மந்திர எழுதுகோல் ( tamil magical stories)

மந்திர எழுதுகோல் ( tamil magical stories)

ஒரு ஊரில் ராசு என்னும் ஒருத்தன் இருந்தான். அவனிடம் ஒரு மந்திர எழுதுகோல் இருந்தது. அந்த மந்திர எழுதுகோல் அவர்களின் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வரும் ஒரு சொத்து என்று கூட சொல்லலாம். அந்த மந்திர எழுதுகோலை வைத்து ஏதாவது நினைத்து எழுதினால் அது உடனடியாக கண் முன் தோன்றும் அது தங்கமாக இருந்தாலும் வைரம் ஆக இருந்தாலும் காசோலையாக இருந்தாலும் அவர்களின் கண் முன்னே தோன்றும். அந்த மந்திர எழுதுகோலை வைத்து எழுதுபவரின் மனதில் எந்த ஒரு தீய எண்ணமும் இருக்கக் கூடாது தனக்கு வேண்டியது மட்டுமே எழுத வேண்டும் வேறு ஏதாவது எழுதினால் அந்த மந்திர எழுதுகோல் செயல்படாது.



.                   (Tamil magical stories)

ராசுவின் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்தாலும் அவர்கள் அதை ஒருபோதும் உபயோகித்தது இல்லை. மிகவும் எளிமையான ஏழ்மையான குடும்பம்தான் ராசிவின் குடும்பம். விவசாயம் செய்து தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தான். விவசாயத்தில் அவன் குடும்பத்தை வைத்துப் பாதுகாக்கும் அளவிற்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. ஒரு முறை விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் பயிரிட்டு இருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில்லாமல் வாடின. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் ராசு. ஓடும் ஆற்றில் தண்ணீர் வரத்து என்பது மிகவும் குறைந்து போனது ஓரிரு நாட்களில் தண்ணீர் வறண்டு போன ஆறாத மாறியது.( Tamil magical stories)

ராசுவின் கண்முன்னே நெற்பயிர்கள் கருகத் தொடங்கின. என்ன செய்வது என்று தெரியாமல் கடவுளை வேண்டினான். தன் மனைவியிடம் சென்று நடந்த எல்லாவற்றையும் தினமும் கூறுவான். அதேபோல் பயிர்கள் கருகும் நிலைக்கு வந்ததையும் தன் மனைவியிடம் கூறினான். ராசுவின் மனைவி சற்று யோசித்து விட்டு இப்பொழுது நம்மிடம் இருக்கும் மந்திர எழுதுகோலை பயன்படுத்தி தண்ணீரை வரவழைக்கலாம் என்று கூறினாள். அதற்கு ராசு நான் இதுவரை இன்னும் பயன்படுத்தியதில்லை என்று கூறினான். அதற்கு ராசுவின் மனைவி நாம் ஒன்றும் நமக்கு என்று கேட்கவில்லை இந்த ஊருக்காகவும், வாடும் நெற்பயிர்களுக்காகவும் தானே கேட்கின்றோம் என்று கூறினாள்.( Magical story)

ராசு அதற்கு சரி என்று கூறிவிட்டு அவர்களின் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியிலிருந்து மந்திரை எழுதுகோலை எடுத்து மனதில் தூய எண்ணத்துடன் இந்த ஊருக்காக மழை பெய்யுது ஆறுகளில் தண்ணீர் ஓடவேண்டும் என்று எழுதினான். அவன் எழுதி முடித்த ஒரு சில வினாடிகளிலேயே அந்த ஊரில் கன மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு சில நாட்களிலேயே அந்த ஆற்றில் எப்பொழுதும் போல தண்ணீர் கரைபுரண்டு ஓடத்துவங்கியது. வாடியிருந்த நெற் பயிர்கள் அனைத்தும் செழிப்பாக வளர்ந்தன. ராசுவின் வீட்டில் ஒரு மந்திர எழுதுகோல் இருப்பதை ஒரு மந்திரவாதி ஒருவன் அறிந்து கொண்டான். அந்த மந்திர எழுதுகோலை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று முடிவு செய்தான்.(tamil magical stories)

அந்த மந்திரவாதி ஒரு முடிவு செய்து விட்டு அந்த ஊருக்குள் வந்தான். ஒரு சில மந்திரங்கள் மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு பெரிய மந்திரவாதி ஆக வேண்டும், அவன் மட்டுமே நன்றாக வாழவேண்டும் என்ற பேராசையுடன் அந்த ஊருக்கு வந்தான். எப்படி இந்த மந்திர எழுதுகோலை கைப்பற்றுவது என்று திட்டம் தீட்டத் தொடங்கினான். இதைப் பற்றி எதுவும் தெரியாமல் ராசு வழக்கம்போல விவசாயம் செய்து தனது குடும்பத்தை பாதுகாத்துக் கொண்டு வந்தான். அந்த மந்திரவாதி ராசுவின் மனதை நன்றாக அறிந்து கொண்டான்.(தமிழ் மந்திர கதைகள்)

இந்த மந்திரவாதி ஆன்மிக வழியில் சென்று தான் ராசுவை ஏமாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான். அதன்படி ஒருநாள் ராசுவின் வீட்டிற்கு ஒரு வயதான பெரியவர் போல தோற்றம் அணிந்து கொண்டு வந்தான். வீட்டில் யாரேனும் இருந்தால் வெளியே வாருங்கள் என்று கூறினான். உடனே ராசுவும் அவனது மனைவியும் வெளியே வந்தனர். ராசு வெளியே வந்தவுடன் ஐயா நீங்கள் யார் என்று கேட்டான். தம்பி நான் ஒரு தீவிர கடவுள் பக்தன் நான் பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன் கடவுள் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார் என்று கூறினான். கள்ளம் கபடம் இல்லாத ராசு அவர் கூறும் பொய்யை உண்மை என்று நினைத்து! ஐயா, நீங்கள் வந்ததற்கான நோக்கம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டான்.(மந்திர கதைகள்)

நான் கூறுகிறேன் மகனே என்று ஆசைவார்த்தை கூறினான் அந்த மந்திரவாதி. உங்களது வீட்டில் ஒரு மந்திர எழுதுகோல் இருக்கிறது அல்லவா அதற்கு தற்போது ஆபத்து வர உள்ளது. நான் அதைத் தடுக்கவே இங்கு வந்தேன் என்று கூறினான். அதற்கு ராசு, ஐயா இங்கு மந்திரக் எழுதுகோல் இருக்கும் செய்தி வேறு யாருக்கும் தெரியாது உங்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது என்று கேட்டான். மகனே நான் தான் கூறினேன் அல்லவா நான் ஒரு கடவுள் பக்தன் அந்த கடவுள் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார் என்று மீண்டும் கூறினான். ராசுவின் மனதில் மந்திர எழுதுகோல் பற்றி இவர் தெளிவாக கூறுகிறார் என்றால் இவர் கண்டிப்பாக கடவுள் பக்தன் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று ராசு முடிவு செய்தான்.( Tamil magical stories)

தன் மனைவியிடம் எழுதுகோலை பற்றி இவ்வளவு தெளிவாக கூறுகிறார் என்றால் இவர் ஒரு பெரிய கடவுள் தூதுவராக கூட இருக்கலாம் என்று தன் மனைவியிடம் கூறினார். ராசுவின் மனைவி, நானும் அதை தான் நினைக்கிறேன் என்று கூறினாள். என்ன ஆபத்து வரப்போகிறது என்று அவரிடம் கேட்கலாம் என்று இருவரும் முடிவு செய்தனர். ஐயா இந்த மந்திர எழுதுகோலுக்கு என்ன ஆபத்து வரப்போகிறது என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா என்று ராசு கேட்டான். அதை எடுத்துக் கூற தானே நான் இங்கு வந்து இருக்கிறேன் என்று மீண்டும் அந்த மந்திரவாதி கூறினான்.(tamil magical stories)

மகனே இவ்வளவு நாட்கள் அந்த மந்திர எழுதுகோல் இங்கு இருந்தது. இப்போது அதை வேறு இடத்திற்கு மாற்ற சொல்லி கடவுள் என்னிடம் கூறியிருக்கிறார். தீய சக்திகளினால் அந்த மந்திரி எழுதுகோலுக்கு மிகப்பெரிய ஆபத்து வரக்கூடும். இவ்வளவு நாட்கள் இங்கு தான் இருந்தது அதற்கு எந்த ஒரு ஆபத்தும் வந்ததில்லை திடீரென என்ன ஆயிற்று என்று ராசு கேட்டான். அந்த மந்திர எழுதுகோலை கெட்ட எண்ணம் படைத்த யாராலும் எடுக்க முடியாது என்று எனது தந்தையார் என்னிடம் கூறினார் என்று ராசு அவரிடம் கூறினான். நீ என்னை நம்பவில்லையா மகனே என்று அந்த மந்திரவாதி கேட்டான். நான் உங்களை நம்புகிறேன் ஐயா என்று ராசு கூறினான்.

அந்த மந்திர எழுதுகோல் பெரிய ஆபத்தில் சிக்க உள்ளது. அதை காக்கத்தான் நான் இங்கு வந்துள்ளேன் என்று அந்த மந்திரவாதி கூறினான். அந்த மந்திரி எழுதுகோலுக்கு ஒரு மாபெரும் சிறப்பு பூஜை ஒன்று செய்ய வேண்டி உள்ளது இந்த பூஜையை இன்னும் ஒரு சில நாட்களில் செய்து முடித்தாக வேண்டும். என்று அந்த மந்திரவாதி கூறினான். நான் தினமும் சென்று விட்டு வர இயலாது அதனால் நான் இங்கே தங்கிக்கொள்ளலாமா? என்று அந்த மந்திரவாதி கேட்டான். நீங்கள் தாராளமாக இங்கு தங்கிக் கொள்ளலாம் ஐயா என்று ராசு கூறினான். இரவு பொழுது வந்தது. ராசு அந்த பெரியவரை பார்த்து ஐயா வாருங்கள் சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லலாம் என்று கூறினான்.

மூவரும் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றனர். ராசு தன் மனைவியுடன் ஒரு அறையில் உறங்கச் சென்றான். மற்றொரு அறையில் அந்த மந்திரவாதி உறங்கச் சென்றான். இரவுப் பொழுது 12 மணி அளவில் அந்த மந்திரவாதி திடீரென்று.....( தொடரும்)

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories

Post a Comment

0 Comments