புதையலைத் தேடி (tamil horror stories)
பகுதி - 2
இந்தக் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்தக் கதையின் உடைய முன்பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போது தான் இந்த கதை உங்களுக்குத் புரியும்...
ராமன் மணலை எடுத்து போட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அவன் கனவில் கண்டதுபோல ஒரு பெட்டி தடைபட்டது. ராமன் அந்தப் பெட்டியை பார்த்தவுடன் மிகவும் பதட்டமாக இருந்தான். என்ன இது நம்ம கனவில் வந்தது போலவே ஒரு பெட்டி இருக்கிறது என்று ஆச்சரியமாக பார்த்தான். அந்தப் பெட்டியின் மீது இருந்த மணலை தன் கைகளால் சுத்தப்படுத்தி அந்தப் பெட்டியை மெதுவாக மேலே எடுத்தான். (tamil horror stories)
அந்தப் பெட்டியை எடுத்தவுடன் பெட்டியை சுத்தம் செய்தான். இன்னும் ஒரு அடி தான் குழி தோண்ட வேண்டியிருக்கிறது. முதலில் குழியை முழுவதுமாக தோன்றி முடிக்கலாம். பிறகு அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான். பெட்டியைக் கொண்டு சென்று அவனது பழைய வீட்டில் வைத்தான். ஆனால் அவனுக்கு அப்போது தெரியாது அதில் இருக்கும் ஆபத்துகள் என்னவென்று. ராமன் மீண்டும் சென்று குழியை தோண்ட ஆரம்பித்தான். ஒரு வழியாக வீடு கட்டுவதற்கு தேவையான அளவு குழியைத் தோண்டி விட்டான்.. அன்று இரவு பொழுது வந்தது வழக்கம் போல அவனது நண்பர்களை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு உறங்கலாம் என்று நினைத்தான். (tamil horror stories)
அவன் அசதியாக இருந்ததால் அந்த குழியில் எடுத்த பெட்டியை மறந்து விட்டான். அவன் இரவு தூங்கும் போது அவன் ஆழ்ந்த தூக்கத்தில் திடீர் என்று எனக்கு ரத்தம் வேண்டும், எனக்கு ரத்தம் வேண்டும் என்று யாரோ கேட்பது போலிருந்தது. ராமன் பயத்தில் திடீரென்று கண் விழித்து கொண்டான். யார் வந்து என்னிடம் ரத்தம் கேட்பது என்று சுற்றி முற்றி பார்த்தான். ஆனால் மீண்டும் அந்த இடத்தில் எனக்கு ரத்தம் வேண்டும் எனது பொருளை நீ எடுத்துக் கொண்டாய் ஆகையால் எனக்கு ரத்தத்தை கொடு என்று சத்தம் மட்டும் அவனுக்கு கேட்டது. ஆனால் அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று இராமனுக்கு தெரியவில்லை. (tamil horror stories)
அப்போது கூட அவனுக்கு அந்தப் பெட்டியின் மீது ஞாபகம் எதுவும் வரவில்லை. வீட்டின் வெளியே வந்து பார்த்தான். வீட்டுக்கு வெளியே எந்த ஒரு சத்தமும் இல்லை அமைதியாக இருந்தது. ஏதாவது பிரம்மை ஆக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு ராமன் மீண்டும் உறங்கச் சென்றான். அவன் படித்திருந்த கட்டிலுக்கு அடியில் தான் அந்தப் பெட்டியை வைத்திருந்தான். மீண்டும் அதே போல சத்தம் கேட்டது. எனக்கு ரத்தம் வேண்டும், எனக்கு ரத்தம் வேண்டும். என் தாகம் தீர வேண்டும் என்று சத்தம் அதிகமாக கேட்டது. என்ன இது நாம் உறங்கும்போது இவ்வாறு சத்தம் அதிகமாக கேட்கின்றது என்று இராமன் பயத்துடன் எழுந்து அமர்ந்தான். (tamil horror stories)
திடீரென்று அவன் காலை யாரோ பிடித்து இழுப்பது போல் உணர்ந்தான். யாரது என் காலை பிடித்து இழுப்பது என்று கீழே குனிந்து பார்த்தான் அங்கு யாரும் இல்லை. அதற்கு பதிலாக அங்கு அவன் கண்டெடுத்த பெட்டி மட்டுமே இருந்தது. அப்போதுகூட ராமன் அந்த பெட்டியை பற்றி யோசிக்கவில்லை. மீண்டும் அதே சத்தம் கேட்டது. ராமன் மிகவும் பயந்தான். என்ன இது ஏன் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் கேட்கிறது இத்தனை நாட்களாக இவ்வாறு சத்தம் கேட்டது இல்லையே. இப்போது மட்டும் என்ன ஆயிற்று என்று தெரியாமல் ராமன் யோசித்துக் கொண்டிருந்தான். ஒருபுறம் அந்த சத்தம் கேட்டுக் கொண்டிருக்க மறுபுறம் ராமனை யாரோ பிடித்து இழுப்பது போல் உணர்ந்தான். (tamil horror stories)
யாரது என்னை பிடித்து இழுப்பது என்று ராமன் கேட்க. என் பெட்டியை நீ எடுத்துக் கொண்டாய் ஆகையால் எனக்கு உன் ரத்தத்தை கொடு என்று சத்தம் அதிகமாக கேட்க ராமன் மிகவும் பயந்து நடுங்கினான். நள்ளிரவு சரியாக ஒரு மணி இருந்தது. அந்தக குரல் அதிகமாக கேட்டதும் ராமன் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினான். வீட்டிற்கு வெளியே சென்று மீண்டும் அந்த சத்தம் கேட்கிறதா என்று பார்த்தான். ஆனால் அந்த சத்தம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் வீட்டிற்கு உள்ளே சென்றான். மீண்டும் அதே சத்தம் அவனுக்கு கேட்க மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். (tamil horror stories)
வீட்டின் வெளியே அமர்ந்து என்னவாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான். நாம் வீடு கட்டுவதற்கு குழியைத் தோண்டினோம். காலையில் குழியைத் தோண்டி கொண்டிருக்கும் பொழுது ஒரு பெட்டி கிடைத்தது. அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு நான் கட்டிலுக்கு அடியில் வைத்தேன். அப்போதுதான் ராமனுக்கு அந்த பெட்டியை பற்றி ஞாபகம் வந்தது. இருந்தாலும் கூட ராமன் மனதில் ஒரு பயம் இருந்தது இரவு நேரம் என்பதால் நாம் தனியாக எதுவும் செய்ய முடியாது. காலையில் நண்பர்களிடம் கலந்து யோசிக்கலாம் என்று முடிவு செய்தான். உள்ளே சென்று உறங்கலாம் என்று பார்த்தான். அந்த சத்தம் மீண்டும் அதிகமாக கேட்கும். இரவு நேரத்தில் நண்பர்களை தொந்தரவு செய்ய முடியாது.(tamil horror stories)
வீட்டின் கதவை பூட்டி விட்டு கோவிலுக்கு உள்ளே சென்று படுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவன் வீட்டைப் பூட்டுவதற்கு பூட்டு சாவியை எடுக்க மீண்டும் உள்ளே சென்றான். அப்போது பல குரல்கள் அவனிடம் கேட்டது. எனக்கு ரத்தத்தை கொடு. இல்லையென்றால் உன் உயிரைக் கொடு. என்று ஒரு புறம் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க மற்றொரு புறம் ராமனை பிடித்து யாரோ வெளியில் தள்ளினார். வீட்டின் கதவை கூட பூட்டு போடமுடியாமல் ராமன் வெளியே தூக்கி வீசப்பட்டான். ராமன் மிகவும் பயந்து போனான். வீட்டைக் கூட பூட்டாமல் கோவிலுக்கு உள்ளே சென்றான். கோவில் உள்ளே யாரும் இல்லை என்பதால் ராமன் மீண்டும் வெளியே வந்து கோவிலின் முன்பு அமர்ந்து கொண்டான். (tamil horror stories)
இரவு நேரம் என்பதால், ராமன் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்துடன் அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டான். விடியும் வரை இங்கேயே அமர்ந்து இருக்கலாம் என்று இராமன் முடிவு செய்திருந்தான். நள்ளிரவு 3 மணி ஆனது ராமன் உறங்கலாம் என்று முயற்சி செய்தான். ஆனால் அவன் கண் மூடும் போது எல்லாம் அந்த சத்தமும் அவனை இழுத்து யாரோ வெளியில் வீசியது போன்ற எண்ணங்கள் அவன் மனதில் தோன்றின. கடவுளை நினைத்துக் கொண்டு நான் உறங்க வேண்டும் என்று முடிவு செய்தான். உறங்க ஆரம்பித்தான். காலைப் பொழுது விடிந்தது. ஊர் மக்கள் அனைவரும் ராமன் ஏன் இங்கு படுத்திருக்கிறான் என்று ஆச்சரியமாக பார்த்தனர். (tamil horror stories)
காலைப்பொழுது 7 மணி ஆனது ராமனின் நண்பர்கள் வந்து ராமா எந்திரி, ராமா எந்திரி, என்று ராமனை எழுப்ப முயற்சி செய்தனர். ஒருவழியாக ராமன் கண்களை விழித்துக் கொண்டான். ஊர் மக்கள் அனைவரும் ராமன் கண் விழித்துக் கொண்டதால் கலைந்து சென்றனர். ஆனால் அவனது நண்பர்கள் மட்டும் ராமா என்ன ஆயிற்று ஏன் இங்கு வந்து படுத்துக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்டனர். ராமனுக்கு அவனது நண்பர்களை கண்டதும் ஒரு வித மன தைரியம் வந்தது. இருங்கள் நான் என் முகத்தை கழுவிக் கொண்டு வந்து என்ன நடந்தது என்று உங்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன் என்று இராமன் கூறினான். சரி சீக்கிரம் உன் முகத்தைக் கழுவிக் கொண்டுவா! நாங்கள் இங்கு அமர்ந்து இருக்கிறோம் என்று நண்பர்கள் கூறினர்.(tamil horror stories)
ராமன் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். நேற்று இரவு நான் உங்களை சந்தித்து விட்டுச் சென்ற பின்பு வீட்டில் என்னால் உறங்க முடியவில்லை என்று கூற ஆரம்பித்தான். இரவு பொழுது நடந்த எல்லாவற்றையும் ராமன் தன் நண்பர்களுக்கு எடுத்துரைத்தான்.
ராமா இப்போது அந்தப் பெட்டியை நீ எங்கே வைத்திருக்கிறாய். நான் என் வீட்டின் கட்டிலுக்கு அடியில் தான் அந்த பெட்டியை வைத்து இருக்கிறேன். சரி வா உன் வீட்டிற்கு சென்று அந்தப் பெட்டியை பார்க்கலாம் என்று நண்பர்கள் அனைவரும் கூறினர். நண்பர்கள் அனைவரும் ராமன் வீட்டிற்குச் சென்றனர்.
ராமா என்ன கதவு திறந்து கிடக்கிறது என்று நண்பர்கள் கேட்க. நான் தான் கூறினேன் அல்லவா! வீட்டை பூட்ட முயற்சி செய்தேன் அப்போது யாரோ என்னை வெளியே இழுத்து தூக்கி எறிந்தார் என்று ராமன் கூறினான். நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளே சென்றனர். கட்டிலுக்கடியில் அந்தப் பெட்டியை பார்த்தனர். ராமா இதுதான் நீ கண்டெடுத்த அந்த புதையல் பெட்டியா? என்று என் நண்பர்கள் கேட்க ஆம் என்று இராமன் பதில் கூறினார். இந்தப் பெட்டியை திறக்கலாமா? என்று யோசித்தனர். முதலில் பெட்டியை வெளியே எடுத்து கட்டிலின் மேலே வைத்தனர். இப்போது எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை என்று இராமன் கூறினான். இந்தப் பெட்டியில் என்ன இருக்கும் என்று நண்பர்கள் கேட்க தெரியவில்லை திறந்தால் தான் தெரியும் என்று ராமன் கூறினான். (tamil horror stories)
ராமனின் நண்பர்கள் நான்கு பேர். அதில் ஒருவன் நான் பெட்டியை திறக்கிறேன் என்று முற்பட்டான். ஆனால் அந்தப் பெட்டியை......( தொடரும்)
இந்தக் கதையின் அடுத்த பாகத்தை உடனுக்குடன் படிக்க வேண்டுமென்று நினைத்தால். நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்
https://telegram.me/realtamilstories
புதையலைத் தேடி பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/07/tamil-horror-stories.html?m=1
0 Comments
thanks for your comments