திருடனுக்கும் காதல் மலரும்... (Tamil love stories)
இந்தக் கதையை நீங்கள் முதன் முதலில் படிக்கிறீர்கள் என்றால் இந்தக்கதையின் முன் பகுதியைப் படித்துவிட்டு பிறகு இதைப் படிக்கவும்..
பேருந்து நிறுத்தத்தில் மாலினியின் வருகையை எதிர்பார்த்து சுருளி காத்துக் கொண்டிருந்தான். வெகு நேரமாகியும் வரவில்லை இன்னும் சிறிது நேரம் பார்க்கலாம் என்று கூறி சுருளி காத்துக் கொண்டிருந்தான். தூரத்தில் மாலினி வருவதை சுருளி உணர்ந்து கொண்டான் அவனது மனதில் அவனை அறியாமல் ஒரு சந்தோசம். மாலினி அருகில் வந்தாள். மன்னித்து விடுங்கள் நான் வருவதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டது என்று மாலினி கூறினாள். இல்லை பரவாயில்லை என்று சுருளி கூறினார். ( Tamil love stories)
காத்துக் கொண்டிருந்தாலும் அதுவும் ஒரு மிகப்பெரிய ஆனந்தம் தான் என்று சுருளி அன்பாக கூறினார். நான் இரவு முழுவதும் சிந்தித்துப் பார்த்தேன் இந்த ஊரில் நீங்கள் திருடன் என்று யாருக்கும் தெரியாத வகையில் நீங்கள் திருடிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டுமே தெரியும் நீங்கள் இரவில் திருடுபவர் என்று. நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதில் தாருங்கள் என்ற மாலினி கூறினாள். சரி கேள்வி கேளுங்கள் என்று சொல்லி பொறுமையாக கூறினான். என்னை ஏன் தங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டாள். நான் பார்த்த முதல் பெண் நீதான் என்று சுருளி கூறினான். (Tamil love stories)
அந்தக் கிணற்றின் மீது இருந்த வாலியை எடுக்கத்தான் நான் சுவரில் ஏறி குதித்தேன். உன்னை பார்த்த மறு கணமே நான் முடிவு செய்து விட்டேன். திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னுடன் மட்டும் தான் என்று முடிவு செய்து விட்டேன் என்றான். அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன் என்று சுருளி அன்பாக கூறினான். சிறிது நேரம் மாலினி சுருளியை உற்று நோக்கினாள். இரண்டு பேரும் மௌனமாக சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர். உன் பதில் எதுவாக இருந்தாலும் தைரியமாக கூறு நான் அதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன் என்றான். நான் எந்த ஒரு ஆணிடமும் இவ்வளவு நேரம் தனியாக நின்று பேசியது கிடையாது.( Tamil love stories)
இவ்வளவு நேரம் தனியாக நின்று பேசுகிறேன் என்றால் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா என்று தனது காதலை சொல்லாமல் சொன்னாள் மாலினி. இவ்வாறு கூறிவிட்டு அங்கிருந்து மாலினி புறப்பட்டாள். ஆனால் சுருளிக்கு எதுவுமே புரியவில்லை. மாலினி சற்று தூரம் சென்றதும் எதுவும் சொல்லாமல் செல்கிறாய் என்று கூச்சலிட்டான். நான் சொல்ல வேண்டிய பதிலை சொல்லி விட்டேன் என்று மாலினி கூறினாள். ஆனால் சுருளிக்கு எதுவும் புரியவில்லை. சற்று நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டான். மீண்டும் மாலினி அதே இடத்திற்கு வந்தாள். நான் கூறியது உங்களுக்கு புரியவில்லையா என்று நகைப்புடன் கேட்டாள்.(தமிழ் காதல் கதை)
உங்களை பிடித்திருக்கிறது என்று நான் சொல்லாமல் சொன்னேன் என்று கூறினாள். இதைக் கேட்டதும் சுருளி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் பறப்பது போல உணர்ந்தான். அங்கிருந்து புறப்பட்டு தனது வேலைக்காக சென்றாள். சுருளி மிகவும் சந்தோசமாக அங்கிருந்து புறப்பட்டான். வீட்டிற்குச் சென்றதும் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தான். நம்மையும் ஒரு பெண் காதலிக்கிறாள் என்று மிகவும் ஆச்சரியமாக கண்ணாடியின் முன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். நம்மை ஏன் மாலினிக்கு பிடித்திருக்கிறது என்று தெரியவில்லையே என்று யோசித்தான் நாளை கண்டிப்பாக மாலினி இடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தான்.(காதல் கதைகள்)
மறுநாள் காலை மாலினியின் வருகைக்காக சுருளி காத்துக் கொண்டிருந்தான். மாலினி வந்ததை உணர்ந்தான். மாலினி என்னை ஏன் உனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டான். நீங்கள் உங்களின் மனதில் பட்டதை தெளிவாகவும் உண்மையாகவும் பேசுகிறீர்கள் அந்த தைரியம். ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் என்பதன் மனப்பான்மை இவை மட்டுமே உங்களிடம் எனக்கு பிடித்தது என்று மாலினி கூறினாள். எனக்காக ஒன்று செய்யுங்கள் என்று மாலினி கேட்டாள் திருட்டு தொழிலை விட்டு விடுங்கள் என்று கூறினாள். நான் உன்னை பார்த்த மறு கணமே அந்த தொழிலை விட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என்று சுருளி கூறினான்.(தமிழ் காதல் கதைகள்)
நாளை முதல் வேறு ஒரு வேலையை தேடிச் செல்லவேண்டும் என்று சுருளி கூறினான். மாலினி மிகவும் சந்தோசம் அடைந்தாள். நான் எனது பணிக்கு செல்கிறேன் என்று மாலினி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். சுருளி அங்கிருந்து புறப்பட்டு வேலை தேடி சென்றான். சுருளிக்கு இதற்கு முன் எந்த ஒரு வேலை செய்த அனுபவம் கிடையாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் திருட்டு தொழில் ஒன்று மட்டுமே. தற்போது அதையும் விட்டு விட்டான். புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ஓட்டுநர் வேலை தேர்வு செய்தான். சுருளியின் நண்பர் ஒருவர் சொந்தமாக வாகனங்கள் வைத்து நடத்தி வருகிறார். அங்கு சென்று ஏதாவது வேலை கேட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்தான். (Tamil love stories)
அந்த இடத்திற்கு சென்றதும் வா சுருளி என்று அன்பாக அவரது நண்பர் கூறினார். என்ன இந்தப் பக்கம் அதிசயமாக இருக்கிறது நீ எப்படி இருக்கிறாய் என்று அவரது நண்பர் விசாரித்தார். நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று சுருளி அன்பாக கேட்டான். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று சுருளி கேட்டான். என்ன வேண்டும் கேள் என்று அவரது நண்பர் கூறினார். எனக்கு ஏதாவது ஒரு வேலை தர முடியுமா என்று சுருளி தாழ்மையுடன் கேட்டான். உனக்கு ஒரு அளவுக்கு ஓட்டுநர் வேலை தெரியுமல்லவா என்று அவரது நண்பர் கேட்டார். (Tamil love stories)
ஆமாம் என்று சுருளி கூறினான். இங்கு வாகனம் ஓட்ட ஆள் தேவைப்படுகிறது நீ இந்த வேலையில் சேர்ந்து கொள் என்று அவரது நண்பர் கூறினார். மிகவும் சந்தோஷம் அடைந்த சுருளி மிகவும் நன்றி. நான் நாளை முதல் பணிக்கு வந்து சேர்ந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். மாலை வேலையானது மீண்டும் சுருளி மாலினியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். மாலினி வந்ததும் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று மிகவும் சந்தோசமாக கூறினார். மாலினி மிகவும் சந்தோஷமடைந்தாள். இருவரும் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தனர். உன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்று அச்சம் எனக்குள் இருக்கிறது என்று சுருளி கூறினான். அச்சம் தேவையில்லை கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்று மாலினி தைரியமாக கூறினாள். இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்ததில் பொழுது போனதே தெரியவில்லை. அங்கு திடீரென்று அவரது......(தொடரும்)
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
https://telegram.me/realtamilstories
0 Comments
thanks for your comments