திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

திருடனுக்கும் காதல் மலரும் ( tamil love stories)

இந்த காதல் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்த கதைகளின் முன் பகுதிகளின் link கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு இந்த கதை புரியும்.

.                    (Tamil Love Stories)

எனது அண்ணன் நாளை எதற்கு வருகிறார் என்று எனக்கு தெரியவில்லை. நாளை மாலை அவர் வரும்பொழுது தான் எனக்கு தெரியும். என்று மாலினியின் தாய் கூறினார். அதை சொல்லவா இவ்வளவு நேரம் என்று மாலினியின் தந்தை கேட்டார். அதற்கு மாலினியின் தாய் நான் எவ்வளவோ அவரிடம் கேட்டேன் அவர் நான் நாளை நேரில் வந்து கூறுகிறேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார், என்று என் மாலினியின் தாய் கூறினார்.( தமிழ் காதல் கதை)

மூவரும் சாப்பிட்டு விட்டு அவர்களின் படுக்கை அறைக்கு தூங்கச் சென்றனர். மாலினியின் மனதில் நாளை மாமா எதற்கு வருகிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்தாலும் சரி எல்லாம் நன்மைக்காகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். மறுநாள் காலைப் பொழுது விடிந்தது. மாலினி வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு பணிக்கு புறப்பட தயாரானாள். மாலினியின் தாய் மாலினி இடம் நீ இன்று மாலை விரைவாக வா உனது மாமா வருகிறார் என்று கூறினார். சரி அம்மா நான் கண்டிப்பாக வருகிறேன், என்று கூறிவிட்டு மாலினி அங்கிருந்து புறப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.(tamil love stories)

சுருளி வழக்கம்போல பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான். மாலினியின் முகம் சற்று வாடி இருந்ததை சுருளி கண்டான். மாலினி உனக்கு என்ன ஆயிற்று உனது முகம் ஏன் வாடி இருக்கிறது என்று சுருளி கேட்டான். அதற்கு மாலினி வீட்டில் நடந்ததை கூறினாள். கவலைப்படாதே இனி எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும் என்று சுருளி ஆறுதல் கூறினான். மாலினி சுருளி இடம் நான் மாலைப்பொழுதில் விரைவாகவே வீட்டுக்கு சென்று விடுவேன் இன்று மாலை எனக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று மாலினி கூறினாள். சரி என்று சுருளி கூறினான். வழக்கம்போல மாலினி பணிக்கு செல்லும் பேருந்து வந்தது மாலினி சுருளி இடம் பேசிவிட்டு தனது பணிக்காக புறப்பட்டுச் சென்றாள்.(Real love story)

வீட்டிலும் மாலினியின் தாய் மாலினியின் தந்தையிடம் எனது அண்ணன் வந்து மாலினியை பெண் பார்க்க வந்தால் என்ன செய்வது என்று கேட்டார். உனக்கு சுருளியை பிடித்திருக்கிறதா என்று மாலினியின் தந்தை கேட்டார். சுருளி ஒரு நல்ல மனிதன், நம் மகள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறான். சுருளி நமக்கும் மருமகனாக கிடைக்க நாம் வரம் செய்து இருக்க வேண்டும் என்று மாலினியின் தாய் கூறினார். அதற்கு மாலினியின் தந்தை உனது அண்ணன் வந்து மாலினியை பெண் பார்க்க வந்தால் நான் அதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று மாலினியின் தந்தை கூறினார். என்ன திட்டம் என்று மாலினியின் தாய் கேட்டார். (அற்புதமான காதல் கதை)

மாலைப் பொழுதில் உனது அண்ணன் வந்து மாலினியை பெண் கேட்டாள் அப்போது அந்த திட்டம் செயல்படும் என்று மாலினியின் தந்தை கூறினார். சரி எல்லாம் உங்கள் விருப்பம் என்று மாலினியின் தாய் கூறினார்... மாலைப்பொழுது வந்தது. மாலினி தன் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவள் தாயிடம் அம்மா, மாமா இன்னும் வரவில்லையா என்று கேட்டாள். வந்து கொண்டிருக்கிறார் நீ முகத்தைக் கழுவி நல்ல ஆடையை அணிந்து வா என்று மாலினியின் தாய் கூறினார். மாலினி முகத்தைக் கழுவிக் கொண்டு ஆடை அலங்காரம் செய்து தயாராக இருந்தாள். மாலினியின் மனதில் ஒருவேளை நம்மை பெண்பார்க்க வருகிறார்களோ? என்ற சந்தேகம் இருந்தது.(காதல் கதை)

வீட்டிற்கு வெளியில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. மாலினியின் மாமா அவரது உறவினர்கள் என ஒரு பத்து பேர் வந்தனர். மாலினியின் தாய் அவர்களை நலம் விசாரித்து அமர வைத்தார். பிறகு மாலினியின் மாமா உனது கணவர் எங்கு சென்றிருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர் வெளியில் சென்று இருக்கிறார் இப்போது வந்துவிடுவார் என்று மாலினியின் தாய் கூறினார். பிறகு மாலினி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கேட்டார். அவள் ஆடை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள் என்று மாலினியின் தாய் கூறினார். மாலினியின் தந்தை மற்றொரு காரில் வீட்டிற்கு வந்தார்..(love story)

வாருங்கள் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் மாலினியின் மாமா கூறினார். சற்று நேரம் அனைவரும் அமர்ந்து பேசினர். மாலினியின் மாமா, மாலினியின் தந்தையிடம் நான் உங்களது மகளை பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார். நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று மாலினியின் தந்தையிடம் கேட்டார். நீங்கள் திடீரென்று இப்படி கூறுவதால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று மாலினினின் தந்தை கூறினார். மாலினிக்கு சற்று பயமாக இருந்தது. நாம் காதல் செய்வது இவர்களுக்கு தெரிந்தும் இவ்வாறு செய்கிறார்களே என்று வருத்தம் அடைந்தாள். ஆனால் சுருளி எப்படியாவது இங்கு வருவான் என்று நம்பிக்கை இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள்.

மாலினியின் மாமா நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று கேட்டார். எங்களுக்கும் உங்களது மகனுக்கு மாலினியை கட்டி வைக்க வேண்டும் என்றுதான் ஆசை இருக்கிறது என்று கூறினார். மாலினி அழுதபடியே வீட்டின் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். எனது மகனுக்கு உங்களது மகளை கட்டித் தாருங்கள் என்று மாலினியின் மாமா கேட்டார். உங்கள் மகனை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் வசதியிலும் குணத்திலும் கூட மிகச் சிறந்தவன். எனக்கும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நான் எனது மகளுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன் என்று மாலினியின் தந்தை கூறினார்.

என்ன வாக்குக் கொடுத்து இருக்கிறீர்கள் என்று மாலினியின் மாமா கேட்டார். சற்றுப் பொறுங்கள் நான் எனது மருமகனை அழைக்கிறேன் என்று மாலினியின் தந்தை கூறினார். மாலினியின் மாமா எனது மகன் இங்கு வரவில்லையே பிறகு எப்படி இவர் கூப்பிடுவார் என்று ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தார். காரிலிருந்து திடீரென சுருளி இறங்கி வந்தார். சுருளியை கண்டதும் மாலினி அளவில்லாத சந்தோஷம் அடைந்தாள். கண்களை துடைத்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தாள். மாலினியின் தந்தை இவர்தான் எனது மாப்பிள்ளை இவரது பெயர் சுருளி சொந்தமாக கார் ஒன்றை ஓட்டுகிறார் இப்போது வீடும் கட்டிக் கொண்டிருக்கிறார். எனது மகளும் சுருளியும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

அதனால் மாலினியை எனது சம்மதத்துடன் சுருளிக்கு கட்டி வைக்க வேண்டும் என்று நான் முடிவு எடுத்துள்ளேன் என்று மாலினியின் தந்தை கூறினார். இதைக் கேட்ட சுருளியும் மாலினியும் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். மாலினியின் மாமா கோபமாக எழுந்தார். நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாம் சிறுவயதிலேயே முடிவு செய்தது தானே என்று கோபத்துடன்😠😠😠 கேட்டார். ஆம் சிறுவயதில் முடிவு செய்ததுதான் ஆனால் எனக்கு எனது மகளின் சந்தோஷமே முக்கியம் என்று மாலினியின் தந்தை கூறினார். உங்களது மகனை எனக்கு ஒரு வகையில் பிடிக்கும். திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று நானும் முடிவு செய்திருந்தேன்.

ஆனால் நான் எனது மகளின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என்று மாலினியின் தந்தை கூறினார். மாலினியின் மாமா அவரது தங்கையிடம் நீயும் இதற்கு என்ன சொல்கிறாய் என்று மாலினியின் தாயிடம் கேட்டார். எனக்கும் இவர்கள் காதலிக்கும் செய்தி தெரியும். நான் நேற்று நீங்கள் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்று கேட்டேன் ஆனால் நீங்கள் கூறவில்லை. நீங்கள் இதற்கு தான் வருகிறீர்கள் என்று கூறியிருந்தால் நான் அலைபேசியில் உங்களிடம் தெளிவாக கூறி இருப்பேன் என்று மாலினியின் தாய் கூறினார். சரி போனது போகட்டும் இப்போது எனக்கு ஒரு தெளிவான பதில் கூறுங்கள் என்று மாலினியின் மாமா கேட்டார். என்ன பதில் கூற வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று மாலினியின் தந்தை கேட்டார். உங்களுக்கு எனது சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று நினைத்தாள் என்னுடன் சம்மந்தம் வையுங்கள் இல்லையென்றால் இதை இத்துடன் முடித்து விடுங்கள் என்று மாலினியின் மாமா கேட்டார்...(தொடரும்)

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories


திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1

திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1


Post a Comment

0 Comments