மந்திர எழுதுகோல் (tamil magical stories)
பகுதி - 2
இந்தக் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதையின் முன் பகுதியைப் படித்துவிட்டு வாருங்கள். அப்பொழுது தான் உங்களுக்கு இந்த கதை புரியும். இந்த கதையின் முன்பகுதியில் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது.
இரவு 12 மணி ஆனது அந்த மந்திரவாதி திடீர் என்று கண் விழித்தார். கண்விழித்து விட்டு நாம் வந்த வேலையை பார்க்கலாம் என்று முடிவு செய்தான். அந்த மந்திர எழுதுகோல் இருக்கும் இடத்தை தேட ஆரம்பித்தான். மந்திரவாதியின் மனதில் ஒரு கேள்வி? எப்படி இருந்தாலும் ராசு அந்த மந்திரக் எழுதுகோலை நம்மிடம்தான் கொடுக்கப் போகிறான் அவன் வரும்வரை காத்திருக்கலாம் என்று யோசித்தாரன். இல்லை வேண்டாம் இரவோடு இரவாக அந்த மந்திரக் எழுதுகோலை எடுத்துக்கொண்டு இங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடலாம் என்று நினைத்தான்.( Tamil magical stories)
வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தான். அந்த மந்திரவாதியின் மந்திர சக்தியால் அந்த மந்திரம் எழுதுகோல் எங்கு இருக்கிறது என்று கணித்தான். ராசுவும் அவனது மனைவியும் உறங்கும் இடத்தில்தான் அந்த மந்திர எழுதுகோல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த அறைக்கு உள்ளே எப்படி செல்வது என்று திட்டம் தீட்டினாரன். உள்புறமாக கதவு பூட்டப் பட்ட நிலையில் இருந்தது. எப்படியாவது ராசுவை வெளியே கொண்டுவர வேண்டும். அந்த சமயத்தில் அந்தப் பெட்டியில் உள்ள மந்திர எழுதுகோல்யை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடலாம் என்று முடிவு செய்தான்.(tamil magical stories)
அவனை எப்படி வெளியே கொண்டு வரலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தான். அந்த மந்திரவாதி தன் மந்திர சக்தியால் வீட்டின் கதவை யாரோ தட்டுவது போல் மாயையை உருவாக்கினான். கதவு தட்டுவது போன்ற சத்தம் கேட்டது ராசு கண் விழித்துக் கொண்டான். ராசுவின் மனைவி கதவை யாரோ தட்டுகிறார்கள் என்று கூறினாள். நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று ராசு கூறினான். ராசு வெளியே வந்த நிலையில் ராசுவின் மனைவி உறங்கிக்கொண்டிருந்தாள். அந்த மந்திரவாதி வேகவேகமாக அந்த அறைக்குள்ளே சென்று பார்த்தான்.(tamil stories)
ஒருபுறம் ராசுவின் மனைவி உறங்கிக்கொண்டிருந்தாள். மறுபுறம் ராசு வருவதற்கு ஒரு சில வினாடிகள் மட்டுமே ஆகும். மந்திரவாதியின் மந்திர சக்தியால் அந்த எழுதுகோல் எங்கு இருக்கிறது என்று கணித்தான். அந்த அறையில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தான். ஆனால் அதில் மந்திர எழுதுகோல் இல்லை. இரண்டு மூன்று முறை தேடிப் பார்த்துவிட்டு மந்திரவாதி தன் படுக்கை அறைக்கு வேகமாக திரும்பினான். ராசு வீட்டின் கதவைத் திறந்து பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று தெரிந்ததும் மீண்டும் தன் அறைக்கு வந்தான். அறையின் உள்ளே வந்ததும் ஒரு சில பொருட்கள் மாறி இருந்ததை ராசு உணர்ந்தான்.(tamil stories)
எப்படி இந்த பொருட்கள் மாறி இருந்தன என்று யோசித்தான். உடனடியாக மந்திர எழுதுகோல் வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த மந்திர எழுதுகோல் அதே இடத்தில் தான் இருந்தது. ராசு வெளியே வந்து அந்த சாமியார் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் என்று நினைத்தான். அதேபோல் வெளியே வந்து சாமியாரை பார்த்தான் அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார் என்று தெரிந்ததும் ராசு மீண்டும் தன் அறைக்கு வந்தான். ராசு சென்றதும் அந்த மந்திரவாதி கண் விழித்துக் கொண்டான். அந்த மந்திர எழுதுகோல் எங்கே சென்றது என்று தெரியாமல் அந்த மந்திரவாதி மீண்டும் தன் மந்திர வித்தையை பயன்படுத்தினான். அந்த மந்திர எழுதுகோல் அதே இடத்தில் தான் இருப்பதை எடுத்துக் காட்டியது.(tamil old story)
அந்த மந்திரவாதியின் மனதில் நாம் அங்கு சென்று பார்த்தபோது அங்கு மந்திர எழுதுகோல் கிடையாது வேறு எங்கு வைத்திருக்கலாம் என்று மீண்டும் மந்திரத்தை உபயோகித்தான். ஆனால் மீண்டும் மீண்டும் அதே இடத்தை தான் அது காட்டியது. ராசு உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த மந்திரவாதி மீண்டும் அந்த அறைக்கு உள்ளே சென்றான். ஆனால் மீண்டும் அந்த மந்திர எழுதுகோல் இல்லை. ஆத்திரமடைந்த அந்த மந்திரவாதி ராசு மற்றும் அவனது மனைவியை தன் மந்திர வித்தையால் மயக்கமடையச் செய்தான். இருவரும் மயங்கிய நிலையில் அந்த மந்திரவாதி அவர்களை ஒரு நாற்காலியில் அமர வைத்து கட்டி போட்டான்.(tamil old story)
நள்ளிரவு 3 மணி ஆனது மயங்கிய நிலையில் ராசு மற்றும் அவனது மனைவி இருந்தனர். அந்த மந்திரவாதி அனைத்து இடங்களையும் தேடித் தேடிப் பார்த்தான் ஆனால் அந்த மந்திர எழுதுகோல் அவன் கண்களில் தென்படவில்லை. அந்த மந்திரவாதி இன்னும் அதிகமாக கோபம் அடைந்தான். சிறிது தண்ணீர் ஊற்றி இருவரையும் எழுப்பினான். மயக்க நிலையில் கண்விழித்த ராசு தனது கையும் கால்களும் கட்டப்பட்டது என்பதை உணர்ந்து அதிர்ந்து போனான். ஒருபுறம் அவனது மனைவி மயக்க நிலையில் இருக்க ராசு என்ன செய்வது என்று அறியாமல் அவனது கையும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. அந்த மந்திரவாதியை பார்த்து ஏன் எங்களை கட்டி வைத்திருக்கிறது என்று கேட்டான்.(tamil magical stories)
நான் ஒன்றும் சாமியார் அல்ல. உங்கள் வீட்டில் உள்ள மந்திர எழுது கோலை எடுத்துக்கொண்டு போக வந்த ஒரு மந்திரவாதி என்று கூறினான். ராசு அவர் அவ்வாறு கூறியதும் அதிர்ந்து போனான். ஏன் எங்களை கட்டி வைத்து இருக்கிறீர்கள் என்று ராசு அந்த மந்திரவாதியை பார்த்து கேட்டான். எனக்கு அந்த மந்திர எழுதுகோல் வேண்டும் எங்கே இருக்கிறது என்று கூறி விடுங்கள் என்று மந்திரவாதி மிரட்டினான். இல்லையென்றால் உன்னையும் உனது மனைவியையும் நான் கொன்று விடுவேன். என்று அந்த மந்திரவாதி மிரட்டல் விடுத்தான். எங்களை எதுவும் செய்து விடாதீர்கள் அந்த மந்திர எழுதுகோல் எங்கு இருக்கிறது என்று நான் கூறி விடுகிறேன் என்று கூறினான்.(tamil magical stories)
எங்களது அறையிலுள்ள அந்தப் பெட்டியில் தான் அதை நாம் வைத்திருக்கிறோம் என்று கூறினான். நான் அந்தப் பெட்டியை ஏற்கனவே பார்த்து விட்டேன் அதில் அந்த மந்திர எழுதுகோல் கிடையாது. நீ உண்மையை கூறாவிட்டால் உனது மனைவியை உன் கண்முன்னே நான் கொன்று விடுவேன் என்று அந்த மந்திரவாதி மிரட்டல் விடுத்தான். எங்களை எதுவும் செய்து விடாதீர்கள். உண்மையாக அந்த மந்திர எழுதுகோல் அந்த பெட்டியில் தான் இருக்கிறது என்று ராசு கூறினான். அந்த மந்திரவாதி மீண்டும் அந்த இடத்தைச் சென்று பார்த்தான் ஆனால் அங்கு மந்திர எழுதுகோல் இல்லை. என்னை ஏமாற்றாதே என்று அந்த மந்திரவாதி மிகவும் கோபமாக கூறினான். (Tamil magical stories)
எனது கட்டை அவிழ்த்து விடுங்கள் நான் அதை எடுத்து தருகிறேன் என்று ராசு கூறினான். மந்திரவாதியும் மந்திர எழுதுகோலை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ராசுவின் கட்டை அவிழ்த்து விட்டான். உனது மனைவியின் கட்டை அவிழ்க்க இயலாது நீ அந்த மந்திர எழுதுகோலை எடுத்துக்கொண்டு வா இல்லை என்றால் உனது மனைவியை நான் கொன்று விடுவேன் என்று இந்த மந்திரவாதி மிகவும் கோபத்துடன் கூறினான். உள்ளே சென்ற ராசு அந்த பெட்டியில் இருந்து மந்திரி எழுதுகோலை எடுத்தான். மனைவி ஒருபுறம் ஆபத்தில் இருக்க ராசு அந்த மந்திர எழுதுகோலை எடுத்து எங்களை காப்பாற்ற யாராவது வரவேண்டும் என்று எழுதி வைத்தான்.( Tamil magical stories)
அந்த மந்திர எழுதுகோல் எழுதி வைத்தது வைத்துவிட்டு. அந்த மந்திர எழுதுகோலை எடுத்துக்கொண்டு ராசு அந்த மந்திரவாதியிடம் சென்றான். அந்த மந்திர எழுதுகோலை அவனிடம் காட்டினான். இந்த மந்திர எழுதுகோலை எங்கே வைத்திருந்தாய் என்று கேட்டான். அது அந்தப் பெட்டியில் தான் இருந்தது என்று ராசு கூறினான். பிறகு ஏன் என் கண்களுக்குப் புலப்படவில்லை என்று அந்த மந்திரவாதி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு உருவம் தோன்றியது. ராசு எழுதி வைத்தது போல ராசு மற்றும் அவனது மனைவியை காப்பாற்ற அவர்களின் முன்னோர் வந்தனர். நீங்கள் யார் என்று அந்த மந்திரவாதி கேட்கும்போது அங்குவந்த முன்னோர்கள் அந்த மந்திரவாதியின் சக்தியை அடக்கினர்.(tamil stories)
உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் எனது பிள்ளைகளை நீ ஏமாற்றி மந்திர எழுதுகோலை பறிக்க பார்த்து இருப்பாய் என்று அந்த முன்னோர்கள் அந்த மந்திரவாதியிடம் கோபமாக கூறினார். இன்று முதல் உனது மந்திரமும் உனது தந்திரமும் எங்கும் வேலை செய்யாது நீ மண்ணோடு மண்ணாக அழிந்து போவாய் என்று அந்த முன்னோர்கள் சபித்தனர். அந்தக் கணமே அந்த மந்திரவாதி மண்ணோடு மண்ணாக மறைந்தான். பிறகு அந்த முன்னோர்கள் அந்த மந்திர எழுதுகோலை ராசுவிடம் கொடுத்தனர். இதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்கள் மறைந்தனர். ராசுவும் அவனது மனைவியும் இந்த மந்திர எழுதுகோலை எடுத்து பத்திரமாக அந்த பெட்டியில் வைத்துப் பூட்டினர்.(tamil stories)
ராசுவின் மனைவிக்கு ஒரு சந்தேகம் அந்த மந்திர எழுதுகோல் அந்த மந்திரவாதியின் கண்களுக்குப் ஏன் புலப்படவில்லை என்று கேட்டாள். அதற்கு ராசு தீய எண்ணத்துடன் அந்த மந்திர எழுதுகோலை தொட முயற்சித்தால் அது அவர்களுக்கு கண்களுக்குத் தெரியாது என்று கூறினான். மந்திரி எழுதுகோலை பத்திரமாக காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று ராசு கூறினான். அந்த மந்திரவாதி உங்களது கட்டை அவிழ்த்து விட்டதும் நீங்கள் உள்ளே சென்று அந்த மந்திர எழுதுகோலை எடுத்துக் கொண்டு வந்தீர்கள். பிறகு எப்படி நம் முன்னோர்கள் இங்கு வந்தார் என்று கேட்டாள். நான் அந்த மந்திர எழுதுகோலை எடுத்து எங்களை காப்பாற்ற யாராவது வரவேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு தான் நான் அந்த மந்திர எழுதுகோலை எடுத்துக்கொண்டு
அந்த மந்திரவாதியிடம் கொடுக்க முயற்சி செய்தேன் என்று ராசு கூறினான். நல்ல வேளை நம்மை நம் முன்னோர்கள் காப்பாற்றினார்கள் இனிமேல் அந்த மந்திர எழுதுகோலை காப்பாற்றுவது நமது கடமை என்று ராசு கூறினான்.
இந்த கதையில் வருவது போல தான் அடுத்தவர்களின் பொருளுக்கு நாம் என்றும் ஆசைப்படக்கூடாது. அவ்வாறு ஆசைப்பட்டால் அந்த மந்திரவாதி போல தான் மண்ணோடு மண்ணாக செல்லவேண்டியிருக்கும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளை உடனுக்குடன் கேட்க நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
https://telegram.me/realtamilstories
மந்திர எழுதுகோல் (பகுதி -1)
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-magical-stories.html?m=1
0 Comments
thanks for your comments