திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)
இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.
மாலினி வருவதற்கு சற்று காலதாமதம் ஆனது அப்போது திடீரென மற்றொரு பேருந்து வந்தது. அந்தப் பேருந்தில் இருந்து மாலினி இறங்கி வந்தாள். மாலினியை கண்டதும் சுருளி ஏன் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என்று கேட்டான். நான் சற்று பயந்து விட்டேன் நீ வரவில்லை என்றதும். இல்லை அலுவலகத்தில் சற்று வேலை அதிகமாக இருந்தது அதனால் கால தாமதம் ஆகிவிட்டது என்று மாலினி கூறினாள்.( Tamil love stories)
இன்று முதல் நாள் சவாரியில் எனக்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது என்று சுருளி கூறினான். மாலினி மிகவும் சந்தோசம் அடைந்தாள். இதை வைத்து என்ன செய்யலாம் என்று மாலினி இடம் கேட்டான். இந்த பணத்தை உனது நண்பருக்கு தரும் வாடகை எடுத்து வைத்து விட்டு, பிறகு உன் செலவிற்கும் வீட்டுத் தேவைக்கும் தேவையான அளவு பணத்தை எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை சேமித்து வை என்று மாலினி கூறினாள். அப்படியே செய்கிறேன் மாலினி என்று சுருளி கூறினான். இருவரும் நின்று பேசிவிட்டு வழக்கம்போல சுருளி தனது காரில் மாலினியை இறக்கிவிட்டான். சுருளி காரை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றான். மாலினி சொன்னதுபோல பணத்தை பிரித்து வைத்தான்.( Love story)
இப்படியே ஆறு மாத காலம் சென்றது. சுருளி முந்தைய நிலைமையை விட சற்று நல்ல நிலைமைக்கு உயர்ந்தான். இவர்களின் காதல் பசுமரத்தாணி போல நன்றாக வளர்ந்தது. இருவரும் வழக்கம்போல் சந்திக்கும் இடத்திற்கு வந்தனர். மாலினி சுருளியை பார்த்து நம் காதல் ஆறு மாத காலம் கடந்துவிட்டது. இந்த ஆறு மாத காலம் எப்படி சென்றது என்று எனக்கு தெரியவில்லை. என் தந்தை கூறியது ஒரு வருடம் மட்டுமே அதில் ஆறு மாத காலம் சென்றுவிட்டது நீ முன்பு இருந்ததைவிட தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறாய் என்று என் மாலினி கூறினாள். மாலினி இன்னும் 6 மாத காலங்களில் உன் தந்தை கூறியதைப் போல் அவர்களின் ஆசையை நான் நிறைவேற்றாவிட்டால் நீ எனக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் என்று சுருளி கேட்டான். (Real love story)
நம் காதலின் மீதும் உன் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது கண்டிப்பாக நீ வாழ்க்கையில் பெரிய அளவிற்கு உயர்ந்து வருவாய் என்று மாலினி கூறினாள். மாலினி இந்த ஆறு மாத காலமாக நீ சொன்னது போல் நான் சேமித்து வைத்த பணம் என்னிடம் 3 லட்சம் இருக்கிறது. இதை வைத்து நான் என்ன செய்வது என்று நீ தான் கூற வேண்டும் என்று சுருளி கூறினான். நான் யோசித்து மாலை உனக்குக் கூறுகிறேன் என்று மாலினி கூறினாள். இருவரும் வேலைக்கு புறப்பட்டனர். மாலினியின் தாயின் மனதில் சுருளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது.( தமிழ் காதல் கதைகள்)
என்னதான் நமது கணவர் சுருளியை பார்த்து இருந்தாலும் நான் சுருளியை பார்த்து அவரின் நிலையை பார்க்க வேண்டுமென்று மாலினியின் தாயார் நினைத்துக் கொண்டிருந்தார். தன் கணவரிடம் இதைப்பற்றி கூற வேண்டுமென்று மாலினியின் தாய் நினைத்துக் கொண்டிருந்தார். மாலினியின் தந்தை வீட்டிற்கு வந்தார். நான் உங்களிடம் பேச வேண்டும் என்று அவர் கூறினார். சுருளியை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியுமா? என்று கேட்டார். எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும் நம் மகளுக்காக இப்போது அவர் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று நான் மாலினிக்கு தெரியாமலேயே அவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மாலினியின் தந்தை கூறினார்.(தமிழ் கதைகள்)
நீ எதற்கும் கவலைப்படாதே அவர் நல்லபடியாக நம் மகளை வைத்துக் காப்பாற்றும் அளவிற்கு இந்த ஒரு வருடத்தில் அவர் வந்து விடுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று மாலினியின் தந்தை கூறினார். ஒருவேளை அவர் இந்த ஒரு வருடத்திற்குள் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் இன்னும் ஒரு ஆறு மாத காலம் அவர்களுக்கு அவகாசம் தருவேன் என்று மாலினியின் தந்தை கூறினார். நான் ஒருமுறையாவது சுருளியை பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன் என்று மாலினியின் தாய் கூறினார். சரி அதற்கென்ன மாலைப்பொழுதில் மாலினி சுருளி இவர்கள் இருவரும் பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசுவார்கள் அப்போது நீ சென்று சுருளியை பார்த்துவிட்டு வா என்று மாலினியின் தந்தை கூறினார்.(tamil love stories)
சரி கண்டிப்பாக நான் அவர்களை சென்று பார்க்கிறேன் என்று மாலினியின் தாய் கூறினார். மாலைப்பொழுது ஆனது வழக்கம்போல மாலினியும் சுருளியும் சந்தித்துப் பேசும் இடத்திற்கு வந்தனர். மாலினியின் தாய் தூரத்தில் இருந்து இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்கள் பேசுவது சரியாக அவர்களுக்கு கேட்கவில்லை அதனால் அருகில் செல்லலாம் என்று முடிவு செய்தார். 5 மீட்டர் இடைவெளியில் மறைமுகமாக நின்றுகொண்டார். சுருளி மாலினி இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். சுருளி மாலினியிடம் நான் காலையில் கூறியதற்கு நீ இப்பொழுது பதில் தருகிறார் என்று சொன்னாய் என்ன செய்யலாம் என்று நீ தான் சொல்ல வேண்டும் என்று சுருளி கூறினான்.(tamil love stories)
நான் அதை யோசித்து விட்டேன் என்று என் மாலினி கூறினாள். நீ இப்பொழுது இருக்கும் வீட்டை சற்று மாற்றி அமைக்க வேண்டும் அதற்கு உன்னிடம் இப்பொழுது இருக்கும் பணம் சரியாக இருக்கும் என்று மாலினி கூறினாள். சரி நான் அப்படியே செய்கிறேன் என்று சுருளி கூறினான். பணத்தை நீ எங்கு வைத்திருக்கிறாய் என்று மாலினி கேட்டாள். நீ என்னிடம் முன்கூட்டியே சொன்னதுபோல தபால் நிலையத்தில் அந்த பணத்தை சேமித்து வைத்திருக்கிறேன் என்று கூறினான். அதுவும் சரிதான் நம் வீட்டில் வைத்து இருந்தால் எப்போது வேண்டுமானாலும் திருடு போகலாம் அதனால உன்னை தபால் நிலையத்தில் சேமித்து வையுங்கள் என்று நான் கூறினேன் நீயும் அதைப்போல் செய்திருக்கிறாய் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று மாலினி கூறினாள்.(tamil love stories)
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட மாலினியின் தாய் சற்று சந்தோஷம் அடைந்தார். மாலினி வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே நான் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து விட்டு மாலினியின் தாய் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார். அங்கு மாலினியின் தந்தை காத்துக்கொண்டிருந்தார். மாலினியின் தாய் இடம் நீ அங்கு சென்று அவரை பார்த்தாயா? என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதை கேட்டாயா? என்று மாலினியின் தந்தை கேட்டார். ஆம் நீங்கள் கூறியது சரிதான் சுருளி மிகவும் நல்ல மனிதர் நம் மகளுக்காக நிறைய உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுது இருக்கும் வீட்டை சரி செய்ய என்ன வழி என்று இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர் என்று மாலினியின் தாய் கூறினார்.(tamil love stories)
மாலினி வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே நாம் செல்லலாம் என்றுதான் நான் விரைவாக இங்கு வந்தேன் என்று கூறினார். இப்பொழுதாவது சுருளியின் மேல் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்று மாலினியின் தந்தை கேட்டார். எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது என்று மாலினியின் தாய் கூறினார். மாலினி சுருளி இருவரும் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சுருளி வீட்டை மாற்றுவதற்கு என்ன வழியோ அதை பார்க்கிறேன் என்று கூறினார். சுருளி வீட்டை அடைந்து பிறகு கொத்தனார் இடம் சென்று வீட்டை சற்று மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டேன் இந்த கொத்தனாருக்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்தான். நல்லபடியாக வீட்டை நான் மாற்றித் தருகிறேன் என்று அந்த கொத்தனார் கூறினார்.(tamil love stories)
சுருளியின் மனதில் மிகவும் சந்தோஷம் வீட்டை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்கிறோம் என்று ஒருபக்கம் நினைத்துக் கொண்டிருந்தான். மறுபக்கம் மாலினியை நன்றாக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தான். மாலினி வீட்டில் இரவு வேளை அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பேருந்து நிலையத்தில் நடந்த எதையும் மாலினியின் தாய் கேட்கவில்லை. அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மாலினியின் தாய் நான் சென்று எடுத்து பேசுகிறேன் என்று கூறினார். சரி என்று மாலினியின் தந்தை கூறினார்.(tamil love stories)
மாலினியின் தாய் அலைபேசியை எடுத்து காதில் வைத்து பேசினார். மறுபுறம் யார் பேசுகிறார்கள் என்று தெரியாமல் மாலினி அவரின் தந்தை இருவரும் அமைதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மாலினியின் தாய் அலைபேசியில் பேசிவிட்டு மீண்டும் சாப்பிடுவதற்காக வந்தார். மாலினி அம்மா யாரிடம் நீங்கள் இவ்வளவு நேரமாக பேசினீர்கள் என்று கேட்டாள். மாலினியின் தந்தை அதேபோல கேட்டார். நான் எனது அண்ணனிடம் பேசினேன் அவர் நாளை இங்கு வருகிறார் என்று கூறினார். அதற்கு இவ்வளவு நேரம் பேசினாயா? என்று மாலினியின் தந்தை கேட்டார். அவர் நாளைக்கு நம்மை பார்க்க வருகிறார் அவர் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது, அந்தக் காரணம்........( தொடரும்)
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
0 Comments
thanks for your comments