நரியின் தந்திரம் பகுதி - 2 (tamil kid's stories)

நரியின் தந்திரம் பகுதி - 2 (tamil kid's stories)

ஒரு அடர்ந்த காட்டில் மான் மற்றும் காகம் இரு நண்பர்களாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். காகம் மற்றும் மான் நல்ல நண்பர்கள். அந்தக் காட்டில் எங்கு சென்றாலும் இரண்டு பேரும் ஒன்றாகச் சென்று விடுவார்கள். உணவு சாப்பிடும் போதும் கூட இரண்டு பேரும் ஒன்றாக தான் சாப்பிடுவார்கள்.  மரத்தின் மேலே காகமும், மரத்தின் கீழே மானும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து கொண்டு  இருந்தனர். அந்தக் காட்டில் மற்ற விலங்குகள் அனைத்தும் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல நண்பர்கள். மற்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்து கொண்டிருந்தாலும் காட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் அதை தீர்க்க என்ன வழியோ! அதை இந்த இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.(tamil kid's stories)


ஒருமுறை காட்டில் மழை பொழிவு இல்லாத காரணத்தால் உணவு சிறிதளவு தான் கிடைத்துக் கொண்டிருந்தது. மானின் முகம் வாடி இருப்பதை கண்ட காக்கை ஏன் நண்பா! என்ன ஆயிற்று உனது முகம் வாடி இருக்கிறது என்ன ஆயிற்று என்று கேட்டது. காட்டில் தாவரங்கள் அதிகம் வளராத காரணத்தால் எனக்கு உணவு பற்றாக்குறையாக இருக்கிறது என்று காக்கையிடம் கூறியது. அதற்கு காக்கை நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்னுடன் வா! என்று கூறியது. மானின் மேல் அமர்ந்து கொண்டு அழைத்துச் சென்றது. ஒரு அடர்ந்த ஆறு ஓடும் இடத்திற்கு மானை கொண்டுசென்று சேர்த்தது. (tamil kid's stories)

அதைப் பார்த்தவுடன் மான் நண்பா! நான் உனக்கு எப்படி நன்றி கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியது. நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். நண்பா நீ உன் வயிறார பசியாறு என்று காக்கை கூறியது. நம் காட்டில் பசியால் வாடும் அனைத்து உயிரினங்களையும் இங்கு கொண்டு வந்து காட்டலாம் என்று மான் கூறியது. கண்டிப்பாக நண்பா மற்ற உயிரினங்களும் இந்த பூமியில் வாழவேண்டும் என்று காக்கை கூறியது. பிறகு தினமும் அதே இடத்திற்கு மான் காக்கை மற்ற உயிரினங்கள் அனைத்தும் வந்து வயிறார பசியாறின. அந்த இடத்தில் ஒரு நரி ஒன்று இருந்தது. நான் தினமும் அங்கு வந்து தினமும் சாப்பிடுவதை கண்ட  நரி இந்த மான் மிகவும் கொழுகொழுவென்று இருக்கிறது.(tamil kid's stories)


இதை எப்படியாவது வேட்டையாடி சாப்பிடவேண்டும் என்று நரி முடிவு செய்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது. எப்படியாவது அந்த மானிடம் நண்பனாக சேர்ந்து பிறகு அதை சாப்பிட்டு விடலாம் என்றும் முடிவு செய்தது. அடுத்த நாள் மான் மற்றும் காகம் இரண்டும் ஒன்றாக இருந்தது. அந்த இடத்தில் நரி தான் திட்டம் தீட்டியது போலவே அந்த இடத்திற்குச் சென்றது. மேய்ந்து கொண்டிருந்த மான் அந்த நரியை பார்த்தது. நீங்கள் யார் என்று கேட்டது. நான் இங்கே தான் வாழ்கிறேன். எனக்கு என்று நண்பர்கள் யாரும் கிடையாது. அதனால் தான் நான் உங்களுடன் நண்பனாக சேர வேண்டும் இன்று உங்களிடம் பேச வந்தேன் என்று நரி கூறியது.(tamil kid's stories)

நரியின் சூழ்ச்சி தெரியாமல் மான் காக்கையிடம் கேட்டது. எனக்கு எதுவும் சரியாகப்படவில்லை என்று காகம் கூறியது. அவரைப் பார்த்தால் நல்லவனாக தான் தெரிகிறது அவரையும் நண்பராக சேர்த்துக் கொள்ளலாம் என்று மான் கூறியது. சரி உன் விருப்பம் என்று காகம் கூறியது. அதற்கு மான் சரி நான் உங்களை என் நண்பனாக சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறியது. என்னை உங்கள் நண்பனாக சேர்த்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி என்று நரி கூறியது. நன்றி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று காகம் மான் இருவருமே கூறினர். நாளை இதே இடத்தில் சந்திக்கலாம் என்று கூறிவிட்டு மான் காகம் இரண்டும் அந்த இடத்தை விட்டுச் சென்றது. (tamil kid's stories)


நரி திட்டம் தீட்டியது போலவே அவர்களிடம் நண்பனாக பழக ஆரம்பித்தது. இப்படியே ஒரு சில காலங்கள் சென்று கொண்டிருந்தது. ஆனால் காக்கைக்கு நரியின் மேல் நம்பிக்கை கிடையாது. எப்படியாவது காக்கை மற்றும் மான் இருவரையும் பிரிக்க வேண்டும் என்று நரி முடிவு செய்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது. ஒருபுறம் காக்கை மான் மேலே தான் அமர்ந்து வரும். அதனால் நரி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தது. ஒருபுறம் வழக்கமாக மான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் தாவரங்கள் அனைத்தும் வறண்டு போக ஆரம்பித்தது. இதைக்கண்ட மான் மற்றும் மற்ற விலங்குகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டு இருந்தன.(tamil kid's stories)

இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட நரி . எப்படியாவது இந்த மானை வேட்டையாடிய ஆக வேண்டும் என்று முடிவு செய்து. நரி, மான் இருக்கும் இடத்திற்கு அடிக்கடி நண்பனாக சென்று வந்து கொண்டிருந்தது. ஆனால் காக்கைக்கு அந்த நரியின் மேல் நம்பிக்கை கிடையாது. நரி மான் இடம் சென்று உனக்கு இப்போது உணவு பற்றாக்குறை இருக்கிறது. அதிக உணவு இருக்கும் இடம் எனக்கு ஒன்று தெரியும் அங்கு செல்லலாம் வா! என்று அழைத்தது. அதற்கு மான் நம் நண்பன் காக்கை வந்து விடட்டும் மூன்று பேரும் ஒன்றாக செல்லலாம் என்று கூறியது. நண்பன் காக்கை வரும்வரை காத்திருக்க முடியாது. அந்த இடத்தில் உணவு மிகவும் அதிகம் என்பதால் நிறைய விலங்குகள் வந்து செல்லும். (tamil kid's stories)


நாம் உடனே அங்கு சென்று பார்த்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறியது. மானுக்கு உணவு பற்றாக்குறை என்பதால் நண்பன் காகத்தை தனியாக விட்டுவிட்டு நரியின் பின்னால் சென்றது. நரி விவசாயிகள் விவசாயம் செய்யும் இடத்திற்கு மானை அழைத்துக் கொண்டு சென்றது. அங்க நிறைய உணவு இருப்பதை கண்டு நான் மிகவும் சந்தோசம் அடைந்து‌. நண்பா நீ சென்று உணவு சாப்பிட நான் இங்கு இருக்கிறேன் என்று நரி கூறியது. மான் உணவு சாப்பிடும் வரை நரி காத்துக்கொண்டிருந்தது. இப்போது இதை சாப்பிட்டு விடலாம் இல்லை இன்னும் நன்றாக வளரட்டும் என்று விட்டு விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது.(tamil kid's stories)

சரி இன்னும் ஒரு வாரம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தது. மீண்டும் மானை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றது. நரி மானிடம் நண்பன் காக்கை இடம் நீ இங்கு வந்து உணவு சாப்பிடுவதை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ஏன் இவ்வாறு சொல்கிறாய் என்று மான் கேட்டது. எல்லாம் ஒரு காரணமாத்தான் சொல்றேன் என்று நரி கூறியது. மான் எதுவும் யோசிக்காமல் தன் நண்பன் தான் கூறுகிறான் என்று அப்படியே செய்தது. காகத்திற்கு தெரியாமல் மான் தினமும் நரியின் பின்னால் சென்று கொண்டிருந்தது. நரி நினைத்தது போலவே மான் மிகவும் கொலு கொலு என்று வளர்ந்தது. நரி தான் எதிர்பார்த்த தருணத்தை நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது.(tamil kid's stories

அடுத்த நாள் நரி அந்தமானை எப்படியாவது வேட்டையாடி ஆக வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தது. மறு நாள் காலை வழக்கம் போல மான் உணவை சாப்பிட புறப்பட்டுச் சென்றது. காக்கை நண்பனுக்கு எதுவும் சரியாக படவில்லை. மான் எங்கே இருக்கிறது என்று பறந்து தேடிக்கொண்டிருந்தது. மான் உணவை சாப்பிட ஆரம்பித்தது. காத்துக்கொண்டிருந்த நரி திடீரென்று பாய்ந்து மானைத் தாக்க ஆரம்பித்தது. மானின் காலைக் கவ்வி இழுக்க. நீ என்ன செய்கிறாய் என்று கேட்டது. ஆனால் நரி எதுவும் பேசாமல் மானை வேட்டையாட அதிக பலத்தை பயன்படுத்தியது. நரியின் சூழ்ச்சி தெரியாத மான் அதன் பிடியில் சிக்கியது.(tamil kid's stories)


நரி தன்னை வேட்டையாட போகிறது என்று அறிந்து கொண்ட மான் துல்லியமாக அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தது. நரி மானை விடாமல் விரட்டி அடிக்க ஆரம்பித்தது. ஆனால் மான் மிகவும் துரிதமாக செயல்பட்டு துள்ளி குதித்து தப்பி பிழைத்து அங்கிருந்து சென்று வெளியேறியது. மேலே பறந்து கொண்டிருந்த காக்கை மான் அடிபட்டு இருப்பதைக் கண்டவுடன் கீழே வந்து என்ன ஆயிற்று என்று கேட்டது. அதற்கு மான் அங்கு நடந்த எல்லாவற்றையும் கூறியது. நான் உன்னிடம் முன்பே சொன்னேன் அந்த நரி நண்பனை நம்பாதே என்று. நீ கேட்கவில்லை. என்று காகம் கூறியது. வா! நம் வீட்டிற்கு செல்லலாம் என்று மானை அழைத்துக்கொண்டு காகம் சென்றது.

வீட்டிற்குச் சென்றதும் காகம் மானிடம் நான் உன்னிடம் என்ன கூறினேன். அவனைப் பார்த்தால் சரியாக படவில்லை என்று முன்பே உன்னிடம் கூறினேன். இப்போதாவது அவன் யார், என்று தெரிகிறதா? என்று காகம் கேட்டது. என்னை மன்னித்து விடு நண்பா, நான் உன்னை என் பேச்சை கேட்காமல் அவனை சேர்த்துக் கொண்டது என்னுடைய மிகப்பெரிய தவறு என்று  மான் வருந்தியது. இனிமேல் இதுபோல் தவறு நிகழாது என்று காகத்திடம் கூறியது.

இது போன்ற கதைகளை மேலும் படிக்க நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்..

https://telegram.me/realtamilstories

Post a Comment

0 Comments