திருடனுக்கும் காதல் மலரும் ( தமிழ் காதல் கதை)
இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.
எனது மகளை கை பிடிக்கவேண்டும் என்று நினைத்தாள். உனக்கென்று சொந்தமாக வீடு, பெரிதாக இல்லாவிட்டாலும் சிறிய அளவு வருமானம் உனக்கு இருக்க வேண்டும். உனக்கு எந்த ஒரு தீய பழக்கம் இல்லை என்று எனக்கு தெரியும். உன்னை எனது மகளை திருமணம் செய்து வைக்க எனக்கு சம்மதம். எனது மகளை வைத்து காப்பாற்ற உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை முதலில் செய் என்று என் மாலினியின் தந்தை கூறினார். (Tamil love stories)
சுருளி சிறிதும் யோசிக்காமல் என் மாலினிக்காக கண்டிப்பாக நான் இதை செய்வேன் என்று கூறினான். நான் உங்களை நம்புகிறேன் என்று மாலினியின் தந்தை கூறினார். சுருளி சரி என்று கூறினான். பிறகு இருவரும் மாலினியிடம் வந்து நின்றனர். மாலினியின் தந்தை மாலினி வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார். அதற்கு மாலினி என்ன ஆயிற்று என்று சுருளி இடம் கேட்டாள். மாலினியின் தந்தை அவர் உன்னிடம் நாளைக்கு கூறுவார் என்றார். என்ன செய்வது என்று தெரியாமல் மாலினி திகைத்து நின்றாள். அங்கிருந்து மாலினியும் அவர் தந்தையும் புறப்பட்டுச் சென்றனர். (தமிழ் காதல் கதை)
சுருளியை திரும்பிப் பார்த்தபடி அங்கிருந்து மாலினி சென்றாள். பிறகு சுருளி அந்த கோவில் அப்படியே அமர்ந்தான். என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் சுருளி யோசித்துக் கொண்டிருந்தான். கடவுளை வேண்டி விட்டு இங்கிருந்து தன் பணிக்காக சென்றான். மாலினி அவரது தந்தை, இருவரும் வீட்டை அடைந்தனர். மாலினியின் தாய் அங்கே என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு மாலினி எனக்கு ஒன்றும் தெரியவில்லை அம்மா என்று கூறினாள். மாலினியின் தந்தை நான் சொல்கிறேன் என்று கூறினார். அந்தப் பையனை பார்த்தால் நல்லவனாக தான் தெரிகிறது. மாலினியை திருமணம் செய்து வைக்க நல்லவன் என்ற ஒரு தகுதி போதாது. அவனுக்கு ஒரு வருட காலம் அவகாசம் அளித்துள்ளேன் என்று மாலினியின் தந்தை கூறினார்.(தமிழ் சிறுகதைகள்)
மாலினி எதுவும் பேசாமல் வீட்டிற்கு உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள். ஒரு வருடத்திற்குள் அவன் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டார். சொல்கிறேன் என்று மாலினியின் தந்தை கூறினார். ஒரு வருடத்திற்குள் அந்தப் பையன் சொந்தமாக ஒரு வீடு வைத்திருக்க வேண்டும் பெரிய அளவு இல்லாவிட்டாலும் குறைந்த அளவு வருமானம் அவனுக்கு இருக்க வேண்டும் என்று கூறி உள்ளேன். அவன் கண்டிப்பாக இதை செய்வேன் என்று என்னிடம் வாக்குக் கொடுத்திருக்கிறான். என்று மாலினியின் தந்தை கூறினார். எல்லாம் உங்கள் விருப்பம் என்று மாலினியின் தாய் கூறினார். (Tamil love stories)
மறுநாள் காலைப் பொழுது விடிந்தது. வழக்கம்போல மாலினி வேலைக்கு புறப்பட தயாரானாள். எப்பொழுதும் போல புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள். அங்கு வழக்கம் போல சுருளி காத்துக் கொண்டிருந்தான். சுருளி இடம் வந்து நேற்று என் தந்தை என்ன கூறினார் என்று கேட்டாள். சுருளி எதுவும் மறைக்காமல் நடந்ததை அப்படியே மாலினியிடம் கூறினார். எனக்கு ஒரு வருட காலம் அவகாசம் தான் இருக்கிறது என்று சுருளி கூறினான். மாலினி கண்டிப்பாக உன்னால் முடியும் என்று கூறினாள். இருவரும் அங்கிருந்து பேசிக்கொண்டு தங்களது பணிகளுக்காக சென்றனர். சுருளி என்ன செய்யப்போகிறோம் என்று யோசித்துக்கொண்டே தனது பணிக்கு சென்றான்.(tamil love stories)
சுருளி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்றான். அங்கு சுருளியின் நண்பர் சுருளியின் முகம் வாடி இருப்பதை கண்டார். என்ன சுருளி என்ன ஆயிற்று என்று கேட்டார். அதற்கு சுருளி ஒன்றுமில்லை நான் எப்பொழுது போல தான் இருக்கிறேன் என்று கூறினான். இல்லை சுருளி உனது முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் தெரிகிறது என்று அவரது நண்பர் மீண்டும் மீண்டும் கேட்டார். சுருளி மெதுவாக நடந்த எல்லாவற்றையும் கூறினான். பொறுமையாக கேட்ட சுருளியின் நண்பர் எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும் என்று கூறினார். நீ உனது முதல் சவாரிக்கு சென்றுவிட்டு வா பிறகு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறேன் என்று கூறினார்.(tamil love stories)
சுருளி எப்பொழுதும் போல தனது காரை எடுத்துக்கொண்டு முதல் சவாரிக்கு சென்றான். எப்பொழுதும் போல அவன் செயல்பட்டான். அவன் மனதில் என்ன செய்யப்போகிறோம் என்று யோசனை மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. முதல் சவாரியில் முடித்துவிட்டு அவன் நண்பரைக் காண சுருளி வந்தான். வா! சுருளி உனக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் நண்பர் கூறினார். அவர் என்ன கூற போகிறார் என்று தெரியாமல் சுருளி அமர்ந்தான். சுருளி உனது நிலைமை எனக்குப் புரிகிறது. நான் உனக்கு ஒரு காரை தருகிறேன் நீ அதற்கு மாதம்தோறும் வாடகை மட்டும் தா என்று கூறினார். நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை சற்று தெளிவாக கூறுங்கள் என்று சுருளி கேட்டான்.(tamil love stories)
சுருளி நீ இவ்வளவு நாட்கள் இந்த இடத்தில் ஒரு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாய். நான் உனக்கு ஒரு காரை தருகிறேன் அந்த காரை உனக்கு சொந்தக் கார் ஆக நினைத்து நீ அதை ஓட்டு, என்று கூறினர். அந்தக் காருக்கு நீ மாதம்தோறும் வாடகை மட்டும்தா என்றார். மேலும் அந்த கார் உனது சொந்த கார் என்பதால் அதில் வரும் வாடகை உனக்கு சொந்தம் நீ அந்த காருக்கான வாடகை மட்டுமே எனக்கு தருகிறாய் என்று சுருளிக்கு புரியும்படி தெளிவாக கூறினார். சுருளி கண்கலங்கியபடி உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் காரை எனக்கு தருகிறீர்கள் அதை கண்டிப்பாக நான் காப்பாற்றுவேன் என்று கூறினான்.(tamil love stories)
சுருளி பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். மாலை வழக்கம்போல மாலினியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். மாலினி வந்து நின்றாள். அங்கு நடந்த எல்லாவற்றையும் சுருளி கூறினான். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று மாலினி கூறினாள். இந்த நன்றிக்கடனை எப்பொழுதும் நாம் மறக்கக் கூடாது என்றாள். இருவரும் அங்கிருந்து பேசி முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். மாலினி வீட்டை அடைந்தாள். அங்கு அவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். மாலினியின் தந்தையிடம் சென்று அமர்ந்தார். உங்களது மகள் யாரோ ஒருவரிடம் தினமும் நின்று பேசிவிட்டு வீட்டிற்கு வருகிறாள். அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்று மாலினியின் தந்தை கூறினார்.(tamil love stories)
என்ன கூறுகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேட்டார். எனக்கு எல்லாம் தெரியும் என்று என் மாலினியின் தந்தை கூறினார். அந்தப் பையன் யார் என்று உங்களுக்கு தெரியுமா என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார். நான் முழுமையாக விசாரித்து விட்டேன் என்றார். உங்கள் மனைவிக்கு சம்மதம் தானே என்று கேட்டார். அவள் என் பேச்சை தட்ட மாட்டாள் என்று கூறினார். மாலினியின் தாய் அங்கு வந்தார். அவர்களிடம் பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார் உங்களுக்கு சம்மதமா என்று அவரும் எல்லாம் சம்மதம் என்று கூறினார். அவர் எந்த சாதி என்று உங்களுக்கு தெரியுமா என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்......(தொடரும்)
0 Comments
thanks for your comments