புதையலைத் தேடி பகுதி-3 ( tamil horror stories)

புதையலைத் தேடி (tamil horror stories)
பகுதி - 3

இந்தக் கதையை நீங்கள் இப்பொழுது தான் படிக்கிறீர்கள் என்றால் இந்தக் கதையின் உடைய முன்பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துவிட்டு வாருங்கள் அப்போது தான் இந்த கதை உங்களுக்குத் புரியும்...


ராமனின் நண்பன் அந்தப் பெட்டியை திறக்க முற்பட்டான். ஆனால் அந்தப் பெட்டியைத் தொட்டவுடன் அவனை தூக்கி வீசியது. ராமனின் நண்பர்கள் நான்கு பேர். ராஜா, மாறன், சுகு, குமார் இருந்தனர். அதில் சுகு அவசரப்பட்டு அந்த பெட்டியை தொட்டான் அந்தப் பெட்டியை தொட்டவுடன் அவனை தூக்கி வீசியது. மற்ற நண்பர்கள் அனைவரும் சுகுவை காப்பாற்றினர். சுகு நீ ஏன் இப்படி அவசரப் படுகிறாய் சற்று பொறுமையாக இரு இதைப்பற்றி சற்று ஆராய்ந்து விட்டு நம் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று மாறன் கூறினான்.(tamil horror stories)

ராமன் மற்றும் நண்பர்கள் நான்கு பேரும் ஒன்றாக நின்று அந்த பெட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இரவில் ராமனுக்கு கேட்ட அதே சத்தம் மீண்டும் அவர்களுக்கு கேட்டது. என் பெட்டியை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் எனக்கு உங்கள் ரத்தம் வேண்டும். இல்லையென்றால்! உங்கள் உயிர் வேண்டும் என்று சத்தம் கேட்டது. உடனே குமார், ராமா இந்த சத்தம் தான் உனக்கு இரவில் கேட்டதா? என்று கேட்டான். ஆமாம் குமார்! எனக்கு இந்த சுத்தம் தான் கேட்டது என்று ராமன் பதில் கூறினான். (tamil horror stories)


அவர்கள் இருந்த இடத்தில் மீண்டும் மீண்டும் அந்த சத்தம் அதிகமாக கேட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து அமர்ந்தனர். ராமன் தன் கனவில் வந்ததையும் பெட்டிக் கிடைத்ததைப் பற்றியும் தன் நண்பர்களிடம் தெளிவாக விளக்கினான். அந்தப் பெட்டி ரத்தம் கேட்கிறது. இல்லை என்றால் நம்மில் ஒருவரின் உயிரை கேட்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை என்று மாறன் கூறினான். இதற்கு யாரால் பதில் கூற முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர். அதில் ராஜா,  உடனே நமது ஊரில் மலையின்மேல் ஒரு சித்தர் இருக்கிறார் அவரிடம் சென்று இதைப் பற்றி விசாரித்து பார்க்கலாம் என்று ராஜா கூறினான். (tamil horror stories)

நீ கூறுவதும் சரிதான் ராஜா என்று மற்ற நண்பர்கள் அனைவரும் கூறினர். ராமா! உன்னுடைய கருத்து என்ன என்று ராஜா கேட்டான். எனக்கும் நீ கூறுவது தான் சரி என்று படுகிறது. நாம் உடனடியாகச் சென்று அந்த சித்தரை பார்த்து இதைப்பற்றி தெரிவிக்கலாம். அவர் கண்டிப்பாக ஒரு பதில் அளிப்பார் என்று நம்பலாம் என்று ராமன் கூறினான். அந்த சித்தரை நாம் பார்க்க வேண்டும் என்றால் நாம் அந்த மலையின் மீது ஏற வேண்டும் என்று ராஜா கூறினான். அதுவும் சரிதான் ஆனால் நாம் அந்த மலையின் மீது ஏறி பல வருடங்கள் ஆகிறது. இப்போது அந்தப் பாதை எவ்வாறு இருக்கும் என்று கூட தெரியாது என்று சுகு கூறினான். (tamil horror stories)

நீ சொல்வதும் சரிதான் சுகு. ஆனால் இந்தப் பெட்டியை வைத்துக்கொண்டு இந்த இடத்தில் இருக்க முடியாது. இந்தப் பெட்டி இங்கேயே இருக்கட்டும் இதனுடைய வரலாறு என்னவென்று நமக்குத் தெரியாது. இதன் வரலாற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே! இதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். என்று ராமன் கூறினான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த சத்தம் அதிகமாக கேட்டது. அவர்களை யாரோ பிடித்து இழுப்பது போல உணர்ந்தனர். ராமன் நண்பர்களிடம் நாம் இன்னும் இங்கு நின்று கொண்டிருப்பது ஆபத்துதான். தெரிந்தோ! தெரியாமலோ அந்தப் பெட்டியை நான் எடுத்து வீட்டில் வைத்து விட்டேன். நாம் எப்படியாவது அந்த மலைக்குச் சென்று அந்த சித்தரை பார்த்தால் மட்டுமே இதற்கான விடை நமக்கு கிடைக்கும் என்று ராமன் கூறினான். (tamil horror stories)


நண்பர்கள் அனைவரும் சரி புறப்படலாம் என்று முடிவு செய்தனர். சிறிது சிற்றுண்டி அருந்தி விட்டு விரைவாகப் புறப்பட்டுச் செல்லலாம் என்று ராமன் கூறினான். அதுவும் சரிதான் என்று மற்றவர்கள் கூறினர். அங்கிருந்த ஒரு உணவு கடையில் சிற்றுண்டி அருந்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மலையின் அடிவாரம் நோக்கி நகர்ந்தனர். அங்கு ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். எங்கே செல்கிறீர்கள் என்று அந்த முதியவர் கேட்டார். மலையின் மேலே உள்ள சித்தரைக் காண நாங்கள் சென்று கொண்டு இருக்கிறோம் என்று அவர்கள் கூறினர். (tamil horror stories)

இதைக் கேட்ட அந்த முதியவர். சித்தர் மேலேதான் இருக்கிறார் அவர் தவ நிலையில் இருப்பார். நீங்கள் அவரைப் பார்த்ததும் எதுவும் பேசாதீர்கள் அவர் உங்களைப் பார்த்தவுடன் கண்டிப்பாக உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று அவரால் புரிந்து கொள்ள முடியும். என்று அந்த முதியவர் கூறினார். நீங்கள் அவரைப் பார்த்ததும் அவரிடம் பேச முற்பட வேண்டாம் அவர் கண்களைத் திறக்கும் வரை நீங்கள் காத்திருக்க தான் வேண்டும் என்று அந்த முதியவர் கூறினார். ஐயா நீங்கள் கூறிய அறிவுரைக்கு நன்றி சித்தர் தற்போது எங்கே இருப்பார் என்று எங்களுக்கு கூறினீர்கள் என்றால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று ராஜா கேட்டான். (tamil horror stories)

சித்தர் அந்த மலையின் மேலே உள்ள அந்தப் பாறையில் நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பார் என்று அந்த முதியவர் கூறினார். சரி ஐயா நாங்கள் அவரைப் பார்க்கப் புறப்படுகிறோம் என்று ராமன் கூறினான். அவசர படாதே நான் சொல்வதை முழுவதுமாக  கேட்டுவிட்டு பிறகு நீ மேலே சென்று அந்த சித்தரை பார் என்று அந்த முதியவர் கூறினார். சரி கூறுங்கள் ஐயா என்று ராமன் கூறினான். நீங்கள் இதற்கு முன்னால் எத்தனை வருடங்களுக்கு முன்பாக இந்த மலையின் மீது ஏறினிர்கள் என்று அந்த முதியவர் கேட்டார். நாங்கள் இந்த மலையின் மீது ஏறி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது ஐயா என்று அவர்கள் கூறினர். இப்போது நீங்கள் நினைப்பது போல் இந்த மலை சாதாரணமானது அல்ல. (tamil horror stories)


இதில் பலவகைப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில ஆத்மாக்களும் இங்கு இருக்கின்றன. நீங்கள் ஏதாவது ஒரு ஆத்மாவை பார்த்தால் அந்த ஆத்மாவின் கண்களை மட்டும் நீங்கள் பார்க்க வேண்டாம். உங்கள் தலையை குனிந்த படியே நடந்து செல்லுங்கள் என்று அந்த முதியவர் கூறினார். நல்லபடியாக சென்று வாருங்கள் என்று அந்த முதியவர் அவர்களை ஆசீர்வதித்து வாழ்த்தி அனுப்பினார். நண்பர்கள் 5 பேரும் மலையின் மீது ஏற ஆரம்பித்தனர். ஒருவரின் பின்பு ஒருவராக நடந்து கொண்டு இருந்தனர். அவர்கள் சிறு வயதில் வந்த பாதையும், இப்போது அவர்கள் ஏறும் பாதையும் சற்று வித்தியாசமாக இருந்தது. திடீரென்று அவர்கள் வீட்டில் கேட்ட அதே சத்தம் இங்கேயும் கேட்க ஆரம்பித்தது. எனக்கு ரத்தம் வேண்டும், எனக்கு ரத்தம் வேண்டும் என்ற சத்தம் அவர்களின் காதின் அருகில் அதிகமாக கேட்டது. (tamil horror stories)

யாரும் பயப்பட வேண்டாம் அந்த முதியவர் கூறியது போலவே நம் கண் முன்னே ஏதாவது ஒரு உருவம் தோன்றினால் அதன் கண்களைப் பார்க்க வேண்டாம். என்று முடிவு செய்து நடந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சுகு தடுமாறி கீழே விழுந்தான். நண்பர்கள் அனைவரும் சுகு என்ன ஆனது என்று கேட்டனர். என்னை யாரோ பிடித்து கீழே தள்ளியது போல் உணர்ந்தேன்.  என்று சுகு கூறினான். நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வித பயம் வர ஆரம்பித்தது. பாதி மலைக்கு செல்லும் வரையிலும் அவர்களின் காதில் ரத்தம் வேண்டும் என்று சொல்லும் உங்களின் உயிரை தாருங்கள் என்று சொல்லும் அதிகமாக கேட்டுக் கொண்டிருந்தது. (tamil horror stories)

மலையின் பாதி தூரம் நடந்து சென்றனர். திடீரென்று அங்கு ஒரு மரத்தின் மீது அந்த முதியவர் சொன்னது போல ஒரு ஆத்ம அமர்ந்திருந்தது. ஆதனின் முகத்தோற்றம் கண்களிலிருந்து ரத்தம் வருவது போலவும் வாய் உடைந்த நிலையிலும் இருந்தது. ராமன் தன் நண்பர்களிடம் தயவு செய்து அந்த ஆன்மாவின் கண்களை மட்டும் பார்க்க வேண்டாம் என்று கூறினான். அந்த மரத்தின் நேர் எதிரே மீண்டும் இன்னொரு ஆன்மா இருந்ததைக் கண்டனர். மரத்தின் மீது அமர்ந்திருந்த அந்த ஆன்மாக்கள் திடீரென்று இவர்களின் அருகில் வந்தது. ராஜா அந்த ஆன்மா நம்மிடத்தில் தான் வருகிறது தயவு செய்து அதனிடம் யாரும் பேச வேண்டாம் என்று தன் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டான். (tamil horror stories)


அந்த ஆன்மா அவர்களின் இடத்தில் வந்து நானும் உங்களுடன் வருகிறேன். என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வித்தியாசமான குரலில் பேசியது. ராஜா யாரும் இதனுடன் பேச வேண்டாம் வாருங்கள் என்று கூறினான். அவர்கள் மலையின் மீது ஏற ஏற அந்த மலையில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் இவர்களின் பின்னால் வர ஆரம்பித்தது. இவர்கள் 5 பேரையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று அந்த ஆன்மாக்கள் முயற்சி செய்தனர். யாரும் கைகளின் சங்கிலியை உடைக்க வேண்டாம். என்று மாறன் கேட்டான். அந்த ஆன்மா சத்தம் இவர்களை திசை திருப்பும் முயற்சியில் இருந்தது. அனைத்து ஆன்மாக்களும் இவர்களை சுற்றி வளைத்துக் கொண்டன. அப்போது என் கண்களைப் பாருங்கள் என்று அந்த ஆன்மா கேட்டது. (tamil horror stories)

ராமன் தன் நண்பர்களிடம் அந்த ஆண்களின் கண்களைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். ஆனால் அந்த ஆன்மா சுகு வை இழுத்துக் கொண்டு மலையின் நடுவே ஓடியது.....(தொடரும்)

இந்தக் கதையின் அடுத்த பாகத்தை உடனுக்குடன் படிக்க வேண்டுமென்று நினைத்தால். நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்..

https://telegram.me/realtamilstories

புதையலைத் தேடி பகுதி - 1
https://realtamilstories.blogspot.com/2021/07/tamil-horror-stories.html?m=1

புதையலைத் தேடி பகுதி - 2
https://realtamilstories.blogspot.com/2021/07/2-tamil-horror-stories.html?m=1

Post a Comment

0 Comments