திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் (tamil love stories)
பகுதி - 14

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.

அங்கேயே நில். என்று மாலினியின் தந்தை கூறினார். சுருளி தலை நிமிர்ந்து பார்த்தான். நான் உங்களுடன் சற்று பேச வேண்டும் எனக்கு தயவு செய்து அனுமதி தாருங்கள் என்று சுருளி மன்றாடிக் கேட்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மாலினியின் மாமா நீங்கள் தானே அன்று, நாங்கள் மாலினியை பெண் பார்க்க வந்தபோது நீங்கள் தான் மாப்பிள்ளை என்று கூறினீர்களே இப்போது என்ன ஆயிற்று என்றும் மாலினியின் மாமா கேட்டார். (tamil love stories)

அதற்கு மாலினியின் தந்தை நாங்கள் மோசம் போய்விட்டோம். இவன் ஒரு திருடன் என்பதை மறைத்து எங்களை ஏமாற்றி இருக்கிறான். அதுமட்டுமில்லாமல் எங்களது வீட்டிலேயே திருட வந்துவிட்டு மாலினியை பார்த்து காதலித்தான். ஆறு மாத காலங்களாக மாலினியின் பின்பு சுற்றி மாலினியை எப்படியோ! ஒப்புக்கொள்ள வைத்தான். இவன் ஒரு திருடன் என்பது மாலினிக்கு முன்கூட்டியே தெரியும் ஆனால் அவள் எங்களிடம் எதுவும் கூறவில்லை என்று  மாலினியின் தந்தை மாலினியின் மாமாவிடம் கூறினார். இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சுருளி எதுவும் பேசாமல் தலை குனிந்தபடியே நின்றான். (tamil love stories)

மாலினியின் மாமா இப்போது இவன் ஒரு திருடன் என்பது உங்களுக்கு தெரிந்த உடன் நீங்கள் என்னிடம் சம்மதம் பேச வந்திருக்கிறீர்கள். நான் அன்று வந்து கேட்டபோது நீங்கள் என்னை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பினீர்கள் இப்போது என்னிடம் வந்து என் மகனை உங்களது மகளுக்கு மணம் முடிக்க பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று மாலினியின் மாமா சற்று கோபமாக பேசிக்கொண்டிருந்தார். அண்ணா நீங்கள் கோபப்படாதீர்கள்! அப்போது எங்களுக்குத் தெரியாது இவன் ஒரு திருடன் என்று எங்களை மன்னித்து விடுங்கள் என்று மாலினியின் தாயார் கூறினார். மாலினியின் மாமா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார். (tamil love stories)

சுருளி நான் உன்னுடன் சற்று தனியாக பேச வேண்டும். உள்ளே உள்ள அறையில் சென்று சற்று உட்காரு நான் உன்னிடம் வந்து பேசுகிறேன் என்று மாலினியின் மாமா கூறினார். உடனே மாலினியின் தந்தை அந்தத் திருடனை ஏன் உள்ளே அமர சொல்கிறீர்கள் அவனை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று கோபமாக மாலினியின் தந்தை பேசினார். இது என்னுடைய வீடு இங்கு யார்? யார்? இருக்க வேண்டும் என்பதை நான்  தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் தயவுசெய்து இருவரும் அமைதியாக உட்காருங்கள். நான் அந்த பையனிடம் கண்டிப்பாக பேசியாக வேண்டும். மாலினி, சுருளி இருவர் பற்றி எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால்தான் நான் அவனை உள்ளே சென்று அமர சொன்னேன் என்று மாலினியின் மாமா கூறினார். (tamil love stories)

ஒரு பக்கம் மாலினியின் தந்தை மற்றும் தாயார் இருவரும் அமர்ந்தனர். மறுபக்கம் சுருளியும் மாலினியின் மாமாவும் இருவரும் ஒரு அறைக்குள் சென்றனர். மாலினியின் தந்தை அவரது மனைவியிடம் இந்த திருடனை எதற்கு உனது அண்ணா அழைத்துப் பேச வேண்டும் அவனை வீட்டை விட்டு அடித்து வெளியே துரத்த வேண்டாமா? என்று கோபமாக மாலினியின் தாயிடம் கூறினார். வீட்டின் அறைக்கு உள்ளே சென்றவுடன் உட்காரு சுருளி என்றார். சுருளி பரவாயில்லை நான் நின்றுகொண்டே தங்களிடம் பேசுகிறேன் என்று பணிவாக கூறுகிறான். உன்னை ஒரு திருடன் என்று அழைக்கிறார்கள். அவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா? உன்னைப் பற்றியும் மாலினியை பற்றியும் எனக்கு தெளிவாக கூறு அப்போதுதான் நான் ஒரு முடிவு எடுக்க முடியும் என்றார். (tamil love stories)

நான் கூறுகிறேன் என்று சுருளி பேச ஆரம்பித்தான். தனது வாழ்நாளில் திருட்டுத் தொழில் முதல் மாலினியை சந்தித்துப் பேசியது வரை ஒன்றுவிடாமல் மாலினியின் மாமாவிடம் கூறினான். சுருளி கூறிய எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக சுருளி நடந்த எல்லாவற்றையும் கூறினான். மாலினியின் மாமா எல்லாவற்றையும் கேட்டு விட்டு இப்போது நீயும் மாலினியும் என்ன முடிவு செய்து உள்ளீர்கள் என்று கேட்டார். மாலினி வீட்டை விட்டு வருகிறேன் என்று கூறுகிறாள். மாலினியை வீட்டைவிட்டு அழைத்து சென்று மாலினியின் பெற்றோரை அவமானப்படுத்த எனக்கு விருப்பமில்லை. (tamil love stories)

எப்படியாவது அவளிடம் சம்மதம் வாங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்‌. மாலினி வாழ்ந்தால் என்னுடன் மட்டும் தான் வாழ்வேன் இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அழுது கொண்டே என்னிடம் கூறினாள். கண்டிப்பாக நமக்கு திருமணம் நடைபெறும் என்று மாலினிக்கு தைரியத்தையும் கூறிவிட்டு நான் இங்கே  வேகமாக வந்தேன். நீ சொல்வது அனைத்தும் உண்மை தானே! இல்லை பொய் கூறுகிறாயா? என்று மாலினியின் மாமா சந்தேகமாக கேட்டார். என் உயிருக்கு உயிரான மாலினியின் மீது ஆணையாக நான் கூறுவதெல்லாம் உண்மை என்று சுருளி கூறினான். (tamil love stories)

நான் உன்னை நம்புகிறேன். உங்கள் காதல் புனிதமானது. ஒரு காதல் ஒருவனை இந்த அளவிற்கு மாற்றும் என்பதை நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். மாலினிக்காக உனது திருட்டு தொழிலை விட்டு, கார் ஓட்டுநராக பணிபுரிந்து, ஒரு காரை வாடகைக்கு எடுத்து சொந்தமாக தொழிலை செய்துகொண்டு, வீட்டை மாற்றி அமைத்து நல்ல முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக உங்கள் காதல் வெற்றியடைய என்னால் ஆன முயற்சியை நான் செய்கிறேன். மாலினியின் தந்தை நீ திருடன் என்ற ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால்  நீ மாலினிக்காக  எந்த அளவுக்கு மாறி இருக்கிறாய் என்பதை அவர்கள் உணர மறந்து விட்டார்கள். (tamil love stories)

ஒரு பெண் ஒரு ஆணை இந்த அளவிற்கு மாற்ற முடியும் என்பதை உன் மூலமாக எனக்கு புரிகிறது. நான்  உனது மாமாவிடம் பேசுகிறேன் வா வெளியில் செல்லலாம் என்று கூறினார். வீட்டைவிட்டு சுருளி மாலினியின் மாமா இருவரும் வெளியே வந்தனர். நீங்கள் ஏன் இந்த திருட்டு பையனுடன் பேசவேண்டும். அவனை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று மாலினியின் தந்தை கோபமாகக் கூறினார். நான் சுருளி இடம் பேச வேண்டிய எல்லாவற்றையும் பேசிவிட்டேன் எனக்கு தெளிவாக அவர்களின் காதல் புரிகிறது இவர்கள் இருவரையும் பிரித்தால் அந்தப் பாவம் என் மகனுக்கு வந்து சேரும் என்று மாலினியின் மாமா கூறினார். இதைக்கேட்டு சுருளி சற்று மன ஆறுதல் அடைந்தான். (tamil love stories)

நீங்கள் உங்களது மகனை கட்டி தராவிட்டால் என்ன வேறு  ஒரு ஆண்மகனை நான் பார்க்கிறேன். என்று மாலினியின் தந்தை கூறினார். நீங்கள் சற்று கோபப்படாமல் நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. என்று நான் நினைக்கிறேன். உங்களைப் பற்றி நீங்கள் மறந்துவிட்டீர்கள் அதை உங்களுக்கு ஞாபகப் படுத்தினாள் இவர் ஒரு திருடன் என்பதை நீங்கள் மறந்து விடுவீர்கள். என்று மாலினியின் மாமா கூறினார். என்னைப் பற்றி நீங்கள் என்ன நியாபக படுத்த வேண்டி இருக்கிறது என்று கோபமாகக் கேட்டார். சொல்கிறேன் பொறுமையாக கேளுங்கள் என்றார் மாலினியின் மாமா. (tamil love stories)

நீங்கள் என் தங்கையை திருமணம் செய்வதற்கு முன்பாக எந்த தொழிலில் ஈடுபட்டி இருந்தீர்கள். நீங்களும் காதலித்து தானே எனது தங்கையை திருமணம் செய்து கொண்டீர்கள். திருமணத்திற்கு முன்பாக நீங்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டால் அது சரி? இவர் திருட்டு தொழிலில் ஈடுபட்டிருந்தார் தவறா? என்று கேட்டார். நான் அந்த தொழிலில் ஈடுபட்டிருந்தது உங்களுக்கு எப்படி தெரியும். எனக்கு எல்லாம் தெரியும் என் தங்கை ஆசைப்பட்டால் என்ற ஒரு காரணத்திற்காக உங்களை மதித்து  திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டோன். இதைக் கேட்ட சுருளி ஆச்சரியமாக இவரும் ஒரு காலத்தில் திருடன் தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். (tamil love stories)

உங்களைவிட சுருளி ஒரு படி உயர்ந்தவனாக தான் இருக்கிறான் என்று நான் கருதுகிறேன். நீங்கள் இட்ட கட்டளை களுக்கெல்லாம் அடிபணிந்து ஒரு நல்ல நிலைமையில் இப்போது இருக்கிறான். உங்களது பெண்ணை உங்கள் விருப்பம் இன்றி திருமணம் செய்து கொண்டால் அது உங்களுக்கு செய்யும் துரோகம் என்று நினைக்கிறான். இந்த ஒரு தகுதி போதும் என்று நான் நினைகிறேன். உலகத்தில் யாருமே நல்லவர் கிடையாது. ஒரு காலத்தில் கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறுகிறார். அவன் நல்லவனாக மாறும் பொழுது அவனுக்கு ஒரு வாய்ப்பு கண்டிப்பாக நாம் கொடுக்க வேண்டும் அந்த வாய்ப்புதான் இது என்று மாலினியின் மாமா சரமாரியாக கேள்விகளை கேட்டார். (tamil love stories)

ஒருபுறம் சுருளி ஆனந்தமாக அதைப்பார்க்க மறுபுறம் மாலினியின் தந்தை எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார். என்ன எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறீர்கள் இப்போது இவன் ஒரு திருடன் என்று கூறுங்கள் பார்க்கலாம். ஒரு மனிதனின் முன் பக்கத்தை மட்டுமே பார்க்காதீர்கள் அவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதைப் பாருங்கள் என்று கோபமாக மாலினி மாமா பேசினார். எதுவும் பேசாமல் அமைதியாக மாலினியின் தாய் மற்றும் தந்தை நின்றனர். இப்போது உங்கள் பதிலை கூறுங்கள் என்று மாலினியின் மாமா அவர்களிடம் கேட்டார். நான் எனது பதிலை..........(தொடரும்).

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories


திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1

Post a Comment

0 Comments