ஒருதலைக் காதல் (tamil love stories)
ஒரு ஊரில் சரவணனன் என்னும் இளைஞன் ஒருவன் இருந்தான. அவன் தன் கல்லூரி படிப்புகளை முடித்து விட்டு. ஒரு தனியார் துறையில் வேலை பார்த்து வந்தான். எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புவான். அவன் படித்த படிப்பிற்கு சரியான வேலை இல்லை என்றாலும் அவனுக்கு வரக்கூடிய வருமானம் போதுமாக இருந்தது. இருந்தாலும் கூட அவன் அந்த வேலையை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். தற்போது அவன் செய்யும் வேலை நேரம் நிறைய கிடைத்தது. அதை வைத்து ஏதாவது முன்னேற வழி இருக்கிறதா? என்று பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தான். (tamil love stories)
எப்படியாவது ஒரு அரசாங்க வேலை வாங்க வேண்டும் என்பது அவனது மிக முக்கிய நோக்கமாக இருந்தது. அதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான். ஒருமுறை சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நண்பர்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது தங்களது காதலை பற்றியும் எப்படி காதலித்தோம் என்பதைப் பற்றியும் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். சரவணன் அங்கு அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தான். அனைத்து நண்பர்களும் தங்களது காதல் கதையை பற்றி சொல்லி முடித்து விட்டனர். சரவணன் மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். (tamil love stories)
சரவணா நாங்கள் எல்லாரும் எங்கள் காதல் கதையை பற்றி சொல்லி விட்டோம். நீ மட்டும் இன்னும் கூறாமல் இருக்கிறாயே என்ன ஆயிற்று என்று கேட்டனர். நான் எந்த ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை அதனால் எனக்கு சொல்ல எதுவும் இல்லை என்று அவன் கூறினான். சரி ஒரு தலைக்காதல் ஆவது இருந்தால் அதைப் பற்றி சொல் என்று நண்பர்கள் கேட்டனர். சரி நான் என் ஒருதலைக் காதலில் பற்றி உங்களிடம் கூறுகிறேன் கேளுங்கள் என்று சரவணன் சொல்ல ஆரம்பித்தான். நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் பொழுது எனது மாமாவின் மகள் அவள் பெயர் மாது. அழகாக இருப்பாள். நான் அவளைப் பார்க்கும் பொழுது அவள் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். (tamil love stories)
அவளை தான் நான் ஒரு மனதாக காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சரவணன் கூறினான். சரி மாதுவை நீ ஒருதலையாக காதலிக்கிறாய். அவள் மீது உனக்கு எப்படி காதல் வந்தது என்று கூறு கேட்போம் என்று நண்பர்கள் கேட்டனர். நான் அந்த மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அவள் ஊரிலிருந்து வந்திருந்தாள். என்னை கண்டதும் எப்பொழுதும் போல நலம் விசாரித்தாள். ஆனால் என் தாயைக் கண்டதும் மிகவும் சந்தோஷத்துடன் கட்டியணைத்து நலம் விசாரித்தாள். அந்த இடத்தில் எனக்குள் ஏதோ புரியாத ஒன்று தோன்றியது. அதுவரை நான் மாதுவை ஒரு சிறு பிள்ளையாக தான் நினைத்துக் கொண்டிருந்தேன். (tamil love stories)
என் தாயிடம் அவ்வளவு அன்பாக பேசும் பொழுது, வேறு யாரோ பெயர் தெரியாத ஒரு பெண்ணை காதலிப்பதை விட, மாதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவள் என் தாயையும் நன்றாக பார்த்துக் கொள்வாள் என்று எனக்குத் தோன்றியது. அதுமட்டுமில்லாமல் என் தாய் என்று, இல்லாமல் மற்ற அனைவரிடமும் அன்பாகப் பேசிக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில் தான் எனக்கு அவளை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. அவளை நான் ஒரு தலையாக நேசிக்க ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகளாகிறது. இப்போது அவள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறாள். அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் பேச முடியவில்லை என்னால். சரவணன் குள் ஒரு காதல் இருக்கிறது என்று எங்களுக்கு இப்போது தான் தெரியும் என்று என் நண்பர்கள் கூறினர். (tamil love stories)
சரி நண்பா நீ எப்போது அவளிடம் பேசப் போகிறாய் என்று நண்பர்கள் கேட்க. எனக்கும் அவளுடன் பேச வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. நான் அவளிடம் என் காதலை சொல்லப் போய் அவள் எதாவது தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு பக்கமும். என் காதலை நான் வெளிப்படுத்தி எனது அம்மாவிற்கு என் தாயின் அண்ணனுக்கும் இருக்கும் உறவு முடிந்து விடக்கூடாது. என்று நான் நினைக்கிறேன். ஆனால் இன்றுவரை நான் ஒன்று மட்டும் நம்புகிறேன். அவள் என் மாமன் மகள் என்ற ஒரு காரணத்தினால். அவள் எனக்குத்தான் என்று சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு இருந்தால் அதை யாராலும் மாற்ற இயலாது. அந்த ஒரு நம்பிக்கையில் தான் நான் இதுவரை இருக்கிறேன் என்று சரவணன் கூறினான். (tamil love stories)
சரி சரவணா நீ மாதுவிடம் பேசாமல் இருக்கலாம். மாதுவிற்கு உன்னிடம் பேச வேண்டும் என்று ஆசை இருக்கலாம் அல்லவா? அது எனக்குத் தெரியவில்லை என்று சரவணன் கூறினான். அவள் உனக்குத்தான் என்பது உன் நம்பிக்கை அதற்காக நீ ஏதாவது ஒரு முயற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லவா? என்று நண்பர்கள் கூறினார். முயற்சி செய்ய வேண்டும் என்றுதான் எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் என்னைப் பற்றி அவள் எதாவது தவறாக புரிந்து கொண்டால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறேன்.(tamil love stories)
நீ மாதுவை திருமணம் செய்வதற்கு ஏதாவது திட்டங்கள் வைத்திருக்கிறாயா? என்று அவர்கள் கேட்டனர். திட்டம் என்று ஒன்றும் கிடையாது. எனது படிப்பிற்கும் மாதுவின் படிப்பிற்கும். சரியாகத்தான் இருக்கும். வசதி என்று பார்த்தால் கூட இரண்டும் சரிசமமாக தான் இருக்கிறது. ஆனால் வேலை என்று வரும்போது மட்டும் தான் சற்று கடினமாக இருக்கிறது. மாதுவின் தந்தை எதிர்பார்க்கும் அளவிற்கு நான் ஒரு நல்ல அரசாங்க வேலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்குத் திருமணம் பேச்சு எடுத்தாலோ? அல்லது மாது விற்க்கு திருமணப் பேச்சு எடுத்தாலே? என் தங்கையின் மகன் சரியாக இருப்பான் என்று அவர்களுக்குத் தோன்றும். அதற்கான முயற்சிகளைத் தான் நான் இப்போது மேற்கொண்டு வருகிறேன் என்று சரவணன் கூறினான்.(tamil love stories)
அப்படியே சற்றுநேரம் நண்பர்களும் பேசிவிட்டு நண்பர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நண்பர்கள் அனைவரும் கூடி அதைப்போல் பேசிக்கொண்டிருந்தனர். சரவணா நீ சொல்லுவது போலவே வேறு வேலைக்கு முயற்சி செய்தாயா? வேலை ஒரு பக்கம் இருக்கட்டும் அவன் அந்தப் பெண்ணிடம் பேசினானா ? என்று கேட்போம் என்று நண்பர்கள் அனைவரும் கேட்டனர். நான் மாதுவிடம் பேச ஆரம்பித்து விட்டேன் என்று சரவணன் கூற, நீ எப்போது பேச ஆரம்பித்தாய் எங்களிடம் சொல்லவே இல்லையே என்று நண்பர்கள் அனைவரும் கூறினர். (tamil love stories)
கடந்த 15 தினங்களாக தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவளிடம் உன் காதலை கூறினாயா? என்று நண்பர்கள் கேட்டனர். நான் அவளிடம் பேசுகிறேன். மாது அவள் படிப்பில் மிகவும் கவனமாக இருக்கிறாள். நான் எனது காதலை வெளிப்படுத்தி அது அவள் படிப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன் என்று சரவணன் கூறினார். ஏன் சரவணா நீ இவ்வாறு கூறுகிறாய் என்று நண்பர்கள் கேட்க. நான் அவளிடம் பேசும் பொழுது அவள் தன் படிப்பை பற்றி அதில் இருக்கும் சிரமங்களை பற்றியும் கூறினாள். அவள் படிப்பை அவ்வளவு நேசிக்கிறாள். அதனால்தான் நான் என் காதலை வெளிப்படுத்த தயங்குகிறேன். (tamil love stories)
அவள் உன்னிடம் எவ்வாறு பேசுகிறாள். என்று நண்பர்கள் கேட்க, என்னிடம் நன்றாக பேசுகிறாள். அவளைப் பற்றி நான் இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை. முதலில் இருந்ததைவிட தற்போது இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறாள். என்று சரவணன் கூறினான். சரி நீ பேசிக் கொண்டிருக்கிறாய் ஒருவேளை மாது உன்னிடம் வந்து காதலை கூறினால் நீ அப்போது என்ன செய்வாய் என்று நண்பர்கள் கேட்டனர். அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக தான் இருக்கும் நான் விரும்பிய பெண் என்னிடம் வந்து காதலை கூறுகிறாள் என்று மிகவும் சந்தோஷமாக இருப்பேன். ஆனால் அவளின் படிப்பை எந்த ஒரு வகையிலும் பாதிக்காத அளவிற்கு அவள் மீது உள்ள விருப்பத்தை நான் அவளிடம் கூறுவேன்.(tamil love stories)
அவளின் சம்மதம் எனக்குப் போதும் அவளிடம் நான் ஒன்று மட்டுமே கூறுவேன். உனது படிப்பிற்கு தேவையான எல்லாவற்றையும் நீ இப்போது பார் உனக்கு படிப்பு மிகவும் அவசியம். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு தேவையான எல்லாவற்றையும் நான் செய்கிறேன் என்று அவளிடம் கூறுவேன் என்று சரவணன் நண்பர்கள் இடம் கூறினான். இதைக் கேட்ட சரவணன் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக உன் காதல் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் நீ இந்த அளவிற்கு அந்த பெண்ணை விரும்புகிறாய். கண்டிப்பாக உன்னை திருமணம் செய்து கொள்ள மாது கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீ தொடர்ந்து அவளிடம் பேசிக் கொண்டிரு கண்டிப்பாக அவள் ஒரு நாள் அவள் காதலை உன்னிடம் கூறுவாள். (tamil love stories)
நீ உன் ஒருதலைக் காதலையை பற்றி கூறும் போது என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லாத அளவிற்கு அமைதியாக இருக்கின்றேன் என்று நண்பர்கள் கூறினர். ஒருதலைக்காதல் மிகவும் அற்புதமானது என்று நண்பர்கள் கூறினர். மாது என்னிடம் வந்து காதல் சொல்லும் வரை நான் காத்துக் கொண்டிருப்பேன் என்று சரவணன் கூறினான்....
காத்துக் கொண்டிருப்பது கூட ஒரு சுகமான வலி தான். உங்களுக்கும் இதே போல் ஒரு தலை காதல் அனுபவம் இருந்தால் கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.
இது போன்ற கதைகளை உடனுக்குடன் கேட்க வேண்டும் என்று நினைத்தால் நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்
0 Comments
thanks for your comments