பழைய வீடு ( tamil horror stories)
இந்த கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இதன் முன் பகுதியைப் படித்துவிட்டு வரவும் அப்போது தான் இந்த கதை உங்களுக்கு புரியும்.கதையின் பகுதி -1 ஒன்று கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
. (Tamil horror stories)சின்னா ஒவ்வொரு படிக்கட்டுகளாக மேலேறி சென்றான். ஒரு புறம் அவனது கை கால்களை பிடித்து இழுப்பது போல் உணர்ந்தான். ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. அவன் கண் முன்னே பல உருவங்கள் தோன்றி மறைந்தன. திடீரென அவன் கண் முன்னே ஆன்மா தோன்றியது. யார் நீ எதற்கு இங்கே வந்தாய் என்று அந்த ஆன்மா கேட்டது. அதுவரைக்கும் ஆத்மாக்களின் மேல் நம்பிக்கை இல்லாத சின்னா முதல் முறையாக ஆன்மாவை பார்த்தான்.( Tamil horror story)
அந்த ஆன்மா யார் நீ என்று கேட்டது. சின்னா மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் இந்த ஊரில் வசிக்கிறேன் இந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை நிரூபிக்கத்தான் நான் இங்கே வந்தேன் என்று கூறினான். எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் நீ இங்கு வந்து இருப்பாய் என்று ஆன்மா கூறியது. முன்னோக்கி செல்ல வேண்டும் என்று சின்னா நினைத்தான். ஆனால் அவனை சுற்றி பல உருவங்கள் வந்து நின்றன. அனைத்து ஆன்மாக்களும் நீ வெளியே செல் என்று கத்த ஆரம்பித்தனர். சின்னா நான் உங்களிடம் பேச வேண்டும் என்று கூறினான். சின்னாவின் பேச்சுக்கு செவி சாய்க்காத ஆன்மாக்கள் நீ இப்போது செல்ல போகிறாயா இல்லையா என்று கோபத்துடன் கேட்டது.(horror stories)
நான் உங்களிடம் பேச வேண்டும் என்று சின்னா மீண்டும் கூறினான். கோபமடைந்த ஆன்மா சின்னாவை தூக்கி எறிந்தது. சின்னா அந்தரத்தில் பறந்தான். மேலும் மேலும் இவனை தூக்கி எறிந்தன. ஆன்மாவும் கோபமடைந்து சின்னாவை பயங்கரமாக தாக்க ஆரம்பித்தது. சின்னா தைரியசாலியாக இருந்தாலும் கூட அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான்கு ஆத்மா சேர்ந்து சின்னாவை தூக்கி கொண்டு சென்றன. அந்த வீட்டின் வாசலில் வந்து சின்னாவை தூக்கி எறிந்தன. உடல் முழுக்க காயங்களுடன் சின்னா ஆன்மாவுடன் பேசிய ஆகவேண்டும் என்று முன்னேறலாம் என்று முயற்சி செய்தான். ஆனால் அவனால் முன்னால் செல்ல முடியவில்லை. உள்ளே போக வேண்டாம் என்ற ஒரு சத்தம் கேட்டது.(tamil horror story)
யார் நீங்கள் எது கூறுவதாக இருந்தாலும் என் கண் முன்னே வந்து கூறுங்கள் என்று கூறினான். அவன் கண் முன்னே தூய ஆத்மா ஒன்று வந்து நின்றது. உனக்கு இப்போது என்ன வேண்டும் என்று கோபத்துடன் கேட்டது. இந்தப் பழைய வீட்டின் வரலாற்றை எனக்குச் சொல்லுங்கள் என்று சின்னா கேட்டான். அந்த ஆத்மா நான் உன்னை உள்ளே போக வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் நீ என் பேச்சை கேட்காமல் உள்ளே சென்றாய் இந்த ஊரிலுள்ள பெரியவர்கள் சொல்லும் பேச்சை கேட்காமல் இங்கு வந்தாய் நான் மட்டும் உன்னைக் மாடியில் இருந்து வெளியே கொண்டு வரவில்லை. என்றால் உனது உயிர் இங்கேயே போயிருக்கும். இந்த பழைய வீட்டின் வரலாற்றைச் சொல்கிறேன் கேள் என்று அந்த ஆத்மா கூறியது.(tamil horror stories)
சரியாக 200 வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டின் உரிமையாளர் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து இந்த வீட்டைக் கட்டினார். இந்த கிராமத்திலேயே கட்டப்பட்ட முதல் மாடி வீடு இதுதான். என்று அந்த ஆன்மா கூறியது. இந்த வீட்டைக் கட்டிய மனிதர் நல்ல மனம் படைத்தவன். இந்த ஊரில் வந்து யாராவது ஏதாவது கேட்டால் மறுக்காமல் செய்வார் அந்த அளவுக்கு நல்ல குணம்படைத்த மாமனிதன். இவர் இந்த வீட்டை கட்டி சரியாக ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு எங்கிருந்தோ வந்த கொள்ளையர்கள் இந்த வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.(tamil horror stories)
வீட்டில் திருடு போனதை நினைத்து மிகவும் வருத்தமடைந்தார். இந்த நிலைமையை பயன்படுத்தி இவரது வீட்டை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று சில தீய சக்திகள் திட்டம் தீட்டின. பக்கத்து ஊரிலிருந்து வந்து அவரின் வீட்டை விலைக்கு பேசினர். ஆனால் இவருக்கு அந்த வீட்டை தர மனம் இல்லை. அந்த தீய சக்திகள் இவரை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தனர். அந்தக் கயவர்கள் மீண்டும் அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்தக் கயவர்கள் இவரை கொல்ல சதித் திட்டம் தீட்டினர். ஆனால் அந்த மனிதர் என்னை யாரும் கொள்ளக் கூடாது அதனால் நமது உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார்.(horror stories)
அன்று இரவு அவரது உயிரை மாய்த்துக் கொண்டார். மறுநாள் காலை தான் எங்களுக்கு தெரிந்தது. அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று. அவரை நல்லபடியாக அடக்கம் செய்தோம். அந்தக் கயவர்களை அன்றிரவு அந்த வீட்டை நோக்கி வந்தனர். கயவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இனிமேல் இந்த வீடு எங்களுக்கு சொந்தம் என்று பேசிக் கொண்டிருந்தனர். போலியாக பத்திரங்களை தயார் செய்து அந்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்தனர். அந்த மாமனிதர் ஆன்மா சாந்தி அடையாததால் அந்த வீட்டிற்குள் இருந்தது. ஆனால் இது அந்த கயவர்கள் யாருக்கும் தெரியாது. அன்றிரவு அங்கேயே தங்கினர். அன்று இரவு நடந்தது நிகழ்ச்சி இன்னும் எனக்கு பதட்டமாக இருக்கிறது. என்று அந்த ஆன்மா கூறியது.(horror stories)
வீட்டில் தங்கியிருந்த அனைவரும் அந்த தூய ஆன்மாவின் ஆல் பழிதீர்க்க பட்டார்கள். அங்கு தங்கியிருந்த 4 பேரும் பகலில் சென்று நாங்கள் பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்
கிடந்தனர். இதுகுறித்து ஊர் மக்கள் அனைவரும் பேசி முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்தது. வீட்டைப் பற்றியும் அந்த மனிதரைப் பற்றியும் ஒரு முனிவரிடம் கேட்கலாம் என்று சென்றோம். முனிவரை சந்தித்து நடந்ததை கூறினோம். அந்த ஆன்மா சாந்தி அடையாமல் இறந்து விட்டது. அது அந்த வீட்டையே தான் சுற்றி சுற்றி வரும் அந்த வீட்டை யாராவது அபகரிக்க நினைத்தல் அல்லது அந்த வீட்டிற்குள் செல்ல நினைத்தால் அவர்கள் உயிர் பறிபோகும் என்று முனிவர் கூறினார்.
நான் ஒரு சில மந்திரங்களை ஓலையில் எழுதி தருகிறேன் நீங்கள் அதை அந்த வீட்டின் முன்பு கட்டி விடுங்கள் என்று கூறினார். அவ்வாறு கட்டினால் அந்த ஆன்மா வீட்டை விட்டு வெளியே வராது. வீட்டிற்குள் யாராவது சென்றால் அவரின் உயிர் பறிபோகும் என்று முனிவர் கூறினார். முனிவர் சொன்னதைப் போல் நாங்கள் செய்தோம். அன்று முதல் யாரும் அந்த வீட்டின் பக்கம் செல்ல மாட்டார்கள். எனக்கு வயதான காரணத்தினால் நான் இறந்து விட்டேன். இறந்த பிறகு இந்த வீட்டின் காவலாளி இங்கு வாழ்ந்து வருகிறேன். யாராவது இந்த வீட்டிற்கும் செல்ல நினைத்தால் நான் அவர்களை தடுத்து நிறுத்துவேன் கேட்காமல் உள்ளே சென்றவர்கள் நிலை அவர்களும் இறந்து விடுவார்கள். இதுதான் நடந்தது இப்போது உனக்கு தெரிந்து அல்லவா நீ இங்கிருந்து சென்று விடு என்று அந்த ஆன்மா கூறியது. உடலில் ரத்த காயங்களுடன் சின்னா அங்கிருந்து புறப்பட்டான்.
மறுநாள் காலை பொழுது விடிந்தது. தனது நண்பர்களை சந்தித்து சின்னாஅங்கு நடந்ததை கூறினான். நாங்கள் தான் அப்போதே கூறினோம் அல்லவா நீ ஏன் கேட்காமல் சென்றாய் என்று நண்பர்கள் திட்டினார். நீங்கள் சொன்னது உண்மைதான் ஆன்மாக்கள் உண்மையாகவே இருக்கிறது என்று நம்புகிறேன் என்று கூறினான். இனிமேல் அந்தப் பக்கம் செல்லமாட்டேன் என்று சின்னா கூறினான். பெரியவர்கள் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று சின்னா முடிவு செய்தான்.
அந்தப் பழைய வீட்டின் பற்றி சின்னா முழுமையாக தெரிந்து கொண்டான். அந்த ஊர் மக்களுக்குத் தெரிவித்தான். வீட்டிற்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். எப்போதும் போல சின்னாவால் வழக்கமாக தூங்க முடியவில்லை. ஏனென்றால் அந்த வீட்டிற்குள் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியது கிடையாது. சின்னாவை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று அந்த ஆன்மா சின்னாவை விடாமல் துரத்தும்.....
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிரவும். இதுபோன்ற கதையை உடனுக்குடன் கேட்க வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள நமது telegram chennal join செய்து கொள்ளவும். வேறு எந்த மாதிரியான கதைகள் வேண்டும் என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.
https://telegram.me/realtamilstories
பழைய வீடு பகுதி - 1 (tamil horror stories)
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-horror-stories_11.html?m=1
0 Comments
thanks for your comments