மந்திர மோதிரம் (Tamil magical stories)

மந்திர மோதிரம்(tamil magical story)

ஒரு ஊரில் சோமு என ஒருத்தன் இருந்தான் அவன் ஒரு நேர்மையான கட்டிட தொழிலாளி. தினமும் வேலைக்கு செல்வான். தனது குடும்பத்தை நன்றாக பாதுகாக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய கடமை. தனது குடும்பத்தை முன்னேற்றுவதற்கு என்ன வழி என்பதை யோசித்துக் கொண்டிருந்தான். நாம்தான் கட்டடத் தொழிலாளியாக மாறி விட்டோம் நமது பிள்ளைகளையாவது எப்படியாவது படிக்க வைத்து முன்னேற்றி விட வேண்டுமென்பது அவனது மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. சோமு ஒரு கடவுள் பக்தன் காலையில் வேலைக்கு செல்லும் பொழுதெல்லாம் கடவுளை வேண்டி விட்டு தான் வேலைக்கு செல்வான் யார் மீதும் பொறாமை கொள்ள மாட்டான்.

.                        (Tamil magical stories)

அன்று எப்பொழுதும் போல தனது கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு ஒரு 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்ட வேண்டி இருந்தது. சோமு பள்ளத்தை தோண்ட ஆரம்பித்தான். சோமு மனதில் நாமும் எப்படியாவது குடிசை வீட்டில் இருந்து ஓட்டு வீட்டிற்கு மாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு நான்கு அடி குழி தோன்றியதும் திடீரென ஒரு இரும்பு பெட்டி ஒன்று தென்பட்டது. சோமு அதை ஆச்சரியமாக பார்த்தான். என்ன இது ஒரு பெட்டி போல இருக்கிறது அந்த பெட்டிக்குள் என்ன இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான். குழியை மெதுவாக தோண்ட ஆரம்பித்தான் அந்தப் பெட்டியின் நான்குபுறமும் கைகளால் மண்ணை எடுத்து அந்தப் பெட்டியை மெதுவாக மேலே எடுத்தான்.( Tamil magical stories)

அவன் பக்கத்தில் யாரும் வேலை செய்யவில்லை. சுற்றி திரும்பி பார்த்தான் யாரும் அங்கு கிடையாது. பெட்டியை மேலே எடுத்து வைத்துவிட்டு இந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கும் என்று யோசித்தான் பெட்டியை திறக்கலாமா வேண்டாமா என்று நினைத்துக் கொண்டிருந்தான். சரி பெட்டிக்குள் என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என நினைத்தான். பெட்டியை மெதுவாக திறந்தான். அந்தப் பெட்டிக்குள் இன்னொரு கவசம் போல் இருந்தது. அந்த கவசத்தை திறப்பது மிகவும் எளிதல்ல நல்ல மனம் படைத்தவர்கள் மட்டுமே அந்த கவசத்தை தீறக்க முடியும். சோமு நல்ல மனம் படைத்தவன். அவன்  அந்த கவசத்தை திறக்க முற்பட்டான்..(tamil magical stories)

அந்த கவசம் மெதுவாக திறந்தது. அந்த கவசத்தில் ஒரு பட்டுத்துணியில் ஒரு மோதிரம் இருந்தது. இது என்ன மோதிரம் என்று புரியாமல் சோமு எடுத்துப் பார்த்தான். சரி நமது கைக்கு போட்டு பார்க்கலாம் என்று நினைத்தான் மோதிரத்தை எடுத்து தனது விரலில் பொருத்தினான். மோதிரம் சரியாக அவன் விரலில் பொருந்தியது. பிறகு பெட்டியை எடுத்து ஓரம் வைத்து விட்டு குழியை வெட்டலாம் என்று நினைத்தான். ஆனால் சோமுக்கு தெரியாது அந்த மோதிரத்தை கையில் அணிந்து கொண்டு எது கூறினாலும் அப்படியே நடக்கும் என்று.
தண்ணீர் தாகம் எடுக்கிறது என்று சோமு அந்தக் குழியிலிருந்து வெளியே வந்து தண்ணீர் குடிக்க சென்றான். தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அந்தக் குழியின் அருகில் வந்து பார்த்தான்.(tamil magical stories)

அவன் தோண்ட வேண்டிய அளவிற்கு அந்தக் குழி சரியாக தோண்டப்பட்டு இருந்தது. யார் இந்த குழியை தோண்டி என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான். என்ன செய்வது என்று சோமுக்கு தெரியவில்லை. அந்த குழி சரியான அளவில் இருந்தது. வேலையை முடித்து விட்டு அந்தப் பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு மோதிரத்தை கையில் அணிந்து கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான். வீட்டிற்குச் சென்றதும் அவன் கையில் இருந்த பெட்டியை பார்த்து, என்ன பெட்டி என்று அவனது மனைவி கேட்டாள். நான் கூறுகிறேன் நீ உள்ளே வா என்று கூறினான். நான் எனது பணியை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெட்டி ஒன்று கிடைத்தது அதில் ஒரு மோதிரம் இருந்தது. அது ஒரு தங்க மோதிரம் போல் இருந்தது. அதை நான் கையில் அணிந்துள்ளேன் என்று நடந்த எல்லாவற்றையும் கூறினார்.(tamil magical stories)

இரவு சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்றான். தனது மனைவியிடம் இந்த வீட்டை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தான். அவனது மனதில் இதையே நினைத்துக் கொண்டு உறங்கிவிட்டான். மறுநாள் காலை விடிந்தது. சோமு கண் விழித்துப் பார்த்தான் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. குடிசை வீடு ஓட்டு வீடாக மாறி இருந்தது. எப்படி நடந்தது என்று தெரியாமல் சோமு குழப்பமாக இருந்தான்.
சோமுவின் மனைவி இந்த மோதிரத்தால் தான் இந்தமாறி மாறி இருக்கலாம் என்று கூறினாள். ஆமாம் நேற்று குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது இதே போல் தான் நடந்தது.

நான்  மனதில் நினைப்பதை அப்படியே நடந்தது என்று சோமு கூறினான்.  ஏதாவது ஒன்றைக் கேளுங்கள் என்று கூறினாள். நமக்குத் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது ஆதலால் ஒரு குடம் தண்ணீர் கேளுங்கள் என்று கூறினாள். சோமு மனதில் நினைத்தான் அதேபோல் ஒரு குடம் தண்ணீர் வந்தது. இருவருமே ஆச்சரியமாக பார்த்தான. மனதில் எது நினைத்தாலும் அப்படியே நடக்கிறது என்று இருவரும் சந்தோஷப்பட்டனர். ஆனால் சோமுவின் மனதில் உழைக்காமல் வரும் எந்த ஒரு பொருளும் நிலையாக இருக்காது என்பதை நன்றாக புரிந்தவன். அதனால் அந்த மோதிரத்தை கழட்டி மீண்டும் அந்த பெட்டியில் வைத்து வீட்டில் வைத்து விட்டான்.(tamil magical stories)

சோமுவின் பக்கத்து வீட்டுக்காரர் வீடு ஒரே நாளில் எப்படி மாறியது என்று கேட்டார். அதற்கு சோமு பொய் எதுவும் கூறாமல் நடந்ததை அப்படியே பக்கத்து வீட்டுக்காரர் இடம் கூறினார். அந்தப் பக்கத்து வீட்டுக்காரருக்கு அந்த மோதிரத்தை நாம் எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் வந்தது. சோமு வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டான். அவரது மனைவியும் பணிக்கு சென்று விட்டாள். பக்கத்து  வீட்டுக்காரர் சோமுவின் வீட்டிற்குச் சென்று அந்தப் பெட்டியை தேடிக் கண்டுபிடித்தார். பெட்டியை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டிற்குச் சென்றார். பெட்டியைத் திறந்து பார்த்ததும் மோதிரம் இருந்தது.

அந்த மோதிரத்தை அவர் கையில் அணிந்து கொண்டு பெரிய மாளிகை வீடு வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அந்த மந்திர மோதிரம் வேலை செய்யவில்லை. அந்த மோதிரத்தின் விதி என்னவென்றால் யார் தூய மனதுடன் ஏதாவது கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும் என்பது மோதிரத்தின் நிபந்தனை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் தூய மனம் இல்லாத காரணத்தால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த மந்திர மோதிரத்தை கையிலிருந்த கலட்டி விட்டு அதை எடுத்து வேடிக்கை பார்த்தார். அந்த மோதிரத்தில் இருந்து ஒரு விதமான ஒளி ஒன்று வந்தது. அவர் என் கண்முன்னே ஒரு தேவதை தோன்றினாள்.

நீங்கள் தூய மனம் இல்லாத காரணத்தால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று அந்த தேவதை கூறினாள். இதை நீங்கள் திருடியதற்கு தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்று கூறினாள். மோதிரத்தை திருடி அதற்கு உங்களது கண்பார்வை பறிபோகும் என்றால். இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியாமல் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள், என்று மன்றாடினார். இனிமேல் நான் இந்த தவறை செய்ய மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று தேவதையிடம் அவர் கூறினார். இது உங்களுக்கு கடைசி வாய்ப்பு அந்தப் பெட்டியை நீங்கள் சோமு வீட்டில் இருந்து எப்படி எடுத்தீர்களே அதேபோல் அங்கே சென்று வையுங்கள் என்றும் தேவதை கூறியது.

அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப் படக்கூடாது என்று தேவதை கூறிவிட்டு அங்கிருந்து மறைந்து. பக்கத்து வீட்டுக்காரர் சோமுவின் வீட்டில் அதை மறுபடியும் வைத்தார் சோமுவிடம் மன்னிப்பு கேட்டார். இரக்க குணமுள்ள சோமு நான் உங்களை மன்னித்து விட்டேன் என்று கூறினான். சோமுவின் நல்ல குணத்தால் அந்த ஊருக்கு மோதிரத்தை பயன்படுத்தி தேவையான அனைத்தும் செய்தான். மந்திர மோதிரம் அவன் கையில் இருந்தும் கூட அவன் எப்பொழுதும் போல தனது வேலையை தொடர்ந்து வந்தான்.

இந்தக் கதையில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படாமல் நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நமது வாழ்க்கையில் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் விளைவிக்காமல் இருந்தால் கடவுள் கண்டிப்பாக நமக்கு உதவுவார் என்பதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு.

இந்தக் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிரவும். இது போன்ற கதைகளை உடனுக்குடன் படிக்க வேண்டும் என்று நினைத்தால் நமது telegram chennal join செய்து கொள்ளவும். லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது.
https://telegram.me/joinchat/jinhMcVDrJU1MDNl

Post a Comment

0 Comments