புதையலைத் தேடி... ( tamil horror stories)

புதையலைத் தேடி. ( Tamil horror stories)

ஒரு ஊரில் ராமன் என்று ஒருத்தன் இருந்தான். அவன் பழங்கால கதைகளை கேட்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவன். அதனால் அந்த ஊரில் உள்ள பெரியோர்களிடம் சென்று பழங்கால கதைகளைக் கேட்டு மகிழ்வான். ராமனுக்கு பெற்றோர்கள் கிடையாது. அதனால் அவன் தனிமையில் வளர்ந்து வந்தான். அவன் சிறு வயது முதலே பெரியவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு வளர்ந்து வந்தான். அந்த ஊரில் சிறு சிறு வேலைகளை செய்து தனது வயிற்றுப் பசிக்கு என்ன செய்ய வேண்டுமோ! அத்தகைய வேலைகளை செய்து வந்தான். பெரிய அளவு லாபம் வேண்டும் என்றும் கூட நினைக்க மாட்டான். வேலைகளை முடித்து விட்டு தனது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பான்.. ( tamil horror stories)


ராமனின் வாழ்க்கை தினசரி இப்படியே சென்று கொண்டிருந்தது. அவன் ஒரு கூரை வீட்டில் தங்கியிருந்தான். ராமனுக்கு அந்தக் கூரை வீட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்று சற்று எண்ணங்கள் இருந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று தனது நண்பர்களிடம் கேட்டான். அவன் நண்பர்கள் அனைவரும் நீ உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மட்டும் செலவழித்துவிட்டு மீதம் உள்ளவற்றை சேமித்து வை. அது ஒரு பெரிய தொகையாக வந்ததும் நீ உனது கூரை வீட்டை மாற்றி அமைக்க அது சரியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர். நண்பர்களின் ஆலோசனை கேட்ட பிறகு நீங்கள் சொல்வது போலவே நானும் செய்கிறேன் என்று கூறினான்.    (Tamil horror stories)

நண்பர்களின் ஆலோசனை கேட்ட பிறகு ராமன் அவர்கள் சொன்னது போலவே பணத்தை ஒரு பகுதி சேமித்து வைக்க ஆரம்பித்தான். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தன. ராமன் தன் கையில் போதிய அளவு பணத்தை வைத்து இருந்தான். மீண்டும் தன் நண்பருடன் சென்று நீங்கள் கூறியது போலவே பணத்தின் ஒரு பகுதியை நான் சேமித்து வைத்து வந்தேன். இப்போது என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து எனது வீட்டை என்னால் மாற்றி அமைக்க முடியுமா? என்று நண்பர்களிடம் கேட்டான். ராமா உனது கையில் இருக்கும் பணத்தை வைத்து முழுமையாக முடிக்க முடியும் என்று கூறமுடியாது. உனது வீட்டிற்கு தேவையான வேலைகளை நீயும் செய்தால் மட்டுமே உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து வீடு கட்ட முடியும் என்று கூறினார். ( Tamil horror stories)


நண்பரிடம் ஆலோசனை கேட்ட பிறகு ராமன் தனது வீட்டு வேலைகளை துவங்க வேண்டும் என்று நினைத்தான். அந்த ஊரில் வீடு கட்டும் ஒருவரை அழைத்து வந்து வீட்டை மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அந்த வீடு கட்டி தருபவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினார். முதலில் தலம் அமைப்பதற்காக குழியை தோண்ட வேண்டும். அது நீயே செய்து கொள் அப்போது தான் உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து வேலைகளை முடிக்க முடியும் என்று அவர் கூறினார். சரி நான் தோண்டுகிறேன் என்று இராமன் கூறினான். குழியை வெட்டுவதற்கு சதுர வடிவில் அளவிட்டு காட்டினார். ( Tamil horror stories)

இந்த இடத்தில் 6அடி அளவிற்கு ஒரு குழியை தோண்ட வேண்டும் என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ராமன் நாளை நல்ல நாள். நாளை முதல் இந்தப் பணியை துவங்கலாம் என்று நினைத்தான். அதன்படியே முடிவு செய்தான். இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு உறங்க ஆரம்பித்தான். மறுநாள் காலை பொழுது விடிந்தது தனக்கு விருப்பமான தெய்வத்தை வேண்டி விட்டு. தனது வேலைகளை செய்யலாம் என்று முடிவு செய்தான். கடப்பாறை மண்வெட்டி கொண்டு குழியை தோண்ட ஆரம்பித்தான். முதலில் ஒரு குழியை முழுவதுமாக வெட்டி முடித்தான் அதேபோல் அவன் 5 குழிகளை தோண்ட வேண்டியிருந்தது. (Tamil horror stories)

ராமன் ஒரு நாள் முழுவதும் நான்கு குழிகளை வெட்டி முடித்தான். அவனால் முடிந்த அளவு வேகமாக வேலையை செய்தான். அன்று இரவு பொழுது வந்தது ராமன் வழக்கம்போல சாப்பிட்டு விட்டு தனது நண்பர்களை சென்று சந்தித்தான்.
ராமா இன்று நீ எவ்வளவு குழிகளை தோன்றினாய் என்று கேட்டனர். அதற்கு ராமன் என்னால் முடிந்த அளவு இன்று நான் வேகமாக வேலை செய்தேன். வேகமாக வேலை செய்தும் என்னால் நான்கு குழிகளை மட்டும் தான் தோண்ட முடிந்தது என்று அவன் கூறினான். பரவாயில்லை ராமா மெதுவாக வேலையை பார் உனது உடல்நலன் மிகவும் அவசியம் என்று நண்பர்கள் ஆறுதல் வார்த்தை கூறினார். (Tamil horror stories)


நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ராமன் தன் நண்பரிடம் பேசி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். மிகவும் அசதியாக இருந்ததால் அவன் வீட்டிற்கு சென்றுதான் சாப்பிட்டு விட்டு உறங்க வேண்டும் என்று நினைத்தான். அதைப்போல் விரைவாக சாப்பிட்டுவிட்டு  படுக்கை அறைக்குச் சென்றான். அவனுக்கு மிகவும் அசதியாக இருந்ததால் படுத்தவுடன் மெய் மறந்து தூங்க ஆரம்பித்து விட்டான். அவன் தூங்கிய சிறிது நேரத்தில் அவன் கனவில் ஒரு குழியைத் தோண்டுவது போல கனவு வந்தது. அவன் குழி தோண்டிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு பொருள் தென்பட்டது. அது என்னவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் குழியை தோண்டினான். (Tamil horror stories)

மெதுவாக அந்தப் பெட்டியை எடுத்தான். எடுத்து மேலே வைத்து இதில் என்ன இருக்கும் என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டுக்கு உள்ளே சென்று பெட்டியை திறந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தான். அந்தப் பெட்டியை திறந்து பார்க்கும் பொழுது திடீரென்று ராமன் கண் விழித்துக்கொண்டான். தூக்கத்தில் எழுந்து சுற்றி முற்றி திரும்பித் திரும்பிப் பார்த்தான் அவன் கண்களில் எதுவும் புலப்படவில்லை. ஒருவேளை கனவாக இருக்குமோ! என்று நினைத்தான். நேரம் சரியாக அதிகாலை நான்கு மணி ஆக இருந்தது. சரி என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.(Tamil horror stories)


காலைப் பொழுது விடிந்தது வழக்கம் போல தனது பணிகளை தொடர ஆரம்பித்தான். அவன் ஐந்தாவது குழியை தோண்டி கொண்டிருக்கும் போது அவன் கனவில் குழியை தோண்டி கொண்டிருந்தது போலவே இருந்தது. அப்போது திடீரென்று ஒரு பெட்டி தென்பட்டது அதேபோல் இந்த குழியில் இருக்குமா?  என்று யோசித்து ஆரம்பித்தான். நான் கனவு கண்டது அதிகாலை பொழுது ஒருவேளை கனவு பலிக்குமா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே குழியை தோண்டி கொண்டிருந்தான். அந்த ஐந்தாவது குழியை முழுவதுமாக தோன்றி விட்டான். ஆறாவது குழியை தோண்ட ஆரம்பித்தான். அவன் மனதிற்குள் ஒரு வேலை பெட்டி கிடைத்தால் அதில் என்ன இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். (Tamil horror stories)

பொருள் ஏதாவது தென்படுமா என்று வேகவேகமாக குழியை தோண்ட ஆரம்பித்தான். திடீரென்று ஒரு மனித எலும்புக் கூட்டின் கை மட்டும் அவனுக்குத் தென்பட்டது. இதைக் கண்டதும் அவன் சற்று பயந்தான். என்ன இது பெட்டி ஏதாவது இருக்குமோ! என்று நினைத்தால் எலும்புக்கூடு வருகிறது. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அந்த எலும்பின் கையைப் பார்த்ததும் அவனுக்குள் ஒருவிதமான பயம் வந்தது. மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த கையை எடுத்து தூரமாக வீசினான். சரி மீண்டும் குறியை தோன்றலாம் என்று முடிவு செய்து மீண்டும் தோண்ட ஆரம்பித்தான். அவன் மனதில் ஒரு சிறிய பயம் இருந்தது.(Tamil horror stories)


இருந்தாலும் நமது வீட்டை எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் குழியை தோண்டினான். 3அடி தோண்டும்போது மீண்டும் ஒரு எலும்பு அவனுக்குத் தென்பட்டது. அதைப்பார்த்ததும் ராமன் மீண்டும் பயம்தான். முதலில் வெட்டும் பொழுது ஒரு கை எலும்பு வந்தது. இப்போது கால் எழுந்து வந்து உள்ளது என்னவாக இருக்கும் என்றும் பயப்பட ஆரம்பித்தான்.‌ எது நடந்தாலும் பரவாயில்லை எப்படியாவது குழியைத் தோண்டி ஆகவேண்டும் என்று அந்த எலும்பை மீண்டும் எடுத்து தூரம் போட்டுவிட்டு மீண்டும் குழியை வெட்ட ஆரம்பித்தான். அவன் தோண்டத் தோண்ட மீண்டும் மீண்டும் எலும்புகளே வந்தது. ராமன் மிகவும் பயந்து போனான். (Tamil horror stories)

தனது நண்பர்களை உதவிக்கு அழைக்கலாமா? என்று யோசித்தான். வேண்டாம் இது நம்முடைய வீடு நாம்தான் கஷ்டப்பட வேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் அந்த எலும்புகள் எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட்டுவிட்டு குழியை தோண்ட ஆரம்பித்தான். அந்தக் குழி ஆனது ஐந்தடி நெருங்கும் வரை ஒரு மனித எலும்புக் கூட்டின் அனைத்துவிதமான எலும்புகள் எல்லாம் வெளியே வந்தது. ராமன் மனதில் ஒருவிதமான பயம் இருந்தால் கூட எப்படியாவது வீட்டை கட்டி ஆகவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அதிகமாக இருந்தது. ராமன் மீண்டும் மீண்டும் குழியை தோண்ட ஆரம்பித்தான். மண்வெட்டியை எடுத்து இருந்த மணலை எடுத்து வெளியே கொட்ட ஆரம்பித்தான். மணலை வாரி கொண்டிருக்கும்போது திடீரென்று......... (தொடரும்)

இந்தக் கதையின் அடுத்த பாகத்தை உடனுக்குடன் படிக்க வேண்டுமென்று நினைத்தால். நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்

https://telegram.me/realtamilstories

Post a Comment

0 Comments