ஆடாத ஆட்டமெல்லாம்.
என் பெயர் செந்தில்குமார் என்னுடைய வயது 40. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்யக்கூடாதவை எல்லாம் செய்து. மேலிருந்து நான் எவ்வாறு கீழே வந்தேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து என்னைப்போல் யாரும் இருக்க வேண்டாம். ஏன் இவ்வாறு கூறுகிறேன், என்றால் இந்த கதையை முழுவதுமாக நீங்கள் படித்து முடித்தவுடன் உங்களுக்கே தெரியும். இது என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான பதிவு.
நான் எனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்த தருணம் அது. 2010 ஆம் ஆண்டு எனக்கு ஒரு கம்பெனியில் பணி புரிவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலைக்காக நான் கேரளா சென்று சுமார் ஆறு மாத காலம் பயிற்சி எடுத்த பிறகு சொந்த ஊரில் எனக்கு வேலை கிடைத்தது. ஒரு நகைக்கடையில் கணக்காளராக நான் பணியாற்றி வந்தேன். பணியில் சேர்ந்து ஒரு சில மாதங்களிலேயே எனது பணியை பாராட்டி சம்பள உயர்வு கிடைத்தது. எனது பணியில் நான் எதிர்பார்த்ததை விட எனக்கு வருமானம் மிகவும் அதிகம் கிடைக்கவே என் தலைகனம் சிறிது மேலோங்க ஆரம்பித்தது என்று கூறலாம். எனது தந்தை வீடு கட்ட ஆரம்பித்து பாதிநிலையில் அப்படியே இருந்தது. பாதி கட்டியும் பாதி கட்டாத நிலையில் இருந்த வீட்டை நான் சிறப்பாக எனது கம்பெனியில் பணிபுரிந்து அதிக வருவாய் ஈட்டி எனது வீட்டை நான் கட்டி முடித்தேன். (Tamil stories)
எனது கம்பெனியில் எனக்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் அந்த நாள் நான் மது அருந்திவிட்டு மாமிசம் சாப்பிட்டு மிகவும் அதிகம் சம்பாதிக்கிறேன் என்ற ஆணவத்தில் நான் இருந்தேன். நான் அதிகம் சம்பாதிப்பதை கண்டு என் வீட்டில் அனைவரும் என்னை கண்டு சற்று நடுங்க ஆரம்பித்தார்கள் என்று கூட கூறலாம். வாய்க்கு ருசியாக உணவு சமைக்கா விட்டால் என் தாயை நான் திட்டுவேன். அந்த அளவிற்கு என் தலைகனம் மேலோங்கி இருந்தது. என்னை சுற்றி எப்போதும் நாங்க பேர் இருந்து கொண்டே இருப்பார்கள் என் கம்பெனியிலிருந்து எனக்கு வரும் வருவாயில் அதில் 10% மட்டுமே என் வீட்டிற்கு கொடுத்துவிட்டு மீதி எல்லாவற்றையும் நான் செலவு செய்ய ஆரம்பித்தேன். (Tamil stories)
ஒரு கட்டத்தில் எனது வேலை முடித்துவிட்டு வரும்போது மது அருந்திவிட்டு வருவது எனக்கு வழக்கம் ஆகிவிட்டது. நான் மது அருந்துவது மட்டுமில்லாமல் என் கூட இருப்பவர்களையும் மது வாங்கிக் கொண்டுதான் நான் வருவேன் அந்த அளவிற்கு எனது வருமானம் மிகவும் அதிகமாகவே இருந்தது என்று கூறலாம். என்னுடைய வருமானத்தை வைத்து எனது தங்கை திருமணத்தின் மிகவும் சிறப்பாக நான் செய்து முடிப்பேன். ஒரு சில மாதங்களில் நானும் திருமணம் செய்தேன். அடுத்த ஆறு மாத காலங்களில் எனது தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தேன். அந்த அளவிற்கு என்னுடைய வருமானம் மிகவே அதிகமாக இருந்தது. அழகிய வீடு கார் என எனது ஆடம்பர வாழ்க்கைக்கு பஞ்சமே இல்லை. (Tamil stories)
நான் எத்தனையோ செலவுகள் செய்து இருந்தாலும் எனக்கு தேவையான அளவிற்கு ஒரு சில பணத்தை நான் சேமித்து வைத்திருந்தேன். எனக்கு திருமணம் ஆன ஒன்றை வருடங்களிலே எனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அப்போதும் கூட நான் தினமும் மது அருந்துவது எனக்கு மிகவும் அதிகமாகவே இருந்தது. நான் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்த காரணத்தால் எனது இருசக்கர வாகனத்தில் சென்று தான், நான் வேலைக்கு எப்போது வழக்கம் போல போய் வருவேன். மற்றவர்களிடம் பேருந்தில் செல்வது பற்றி ஏளனமாக பேசி சிரிப்பேன். ஆனால் அப்போது எனக்கு தெரியாது என்னுடைய நிலைமையும் ஒருநாள் பேருந்து செல்ல வேண்டி இருக்கும் என்று.(Tamil stories)
என் மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது என்னைக் காண முடியவில்லை என்று தினமும் வருத்தப்படுவதாக என் மனைவியின் என்னிடம் கூறினாள். நான் காலையில் வேலைக்கு செல்லும் போது என் மகள் உறங்கிக் கொண்டிருப்பாள் இரவில் நான் வீட்டிற்கு வரும்போதும் என் மகள் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருப்பதால் என் மகளை என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை. செவ்வாய்க்கிழமை மட்டும் தான் நான் வீட்டில் இருக்கும் காரணத்தால் என் மகளுடன் நான் விளையாட முடியும். எனது கம்பெனியின் முதலாளி மாறிவிட்டதால் எனக்கு பழையபடி வருமானம் வருவது மிகவும் குறைந்தது. மறுபக்கம் என் மகள் என்னை பார்க்க முடியவில்லை என்று ஏங்குவது என்று எனக்கு இரு பக்கமும் கவலைகள் சூழ்ந்தன.
அப்போது நான் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று நான் நினைத்தேன். நான் நினைத்தபடியே என்னுடைய வேலையை நான் ராஜினாமா செய்தேன். நான் ஒரு முதலாளியாக இருக்க வேண்டும் என்று நினைத்த காரணத்தினால் எனக்கு கீழே ஒரு சிலரை வேலைக்கு அமர்த்தினேன். ஒரு சில நாட்களிலேயே அந்த தொழில் பெரிய அளவுக்கு வளரும் என்று நான் எதிர்பார்த்தது மிகவும் தவறாக எனக்கு தெரிந்தது. நான் எதிர்பார்த்த அளவிற்கு முதலீடு செய்த அளவிற்கு லாபம் எனக்கு கிடைக்கவில்லை. ஆகையால் வேலைக்கு அமர்த்தியவர்களே நான் வேலையில் இருந்து தூக்கினேன். அந்த வேலையை நான் செய்ய ஆரம்பித்தேன்.
என் பழைய கம்பெனிக்கு சென்று கொண்டிருந்த போது என்னிடம் எப்போதும் நான்கு பேர் இருந்து கொண்டிருந்தனர். அந்த வேலையில் இருந்து நான் நின்றவுடன் எனக்கு வருமானம் குறைந்தவுடன் அவர்கள் நாங்கள் வரும் என்னிடம் பழகுவதே நிறுத்த ஆரம்பித்தனர். என்னை கண்டு கொள்ளாமல் செல்ல ஆரம்பித்தனர். எனது வருமானம் மிகவும் குறைய தொடங்கியது. இருந்த பணத்தை எல்லாம் எனது தொழிலில் முதலீடு செய்தேன். ஆனால் தொழில் மிகவும் நஷ்டத்திலேயே சென்று கொண்டிருந்தது. இருந்தாலும் கூட நான் மது அருந்துவதை தவிர்க்க முடியவில்லை. தொடர்ந்து மது அருந்தி கொண்டே இருந்தேன். (Tamil stories)
தொழில் மிகவும் நஷ்டம் அடையவே கடன் வாங்க ஆரம்பித்தேன். கடன் வாங்கியாவது தொழிலை முன்னெடுத்து செல்லலாம் என்று நினைத்தபோது. தொழில் எனக்கு முற்றிலும் கை கொடுக்கவில்லை கடன் கொடுத்தவர்கள் எல்லாம் கடனை திருப்பி கேட்கவே நான் வாங்கிய உபகரணங்கள் எல்லாதவற்றையும் விற்றுவிட்டு அவர்களிடம் வாங்கிய கடனை திருப்பி கட்டினேன். முதல் முறை என் மனைவி என்னை ஏளனமாக பார்த்தால். எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரவே என் மனைவி என்னை விட்டு பிரிந்து அவருடைய தந்தை வீட்டிற்கு சென்றாள். நான் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்தபோது யாரையும் மதிக்கவில்லை பணம் இருக்கின்ற ஆணவத்தில் ஆட ஆரம்பித்தேன். தேவைக்கு ஏற்பவே எல்லாவற்றையும் மிக அதிகமாக செலவு செய்தேன். ஆடம்பர வாழ்க்கையில் இருந்தேன்.
தொழில் நஷ்டம் அடைந்து என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு ஒரு வருட காலம் வீட்டிலிருந்தேன். அந்த ஒரு வருட காலம் என் அன்னை என்னை பேசாத வார்த்தைகள் இல்லை இருந்தாலும் நான் பொறுத்துக் கொண்டேன். என் அன்னை என் மீது பாசமாக இருந்தாள். என்னிடம் பணம் அதிகமாக இருக்கும் போது என்னை சுற்றி இருந்த நால்வருமே என்னை கண்டு கொள்ளாமல் என்னைக் கண்டும் காணாத மாதிரி சென்றார். வீட்டில் இருந்த அந்த சமயத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்று முடிவு செய்தேன் ஆனால் என்னிடம் முதலீடு எதுவும் இல்லை. ஆகையால் ஒரு சிறிய ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். (Tamil stories)
ரியல் எஸ்டேட் தொழில் மூலம் வருமானத்தைப் பெறலாம் என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் நினைத்தபடி அதுவும் கை கொடுக்கவில்லை. இருந்தாலும் நான் என் முயற்சியை கைவிடவில்லை. என் அன்னை என் மனைவியிடம் சென்று பேசி சமாதானம் செய்து மறுபடியும் அவளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். என் மகளின் படிப்புச் செலவுக்காக கடன் வாங்க ஆரம்பித்தேன். என்னிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் விற்க வேண்டிய அவல நிலை எனக்கு ஏற்பட்டது. இப்போது நான் வேலைக்கு செல்ல வேண்டும், என்னிடம் இரு சக்கர வாகனம் இல்லாமல் பேருந்தில் செல்ல வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. நான் அதிக வருமானம் சம்பாதித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் செல்பவர்கள் அனைவரையும் ஏளனமாக பார்த்து பேசுவேன். ஆனால் நான் இப்போது பேருந்தில் செல்ல வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.(Tamil stories)
பேருந்தில் சென்று எனது வேலைக்கு செல்லும் நிலைமையில் நான் இருந்தேன். ரியல் எஸ்டேட் தொழில் என்னை கைவிடாது என்று முழு நம்பிக்கை எனக்கு இருந்தது. அதன்படி முழுமையாக அந்த தொழில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தேன். என்னுடன் வேலை செய்யும் இன்னொரு நபர் எனக்கு அறிமுகமானார் நானும் அவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் சொந்தமாக செய்யலாம் என்று முடிவு செய்து ஒரு அலுவலகத்தை திறந்தோம். ஒரு சில மாதங்களிலே நாம் நினைத்தபடி வருமானம் வரும் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் வருமானம் எங்களுக்கு முற்றிலும் கிடைக்கவில்லை. அந்த அலுவலகத்தையும் மூட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னை பார்த்து ஊரில் இருந்து அனைவரும் ஏளனமாக பேச ஆரம்பித்தார்கள். நான் ஊரில் உள்ள அனைவரையும் ஏளனமாக பேசிய காலம் சென்று என்னை மற்றவர்கள் ஏளனமாக பேசும் அவல நிலைக்கு நான் ஆளாகினேன். எல்லாம் நான் அதிக வருமானம் ஈட்டுகிறேன் என்ற ஆணவமும் கௌரவமும் தான் காரணம். (Tamil stories)
இன்றுவரை நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். ஆனால் நான் நினைத்தபடி என்னால் வருமானம் ஈட்ட முடியவில்லை பழைய நிலைமைக்கு என்னால் வரவும் முடியவில்லை. நான் செய்த தவறை வேறு யாரும் தயவு செய்து செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
இதுவரை நீங்கள் படித்தது செந்தில்குமார் அவர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை நம்முடன் பகிர்ந்துள்ளார். அதுதான் இதுவரை நீங்கள் படித்துள்ளீர்கள்.
செந்தில்குமார் அவர்களின் வாழ்க்கையில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், நம்மிடம் பணம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.
செந்தில்குமார் அவர்கள் அதிக வருமானம் ஈட்டும்போது யாரையும் மதிக்கவில்லை. ஆனால் இப்போது அவரை நிலைமை மிகவும் தலையீழாக உள்ளது. எப்போதும் நமது நிலை ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை. இன்று பணக்காரனாக இருப்பவன் நாளை ஏழையாக மாறலாம். இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்கு பணக்காரனாக மாறலாம். வாழ்க்கையில் எப்போதும் மாறாமல் ஒரே மாதிரி இருத்தல் வேண்டும் அது பணம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி.
கடவுள் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை கொடுப்பார், அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மிகவும் ஆட்டம் போட்டாள் அந்த வாய்ப்பு இறைவன் கண்டிப்பாக பறித்துக் கொள்வார். ஆகவே இறைவன் கொடுத்து வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆணவ நிலைக்கு செல்லாமல் இருப்பது நல்லது.
வாழ்க வளமுடன்!!!
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகள் என்று ஒரு சில பதிவை பதிவிட்டுள்ளோம். அதை படிக்க வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
http://bitly.ws/FTUy
இதே போல மேலும் பல பயனுள்ள கருத்துக்களை கேட்க விரும்பினால் நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்..
https://telegram.me/realtamilstories
0 Comments
thanks for your comments