திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)
பகுதி - 11

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.


சுருளி ஒரு திருடனா? என்று மாலினியின் தந்தை கேட்டார். ஏனப்பா இவ்வாறு கூறுகிறீர்கள் என்று  மாலினி கேட்டாள்.
நான் இன்று சுருளியைப் பற்றி விசாரிக்க அவரது ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது அனைவரும் சொன்ன ஒரு வார்த்தை அவன் ஒரு திருடன் என்று தான் அதனால்தான் நான் உன்னிடம் கேட்கிறேன். சுருளி ஒரு திருடனா? என்று மாலினியின்  தந்தை மீண்டும் மீண்டும் கேட்டார்.( Tamil Love Stories)

இல்லையப்பா அவர் ஒன்றும் திருடன் கிடையாது என்று மாலினி கூறினாள். மாலினியின் தந்தை ஒருவேளை சுருளி திருடன் என்பதை மறைத்து உன்னை காதலிப்பதாக நாடகமாடி இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கலாம் என்று யோசித்தார். மாலினி உண்மையை கூறு சுருளி ஒரு திருடன் என்றால் ஆமாம் என்று சொல். நீ சொல்லும் வார்த்தையை வைத்துத்தான் அவரைப் பற்றி நான் முடிவு செய்ய முடியும். என்று  மாலினியின் தந்தை கேட்டார். உடனே மாலினியின் தாய் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சுருளி ஒரு திருடனா? ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று மாலினியின் தாய் கேட்டார். ஆம் நான் அங்கு சென்று அந்த ஊரில் சூருளியை பற்றிக் கேட்டபோது தான் எனக்கு தெரிந்தது.(tamil love stories)

நீங்கள் கூறுவது என்னால் நம்ப முடியவில்லை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று மாலினியின் தாய் கூறினார். நான் சொல்வதுதான் உண்மை நான் அங்கு சென்று கேட்ட போதெல்லாம் அனைவரும் ஒரே மாதிரியாக சொன்ன ஒரு வார்த்தை அவன் ஒரு திருடன் என்று மட்டுமே. இல்லையப்பா கண்டிப்பாக அவர் ஒரு திருடனாக இருக்க மாட்டார் என்று மாலினி மீண்டும் மீண்டும் கூறினாள். மாலினி நீ உள்ளே போ என்று மாலினியின் தந்தை கூறினார். மாலினி வீட்டிற்கு உள்ளே சென்றதும் என்ன செய்யலாம் என்று மாலினியின் தாயிடம் கேட்டார். ஒருவேளை சுருளி திருடன் என்பதை மறைத்து நம் மகளை காதலித்து வந்திருக்கலாம் என்று மாலினியின் தாய் கூறினார்.(tamil love stories)

நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நாளை சுருளி இடம் கண்டிப்பாக பேசினால் மட்டுமே இதற்கு ஒரு விடை கிடைக்கும் என்று மாலினியின் தந்தை கூறினார். அதுவும் சரிதான் என்று மாலினியின் தாய் கூறினார். இரவு பொழுது வந்தது. மாலினி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை நாம் உண்மையை கூறி விடலாமா? இல்லை வேண்டாமா? என்று குழப்ப நிலையில் மாலினி இருந்தாள். சரி நாளை எப்படியாவது சுருளி இடம் இதைக் கூறியே ஆக வேண்டும் நம் தந்தையின் அங்கு செல்வதற்கு முன்னால் நாம் முன்னால் சென்று சுருளி இடம் இதைப்பற்றி பேசியாக வேண்டும் என்று முடிவு செய்தாள்.(tamil love stories)

மறுநாள் காலை பொழுது விடிந்தது வழக்கம்போல மாலினி தன் பணிக்கு தயாரானாள். மாலினி புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே மாலினியின் தந்தை புறப்பட்டு தயாராக நின்று கொண்டு இருந்தார். மாலினி வா! செல்லலாம் என்று அவர் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் மாலினி குழப்ப நிலையில் இருந்தாள். எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது நடப்பது நன்றாகவே நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டு வழக்கம்போல சந்திக்கும் இடத்திற்கு வந்து நின்றனர். எப்பொழுதும் போல சுருளி சரியான நேரத்திற்கு அங்கு வந்தான். வாருங்கள் மாமா எப்படி இருக்கிறீர்கள் என்று சுருளி கேட்டான்.(love stories tamil)

நலம் விசாரிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் உங்களிடம் நான் தனியாக பேச வேண்டும். என்று மாலினியின் தந்தை கோபமாக கூறினார். ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என்ன ஆயிற்று என்று சுருளி கேட்டான். ஒன்றும் ஆகவில்லை வாருங்கள் தனியாக சென்று பேசலாம் என்று மாலினியின் தந்தை மீண்டும் கோபமாகக் கூறினார். சுருளி சரி வாருங்கள் செல்லலாம் என்று கூறினார். கோவிலின் உள்ளே சென்று மாலினி ஒருபுறம் தனியாக நின்று கொண்டிருக்க, மாலினியின் தந்தை மற்றும் சுருளி இருவரும் முதன்முதலில் சந்தித்து நின்று பேசிய இடத்திற்கு சென்றனர். என்ன பேசப் போகிறார் என்று தெரியாமல் சுருளி ஒரு பக்கம் பதற்றமாக இருந்தான். (Love story Tamil)

நான் நேற்று உங்களைப் பற்றி விசாரிக்க உங்களது ஊருக்கு சென்றிருந்தேன். நீங்கள் வீட்டை ஓரளவுக்கு கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் உங்களைப் பற்றி அங்கு கூறிய வார்த்தைகள் தான் என்னால் நம்ப முடியவில்லை என்று மாலினியின் தந்தை கேட்டார். என்னை பற்றி எங்கள் ஊரில் என்ன கூறினார்கள் என்பதைப் பற்றி சற்று தெளிவாக கூறினீர்கள் என்றால் எனக்கு புரியும் என்று சுருளி கூறினான். உங்கள் ஊருக்குச் சென்றபோது உங்களைப் பற்றி கேட்டபோது அனைவரும் கூறிய ஒரே பொதுவான வார்த்தை நீங்கள் ஒரு திருடன் என்பது மட்டுமே. உண்மையைக் கூறுங்கள் நீங்கள் ஒரு திருடனா? என்று மாலினியின் தந்தை கேட்டார்.(love stories tamil)

சுருளி அவர் கூறியதைக் கேட்டு திகைத்து நின்றான். சொல்லுங்கள் நீங்கள் ஒரு திருடனா? இல்லையா? என்று சுருளி பதில் எதுவும் பேச முடியாமல் தலைகுனிந்தபடி நின்றான். நீங்கள் பதில் எதுவும் பேச வில்லை என்றால் நான் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும் என்று மீண்டும் மீண்டும் கூறினார். எனக்கு ஒரு உண்மை மட்டும் தெரிந்தாக வேண்டும். நீங்கள் ஒரு திருடன் என்பது மாலினியின் தெரியுமா? தெரியாதா? இல்லை நீங்கள் திருடன் என்பதை மறைத்து மாலினியை காதலிப்பது போல் நடித்து நாடகமாடுகிறார்களா? என்று சரமாரியாக மாலினியின் தந்தை கேள்வியை எழுப்பினார். நீங்கள் மௌனம் காப்பது சரியில்லை எதுவாக இருந்தாலும் தெளிவாக இப்போது விலக்கி விடுங்கள் என்று கூறினார். (Tamil love stories)

என்ன செய்வது என்று தெரியாமல் சுருளி தலை குனிந்தபடியே நின்றான். உண்மையை கூறலாமா? வேண்டாமா? என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தான். ஒருபுறம் மாலினி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென சுருளி நான் உண்மையில் ஒரு திருடன் தான் என்று உண்மையை போட்டு உடைத்தான். இதை கேட்ட மாலினியின் தந்தைக்கு கடுமையான கோபம் வந்தது. நீ திருடன் என்பது மாலினிக்கு தெரியுமா? தெரியாதா? உண்மையான பதிலைக் கூறு என்று மாலினியின் தந்தை கேட்டார். மாலினிக்கு நான் திருடன் என்பது தெரியாது அதை மறைத்து வைத்திருந்தேன்.(tamil love stories)

ஆனால் நான் மாலினியை உண்மையாக காதலித்து வருகிறேன். உங்கள் வீட்டில் கிணற்றின் மீது இருந்த வாலியை எடுக்கத்தான் வந்தேன். அப்போதுதான் நான் மாலினியை முதல் முறை பார்த்தேன். அந்தக் கணமே எனக்கு மாலினியை மிகவும் பிடித்தது. நான் திருடன் என்பது மாலினிக்கு தெரியாது என்று சுருளி பொய் கூறினான். இவ்வளவு நாட்கள் திருடன் என்பதை மறைத்து நாடகம் ஆடி இருக்கிறாய். உன்னை என்னால் மன்னிக்க இயலாது என்று மாலினியின் தந்தை மிகவும் கோபமாக கூறினார். எனது மகளை நீங்கள் மறந்து விடுங்கள் ஒரு திருடனுக்கு எனது மகளை நான் மணமுடித்து வைக்க மாட்டேன் என்று கோபமாக கூறிவிட்டு மாலினி செல்லலாம் என்று மாலினியின் தந்தை கூறினார்.

மாலினி அருகில் வந்தபோது சுருளி எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றான். வா மாலினி செல்லலாம் என்றார். அப்பா என்ன ஆயிற்று என்று மாலினி கேட்டாள். நான் உன்னிடம் நேற்று கூறினேன் அல்லவா? இவன் ஒரு திருடன் உன்னை ஏமாற்றி காதலித்து வருகிறான். என்று மாலினியின் தந்தை கூறினார். அப்பா நீங்கள் நினைப்பதுபோல் சுருளி..... (தொடரும்)

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories


திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1

Post a Comment

0 Comments