திருடனுக்கும் காதல் மலரும்(tamil love stories)
ஒரு ஊரில் சுருளி எனும் திருடன் ஒருவன் இருந்தான். அவனது தினசரி வேலை பகலெல்லாம் எந்த வீட்டில் திருடலாம் என நோட்டம் விடுவான். பிறகு இரவில் சென்று அந்த பொருளை திருடிக் கொண்டு வருவான். சுருளி ஒரு பெரிய திருடன் ஆகவேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது அவனது வயிற்றுப் பிழைப்பிற்காக சின்ன சின்ன திருட்டுகளை செய்துகொண்டிருக்கிறான். வீட்டில் வைத்துள்ள வாலி இரும்பு பொருட்கள் இந்த மாதிரி பொருட்களை மட்டுமே குறிவைத்து திருடுவான். அங்கு உள்ள அனைவருக்கும் சுருளி திருடுவான் என்பது யாருக்கும் தெரியாது. இவன் திருடுவதை சற்று வித்தியாசமாகத்தான் செயல்படுவான். அதனால் பெரிதாக யாருக்கும் இவன் மேல் சந்தேகம் வராது.
( Tamil love stories)ஒருமுறை சுருளி பகலில் ஒரு வீட்டில் திருடலாம் என திட்டம் தீட்டி வைத்திருந்தான். இரவு நேரம் வந்துவிட்டது. வழக்கம்போல சுருளி அந்த வீட்டிற்கு திருடலாம் என்று சென்றுகொண்டிருந்தான். அந்த வீட்டிற்குச் சென்று சுவரில் ஏறி குடித்தான். கிணற்றின் மேலிருந்து வாலியை திருடலாம் என அங்கு சென்றான். அப்போது புத்தக அறையில் ஒரு பெண் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அந்தப் பெண்ணைக் கண்டதும் பிரமித்து நின்றான். வாலியை கையில் எடுத்து விட்டேன் அந்தப்பெண்ணை பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான். எப்போதும் இல்லாத அளவிற்கு அந்தப் பெண்ணின் அழகை கண்டு தான் திருட வந்து விட்டோம் என்பதை மெய்மறந்து நின்று கொண்டிருந்தான். (Tamil love stories)
அந்த வீட்டில் யாரோ வருவது போல் சத்தம் கேட்டது. வாலியை எடுத்துக்கொண்டு அவன் தப்பித்தான்.அந்த வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டேன் அந்தப் பெண்ணை நினைத்து கொண்டிருந்தான். ஆனால் சுருளிக்கு தெரியாது அந்தப் பெண் சுருளியை பார்த்து விட்டாள் என்று தெரியாது. சுருளி தன் மனதில் அந்த பெண் என்னை பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். காலைப் பொழுது விடிந்தது. அன்று இரவு முழுவதும் திருடிக் கொண்டு வந்த பொருளை வீட்டில் வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். மறுநாள் அவன் திருடிய வீட்டிற்குச் எதிர்ப்புறம் நின்று அந்தப் பெண் வருவாளா மாட்டாளா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.( Tamil love stories)
வீட்டிற்கு வெளியே வந்த அந்த பெண் சுருளியை கண்டதும் சற்று வியப்பாக பார்த்தாள். சுருளிக்கு உடம்பு எல்லாம் வேர்த்துக் கொட்டியது. சுருளிளை பார்த்த அந்த பெண் சுருளியை நோக்கி நடந்தாள்.
சுருளியை பார்த்து நீங்கள் தான் நேற்று இரவு எங்கள் வீட்டிற்கு திருட வந்தீர்களா என்று கேட்டாள். சுருளி எதுவும் பேசாமல் நின்றான். நேற்று நான் உங்களை கவனித்தேன் நீங்கள் அந்த வாலியை எடுத்துக் கொண்டு செல்லாமல் என்னையே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்பதை நான் அறிவேன் என்று கூறினாள். சுருளி எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்று கொண்டு இருந்தான். கவலைப்படாதீர்கள் இதை பற்றி நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று அந்தப்பெண் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். சுருளிக்கு அதிர்ச்சியாக இருந்தது.( Tamil love stories)
சுருளியின் மனதில் ஏன் அந்தப் பெண் நம்மைப் பற்றி எதுவும் கூறவில்லை என்று எண்ணம் தோன்றியது. ஆனால் சுருளியின் மனதில் ஏதோ ஒன்று தென்பட்டது. அந்தப் பெண்ணைப் பற்றி இல்லாத எல்லாம் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தான். சுருளிக்கு அந்தப் பெண்ணை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தோன்றியது. பிறகு அந்தப் பெண் எங்கு சென்றாலும் சுருளி அந்தப்பெண்ணை பின்தொடர்ந்தான். அந்தப் பெண்ணின் மனதில் சுருளியைப் பற்றி எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஆனால் சுருளிக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்ய கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்தது. அந்தப் பெண் என்ன கூற போகிறாள் என்பது கூட தெரியாமல் அந்த பெண்ணை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறான். இப்படியே ஒரு சில நாட்கள் கழிந்தது.(tamil love stories)
அன்று இரவு நாளை எப்படியாவது அந்தப் பெண்ணிடம் பேச வேண்டுமென்று சுருளிக்கு எண்ணம் தோன்றியது. பத்தாம் வகுப்பு பையன் படிப்பது போல் அந்தப் பெண்ணிடம் எப்படி பேசலாம் என்று ஒரு கடிதத்தில் எழுதிக் கொண்டேன் அதை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். மறுநாள் காலை வீட்டில் இருந்து அந்த பெண் வெளியே வருவதற்காக காத்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தாள். சுருளிக்கு எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப்பெண்ணை பின்தொடர்ந்தான். ஆனால் அந்த பெண் சுருளியை திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனாலும் கூட சுருளியை அந்தப் பெண்ணை நோக்கி பின்தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிடம் சற்று நில்லுங்கள் என்று கூறினார். அந்தப் பெண் நின்றுவிட்டு திரும்பிப் பார்த்தாள். சுருளி அந்தப் பெண்ணிடம் நான் உங்களுடன் சற்று பேச வேண்டும் என்று கூறினார். நீங்கள் யார் நீங்கள் ஏன் என்னிடம் பேச வேண்டும் என்று அந்த பெண் கூறினாள். என்னை மறந்து விட்டீர்களா நான் உங்கள் வீட்டிற்கு திருட வந்த போது நீங்கள் என்னை பார்த்து விட்டீர்கள் என்று கூறினான். ஆமாம் இப்போது எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று அந்தப் பெண் கூறினாள். சரி சொல்லுங்கள் என்று அந்த பெண் கேட்க. சுருளி மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான் முதலில் உங்களது பெயர் என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண் என் பெயர் மாலினி என்று கூறினாள் பெயர் அழகாக இருக்கிறது என்று சுருளி கூறினான்.பிறகு நான் உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தைரியமாக கூறினார். ஆனால் அந்த பெண் சற்றுக் கோபமாக சுருளியை பார்த்தாள்.( Tamil love stories)
சுருளி அந்தப் பெண்ணிடம் நான் உங்களை பார்த்த கணம் முதல் என் திருட்டுத் தொழிலை விட்டு விட்டேன் உங்களுக்காக அந்த தொழிலிலை நான் விட்டுவிட்டேன். என்று கூறினான் அதற்கு மாலினி சரி பரவாயில்லை நீங்கள் ஏன் என்னை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறீர்கள் என்று கூறினாள். நான் இந்த தொழிலை விடுவதற்கு முதல் காரணம் நீங்கள்தான் என்று சொல்லி கூறினான். நீங்கள் என் வாழ்க்கை துணையாக வந்தால் கண்டிப்பாக நான் நல்ல நிலைமைக்கு வருவேன் என்று கூறினான். நீங்கள் ஒரு திருடன் உங்களை நம்பி நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று மாலினி கேட்டாள். நான் இப்போது அந்த தொழிலை செய்வதில்லை என்று சுருளி கூறினான். மேலும் மேலும் மாலினியை வற்புறுத்தினான். கடைசியில் சுருளி நாளை நான் மறுபடியும் இங்கு வருவேன் என்று கூறினான். உங்களின் பதிலை சற்று ஆராய்ந்து ஒரு நல்ல முடிவாக சொல்லுங்கள் என்று மாலினியிடம் சுருளி கூறினான்.
நாளை அந்தப் பெண் என்ன பதில் கூறுவாள் என்று ஆவலுடன் இருந்தான். மீண்டும் அதே இடத்திற்கு சென்று சுருளி காத்துக் கொண்டிருந்தான்... நேரம் ஆகிக் கொண்டிருந்தது ஆனால் அந்தப்
பெண்.................(தொடரும்)
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
https://telegram.me/realtamilstories
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/02/blog-post_19.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/02/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 4
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_12.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 5
https://realtamilstories.blogspot.com/2021/03/blog-post.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 6
https://realtamilstories.blogspot.com/2021/03/tamil-love-stories_26.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 7
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 8
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_9.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 9
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_16.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி -10
https://realtamilstories.blogspot.com/2021/04/tamil-love-stories_23.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 11
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 12
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_21.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 13
https://realtamilstories.blogspot.com/2021/05/tamil-love-stories_28.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 14
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories.html?m=1
திருடனுக்கும் காதல் மலரும் பகுதி - 15
https://realtamilstories.blogspot.com/2021/06/tamil-love-stories_20.html?m=1
0 Comments
thanks for your comments