திருடனுக்கும் காதல் மலரும் (tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.

.                (Tamil love story)

அவர் எந்த ஜாதி என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார். எனது மருமகன் எந்த ஜாதியாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர் ஒழுக்கமானவர் என்ற ஒரு தகுதி மட்டுமே எனக்கு போதும் என்று மாலினி என் தந்தை கூறினார். இதைக்கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் நான் உங்களிடம் கூற வேண்டியதை கூறிவிட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.( Tamil love stories)

மாலினியின் தந்தை மாலினி அவர் உன்னை வைத்து கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் நான் அவருக்கு ஒரு வருட காலம் மட்டுமே அவகாசம் அளித்து உள்ளேன். அதற்குள் அவர் பெரிய நிலைமைக்கு வரவில்லை என்றாலும் உன்னை வைத்து காப்பாற்றும்  அளவிற்கு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று மாலினியின்  தந்தை கூறினார். உங்களை விட எனக்கு பலமடங்கு நம்பிக்கை இருக்கிறது அப்பா என்று மாலினி கூறினாள். அன்று இரவு பொழுது சுருளி ஒரு வருடத்திற்கு என்ன என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டி கொண்டிருந்தான். நாளை நல்லபடியாக என் நண்பனிடமிருந்து காரை பெறவேண்டும் என்று மனதுக்குள் நினைத்தான்.( Tamil love story)

மறுநாள் காலைப் பொழுது விடிந்தது வழக்கம் போல இருவரும் சந்திக்கும் இடத்திற்கு வந்தனர். மாலினி சுருளி இடம் இன்று நீ அவரிடமிருந்து காரை வாங்குகிறாய் கோவிலுக்கு சென்று விட்டு வேலைக்கு செல்லலாம் என்று கூறினாள். இருவரும் கோவிலுக்கு சென்றனர். சுருளி மனதுக்குள் காரை நல்லபடியாக ஒட்டி ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். மாலினியும் அதைப்போல் நினைத்தாள். இருவரும் கடவுளை வேண்டி விட்டு தங்களது பணிகளுக்கு சென்றனர். சுருளி அவன் பணி பார்க்கும் இடத்திற்கு வந்தான். சுருளியின் நண்பர் வருவதற்கு சற்று தாமதமாகும் என்ற செய்தி அவனுக்கு கிடைத்தது.(tamil love stories)

நண்பன் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக அவனது நண்பன் அங்கு வந்தார். மன்னித்துவிடு சுருளி கோவிலுக்கு சென்று விட்டு வருவதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது என்று கூறினார். இல்லை பரவாயில்லை என்று சுருளி கூறினான். அவரது கார் செட்டில் மொத்தமாக 11 கார்களை வைத்திருந்தார். வா! சுருளி உனக்கு காரை காட்டுகிறேன் என்று அவர் கூறினார். அவர் ஒரு பழைய காரை காட்டினார். இந்த கார் தான் நான் உனக்கு தருகிறேன் என்று அவர் கூறினார். இந்த காரில் ஒரு சில வேலைகள் மட்டும் இருக்கிறது. அதை சரி செய்தால் கார் நல்லபடியாக ஓடும் என்று கூறினார். சுருளி அந்த காரை சுற்றி பார்த்தான்.(tamil love stories)

பழைய காராக இருந்தாலும் பரவாயில்லை. எனது திறமையால் நான் இந்த காரை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன் என்று சுருளி தன்னம்பிக்கையுடன் கூறினான். அந்த காரின் சாவியை அவனிடம் கொடுத்தார். சுருளி அந்த காரை எடுத்துக்கொண்டு நேராக பழுதுபார்க்கும் இடத்திற்குச் சென்றான். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு காரில் உள்ள சிறு வேலைகளை அனைத்தையும் செய்து முடித்தான். இப்போது கார் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறது என்று சுருளி நினைத்தான். காரை சர்வீஸ் செய்வதற்கு மாலை வேளை ஆகிவிட்டது. காரில் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது காரை எடுத்துக்கொண்டு சுருளி அங்கிருந்து புறப்பட்டான். (தமிழ் சிறு காதல் கதைகள்)

சுருளி அந்த காரை எடுத்துக்கொண்டு நேராக வழக்கம் போல இருவரும் சந்திக்கும் இடத்திற்கு வந்தான். மாலினியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். மாலினி பணியை முடித்துவிட்டு அந்த இடத்திற்கு வந்தாள். காரைப் பார்த்ததும் திகைத்து நின்றாள். சுருளி மாலினியை கண்டதும் இந்த கார் தான் எனது நண்பர் எனக்கு வழங்கியிருக்கிறார். காரில் இருந்த அனைத்து பழுதுகளையும் நீக்கிவிட்டேன் இப்பொழுது நல்ல நிலைமையில் இருக்கிறது என்று மாலினியிடம் கூறினான். இன்று நீ முதல் சவாரிக்கு சென்றாயா என்று மாலினி கேட்டாள். இல்லை காரை சர்வீஸ் செய்து கொண்டு உன்னை முதன் முதலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காக நான் எங்கும் செல்லவில்லை என்று சுருளி கூறினான்.(tamil love stories)

மாலினி சந்தோஷமடைந்தாள். சரி காரை எடுத்துக்கொண்டு பிறகு  கோயிலுக்குச் சென்று பூஜையிடலாம் என்று மாலினி கூறினாள். சரி என்று இருவரும் மீண்டும் கோவிலுக்கு சென்றனர் காருக்கு பூஜை செய்தனர். பூஜை முடிந்தவுடன் சுருளி மாலினியிடம் நான் உன்னை உன் வீட்டிற்கு சென்று இறக்கி விடுகிறேன் என்று கூறினான். என் முதல் சவாரி நீதான் என்று சுருளி கூறினான். நீ காரை விட்டு இறங்கியதும் எனக்கு ஒரு பத்து ரூபாய் மட்டும் கொடு போதும் என்று சுருளி கூறினான். மாலினி சரி என்று கூறினாள். தன் காரில் இருவரும் பயணம் செய்து வீட்டிற்கு வந்து அடைந்தனர் சுருளி கூறியது போலவே பத்து ரூபாய் எடுத்து மாலினி கொடுத்தாள்.( தமிழ் சிறு காதல் கதைகள்)

மாலினியை இறக்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். இதைக் கண்ட மாலினியின் தந்தை கார் யாருடையது என்று மாலினியிடம் கேட்டார். மாலினி நடந்த அனைத்தையும் கூறினாள். பரவாயில்லை அவர் நான் நேற்று கூறியதைப் போலவே அவர் முன்னேறுவதற்கு என்ன வழியோ அதை யோசிக்க ஆரம்பிக்கிறார் என்று சந்தோஷம் அடைந்தார். மாலினியின் மனதில் ஒருவிதமான சந்தோஷம். சுருளியைப் பற்றி நல்லவிதமாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சந்தோசம் அடைந்தாள். மறுநாள் காலை பொழுது விடிந்தது வழக்கம் போல இருவரும் நின்று பேசிவிட்டு தங்களது பணிகளுக்கு சென்றனர். ( Love story)

சுருளி தனது முதல் சவாரிக்காக காத்துக் கொண்டிருந்தான். ஒரு பயணி சவாரிக்காக வந்தார். அந்த முதல் சவாரியை முடித்துவிட்டு சுருளிக்கு அடுத்து அடுத்தாக பயணிகள் வர ஆரம்பித்தனர். சுருளி இதற்குமுன் பணி செய்தபோது ஒரு வாரத்தில் சம்பாதிக்கும் பணத்தை ஒரே நாளில் சுருளி சம்பாதித்தான். அன்று முழுவதும் சுருளி சந்தோசமாக இருந்தான். தனது நண்பரை சந்தித்து விட்டு வரலாம் என்று சுருளி  அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். தனது நண்பரை சந்தித்தான் என்ன சுருளி முதல் நாள் எப்படி இருந்தது என்று கேட்டார். முதலில் பயணிகள் யாரும் வரவில்லை நான் சற்று பயம் அடைந்தேன். பிறகு ஒரு பயணி வந்தார். அவரைத் தொடர்ந்து அடுக்கடுக்காக எனக்கு சவாரிகள் வந்தன. என்று சுருளி கூறினான்.( Real love story)

முதலில் அப்படித்தான் இருக்கும் பிறகு செல்லச்செல்ல சரியாகிவிடும் என்று சுருளியின் நண்பர் அறிவுரை கூறினார். சற்று நேரம் பேசிவிட்டு சுருளி அங்கிருந்து புறப்பட்டான். இன்று வந்த வருமானத்தை மாலினியிடம் கூறினாள், மாலினி மிகவும் சந்தோஷம் அடைவாள். என்று எண்ணினான். மாலைவேளையில் இருவரும் சந்திக்கும் இடத்திற்கு சுருளி சரியான நேரத்திற்கு சென்று நின்று கொண்டிருந்தான். மாலினி வரும் பேருந்து வந்தது ஆனால் அந்தப் பேருந்தில் இருந்து மாலினி இறங்கவில்லை. பேருந்தை சுற்று முற்றி பார்த்தான் ஆனால் மாலினியை காணவில்லை. என்ன ஆனது என்று தெரியாமல் சுருளி பதறிப் போனான். ஏன் வரவில்லை என்ன ஆயிருக்கும் என்று சுருளி பயத்துடன் யோசிக்க ஆரம்பித்தான். அப்போது திடீரென்று............( தொடரும்)

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.

மேலும் இதுபோன்ற கதைகளை கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1


Post a Comment

0 Comments