திருடனுக்கும் காதல் மலரும்.. ( tamil love stories)
இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இதனுடைய பகுதி 1 மற்றும் 2 கதைகளின் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.
இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்தபோது பொழுது போனதே தெரியவில்லை. அப்போது திடீரென மாலினியின் தோழி செல்வி அங்கு வந்தாள். செல்வியை கண்டதும் மாலினி என்ன கூற போகிறோம் என்று தெரியாமல் தவித்தாள். சுருளி ஏன் என்ன ஆயிற்று ஏன் இப்படி பயப்படுகிறாய் என்று கேட்டான். உனக்குப் பின்னால் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். அவள் எனது தோழி செல்வி என்று மாலினி கூறினாள். உனது தோழி தானே வருகிறாள் பிறகு ஏன் பயப்படுகிறாய் என்று சுருளி கேட்டான்.( Love story)
நான் பயப்படவில்லை. செல்விக்கு நாம் காதலிக்கும் செய்தி தெரியாது என்று மாலினி கூறினாள். நாம் இப்போது தானே காதலிக்கின்றேன் என்று சுருளி கூறினான். உனது தோழியிடம் நான் உனது நண்பன் என்று அறிமுகப்படுத்து அப்போது நீ பயப்படத் தேவை இல்லை என்று சுருளி கூறினான். அதுவும் சரிதான் என்று மாலினி கூறினாள். செல்வி அருகில் வந்தவுடன் மாலினி யார் இது யாரிடம் நின்று பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள். இவர் எனது நண்பர் இவரது பெயர் சுருளி என்று மாலினி அறிமுகப்படுத்தினாள். செல்வி ஓ அப்படியா என்று கேட்டாள். சுருளி இடம் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று செல்வி கூறினாள்.(tamil love stories)
மாலினி வா வீட்டிற்கு போகலாம் என்று செல்வி கூறினாள். சரி போகலாம் என்று மாலினியும் சொன்னாள். நாங்கள் இருவரும் சென்று வருகிறோம் என்று சுருளி இடம் கூறினார். மறுநாள் காலைப் பொழுது விடிந்தது. சுருளி சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு முதல்நாள் பணிக்கு செல்லலாம் என தயாரானான். பணிக்கு செல்வதற்கு முன் மாலினி இடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு செல்லலாம் என்று நினைத்தான். அதன்படி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தான். மாலினியின் வருகைக்காக சுருளி காத்துக்கொண்டிருந்தான். நேரம் ஆகிவிட்டது மாலினி வந்தாள். முதல்நாள் பணிக்கு செல்கிறாய் நல்லபடியாக சென்று வருமாறு மாலினி கூறினாள்.( Tamil love)
சுருளியின் மனதில் சந்தோசம், நம்மைப் பற்றியும் கவலைப்படுவதற்கு ஒரு பெண் இருக்கிறாள் என்று மிகவும் சந்தோஷமடைந்தான். மாலினி கோயிலுக்கு சென்று விட்டு போகலாம் என்று கூறினாள். இருவரும் கோயிலுக்கு சென்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தனர். அப்போது மாலினியின் பக்கத்து வீட்டுக்காரர் அவர்களைப் பார்த்து விட்டார் ஆனாலும் கூட எதுவும் பேசாமல் நடந்து சென்று விட்டார். மீண்டும் இருவரும் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். மாலினி பேருந்தில் ஏறி தனது பணிக்கு சென்றாள். சுருளியும் தனது முதல்நாள் பணிக்காக சென்றான்.(love stories)
சுருளி பணிக்கு வந்ததும் அவனது கையில் அவரது நண்பர் இந்த வாகனத்தின் சாவி என்று கொடுத்தார். கடவுளை வேண்டி விட்டு உனது முதல்நாள் சவாரியை நீ தொடங்கு என்று அவரது நண்பர் கூறினார். சுருளியும் சரி என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்து கடவுளை வேண்டி விட்டு வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான். தனது முதல் பயணம் என்பதால் சுருளி மிகவும் கவனமாக இருந்தான். காரின் முதல் சவாரியை ஏற்றுக்கொண்டு நல்லபடியாக சென்று அவர்களை பத்திரமாக சேர்த்தான். காரில் பயணித்த பயணி நீங்கள் நன்றாக கார் ஓட்டுகிறார்கள் என்று அவரை வெகுவாக பாராட்டினார். சுருளியும் நன்றி ஐயா என்று கூறிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மீண்டும் வாகன நிறுத்தும் இடத்திற்கு வந்தான்.( Tamil love stories)
மாலைப்பொழுது ஆனது சுருளியின் நண்பர், சுருளி உனது முதல் நாள் பணி முடிந்து விட்டது நீ வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் நாளை வா என்று கூறினார். ஆனால் சுருளியின் மனதில் ஒருவித சந்தோசம். நான் பொருட்களை திருடும் போது கூட கிடைக்காத இந்த சந்தோஷம் இப்போது எனக்கு கிடைக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். பிறகு கால்நடையாக நடந்து பேருந்து நிலையத்திற்கு வந்து அடைந்தான் மாலினி வருகைக்காக சுருளி காத்துக்கொண்டிருந்தான். பேருந்தில் இறங்கி மாலினி நடந்து வந்தாள். உனது முதல் நாள் பணி எப்படி இருந்தது என்று மாலினி கேட்டாள். நன்றாக இருந்தது. காரில் பயணித்த பயணி என்னை பாராட்டினார் என்று ஒரு சுருளி கூறினான்.( Tamil stories)
மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று மாலினி கூறினாள். இருவரும் ஒரு ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். நீ எந்த பணிக்கு சொல்கிறாய் என்று அவன் கேட்டான். நான் ஒரு நூலகத்தில் பணியாற்றி வருகிறேன் என்று மாலினி கூறினாள். நல்லது என்று சுருளி கூறினான். ஆனால் சுருளி மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. படித்து நூலகத்தில் வேலை பார்க்கிற நீ எங்கே இருக்கிறாய் ஒரு திருடனாக இருந்து இப்போது காரில் ஓட்டுனராக பணிபுரியும் நான் எங்கு இருக்கிறேன் என்று சுருளி வினாவினான்.
அப்படி பார்த்தால் படித்தவர்கள் மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாலினி கூறினாள்.
ஒரு பெண் தனது கணவனை எப்படி தேர்ந்தெடுக்கிறாள் என்றால் அவர் நன்கு படித்தவரா என்று பார்க்க மாட்டாள். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்றும் கூட பார்க்க மாட்டாள். அந்த மனிதனுடைய நற்குணங்களை மட்டுமே ஒரு பெண் பார்ப்பாள் என்று கூறினாள். உங்களிடம் அந்த நல்ல குணம் உள்ளது என்று மாலினி கூறினாள். இதைக் கேட்டு சுருளி எனக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. என்று மாலினியிடம் கூறினான். ஆனால் கண்டிப்பாக உன்னை நல்ல முறையில் கண் கலங்காத படி பார்த்துக் கொள்ளவேன் என்று சுருளி கூறினான். இருவரும் நின்று பேசிவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று புறப்பட்டனர். மாலினி வீட்டை அடைந்தாள்.( Tamil love stories)
மாலினியின் பக்கத்து வீட்டுக்காரர் கோவிலில் இருவரும் ஒன்றாக இருப்பதைக் கண்டு விட்டு எதுவும் கூறவில்லை. அவர் இருவரையும் பார்த்தார் என்பது மாலினிக்கு கூட தெரியாது. மாலினியின் தாயார் ஏன் 3 தினங்களாக நீ வீட்டிற்கு வருவதற்கு நேரம் ஆகிறது என்று கேட்டார். பேருந்து நேரம் மாற்றப்பட்டு விட்டது என்று மாலினி பொய் கூறினாள். இதைப் பெரிதும் எடுத்துக்கொள்ளாத மாலினியின் தாயார் ஒன்றும் கூறவில்லை. வீட்டிற்கு சென்ற சுருளி எப்படியாவது மாலினியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான் அதற்கு என்ன வழிகள் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தான். நங்கு உழைக்க வேண்டும் என்று நினைத்தான்.
மறுநாள் காலை வழக்கம்போல சுருளி தனது பணிக்காக தயாராகிக் கொண்டிருந்தான். சுருளிக்கு யாரும் கிடையாது அதனால் அவன் ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டும். என்பது மாலினிக்கு தெரியும். அதனால் மாலினி வீட்டிலிருந்து புறப்படும்போது மற்றொரு டிபன் பாக்ஸில் உணவை எடுத்துக் கொண்டு வந்தாள். நான் உங்களுக்காக சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறேன் நீங்கள் கடைக்கு சென்று சாப்பிட வேண்டாம் என்று கூறினாள். இருவரும் நடந்து செல்லும் வழியில் பூங்கா ஒன்றில் அமர்ந்து சுருளி உணவு சாப்பிட்டான். உணவு சுவையாக இருக்கிறது என்று சுருளி கூறினான். இது நான் சமைக்கவில்லை உங்கள் மாமியார் தான் சமைத்தார் என்று மாலினி நகைச்சுவையாக கூறினாள்.( Tamil love stories)
ஏன் நீ சமைக்க மாட்டாயா என்று சுருளி கேட்டான். நான் நன்றாக சமைப்பேன் என்று மாலினி கூறினாள். நாளை வரும் பொழுது நீ சமைத்து எடுத்து வா என்று சொல்லி ஆசையாக கேட்டான். கண்டிப்பாக நான் சமைத்து கொண்டு வருகிறேன் என்று மாலினி கூறினாள். சுருளி உணவு சாப்பிட்டு முடித்ததும் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். மாலினி சுருளி இடம், நான் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று மாலினி கூறினாள். அதற்கு என்ன கேள் என்று சுருளி சொன்னான். நீ மது மற்றும் புகை பிடிப்பாயா என்று மாலினி கேட்டாள். நான் இந்த இரண்டையும் அவ்வப்போது.....( தொடரும்)
இந்த கதையின் அடுத்த பாகம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வரும். இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
நமது website ல் வரும் கதைகளை உடனுக்குடன் படிக்க வேண்டுமென்றால் நமது telegram channel ல் join செய்து கொள்ளவும் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://telegram.me/realtamilstories
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1
0 Comments
thanks for your comments