உறக்கம் கேடு தரும்( tamil story)
ஒரு ஊரில் ராஜ் என்று ஒருத்தன் இருந்தான். அவன் எப்பொழுதும் உறங்கிக் கொண்டிருப்பான். காலையில் அவன் எழுவது பகல் 12 மணி ஆகும். அப்படி அவன் என்னதான் வேலை செய்கிறான் என்று பார்த்தாள் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறான்.
அவர்களது வீட்டில் தந்தை அரசாங்க வேலை செய்து வருகிறார் தாயார் வீட்டில் இருக்கிறார். ஆனாலும்கூட அந்த வேளையில் தனது தந்தை படும் துயரத்தை ராஜ் கண்டு கொள்ள மாட்டான். இப்படி அவனது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இவனை நினைத்து இவரது தந்தை மிகவும் வேதனை அடைந்தார்.
இப்படியே ஒரு சில மாதங்கள் சென்று கொண்டிருந்தன. இரவு முழுவதும் நண்பர்களுடன் தனதுகைப்பேசியில் விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பான். ராஜ்ன் தந்தை ஏதாவது கூறினால் அவரிடம் எதிர்த்துப் பேசுவான் தந்தை சொல்லை கேட்க மாட்டான். ஆனாலும் கூட இவன் தந்தை மிகவும் பாசமாக இருப்பார். ராஜ் எதைக்கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துவிடுவார். இவனது தாயார், பையனை கெடுப்பது நீங்கள் தான் என்று சண்டையிடுவார். ஒருநாள் ராஜ் தனது நண்பர்களுடன் தனது கைப்பேசியில் இரவு முழுவதும் விளையாடிக்கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக இவன் தூங்காமல் விளையாடிக்கொண்டிருந்தான். தனது கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவன் மயக்கமடைந்து விழுந்தான்.(tamil stories)
மறுநாள் காலைப் பொழுது விடிந்தது 12 மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. இவனது தாய் அவன் படுக்கை அறைக்குச் சென்று என்ன செய்கிறான் என்று பார்த்தார். ஒரு அசைவும் இல்லாமல் ராஜ் அங்கு படுத்து கிடந்தான். பதறிப்போன ராஜ்ன் தாய் அவனது தந்தைக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தார். மகன் இன்னும் எந்திரிக்க வில்லை என்று பயத்துடன் ராஜ்யின் அப்பாவுக்கு கூறினார். அவனது தந்தை மிகவும் விரைவாக பணியில் இருந்து வந்தார் அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவனைச் சேர்த்தனர். ராஜ்யை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்று கூறினார்.
இரண்டு நாட்கள் தூங்காமல் அவர் அவரது கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததால் தான் இவருக்கு இந்த நிலைமை நேர்ந்தது என்று கூறினார்.
மருத்துவரிடம் பேசிய பிறகு ராஜ்யை சென்று பார்த்தார். அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்தது அவர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். பிறகு மருத்துவர் உள்ளே வந்தார். உங்கள் மகன் இந்த நிலைமைக்கு வரக் காரணம் அவனது கைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டு தான் காரணம் என்று கூறினார். அவன் இனிமேல் இந்த விளையாட்டை விளையாடமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர் அறிவுரை கூறினார். ராஜ்ன் தந்தை மனதில் எனது மகன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான் என்று கவலையுடன் இருந்தார்.(tamil stories)
வீட்டுக்கு வந்ததும் உன்னிடம் பேசவேண்டும் என்று அவனது தந்தை கூறினார். இதுவரைக்கும் உனது விருப்பத்திற்கு மாறாக நான் எதுவும் செய்ததில்லை என்று அவனது தந்தை கூறினார். உன் மேல் மிகுந்த பாசம் எனக்கு இருக்கிறது. எனக்காக ஒன்று மட்டும் செய் என்று அவர் தந்தை கூறினார். உனது கைபேசியில் விளையாடும் விளையாட்டை தற்போது முதல் விட்டுவிடு என்று பொறுமையாக கூறினார். இதைக்கேட்ட ராஜ் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். அவனது தாய் அருகில் வந்து அப்பா சொல்வதை தயவு செய்து கேள் என்று அன்பாக கூறினார். அப்போதும்கூட எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றான்.(tamil stories)
சிறிது நேரம் கழித்து மன்னித்து விடுங்கள் அப்பா, நான் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் என்று அன்பாக கூறினான். இனிமேல் நீங்கள் சொல்வதை கண்டிப்பாக கேட்பேன். என்று ராஜ் கூறினான். இனிமேல் ஏதாவது ஆக்கப்பூர்வமாக ஏதாவது கற்றுக் கொள்கிறேன் என்று கூறினான். நான் பாதியில் நிறுத்திய படிப்பை மீண்டும் தொடர்கிறேன் என்று ராஜ் கூறினான். இதைக்கேட்ட அவனது தந்தை மிகவும் சந்தோஷம் அடைந்தார்.
நான் உனது கல்லூரியில் பேசுகிறேன் நீ நாளை முதல் கல்லூரிக்கு செல் என்று அவனது தந்தை அன்பாக கூறினார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் ராஜ் யோசித்துக் கொண்டிருந்தான். அப்பா சொல்வது கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று முடிவு செய்தான்.(tamil stories)
மறுநாள் காலை பொழுது விடிந்தது ராஜ் கல்லூரிக்கு சென்றான். பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர வேண்டும் என்று முடிவு செய்து படிக்க ஆரம்பித்தான். இப்படியே ஒரு சில நாட்கள் கழிந்தன. ஆனால் ராஜ் தூங்குவதற்கான நேரம் இரவு ஒரு மணி ஆகிவிடுகிறது. அவன் எந்த ஒரு கைபேசியில் உபயோகிக்கவில்லை. இதற்கு முன்பு அவன் கைபேசியில் விளையாடும் விளையாட்டால் அவன் தூங்குவது நேரம் ஒரு மணி ஆக மாறிவிட்டது. ஆனால் இப்போது அவன் எந்த ஒரு விளையாட்டும் விளையாடவில்லை ஆனாலும்கூட அவன் தூங்கும் நேரத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தனது தந்தையிடம் சென்று கூறினான்.(tamil stories)
உனது நிலை எனக்கு புரிகிறது ஆனாலும் கூட நீ ஆரோக்கியமாக தூங்குவதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் கேள் என்று அவன் தந்தை கூறினார். இதற்கு முன்பு நீ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்ததால் நீ தூங்குவதற்கான நேரம் இரவு ஒரு மணி ஆகிவிட்டது. ஆனால் இப்போது உன்னால் அந்த நேரம் இல்லாமல் தூங்க முடிவதில்லை. இன்று முதல் நீ இரவு 9 மணிக்கு சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்று விடு. அங்கு சிறிது நேரம் கண்ணை மூடி உனது மனதை அமைதிப்படுத்து பிறகு கண்டிப்பாக உனக்கு தூக்கம் வரும். அப்படியும் அமைதி செய்ய முடியவில்லை என்றால் நீ சிறிது நேரம் தியானம் செய் இந்த ஒரு செயலை தொடர்ந்து 21 நாட்கள் நீ செய்து வந்தாள். கண்டிப்பாக நீ தூங்கும் நேரம் மாறிவிடும் என்று அவரது தந்தை கூறினார்.(tamil stories)
ராஜ் சரி என்று கூறினான். தந்தை கூறியதுபோல 21 நாட்களும் அவன் அதை பின்பற்றினான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறான்.
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்
இப்போது உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் என அனைவரது கைகளிலும் கைப்பேசி ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் தனது கைப்பேசியில் விளையாடும் விளையாட்டால் உறக்கத்தை கலைக்கிறது. அது மட்டுமல்லாமல் அவரது தேகம் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் நேரத்திற்கு சாப்பிட்டு நேரத்திற்கு தூங்காமல் இருப்பது.
நமது பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நாம் கைபேசியை வாங்கி கொடுக்கிறோம். ஆனால் அதில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நாம் அதைக் கண்காணிக்க மறந்துவிடுகிறோம். இதனால் அவர்களது உடலில் பல்வேறு விதமான வியாதிகள் வர ஆரம்பிக்கின்றன. நேரத்திற்கு தூங்காமல் எப்பொழுது வேண்டுமானாலும் தூங்கலாம் என்ற எண்ணம் இருந்தால் அவர்களுக்கு அந்த உறக்கம் கேடு தரும்.
இனிமேலாவது உங்கள் பிள்ளைகளை நேரத்திற்கு சாப்பிட்டு நேரத்திற்கு உறங்கச் செல்லுங்கள் நோய்களை வராமல் காப்பாற்றுங்கள். சூரியன் உதயத்திற்கு முன்பு எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்
0 Comments
thanks for your comments