பழைய வீடு (tamil horror stories)
ஒரு கிராமத்தில் சின்னா என்று ஒருத்தன் இருந்தான். அவன் இந்த ஆவி, பேய், பூதம் இவைகளின் மேல் நம்பிக்கை இல்லாதவன். யாராவது இவனிடம் வந்து ஆவிகள் இருக்கிறது என்று கூறினாள். மிகவும் கோபமடைந்து எங்கே என் கண்முன்னால் காட்டு என்று ஆவேசமாக கூறுவான். இவன் ஆவிகள் மீது நம்பிக்கை இல்லாதவன் இதை தவிர மற்றபடி ஊரில் உள்ள அனைவரிடமும் அன்பாக பணிவாகவும் பேசுவான். யாராவது வந்து ஏதாவது அவனிடம் கேட்டால் மறக்காமல் அந்த உதவியை செய்வான் அந்த அளவுக்கு ஒரு நல்ல மனம் படைத்தவன். இவனது பணிகளை தவறாமல் செய்து வருவான் மற்றவர்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் தரமாட்டான். இதனாலேயே அந்த ஊரில் ஒரு சிலருக்கு இவனை பிடிக்கும்.
(tamil horror stories)அந்த கிராமத்தில் ஊருக்கு வெளியில் ஒரு பழுதான பாழடைந்த வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டின் பக்கம் இரவு பொழுது ஆனால் யாரும் செல்ல மாட்டார்கள். பகல் பொழுதில் அந்த வழியாகத்தான் ஊர் பொதுமக்கள் அனைவரும் தங்களது பணிகளுக்கு செல்வார்கள் வருவார்கள். ஆனால் இரவு ஏழு மணி ஆனால் அனைத்து ஊர் மக்களும் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அப்படி அந்த பாழடைந்த வீட்டில் என்ன தான் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அந்தப் பாழடைந்த வீடு பல நூறு வருடங்களாக அப்படியேதான் இருக்கிறது. அந்த ஊரில் வாழ்ந்தவர்கள் அந்த வீடு ஒரு பயங்கரமான வீடு என்று சொல்லி வாழ்ந்து வந்தனர்.
ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக பெரியோர்கள் சொன்னதை ஏன் தட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இரவு ஏழு மணியானல் அந்த பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள். சின்னா அந்த ஊரில் தான் வசித்து வருகிறான் இதுவும் அவனுக்கு தெரியும். ஒரு முறையாவது அந்த வீட்டிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று சின்னா நினைத்துக் கொண்டிருந்தான். தனது நண்பர்களிடம் அவன் கூறுவான் எப்படியாவது ஒரு முறையாவது அந்த வீட்டிற்குச் சென்று பார்த்துவிட வேண்டுமென்று. அவனது நண்பர்கள் அந்த வீட்டில் சென்று நீ அப்படி என்னத்தை பார்ப்பாய். என்று கேட்டனர். ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பாழடைந்த வீட்டை கண்டு பயந்து கொண்டிருக்கிறார்கள் அதை நான் பொய்யென நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தனது நண்பரிகளிடம் கூறுவான்.
அவனது நண்பர்கள் பெரியோர்கள் சொல்வது ஏன் மீற வேண்டுமென்று கேட்டனர். அந்த பக்கம் செல்ல வேண்டாம் என்று நண்பர்கள் கூறினர். ஆனால் சின்னா கேட்கவில்லை. எப்படியாவது ஒரு முறை அந்த வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் நண்பர்கள் எவ்வளவோ கூறியும் சின்னா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. நாளை மறுநாள் கண்டிப்பாக நான் சென்று பார்ப்பேன் என்று சின்னா தைரியமாகக் கூறினான். நாளை மறுநாள் வந்தது. சின்னா அந்த வீட்டிற்கு போகலாம் என்று நினைப்பதை அவனது நண்பர்கள் யாரிடமும் சொல்லவில்லை.
சின்னா நான் அந்த பாழடைந்த வீட்டிற்கு செல்கிறேன் என்று யாரிடமும் கூற வேண்டாம் என்று தனது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டான். மறுநாள் இரவு பொழுது வந்தது. சின்னா தைரியமாக அந்த வீட்டிற்குள் செல்லலாம் என்று முடிவு செய்தான். இரவு ஒன்பது மணிக்கு சின்னா அந்த வழியாக சென்றான். அந்தப் பாழடைந்த ஒரு விதமான சத்தம் கேட்கத் தொடங்கியது. ஆனாலும் கூட சின்னா தனது மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு அந்தப் பக்கம் மெதுவாக செல்ல ஆரம்பித்தான். நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது. சின்னா சுற்றி முற்றி பார்த்தான். அந்த வீட்டின் வாசலில் சென்று நின்றான். ஒருவிதமான வாசனையும் சத்தமும் வந்தது.
சின்னாவின் மனதில் என்ன வந்தாலும் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தான். அந்த வீட்டின் முன்னால் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்ற ஒரு பலகையும் மந்திர எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு ஓலை இருந்தது. அந்த வீட்டின் வாசலில் சுற்றி மந்திரக்கயிறு இருந்தன. வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்தான். யாரோ அவனிடம் உள்ளே செல்லதே என்று கேட்கும் சத்தம் அவன் காதில் கேட்டது. மீண்டும் சுற்றியும் முற்றிலும் பார்த்தான். யாரும் இல்லை ஆனால் ஒருவித சத்தம் மட்டும் கேட்டது. சின்ன மனதில் இந்த வீட்டில் எதுவும் இல்லை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அந்த வீட்டின் உள்ளே சென்றான்.
அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த வௌவால். இரவு நேரம் என்பதால் சிறகை விரித்து சத்தம் போட்டுக் கொண்டு பறக்கத் தொடங்கின. அந்த வீட்டின் உள்ளே அலறல் சத்தம் கேட்கத் தொடங்கியது. வீட்டின் உள்ளே பல அறைகள் இருந்தன. சின்னா ஒவ்வொரு அறையாக சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.தனது கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒவ்வொரு இடமாக செல்லலாம் என்று முடிவு செய்தான். முதல் அறைக்கு செல்லலாம் என்று முன்னேறினான். அந்த வெளிச்சத்தில் திடீரென ஒருவர் ஓடுவது போன்ற உருவம் தோன்றியது. இதைக் கண்டதும் ஒன்றும் இருக்காது என்று மேலும் முன்னேறினான். அந்த அறையின் உள்ளே சென்றான்.
அங்கு யாரும் இல்லை. மீண்டும் அவன் காதுகளில் அலறல் சத்தம் கேட்டது. அடுத்த அறைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தான். முதல் அறையை விட்டு வெளியே வரும்போது அவன் கால்களைப் பிடித்து யாரோ இழுப்பது போல உணர்ந்தான். அவன் கால்களைப் பார்த்தபோது எதுவும் பிடித்த மாதிரி தெரியவில்லை. ஆனால் அவன் கீழே பார்த்தபோது யாரும் இல்லை. மீண்டும் வெளியே செல்லலாம் என்று முயற்சி செய்கிறான். மீண்டும் அவன் ஒரு காலை யாரோ பிடித்து இழுப்பது போல் உணர்ந்தான். பிறகு ஒரு வழியாக காலை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். அடுத்த அறைக்கு செல்லலாம் என்று முற்பட்டான். அவனது காதுகளில் அலறல் சத்தம் அதிகமாக கேட்டது.
அடுத்த அறையில் சென்றபோது அவனது உடலை யாரோ பிடித்து தள்ளுவது போல் உணர்ந்தான். யாராவது இங்கு இருக்கிறீர்களா என்று சத்தம் போட்டு கேட்டான். எந்த ஒரு பதிலும் அவனுக்கு கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் அலறல் சத்தம் அவனது காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. தனது கையில் உள்ள விளக்கால் சுற்றி முற்றி பார்த்தான் ஆனால் அவனது கண்களில் எதுவும் தென்படவில்லை. மீண்டும் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் உடலை பிடித்து யாரோ தள்ளுவது போல உணர்ந்தான். மேலே செல்லலாம் என்று முடிவு செய்தான் படிக்கட்டுகளின் அருகில் வந்தான். மேலே செல்ல வேண்டாம் என்று ஒரு குரல் வித்தியாசமாக கேட்டது. அதுவரைக்கும் அலறல் சத்தம் அவனது காதுகளில் கேட்டது.
ஒவ்வொரு படிக்கட்டுகளாக மேலே ஏறினான். மேலே ஏற வேண்டாம் என்று ஒரு குரல் கேட்டது அதுமட்டுமில்லாமல் இன்னொரு பக்கம் அளவுக்கு மீறிய சத்தம் அதிகமாக கேட்டது. மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே முன்னேறினான். அவனது கைகளையும் கால்களையும் யாரோ பிடித்து இழுப்பது போல உணர்ந்தான். மேலே சென்றதும் ஒரு பக்கம் புகை மண்டலமாக இருந்தது. அந்தப் புகையில் இருந்து பல உருவங்கள் அவன் கண்களில் தென்பட்டன. அவனை மேலே பிடித்து தூக்கின. யார் நீங்கள் என்று கேட்டான். அந்த அறையில் அலறல் சத்தமும் மிக மிக அதிகமாக கேட்டது அவனை ஒரு பக்கம் பிடித்து தூக்கின. அவனது கண்களின் முன்னால் ஒரு..........(தொடரும்)
இந்தக் கதையை உடனுக்குடன் கேட்க வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள நமது telegram chennal join செய்து கொள்ளவும்
0 Comments
thanks for your comments