திருடனுக்கும் காதல் மலரும் (Tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் (tamil love stories)
பகுதி - 13

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.

சுருளி அந்த காகிதத்தை பிரித்தான். அதில் சுருளி நீ எதற்கும் கவலைப்படாதே. நீ உனது வீட்டை முழுமையாக கட்டி முடித்துவிடு. என் தந்தையை நான் எப்படியாவது பேசி நமது திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறேன். நீ எதற்கும் கவலை படாமல் உனது தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல். நான் உனக்காக பிறந்தவள். கண்டிப்பாக நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் வேறு யாரையும் நான் கை பிடிக்க மாட்டேன். (Tamil love stories)

நம் காதல் உண்மை என்றால் எனது தந்தை கண்டிப்பாக ஒப்புக்கொள்வார் என்று மாலினி அந்த கடிதத்தில் எழுதி இருந்தாள். சுருளி அந்தக் கடிதத்தை படித்து விட்டு மனம் சற்று ஆறுதல் அடைந்தான். இருந்தாலும் சுருளியின் மனதில் மாலினியை பார்க்காமல் எப்படி இருப்பேன் கண்டிப்பாக மாலினியை நான் தினமும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தான். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். சரி முதலில் வீட்டுக்குச் செல்லலாம் அங்கு சென்று முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தான். சுருளி வீட்டிற்கு சென்றதும் தனது வீட்டு வேலையை பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரர்களிடம் தயவுசெய்து வேலையை விறைந்த முடியுங்கள் என்று அன்பாக கூறினார்.(Tamil love stories)

மறுநாள் காலை பொழுது விடிந்தது. சுருளி வழக்கம்போல தனது பணிகளை பார்க்கச் சென்றான். சுருளி, மாலினி இருவரும் சந்தித்துப் பேசும் இடத்திற்கு சுருளி சென்று காத்துக் கொண்டிருந்தான். ஆனால் மாலினி வரவில்லை. சுருளி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். மாலினியின்  தோழி ஒருத்தி மாலினி உடன் பணிக்கு வருவாள். அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவு செய்தான். பேருந்து நிலையத்திற்குச் சென்று மாலினியின் தோழியிடம் ஏன் மாலினி வரவில்லை என்று கேட்டான். அவர்கள் வீட்டில் இனிமேல் மாலினியை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். என்று என்னிடம் கூறினார்கள் என்று மாலினியின் தோழி கூறினாள்.(Tamil love stories)

இதைக் கேட்ட சுருளி மாலினி உங்களிடம் ஏதாவது சொல்லி அனுப்பினாளா? என்று சுருளி கேட்டான். ஆமாம் மாலினி உங்களிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தாள். இந்தாருங்கள் அந்த கடிதம் என்று மாலினியின் தோழி எடுத்து சுருளி இடம் கொடுத்தாள். சுருளி அந்த காகிதத்தை வேகமாக வாங்கிக்கொண்டு மாலினியின் தோழியிடம் நன்றி கூறிவிட்டு காரில் சென்று அமர்ந்தான். அந்தக் கடிதத்தில் சுருளி, எனது தந்தை நேற்று என் மாமாவிடம் அலைபேசியில் பேசினார். அதில் எனக்கு என் மாமாவின் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.(Tamil love stories)

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் என் அம்மாவிடம் எவ்வளவோ கூறினேன் ஆனால் அவர்கள் என்னை, என் மாமாவின் மகனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். உன்னை மறுபடி மறுபடியும் திருடன் என்று பேசுகிறார்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் என்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. தயவுசெய்து என்னை வந்து அழைத்துக் கொண்டு சென்று விடு. என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தது. சுருளி இந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு என்ன செய்வதென்று யோசித்தான்.(Tamil love stories)

இந்த நேரத்தில் மாலினிக்கு நம் தைரியத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். சுருளி ஒரு கடிதம் எழுதினான். கடிதத்தை எழுதி முடித்து விட்டு எப்படி இதை மாலினியிடம் கொடுத்து அனுப்புவது என்று யோசித்தான். மாலைப்பொழுது வரும்வரையில் காத்திருக்கலாமா? இல்லை மாலினியின் வீட்டின் அருகில் சென்று அவள் அறையில் கடிதத்தை போட்டு விடலாமா?  என்று யோசிக்க ஆரம்பித்தான். மாலைப்பொழுது வருவதற்குள் மாலினியின் மாமா வீட்டிற்கு வந்து விட்டால் என்ன செய்வது, இந்தக் கடிதத்தை இப்போது மாலினி இடம் கொடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்தான்.(Tamil love stories)

சுருளி தனது காரை எடுத்துக்கொண்டு மாலினியின் வீட்டின் அருகில் சென்றான். இந்தக் கடிதத்தை மாலினி இடம் தர வேண்டும் என்றால் நான் பழைய திருடனாக மாற வேண்டும். என்று யோசித்தான். அதுவும் சரிதான் இந்த பொழுதும் மாலினிக்கு நான் தைரியத்தை கொடுத்தாக வேண்டும் அதற்கு நான் எந்த முயற்சி செய்தாலும் தவறில்லை என்று சுருளி மனதிற்குள் நினைத்துக் கொண்டு திருடன் சுவரேறிக் குதிப்பது போல உள்ளே நுழைந்தான். முதன்முதலில் மாலினியை எவ்வாறு பார்த்தானோ! அதேபோல் சுருளி அந்த இடத்திற்கு சென்றான். ஜன்னலில் இருந்து சுருளி எட்டிப்பார்த்தான். கட்டிலில் மாலினி அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தாள். (Tamil love stories)

மாலினி என்று கூப்பிட்டான். அதற்கு மாலினி சுருளி நீ வந்து விட்டாயா? என்று அழுதபடி கேட்டாள். அதற்கு சுருளி மாலினி எதற்கும் பயப்படாதே! நீ தைரியமாக இரு நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சுருளி தைரியம் கூறினான். மாலினி நான் வெகுநேரம் நின்று பேச முடியாது. நான் பேசவேண்டியது எல்லாத்தையும் இந்த கடிதத்தில் எழுதி இருக்கிறேன். நீ இதை படித்துவிட்டு ஒரு கடிதத்தை உனது தோழியிடம் கொடுத்து அனுப்பு என்று சுருளி கூறினான். அதற்கு மாலினி சரி என்று கூறினாள். எனது அப்பாவும் அம்மாவும், எனது மாமாவை பார்க்கச் சென்று உள்ளார்கள். அவர்கள் அங்கு என்ன பேசி முடிவு எடுப்பார்கள். என்று எனக்கு தெரியவில்லை. என்று மாலினி அழுதபடியே கூறினாள். (Tamil love stories)

அதற்கு சுருளி மாலினியிடம் நீ எதற்கும் கவலைப்படாதே நான் அங்கு சென்று பேசுகிறேன். அங்கு எப்படி போகவேண்டும் என்று மட்டும் எனக்கு சொல் என்று சுருளி தைரியமாக கூறினான். மாலினி தன் மாமாவின் வீட்டு விலாசத்தை கொடுத்தாள். விலாசத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்படலாம் என்று நினைத்தான். மாலினி என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு என்று கூறினாள். மாலினி கண்டிப்பாக நமக்கு திருமணம் நடைபெறும் நான் எல்லாவற்றையும் அந்தக் கடிதத்தில் எழுதி இருக்கிறேன். அதை பிரித்து படி,  நான் அங்கு சென்று அவர்களிடம் பேசுகிறேன் என்று மாலினியிடம் தைரியத்தை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
(Tamil love stories)

சுருளி தனது காரை எடுத்துக்கொண்டு வேகவேகமாக புறப்பட்டான். அந்த விலாசத்தை சென்று அடைய குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். முடிந்த அளவிற்கு வேகமாக செல்லவேண்டும். என்று சுருளி மனதிற்குள் நினைத்து கொண்டான். மாலினி வீட்டில் சுருளி  கொடுத்த கடிதத்தை பிரித்தால் அதில். மாலினி  நீ எதற்கும் கவலைப்படாதே. எனக்கு நம் காதல் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் இப்போது உன்னை வீட்டைவிட்டு அழைத்துக் கொண்டு சென்றாள். என்மீது உனது பெற்றோருக்கு மிகுந்த கோபம் தான் ஏற்படும். நான் எப்படியாவது உனது பெற்றோர்களிடம் பேசி ஒரு முடிவு செய்கிறேன். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் காலில் நான் விழுகிறேன்.(Tamil love stories)

இத்தனை ஆண்டுகளாக உன்னை வளர்த்த பெற்றோர்கள் கண்டிப்பாக நீ நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். என் மீது அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது ஆனால் நான் இதற்கு முன்பு திருட்டு தொழிலில் ஈடுபட்டு இருந்தேன் என்று அவர்களிடம் சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களிடம் சொல்லாதது தான் இப்பொழுது மிகப்பெரிய தவறாக உள்ளது. அதை நான் கண்டிப்பாக எப்படியாவது சரி செய்து விடுவேன். நீ எதற்கும் பயப்படாமல் தைரியமாக இரு. வீட்டை விட்டுச் சென்றால் அது உனது பெற்றோர்களுக்கு மிகுந்த அவமானம். (Tamil love stories)

அதனால் அவர்களின் சம்மதத்துடன் தான் நமது திருமணம் நடைபெற வேண்டும் அது வரைக்கும் கண்டிப்பாக நாம் காத்திருக்க தான் வேண்டும். என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தது. மாலினியின் மனதில் சுருளி நம் குடும்பத்தை இந்த அளவுக்கு நேசிக்கிறார் என்று மிகவும் சந்தோஷம் அடைந்தாள். மறுபுறமும் சுருளி தனது காரை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டுச் சென்றான். ஒரு வழியாக அந்த இடத்தை வந்து சேர்ந்தான். அங்கு வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சுருளின் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்லலாம் என்று தைரியமாக முன்னோக்கி நடந்தான். அப்போது அங்கேயே நில் என்று ஒரு குரல் கேட்டது. சுருளி தலை நிமிர்ந்து பார்த்தான்....( தொடரும்)...

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories


திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1


Post a Comment

0 Comments