புதையலைத் தேடி பகுதி - 4 ( tamil horror stories)

புதையலைத் தேடி (tamil horror stories)
பகுதி - 4

இந்தக் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்தக் கதையின் உடைய முன்பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போது தான் இந்த கதை உங்களுக்குத் புரியும்...


நண்பர்கள் அனைவரும் மலையின் மீது ஏறி கொண்டிருக்க அப்போது திடீரென்று சுகுவை ஆன்மாக்கள் பிடித்து இழுத்துச் சென்றது.  மற்ற நண்பர்கள் அனைவரும் விரைந்து செயல்பட்டு சுகுவை அந்த  ஆன்மாகளிடமிருந்து மீட்டனர். மாறன் தன் நண்பர்களிடம் யாரும் அந்த ஆன்மாவின் கண்களை மட்டும் பார்க்க வேண்டாம். தலை குனிந்தபடியே மேலே செல்லலாம். இன்னும் சிறிது தூரம் மட்டுமே உள்ளது. என்று தன் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டான். (tamil horror stories)

ஒருபுறம் ஆன்மாக்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு இருக்க நண்பர்கள் மிகுந்த பயத்துடன் மலையின் உச்சிக்கு சென்று அடைந்தனர். மலையின் மீது உள்ள ஒரு குகையில் அந்த சித்தர் தவ நிலையில் இருப்பதைக் கண்டு சற்று திருப்தி அடைந்தனர். ராமன் தன் நண்பர்களிடம் நாம் மலையின் உச்சிப் பகுதிக்கு வந்துவிட்டோம் என்று தன் நண்பர்களிடம் கூறினர். ஆம், ராமா நீ சொல்வதும் சரிதான் என்று குமார் கூறினான். அந்த சித்தரை நோக்கி செல்லும்போது பாதையின் நடுவே ஒரு பெரிய பாம்பு இருப்பதைக் கண்டு பயந்தனர். அப்போது ராஜா இங்கு ஒரு பாம்பு இருக்கிறது என்ன செய்யலாம் என்று தன் நண்பர்களை கேட்டான். (tamil horror stories)

நாம் அந்த நாகத்தை எதுவும் துன்புறுத்தாமல் ஒரு ஓரமாக நடந்து சென்று விடலாம் என்று கூறினான். அதுவும் சரிதான் என்று மற்றவர்கள் கூறினார். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு ஓரமாக நாகத்தை கடந்து சென்றனர். ஒருவழியாக சித்தரின் அருகில் சென்று அமர்ந்தனர். அனைவரும் எதுவும் பேசாமல் சித்தரின் முன்பு அமைதியாக நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக நண்பர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர். மலையின் அடிவாரத்தில் ஒரு முதியவர் கூறியதுபோல சித்தரின் தவத்தை கலைக்க வேண்டாம் என்று நண்பர்கள் முடிவு செய்தனர். அவர் கண் விழித்துப் பார்க்கும் வரை நம் காத்திருக்கத்தான் வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயே அமர்ந்தனர். (tamil horror stories)


நீண்ட நேரம் ஆனது. தொலைவில் அந்த ஆன்மாக்கள் இவர் எப்போது வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தது. சித்தர் கண் விழித்து பார்த்தார். நீங்கள் யார்! நீங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று நன்றாக தெரியும் என்று சித்தர் கூறினார். அந்தப் புதையலைப் பற்றி நான் உங்களிடம் கூற வேண்டும். அதற்குத்தானே நீங்கள் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறீர்கள் என்று சித்தர் கூறினார். ஆமாம், ஐயா அதற்காகத்தான் நாங்கள் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று ராமன் கூறினான். நீ உன் வீட்டிலிருந்து அந்த புதையலை எடுக்கும் பொழுது அந்த இடத்தில் உனது கையில் இருந்து ஒரு துளி ரத்தத்தை அங்கு விட்டிருக்க வேண்டும். (tamil horror stories)

அந்த இடத்தில் நீ ரத்தத்தை விடாத காரணத்தால்தான் அந்த ஆன்மாக்கள் எனக்கு ரத்தம் வேண்டும் என்றும் இல்லையென்றால் உங்கள் உயிர் வேண்டும் என்றும் கேட்கின்றனர். ஐயா இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று குமார் கேட்டான். இப்போது உங்களுக்கு ஒரே ஒரு வழி தான் உங்கள் கண் முன்னே இருக்கிறது. அந்தப் புதையல் பெட்டியைத் தெரிந்தோ! தெரியாமலோ! நீங்கள் எடுத்து விட்டீர்கள். நீங்கள் அதை விட்டாலும் அது உங்களை விடாது. அந்தப் பெட்டியை நீங்கள் எடுத்த இடத்தில் வைக்க முடியாது. அந்த பெட்டியானது ஒரு சபிக்கப்பட்ட பெட்டி. அந்தப் பெட்டியை திறந்தால் மட்டுமே அந்த சாபத்திலிருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். (tamil horror stories)

ஐயா நீங்கள் சொல்வது சரிதான். நாங்கள் தெரிந்தோ! தெரியாமலோ! அந்தப் பெட்டியை தொட்டுவிட்டோம். அந்தப் பெட்டியை திறக்க என்ன வழி இருக்கிறது என்று நீங்கள் தான் கூற வேண்டும் என்று ராமன் கேட்டான். நீங்கள் வீட்டிற்கு சென்றதும் பெட்டியை எடுத்த இடத்தில் ஐந்து பேரின் விரல்களில் இருந்து ஒரு துளி ரத்தம் அந்த இடத்தில் விட வேண்டும். அப்போது அந்த ரத்தம் வேண்டும் என்று சத்தம் உங்களுக்கு கேட்காது. பிறகு அந்தப் பெட்டியை திறக்க வேண்டும் உங்கள் 5 பேரின் ரத்தத்தை மீண்டும் அந்த பெட்டியின் மீது விட வேண்டும். மேலும் நல்ல உள்ளம் படைத்த மனிதர்களால் மட்டுமே முடியும். அவர்களிடம் பேராசை இருக்கக்கூடாது. (tamil horror stories)


மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் இருக்கக் கூடாது. தனி மனித ஒழுக்கம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் ஐந்து பேரிடமும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த பெட்டியை திறந்து அதன் சாபத்தைப் போக்கி நீதி நிலைநாட்ட உங்களால் மட்டுமே முடியும். நீங்கள் ஏற்கும் இந்த பயணம் உங்களுக்கு ஆபத்தாகவும் முடியலாம். உங்களுக்கு நன்மையிலும் முடியலாம். அது அந்த இறைவன் கையில் இருக்கிறது. உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை வழிபட்ட பிறகு நீங்கள் இந்த காரியத்தை செயல்படத் தொடங்குங்கள் என்று சித்தர் கூறினார். மலையின் அடிவாரத்தில் இருந்த முதியவர் கூறியது போலவே நடந்து செல்லுங்கள் வெற்றி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். (tamil horror stories)

உங்களுக்கு குழப்பம் ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று சித்தர் கூறினார். ராமன் அந்த சித்தரிடம் நீங்கள் அந்தப் பெட்டி ஒரு சபிக்கப்பட்ட பெட்டி என்று கூறினீர்கள். அந்தப் பெட்டி எதனால் சபிக்கப்பட்டது என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா! என்று கேட்டான். அதற்கான விடையை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று சித்தர் கூறினார். இந்த பயணத்தின் முடிவில் உங்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் எது நடந்தாலும் நன்மைக்காகத் தான் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளுங்கள் சென்று வாருங்கள் உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும் என்று சித்தர் வாழ்த்தி வழியனுப்பினார். (tamil horror stories)

சித்தரிடம் நன்றி கூறிவிட்டு நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மலையின் மீது ஏறிய பாதை அவர்கள் மறந்தனர். எப்படி செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். மற்றொரு புறம் ஆன்மாக்கள் அவரை நோக்கி வந்தனர். அவர்கள் சித்தரைக் காண செல்லும் வழியில் இருந்த ஒரு நாகம் அவரின் கண் முன்னே மீண்டும் வந்தது. நண்பர்கள் அனைவரும் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். ஆனால் அந்த நாகம் அவர்கள் எதுவும் செய்யாமல் மலையின் அடிவாரத்தில் செல்ல பாதுகாப்பான வழியை அவர்களுக்கு காட்டியது. ராமன் தன் நண்பர்களிடம் இந்த நாகம் தான் நமக்கு பாதையை காட்டுகிறது நாம் இந்த நாகத்தை பின்தொடர்ந்து செல்லலாம் என்று கூறினான். நீ சொல்வதும் சரிதான் என்று மற்ற நண்பர்கள் அனைவரும் கூறினர். (tamil horror stories)


நாகம் முன் நோக்கி சென்று கொண்டிருந்தது. பாதுகாப்பான வழியில் மலையடிவாரத்தை அடைந்தனர். திடீரென்று அந்த நாகம் மாயமாக மறைந்தது. அந்த இடத்தில் மீண்டும் அந்த முதியவரை பார்த்தனர். சித்தர் உங்களுக்கு எல்லாவற்றையும் கூறியிருப்பார் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று அந்த முதியவர் கூறினார். முதியவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நண்பர்கள் வேகவேகமாக ராமன் வீட்டிற்கு சென்றனர். ஒரு வழியாக ராமன் வீட்டை அடைந்தனர். அந்த இடத்தில் மீண்டும் அவர்களுக்கு அந்த சத்தம் கேட்டது. (tamil horror stories)

சீக்கிரம் ராமா நீ எந்த இடத்தில் அந்த பெட்டியை எடுத்தாய் என்று எங்களுக்கு காட்டு. அந்த இடத்தில் நாம் விரல்களிலிருந்து ரத்தத்தை தானமாக கொடுக்கலாம் என்று ராஜா கூறினான். ராஜா நீ கூறுவதும் சரிதான் என்று இராமன் கூற, அந்தக் குழி வெட்டப்பட்ட இடத்தில் சென்று நின்றனர். அந்த இடத்தில் மிகவும் வீரியத்துடன் நிறைந்த சத்தம் அவர்களுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. எங்களுக்கு ரத்தம் வேண்டும், ரத்தம் வேண்டும் என்று அந்த பெட்டி எடுத்த இடத்தில் நண்பர்கள் 5 பேரும் தங்கள் விரல்களிலிருந்து ரத்தத்தை அந்த இடத்தில் கொடுத்தனர். இந்த ரத்தத் துளிகள் உள்ளே சென்றதும் அந்த இடம் கருப்பு நிறமாக மாறியது. அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டிருந்த சத்தம் மெல்ல மெல்ல குறைந்தது. (tamil horror stories)

சத்தம் குறைந்தவுடன் வாருங்கள் சென்று பெட்டியை திறந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தனர். வீட்டின் உள்ளே சென்று அந்தப் பெட்டியை பார்த்தனர். சுகு முன்பு செய்ததைப் போல் அவசர படாதே பொறுமையாக இந்த பெட்டியை கையாளலாம் என்று முடிவு செய்தனர். அந்தப் பெட்டியை சுற்றி அமர்ந்தனர். மீண்டும் அதே போல தங்கள் கைவிரல்களில் இருந்து ரத்தத்தை அந்தப் பெட்டியின் மீது ஊற்றினர். மிகவும் அழுக்காக இருந்த அந்தப் பெட்டி ரத்தத் துளிகள் அதன் மீது பட்டதும் பலபலவென்று மின்ன ஆரம்பித்தது. நண்பர்கள் அனைவரும் பயந்து நடுங்கினர். (tamil horror stories)

ராமன் தன் நண்பர்களிடம் யாரும் பயப்பட வேண்டாம் என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று  கூறினான். அந்தப் பெட்டியில் திடீரென்று ஒரு வெளிச்சம் வந்தது. அந்தப் பெட்டி தானாக திறந்தது. அதன் உள்ளே........... ( தொடரும்)

இந்தக் கதையின் அடுத்த பாகத்தை உடனுக்குடன் படிக்க வேண்டுமென்று நினைத்தால். நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்

https://telegram.me/realtamilstories

புதையலைத் தேடி பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/07/tamil-horror-stories.html?m=1

புதையலைத் தேடி பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/07/2-tamil-horror-stories.html?m=1

புதையலைத் தேடி பகுதி - 3
https://realtamilstories.blogspot.com/2021/07/3-tamil-horror-stories.html?m=1

Post a Comment

0 Comments