்று பேசிவிட்டு தங்களது பணிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.(tamil stories)


மாலினியின் தந்தை சுருளி கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்து புறப்பட்டு சென்றார். அந்த இடத்திற்குச் சென்றதும் வீட்டை சுற்றி சுற்றி பார்த்தார். பெரிய அளவாக இல்லாவிட்டாலும் இருவர் வாழும் அளவிற்கு போதுமானதாக இருந்தது. சுருளியின் பக்கத்து வீட்டுக்காரர் அங்கு வந்தார். ஐயா, யார்? நீங்கள் ஏன் இந்த வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். மாலினியின் தந்தை அங்கு நடந்த எல்லாவற்றையும் கூறினார். என்னது அந்த திருட்டுப் பையன் சுருளிக்கு உங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்க இருக்கிறீர்களா என்று கேட்டார்.( Tamil love stories)

அதற்கு மாலினியின் தந்தை எனது மருமகனை பற்றி தவறாக பேசாதீர்கள். அவரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவரைப் பற்றி தப்புத்தப்பாக பேசவேண்டாம் என்று கேட்டார். ஐயா நான் எதற்கு உங்களிடம் பொய் கூற வேண்டும் உண்மையில் சுருளி ஒரு திருடன் தான் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் இந்த ஊரிலுள்ள ஒரு சிலரிடம் மட்டுமே கேட்டுப்பாருங்கள் என்று கூறினார். சரி வாருங்கள்  கேட்டு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு மாலினியின் தந்தை விசாரிக்கச் சென்றார். முதல் நபரிடம் சென்று ஐயா சுருளி பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை கூறுங்கள் என்று கேட்டார்.( Tamil love diary)

சுருளி, அவன் ஒரு குட்டி திருடன் என்று கூறினார். ஐயா சற்று தெளிவாக கூறுங்கள் என்று மாலினியின் தந்தை கேட்டார். கூறுகிறேன் கேளுங்கள் என்று அந்த நபர் கூறினார். சுருளி ஒரு பெரிய திருடன் அல்ல அவன் வயிற்றுப் பிழைப்புக்காக முதலில் திருடிக் கொண்டு இருந்தான். அவன் திருடும் பொருட்கள் எல்லாம் கிணற்றின் மீது உள்ள வாலி, சிறியரக பாத்திரங்கள், சிறிய ரக இரும்புகள் என சிறிய பொருட்கள் மட்டுமே திருடுவான் அதனால்தான் நான் அவனை குட்டி திருடன் என்று கூப்பிடுவேன் என்று கூறினார். மாலினியின் தந்தை மற்றொரு நபரிடம் கேட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்தார்.

மற்றொரு நபரிடம் மாலினியின் தந்தை சென்றார். சுருளியைப் பற்றி மீண்டும் அங்கு கேட்டார். அவரும் அதே பதிலைத்தான் கூறினார். அந்த நபர் ஒரு ஒரு வருடத்திற்கு முன்பாக தான் அவன் திருடிக் கொண்டு இருந்தான். ஆனால் இப்பொழுது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறான். ஒரு காரில் சென்று வருகிறான். என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை என்று அந்த நபர் கூறினார்‌. ஆனால் இப்போது அவர் திருடுவதற்கு செல்வதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால் சுருளி திருடுவான் என்று மற்றவர்கள் சொல்லி தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நேரில் பார்த்ததில்லை என்று அந்த நபர் கூறினார்.(tamil love stories)

மாலினியின் தந்தை என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமாக நின்றார். சரி மற்றொரு நபரிடம் சுருளியின் நல்ல குணங்களைப் பற்றி கேட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்தார். மற்றொரு நபரிடம் சென்று சுருளியை பற்றி கேட்டார். அந்த நபரும் சுருளி சிறிய ரக பொருட்களை திருடுவான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நேரில் பார்த்தது கிடையாது என்று அந்த நபர் கூறினார். சரி, ஐயா சுருளியின் நல்ல குணங்களைப் பற்றி ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று மாலினியின் தந்தை கேட்டார். அவனிடம் எனக்கு பிடித்தது இரண்டு குணங்கள் மட்டுமே அவன் மற்றவர்களுக்கு உதவி செய்வான். இன்னொன்று அவன் மதுப்பழக்கத்திற்கு எந்த ஒரு தீய பழக்கத்திற்கும் சென்று நான் பார்த்ததில்லை. மதுப் பழக்கமும் புகைப் பழக்கமும் அவனிடம் கிடையாது. இதை நான் உறுதியாக கூறுவேன் என்று அந்த நபர் கூறினார்.

மாலினியின் தந்தை அவரிடம் நன்றி கூறி விட்டு வீட்டிற்குச் செல்லலாம் என்று முடிவு செய்தார். வீட்டிற்கு வந்ததும் ஒருபுறம் கோபமாகவும் மற்றொருபுறம் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்ப நிலையில் இருந்தார். மாலினியின் தாய் என்ன ஆயிற்று என்று கேட்டார். அதற்கு அவர் ஒன்றும் இல்லை நீ அமைதியாக இரு என்று கோபமாக கூறினார். மாலை பொழுது ஆனது மாலினி வழக்கம்போல தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள். வீட்டிற்கு வந்ததும் நில்! மாலினி நான் உன்னிடம் பேச வேண்டும் என்று மாலினியின் தந்தை கோபமாக கூறினார். 

என்ன ஆயிற்று அப்பா ஏன் இவ்வளவு கோபமாக என்னிடம் பேசுகிறீர்கள் என்று மாலினி கேட்டாள். நான் கோபமாக தான் இருக்கிறேன் எனக்கு ஒரு சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும். என்று கூறினார். என்ன? உண்மை அப்பா! உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் அதை கூறுங்கள் என்று மாலினி கேட்டாள். 
சுருளியைப் பற்றி உண்மையை சொல்.‌
 சுருளி ஒரு திருடனா?........(தொடரும்)

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories


திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1


Post a Comment

0 Comments