திருடனுக்கும் காதல் மலரும் (tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)
பகுதி - 12

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.


அப்பா நீங்கள் நினைப்பது போல் சுருளி ஒன்றும் திருடன் கிடையாது என்று மாலினி கூறினாள். உடனே மாலினியின் தந்தை நீ ஒன்றும் பொய் கூறாதே! சுருளி தன் வாயால் அவன் திருடன் என்று ஒப்புக்கொண்டான் என்று மாலினியின் தந்தை கூறினார். எனக்கு இருக்கும் கேள்வி எல்லாம் ஒன்றுதான் சுருளி திருடன் என்பது உனக்கு முன்கூட்டியே தெரியுமா? தெரியாதா? என்று ‌ மாலினியின் தந்தை கேட்டார்.(tamil love stories)

மாலினி சுருளியை பார்க்காமல் அவர் ஒரு திருடன் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று மாலினி கூறினாள். இதைக் கேட்ட மாலினியின் தந்தை மிகவும் கடுமையான கோபம் அடைந்தார். இவ்வளவு நாட்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று மாலினியின் தந்தை கடுமையான கோபத்துடன் விமர்சித்தார். சுருளி எதுவும் பேசாமல் தலை குனிந்தபடியே நின்றான். என்னை மன்னித்து விடுங்கள் மாமா! நான் திருடன் என்பது உங்களிடம் மறைத்திருக்க கூடாது. நான் திருடன் என்பது மாலினிக்கு முன்கூட்டியே தெரியும். இதைக்கேட்டு மாலினி ஆமப்பா அவர் சொல்வது உண்மைதான் என்று கூறினாள்.(tamil love stories)

நீங்கள் எதை சொன்னாலும் என் மனம் ஏற்க மறுக்கிறது. ஒரு திருடனுக்கு எனது மகளை நான் எப்படி மனம் முடித்து வைப்பேன் என்று மாலினியின் தந்தை கேட்டார். நான் எனது திருட்டு தொழிலை விட்டு பத்து மாதங்கள் ஆகிறது. மாலினியை பார்த்ததில் இருந்து இதுவரைக்கும் நான் திருட வேண்டும் என்று நினைத்ததில்லை. தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன் கை நிறைய சம்பாதிக்கிறேன். என்று சுருளி கூறினான். நீங்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும் சரி என்னால் மாலினியை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. உங்கள் திருட்டு தொழிலை நீங்கள் விட்டாலும் உங்கள் ஊரில் உள்ள அனைவரும் திருடன் மனைவி செல்கிறாள். திருடன் மாமணர் வருகிறார். என்று ஊர் மக்கள் அனைவரும் கேவலமாக பேசுவார்கள்.(tamil love stories)


எனக்கு என் குடும்பத்தின் மானம், மரியாதை தான் மிக மிக முக்கியம் என்று மாலினியின் தந்தை கூறினார். நீங்கள் சொல்வது நான் ஒத்துக் கொள்கிறேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று சுருளி கேட்டான். என் மகளை விட்டு நீங்கள் பிரிந்து சென்று விடுங்கள் என்று மாலினியின் தந்தை கூறினார். இதைக் கேட்ட மாலினியின் கண்களில் கண்ணீர் வந்தது. அப்பா ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று அழுதபடியே கேட்டாள். நான் எடுக்கும் முடிவு உனது நல்லதுக்காகத்தான் என்று மாலினியின் தந்தை கூறினார். வா! வீட்டிற்கு போகலாம் என்று கோபமாகக் கூறினார்.(tamil love stories)

மாலினி ஒருபுறம் அழுது கொண்டிருக்க, மாலினியின் தந்தை மாலினியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். சுருளி எதுவும் பேசாமல் அமைதியாக கண்களில் கண்ணீர் விட்டபடி நின்றான். அந்த கோவிலில் அப்படியே சுருளி அமர்ந்துகொண்டான். கண்களில் கண்ணீர் விட்டபடி கடவுளை வேண்டினான். மாலினி அவரது தந்தை இருவரும் வீட்டை அடைந்தனர். வீட்டிற்கு சென்றதும் மாலினியின் தாய் என்ன ஆயிற்று என்று கேட்டார். நாம் நினைத்தது தவறு சுருளி ஒரு திருடன் என்பது மாலினிக்கு முன்கூட்டியே தெரியும் இவள் நம்மை ஏமாற்றி விட்டாள் என்று மாலினியின் தந்தை கோபமாகக் கூறினார். (tamil love stories)

நீ சுருளியை மறந்துவிடு என்று மாலினியின் தந்தை கூறினார். மாலினி கண்களில் கண்ணீர் விட்டபடி வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். மாலினியின் தாய் இப்போது என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் இப்போது எந்த முடிவும் எடுக்கும் நிலைமையில் இல்லை எனக்கு சற்று நேரம் தேவை என்று மாலினியின் தந்தை கூறினார். மாலினியின் தாய் நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் என்று கூறினார். மாலினியின் தந்தை மற்றொரு அறையில் சென்று கதவை சாத்திக் கொண்டார். மறுபுறம் சுருளி கோவிலில் இருந்து வெளியே வந்தான். தனது காரை எடுத்துக்கொண்டு பணிக்கு செல்ல முயன்றான். தனது காரை எடுத்துக்கொண்டு எங்கு செல்லலாம் என்று யோசித்தான். தன் நண்பனிடம் சென்று இதைப் பற்றிப் பேசலாம் என்று முடிவு செய்தான்.(tamil love stories)

நண்பனைப் பார்க்க வேகமாக காரை எடுத்துக்கொண்டு சுருளி சென்றான். செல்லும் வழியில் அவனது கண்களில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தன் நண்பனைக் காண அந்த இடத்திற்குச் சென்றான். சுருளியின் நண்பன், வா! நண்பா எப்படி இருக்கிறாய் என்று கேட்டான். ஆனால் சுருளி அழுதபடியே அங்கு நடந்த எல்லாவற்றையும் கூறினான். நண்பா நான் உன்னிடம் பலமுறை கூறியிருக்கிறேன் நீ சிறிய சிறிய பொருளாக திருடினாலும் திருட்டுதான் என்று. பார்த்தாயா! அது இப்போது எந்த அளவிற்கு உண்மை பாதிக்கிறது என்று. கவலைப்படாதே கலகம் பிறந்தால் தீர்வு கிடைக்கும் என்று சுருளியின் நண்பன் கூறினான்.(tamil love stories)

நண்பா நீ திருட்டு தொழிலை விட்டு ஒரு நல்ல மனிதனாக வேலை செய்து கொண்டு இருக்கிறாய். கவலைப்படாதே எல்லாம் நன்மைக்கே என்று சுருளியின் நண்பன் கூறினான். சுருளி நான் செய்தது தவறுதான் இல்லை என்று கூறவில்லை. மாலினிக்கு நான் யார் என்பது  முன்கூட்டியே தெரியும். ஆனாலும் இப்போது மாலினியின் தந்தையிடம் நான் என்ன கூறப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்று சொல்லி சுருளி  அழ ஆரம்பித்தான். அழாதே நண்பா! இந்த நிலையில் நீ சற்று தைரியமாக இருக்க வேண்டும் மாலினியை சென்று சந்திக்க முயற்சி செய். அவள் என்ன கூறுகிறாள் என்று கேள். அப்போதுதான் உனக்கு ஒரு வழி கிடைக்கும் என்று சுருளியின் நண்பன் கூறினான். (tamil love stories)

சுருளி தன் அழுகையை நிறுத்திவிட்டு நீங்கள் சொல்வதும் சரிதான் நான் மாலினியை சென்று சந்திக்கிறேன். அவள் என்ன பதில் கூறினாலும் எனக்கு அதில் முழு சம்மதம் என்று சுருளி தன் நண்பனிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான். தன் காரை எடுத்துக்கொண்டு சுருளி மாலினியை பார்க்கப் புறப்பட்டான். போகும் வழியில் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். மாலினி என்னை மறந்தாலும் நான் மாலினியை மறக்க மாட்டேன். இவ்வளவு நாட்கள் காதலித்து வந்த அந்த நினைவுகள் எனக்கும் ஒன்று போதும் என்று சொல்லி தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.(tamil love stories)


மாலினியின் வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு வெளியில் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்லலாம் என்று முயற்சி செய்தான். மாலினியின் தாய் அங்கேயே நில் யாரை பார்க்க நீ இங்கு வந்தாய் என்று கோபமாக கேட்டார். நீ ஒரு திருடன் என்பது எங்களிடம் மறைத்து இருக்கிறாய். இப்போதுதான் உன்னைப்பற்றி எனக்கு தெரிகிறது என்று மாலினியின் தாய் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். மாலினியின் தாய் சத்தமாக பேசுவதைக் கேட்ட மாலினியின் தந்தை வெளியே வந்தார். சுருளியை பார்த்ததும் மிகவும் கோபமாக வீட்டை விட்டு வெளியே போ என்றார். (tamil love stories)

ஆனால் சுருளி நான் மாலினியிடம் சற்று  பேசவேண்டும். மாலினியை வெளியே வரச் சொல்லுங்கள் என்று சுருளி கூறினான். வெளியில் சுருளி வந்து பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து மாலினி வீட்டுக்கு வெளியே வந்தாள். உடனே மாலினியின் தந்தை நீ உள்ளே போ! என்று மாலினியை விரட்டிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் மாலினி குழப்பமாக நின்றால். வீட்டின் உள்ளே சென்று ஒரு காகிதத்தில் மாலினியின் மனதிலிருக்கும் செய்தியை அந்தப் காகிதத்தில் எழுதி ஜன்னலுக்கு வெளியே போட்டாள். மாலினியின் தந்தை சுருளியை போகச்சொல்லி விரட்டினார். சுருளி காரை எடுத்துக்கொண்டு மாலினியின் வீட்டின் பின்புறம் சென்றான். காரை நிறுத்திவிட்டு சன்னல் வழியே மாலினியை பார்க்க முற்பட்டான். (tamil love stories)

ஜன்னல் வழியாக மாலினியை பார்த்தான். மாலினி தன் கை அசைவால் காகிதத்தில் எழுதி வைத்திருந்த செய்தியை எடுத்து படிக்கும் படி கூறினாள். அதை சுதாரித்துக்கொண்ட சுருளி அந்த காகிதத்தை எடுக்கலாம் என்று சென்றான். அப்போது ஜன்னல் வழியாக மாலினியின் தந்தை அங்கிருந்து பார்த்தார். சுருளி வேகமாகச் சென்று அந்த காகிதத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். காரின் உள்ளே ஏறி அமர்ந்தான். ஒருபுறம் மாலினியும் தந்தை சுருளியை கோபமாக பார்த்துக்கொண்டிருந்தார். சுருளி என்ன செய்வது என்று தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி சென்று காரை நிறுத்தினான். அந்தக் காகிதத்தை பிரித்தான் அதில்......( தொடரும்)

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories


திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1

Post a Comment

0 Comments