தீமை செய்தால், நன்மை விளையும். ( தமிழ் சிறுகதைகள்)
ஒரு ஊரில் ராஜன் என்று ஒருத்தன் இருந்தான். அவனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. அன்பான மனைவி. சிறிய அளவு வருமானம் இருந்தால் கூட சந்தோசம் பெரியதாக இருக்கும். அந்த அளவிற்கு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்க மாட்டான். தானுண்டு தனது வேலை உண்டு என தினந்தோறும் வேலைக்கு சென்று கொண்டு வந்து கொண்டிருந்தான். சராசரியான எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான். பெரிய கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. இன்றைய பொழுது நன்றாக சென்றால் போதும் என்று நினைத்துக்கொண்டே இருப்பான்...
. ( தமிழ் சிறுகதைகள்)ராஜன் தனது குடும்பத்தை நன்றாக பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தான். அதே ஊரில் இவனுக்கு பக்கத்து வீட்டில் 🏡 மயில் என்று ஒருத்தன் வசித்து வந்தான். இவனுக்கும் குடும்பம் இருக்கிறது. பெரிய கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் இவனுக்கு இருந்துகொண்டே இருக்கும். பக்கத்து வீட்டில் வசிக்கும ராஜன்னை கண்டால் இவனுக்கு சுத்தமாக பிடிக்காது. ஏனென்றால் மயிலை விட ராஜன் சற்று வசதியில் மிகவும் குறைந்தவன். ஆனால் ராஜன் நல்ல குணங்களைக் கொண்டவன். ஆனால் மயில் ராஜனிடம் நன்றாக நடிப்பான். இருவரும் நன்றாக பழகுவது போலவே நடிப்பான் மயில். ஆனால் ராஜன் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல் மயிலிடம் நன்றாக பேசுவான்.(tamil stories)
இப்படியே ஒரு சில காலங்கள் சென்று கொண்டிருந்தது. மயில் மனதில் ராஜனை எப்படியாவது ஏதாவது ஒரு விவகாரத்தில் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அதிகமாகவே இருந்தது. அதற்கு சரியான நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தான். ஒருமுறை இராஜன் மயில் இடம் சென்று வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் நான் இப்போது கொண்டுவரும் வருமானம் எனது வீட்டிற்கு போதாது என்று பேசிக்கொண்டிருந்தான். மயில் அவனிடம் அன்பாக பேசுவது போலவே நடித்துக் கொண்டிருந்தான். சரி அதற்கு என்ன பண்ணலாம் என்று நினைக்கிறாய் என்று மயில் கேட்டான். சொந்தமாக ஒரு தள்ளுவண்டி கடையில் ஒரு உணவு விடுதி ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினான்.(tamil stories)
இதுவும் நல்ல யோசனை தான் நீ கண்டிப்பாக முயற்சி செய்யலாம் என்று மயில் கூறினான். இருவரும் பேசி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர். ராஜன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியிடம் சொந்தமாக தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை கேட்டான். ராஜன் மனைவி கண்டிப்பாக தொடங்கலாம், ஆனால் அதற்கு முதலீடு தேவைப்படும் அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டாள். அதற்கு தான் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று ராஜன் கூறினான். பக்கத்து வீட்டிலுள்ள மயிலிடம் வேண்டுமானால் கேட்கலாம் என்று நினைக்கிறேன் என்று ராஜன் கூறினான். அதற்கு ராஜன் மனைவி வேண்டாம் என்று கூறினாள்.(tamil stories)
பிறகு எப்படி தொழில் தொடங்குவது என்று ராஜன் கேட்டான். நம்மிடம் இருக்கும் நகையை அடகுவைத்து தொழிலைத் தொடங்கலாம் என்று ராஜன் மனைவி கூறினாள். ராஜன் சரி என்று சம்மதித்தான். பக்கத்து வீட்டில் உள்ள மயில் சொந்தமாக ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறான். அவன் செய்யும் தொழில் நல்ல வருமானம் கிடைக்கிறது. இருந்தாலும் கூட பணத்தின் ஆசையால் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பான். ராஜன் சொந்தமாக உணவு விடுதி தொடங்கலாம் என்று இருக்கிறான், அவனுக்கு எதிர்ப்புறமாக நாமும் தொடங்கவேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டி கொண்டிருந்தான். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தான்.(Tamil stories)
ராஜன் ஒருவழியாக நகைகளை அடகு வைத்து தொழிலை தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான். பக்கத்து வீட்டிலுள்ள மயிலிடம் சென்று நாளை தள்ளுவண்டியில் கடை திறப்பு விழா செய்ய இருக்கிறேன் நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று கூறினான். கண்டிப்பாக வருகிறேன் என்று மயில் கூறினான். மறுநாள் தள்ளுவண்டி கடையில் கடையை திறந்தான். அது ஒரு உணவு விடுதி என்பதால் சரியான இடத்தில் அமைந்திருந்தான். இப்படியே ஒரு சில மாதங்கள் கழிந்தது. சரியான இடத்தில் கடை அமைத்து இருந்ததால் கடை விரைவாகவே நல்ல நிலைக்கு வந்தது. ஆனால் திடீரென்று ராஜன் எதிர்பார்க்காத போது அவன் கடைக்கு எதிரே திடீரென மயில் ஒரு கடையை ஆரம்பித்தான்.(tamil stories)
ஆனால் ராஜன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி அவனும் வளரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எதிரெதிரே கடைகள் இருந்ததால் ராஜனுக்கு எப்பொழுதும் போல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் மயிலுக்கு போதிய அளவு வருமானம் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். மயில் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. ராஜன் தயாரிக்கும் உணவில் ஏதாவது கலந்து விடலாம் என்று யோசித்தான். அவன் தயாரிக்கும் உணவில் ஏதாவது கலந்தால் சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது ஏற்படும். பிறகு அவன் கடைக்கு செல்ல மாட்டார்கள் என்று திட்டம் தீட்டினான்.(tamil stories)
ஆனால் ராஜனுக்கு இப்போது கிடைக்கும் வருமானமே போதும். இதேபோல் வருமானம் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டு தனது வேலையை வழக்கம் போல செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். மறுநாள் காலையில் ராஜன் தயாரித்த உணவில் உயிருள்ள இரண்டு பல்லியை கொண்டுவந்து சாம்பாரில் கலந்து கொண்டு விட்டான். நலன் விசாரிப்பது போல் வந்து இந்த தீமையை செய்துவிட்டான். பிறகு அங்கிருந்து மயில் புறப்பட்டு சென்று விட்டான். சாம்பாரை எடுத்து பரிமாறலாம் என்று ராஜன் நினைத்தான். சாம்பாரை திறந்து பார்த்தபோது அதில் 2 பல்லி 🦎 மிதப்பதை கண்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் ராஜன்.(tamil stories)
அன்று முழுவதும் கடையில் சாம்பார் பரிமாறாமல் அதை எடுத்துக்கொண்டு ஒரு குழியை வெட்டி அதில் ஊற்றி விட்டான். எப்படி பல்லி உள்ளே வந்து இருக்கும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். ஏதாவது தவறுதலாக பல்லிகள் விழுந்து இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு ராஜன் வழக்கம்போல தனது கடையை நடத்தினான். ஆனால் மயில் மனதில் நேற்று இவனது சாம்பாரில் பல்லியை கலந்துவிட்டேன். ஆனால் சாப்பிட்டவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்று யோசித்தான். கள்ளம் கபடம் இல்லாத ராஜன் மயிலிடம் வந்து நேற்று நடந்ததை கூறினான். மயில் எப்பொழுதும் போல நடித்தான். சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவது போல நடித்தான்.
ஆனால் ராஜன் உணவு விடுதி எப்பொழுதும் போல செயல்பட்டது. திடீரென்று ஒருநாள் மயிலின் கடையில் சாப்பிட்ட ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். என்ன ஆயிற்று என்று பார்த்தால் மயிலின் கடையில் உள்ள சாம்பாரில் பல்லி ஒன்று விழுந்து கிடந்தது. இதைக்கண்ட காவல்துறையினர் மயிலின் கடையை பரிசோதனை செய்தனர். அதில் பல்லி 🦎 ஒன்று விழுந்து கிடந்ததை கண்டனர். பிறகு மயிலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் ராஜன் மயிலுக்கு இப்படி ஆகிவிட்டது என்று தெரிந்ததும் காவல்துறையிடம் சென்று மன்றாடி இனிமேல் இவ்வாறு நடக்காது என்று கூறி மயிலை வெளியே கொண்டு வந்தான். மயில் வெளியே வந்ததும் ராஜனுக்கு நன்றி கூறினான்.
மயில் மனதில் நாம் ராஜனுக்கு பல தீமைகளைச் செய்ய நினைத்தோம். கடைசியில் என்னை காப்பாற்றியது ராஜன் தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். இனிமேல் கண்டிப்பாக உங்களுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்க மாட்டேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான். மறுநாள் ராஜன் கடையில் எதிர்ப்புறம் அமைந்திருந்த மயில் கடையை அகற்றிவிட்டான். மயிலின் பழைய தொழிலை செய்ய ஆரம்பித்தான். ராஜன் படிப்படியாக உயர்ந்து பெரிய உணவு விடுதியை கட்டினான். கைநிறைய சம்பாதித்து தனது குடும்பத்தை பெரிய அளவுக்கு உயர்த்தினான். தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் கவனித்து வந்தான். மயில் ராஜனுக்கு செய்த தீமையை நினைத்து இன்னும் மனம் வருந்தி கொண்டிருக்கிறான். ஆனால் மயில் இவ்வாறு தீமையை செய்தான் என்று ராஜனுக்கு இன்னும் தெரியாது.
நம் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஏதாவது தீமை விளைவிக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த தீமை நம்மை வந்து அடையும். நம் முன்னோர்கள் சொல்வது போல "முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்". என்னும் பழமொழி இதற்குப் பொருத்தமாக இருக்கும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
0 Comments
thanks for your comments