விநாயகரும், பூசாரியும் ( tamil god stories)

விநாயகரும், பூசாரியும்( tamil stories)

ஒரு ஊரில் அம்பி என்னும் பூசாரி ஒருத்தன் இருந்தான். அவன் சிறு வயது முதலே தீவிர விநாயகர் பக்தனாக திகழ்ந்து வந்தான். எல்லா பொழுதும் விநாயகரை வழிபடுவது அவருக்கு பூஜை செய்து வருவது என அவன் தினசரி வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கு திருமணம் நடைபெற்று குழந்தைகளும் இருந்தனர். ஆனாலும் கூட விநாயகரை வழிபடுவது விநாயகர் கோவிலுக்கு பூஜை செய்வது இவைகளையே தன்னுடைய பணியாக செய்து வந்தான். சிறிய அளவு குடும்பம் இருந்தாலும் பெரிய அளவிற்கு வருமானம் எதுவும் கிடைக்காது. மிக எளிமையான வாழ்க்கை மட்டுமே வாழ்ந்து வந்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. ( God stories tamil)

அம்பிக்கு வீட்டில் பல்வேறு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் தினசரியாக வந்து விநாயகருக்கு பூஜை செய்து வழிபடுவான். விநாயகருக்கு பூஜை செய்யும் போது அவன் வேண்டுவது தங்களை ஒரு முறையாவது என் கண்களில் பார்க்க வேண்டுமென்று தான் வேண்டுவான். அம்பி தினமும் இவ்வாறு வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது விநாயகருக்கு போட்ட மாலையிலிருந்து ஒரு பூ மட்டும் கீழே விழுந்தது. ஆனால் அம்பிக்கு அது தெரியவில்லை. விநாயகர் என்னை காண நேரில் வரப் போகிறார் என்பது. அன்று இரவு பூஜை எப்பொழுதும் போல முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் விநாயகர் நிற்பது போலவே அவன் கண்களில் தோன்றியது. நமக்கு தினமும் தோன்றும் காட்சி தான் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.( Tamil devotional stories)

 மருநாள் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றான். கோவிலின் கதவு திறந்த நிலையில் இருந்தது. யார் கதவை திறந்ததும் யாரு உள்ளே வந்தார் என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். பொருட்கள் ஏதாவது காணாமல் சென்று விட்டதா என்பதை சுற்றி முற்றி பார்த்தான் அனைத்துப் பொருட்களுமே அங்கேயே இருந்தது. அவன் பின்னால் யாரோ வந்து அம்பி என்றும் சத்தம் இடுவது போல அவன் செவிகளில் கேட்டது. அவன் பின்னால் யாரோ அவனை தட்டி அம்பி பின்னால் திரும்பிப் பார் என்று யாரோ அழைப்பது போல இருந்தது. யார் அழைப்பது என்று பின்னால் திரும்பிப் பார்த்தான்.(tamil god stories)

அப்போது திடீரென்று அவன் கண் முன்னே விநாயகர் தோன்றினார். விநாயகரை பார்த்த மறுகணமே என்ன செய்வது ஏது செய்வது தெரியாமல் அம்பி திகைத்து நின்றான். அம்பி இத்தனை நாட்கள் நீ எனக்கு பூஜை செய்திருக்கிறாய் இதுவரைக்கும் நீ உனக்கு எதுவும் கேட்டது கிடையாது. அதனால் தான் நான் உன்னை நேரில் காண வந்து இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்! என்று விநாயகர் கூறினார். ஐயனே எனக்கு எதுவும் வேண்டாம். உங்களைக் காண நான் என்ன பாக்கியம் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. உங்களைப் பார்த்தது எனக்கு போதும் என்று அம்பி கூறினார். இல்லை கண்டிப்பாக நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விநாயகர் கூறினார்.(vinayakar stories)

எனக்கு எதுவும் வேண்டாம் ஐயனே என்று அம்பி மீண்டும் கூறினான். சரி பரவாயில்லை இன்று ஒரு நாள் முழுவதும் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று விநாயகர் கூறினார். ஐயனே! நீங்கள் என்னுடன் இருப்பதை யாராவது கண்டால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை என்று அம்பி கேட்டான். கவலைப்படாதே நான் அருகில் இருப்பது உன்னைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று விநாயகர் கூறினார். சரி ஐயனே என்று அம்பி கூறினான். நீ எனக்கு வழக்கம்போல் செய்யும் பூஜையை இன்று செய். நான், நீ எப்படி எனக்கு பூஜை செய்கிறாய் என்பதை பார்க்கிறேன் என்று விநாயகர் கூறினார்.( Tamil god stories)

வழக்கம் போல அம்பி செய்யும் பூஜையை விநாயகர் வேடிக்கை பார்த்தார். அம்பியின் கைகள் நடுங்கின. அம்பியின் கைகளை விநாயகர் பார்த்துவிட்டு ஏன் பதற்றமாக பூஜை செய்கிறாய். எனக்கு நீ வழக்கம் போல எவ்வாறு பூஜை செய்வாயோ! அதேபோல் பூஜை செய் என்று விநாயகர் கூறினார். சரி ஐயனே என்று கூறிவிட்டு எப்பொழுதும் போல பூஜை செய்து முடித்தான். ஐயனே பூஜை முடிந்து விட்டது. நான் வீட்டிற்கு செல்லலமா? என்று அம்பி கேட்டான். நான் உன்னிடம் என்ன கூறினேன் என்று விநாயகர் கேட்டார். நீங்கள் இன்று முழுவதும் என்னுடன் இருக்கிறீர்கள் என்று கூறினீர்கள் ஐயனே என்று அம்பி கூறினான். ( tamil god stories)

பிறகு என்னை அழைக்காமல் நீ மட்டும் வீட்டுக்கு செல்கிறாய் என்று விநாயகர் கேட்டார். மன்னித்துவிடுங்கள் ஐயனே வாருங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று அம்பி கூறினான். கோவிலை விட்டு வெளியே வந்தனர். பூஜையை முடித்து விட்டு எப்பொழுதும் தேநீர் அருந்துவது வழக்கம் வாருங்கள் அய்யனே சென்று தேநீர் அருந்தலாம் என்று அம்பி கூறினான். சரி அப்படியே ஆகட்டும் என்று விநாயகர் கூறினார். தேனீர் கடையில் மற்றவர்களைப் பற்றி கேலியும் கிண்டலுமாக பேசுபவர்கள் அங்கு இருந்தனர். அவர்களின் கண்களுக்கு அம்பி மட்டுமே தெரிந்தான் அருகில் உள்ள விநாயகர் அவனது கண்களுக்கு தெரியவில்லை. இரண்டு தேநீர் தாருங்கள் என்று கடை உரிமையாளரிடம் அம்பி கேட்டான். (Tamil stories)

நீ மட்டும் தானே இருக்கிறாய் பிறகு ஏன் இரண்டு கேட்கிறாய் என்று அந்தக் கடைக்காரர் கேட்டார். விநாயகர் அருகில் இருப்பதை யாரிடமும் கூறக் கூடாது என்பதால் இரண்டும் எனக்குத்தான் தாருங்கள் என்று அம்பி கூறினான். அந்தக் கடையின் உரிமையாளரும் இரண்டு தேநீரை அம்பிக்கு கொடுத்தார். அதைப் பருகி விட்டு காசோலையை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அம்பி சிறிது தூரம் சென்றதும் அங்கு அமர்ந்திருந்த ஒரு சிலர். இவன் ஒரு போலிச் சாமியார் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேலி செய்தனர். இது அம்பியின் செவிகளில் விழுந்தது. (Tamil god stories)

இதைப்பற்றி விநாயகர் கேட்டார் உன்னை இவ்வாறு பேசுகிறார்களே உனக்கு வருத்தம் எதுவும் இல்லையா. என்று விநாயகர் கேட்டார். எனக்கு வருத்தம் ஏதும் இல்லை ஐயனே நான் செய்யும் கடமையை சரியாக செய்து வருகிறேன். அந்த மன திருப்தி எனக்கு போதும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலை கிடையாது. எனக்கு, உங்களுக்கு பணிவடை செய்ய வேண்டும் அது மட்டுமே மனத்திருப்தி என்று அம்பி கூறினான். இருவரும் பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர். வீடு பாழடைந்த நிலையில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது. அதைக் கண்டதும் விநாயகர் உனது வீடு இவ்வாறு இருக்கிறதே இதை நீ மாற்ற ஏன் முயற்சி செய்யவில்லை என்று விநாயகர் கேட்டார்.( Tamil vinayakar stories)

மாற்றலாம் என ஒவ்வொரு முறையும் முயற்சி செய்து தோல்வியே சந்தித்தேன். கோவிலில் வரும் வருமானம் குடும்பத்தை காப்பாற்ற போதுமானதாக இருக்கிறது. இதில் நான் வீடு கட்ட வேண்டுமென்றால் என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கும் என்று அம்பி கூறினான். அன்று ஒரு நாள் முழுவதும் விநாயகர் அம்பி உடன் இருந்தார்.  அம்பியை பற்றி யாரெல்லாம் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பற்றி விநாயகர் கேட்டுக்கொண்டார். வீட்டில் நிலைமையை பார்த்தார். மறுநாள் காலைப் பொழுது விடிந்தது. இருவரும் வழக்கம்போல கோவிலுக்குச் சென்றனர். நான் விடை பெறும் நேரம் வந்துவிட்டது என்று விநாயகர் கூறினார்.(tamil god stories)

உங்களைப் பார்த்ததில் எனக்கு மிகவும் ஆனந்தம் ஐயனே என்று அம்பி கூறினான். நீ எதற்கும் கவலைப்படாதே உனது பணிவடைகளை நீ வழக்கம்போல கவனித்து வா நான் உன்னுடன் இருக்கிறேன் என்று விநாயகர் கூறினார். உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேள் நான் அதைத் தருகிறேன் என்று விநாயகர் கேட்டார். ஐயனே எனக்கு வரம் எதுவும் வேண்டாம் நான் இப்போது இருப்பது போல உங்களுக்கு பணிவடைகளைச் செய்து வந்து என் குடும்பத்தை சிறப்பாக கவனித்து வந்தாலே எனக்கு போதுமானது என்று அம்பி கூறினான். நான் விடை பெறுவதற்கு முன்னால் உன்னிடம் ஒரு சில வார்த்தைகள் கூறுகிறேன் அதை மட்டும் நீ கேள் என்றார். அதற்கு அம்பி கூறுங்கள் ஐயனே என்று கூறினான்.(tamil stories)

நேற்று முழுவதும் முழுவதும் நான் உன்னுடன் இருந்தேன் உன்னைப்பற்றி யாரெல்லாம் என்னவெல்லாம் பேசுகிறார் என்பதை நான் நன்றாக கேட்டுக் கொண்டேன். நீ எதற்கும் கவலைப்படாதே குறை கூறுபவர்கள் கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். வாழ்க்கையில் அவர்களும் முன்னேற மாட்டார்கள்.  முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்பவர்களை முன்னேற விடமாட்டார்கள். குறை கூறுபவர்களை பற்றி நீ கருத்தில் கொள்ளாதே அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். உனது பணிவடைகளை நீ எப்போதும் போல செய்து வா என்று கூறிவிட்டு விநாயகர் மறைந்தார். விநாயகர் மறைந்தபின் விநாயகர் பக்தர் ஒருவர் வந்து எனது கோரிக்கைகள் நிறைவேறிவிட்டது. யாருக்காவது நான் வீடு கட்டி தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களது வீட்டைக் காட்டுங்கள் நான் அதை சரி செய்து தருகிறேன் என்று அந்த விநாயகர் பக்தர் கூறினார். (Tamil god stories)

இதைக் கேட்ட அம்பி கண்கலங்கி திகைத்து நின்றான். அவன் மனதிற்குள் விநாயகர் உருவத்தில் ஒருவர் வந்து என் வீட்டை மாற்ற உதவி செய்கிறேன் என்கிறார் மிகவும் நன்றி ஐயனே என்று மனதிற்குள் நினைத்து கொண்டார். 

நம் வாழ்க்கையில் கடவுளுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை சிறப்பாக செய்து கொண்டால் அவர் நமக்கு எந்த ஒரு குறையும் வைக்க மாட்டார்.. மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டாம் அது நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல விடாது..

இந்த கதை  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.

https://telegram.me/realtamilstories

Post a Comment

0 Comments