துப்புறவு தொழிலாளி(Tamil stories)

துப்புரவுத் தொழிலாளி (tamil stories)

ஒரு ஊரில் கிட்டு என ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு துப்புரவு தொழிலாளி. அந்த ஊரில் உள்ள அனைத்து குப்பைகளையும் சுத்தம் செய்பவன். யார் மனதையும் காயப்படுத்தாமல் தனது வேலையை நியாயமாக செய்து வருபவன்.  அவனுக்கு மனைவி குழந்தைகள் என குடும்பம் இருக்கிறது. அவனது மூத்த மகன் ராமு ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.‌ தனது குடும்பத்தை காக்க வேண்டும் என்பதற்காக கிட்டு ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் தினமும் வேலைக்கு செல்வான். ஒரு அரசாங்க ஊழியனாக அவனது பணியை தொடர்ந்து வந்தான். யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டான். மூன்று சக்கர வாகனத்தில் வந்து குப்பைகளை வாங்கிக்கொண்டு சென்று விடுவான்.

                             (Tamil stories)

இதேபோல கிட்டு தனது பணிகளை தினமும் தொடர்ந்து வருவான். கிட்டுவை ஊரில் குப்பை எடுப்பவன் என்று மட்டுமே கூறுவார்கள். ஆனாலும்கூட அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான். தானுண்டு தனது வேலை உண்டு என இருப்பான். ஒருமுறை ஒரு பள்ளிக்கூடத்தில் பெற்றோர்களின் கலந்துரையாடல் நிகழ்ந்தது அதற்கு ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களும் நாளை வரும் பொழுது தனது பெற்றோர்களுடன் வரவேண்டும் என்று கூறினர். ராமு தனது அப்பாவை அழைத்து வர வேண்டும் என்று ஆவலுடன் இருந்தான். வீட்டிற்கு வந்தவுடன் அப்பா நாளைக்கு நீங்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறினான். ஆனால் கிட்டு நான் வரவில்லை உனது அம்மாவை அழைத்து செல் என்று கூறினான்.( Tamil stories)

ஆனால் ராமு இல்லை கண்டிப்பாக நீங்கள் தான் வர வேண்டும் என்று அடம் பிடித்தான். கிட்டுவின் மனைவி சரி நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறினாள். அன்று இரவு ராமு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றான். ஆனால் கிட்டு நாளைக்கு நான் பள்ளியில் சென்று என்ன கூறுவேன் என்று யோசித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் அவர்களது பெற்றோர்கள் என்ன வேலைக்கு செல்வீர்கள் என்று கேட்பார்கள். நான் என்ன பதில் கூறுகிறேன் தனது மனைவியிடம் வினவினான். ஆனால் கிட்டுவின் மனைவி நீங்கள் செய்யும் தொழிலை கூறுங்கள்  என்று அவன் மனைவி கூறினாள். நான் என் தொழிலை கூறினால் ராமு என்ன நினைப்பான் என்று கவலையுற்றான்.  (Tamil stories)

மறுநாள் காலை பெற்றோர்களின் கலந்தாய்வு நடந்தது. கிட்டு ராமுவுடன் பள்ளிக்குச் சென்றான். அங்கு ஆசிரியர்கள் நீங்கள் எந்த வேலைக்கு செல்கிறீர்கள் என்று கேட்டனர். கிட்டு நான் ஒரு துப்புரவு தொழிலாளி என்று கூறினான். அங்கிருக்கும் ஆசிரியர்கள் நல்ல பணி தான் நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கூறினார். ஆனால் ராமுவுக்கு அன்றுதான் தெரியும் தனது அப்பா ஒரு துப்புரவு தொழிலாளி என்று. பெற்றோர்கள் கலந்தாய்வு முடித்துவிட்டு கிட்டு தனது பணிக்கு சென்றான். ராமுவுடன் சக மாணவர்கள் உனது அப்பா துப்பரவு தொழிலாளி என்று கிண்டல் செய்தனர். ராமு மிகவும் மனம் வருத்தம் அடைந்தான்.( Tamil stories)

வீட்டிற்கு வந்ததும் அம்மா, அப்பா ஒரு துப்புரவுத் தொழிலாளியா என்று ஆச்சரியமாகக் கேட்டான். ஆம் அதற்கு என்ன இப்போது என்று ராமுவின் தாயார் கேட்டார். அப்பாவையும் இனிமேல் அந்த வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறுங்கள் அம்மா. எனது நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்கின்றன என்று வேதனையுடன் கூறினான். ராமு இவ்வாறு கூறுவான் என்று அவனது தாயார் எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு பொழுது வந்தது. கிட்டு தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். அப்பா நீங்கள் இந்த வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அன்பாக கூறினான். ஏன் என்ன ஆயிற்று. என்று கிட்டு கேட்டான். எனது நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்கின்றன என்று வேதனையாக கூறினான்.(tamil stories)

ராமு நான் பார்ப்பது ஒரு அரசாங்க பணி. இந்த பணியை என்னால் விட முடியாது என்று கிட்டு கூறினான். அப்பா நீங்கள் இந்த வேலையை கண்டிப்பாக விட்டுவிட்டு வேறு வேலையைப் பாருங்கள் என்று அடம் பிடித்தான். மறுநாள் சரியாகி விடும் என்று கிட்டு நினைத்தான். மறுநாள் காலை ராமு கண்விழித்து பார்ப்பதற்கு முன்பாக கிட்டு வேலைக்கு புறப்பட்டான். அப்பா எங்கே போனார் என்று கிட்டு கேட்டான். உனது அப்பா வேலைக்கு சென்றுவிட்டார் என்று அவனது தாயார் கூறினார். ராமு பள்ளிக்கு புறப்பட்டான். அவன் போகும் வழியில் அவனது தந்தை தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதைக் கண்டதும் ராமுவின் நண்பர்கள் அவனை கிண்டல் செய்தனர்.(tamil stories)

மிகவும் மனம் வருத்தம் அடைந்த ராமு தனது தந்தையிடம் சென்று இந்த வேலையை விட்டு விடுங்கள் அப்பா என்று மீண்டும் கூறினான். நீங்கள் இந்த வேலையை விடவில்லை என்றால் நான் உங்களுடன் பேச மாட்டேன் என்று கூறிவிட்டு பள்ளிக்குச் சென்றான். கிட்டுவின் மனதில் நான் இதை எப்படி புரிய வைப்பேன் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தான். வீட்டிற்கு வந்ததும் தன் மனைவியிடம் நடந்ததைக் கூறி புலம்ப ஆரம்பித்தான். எல்லாம் சரியாகி விடும் என்று கிட்டு மனைவி கூறினாள். மாலை பள்ளி முடிந்ததும் ராமு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது அவனது தந்தை துப்பரவு பணியில் ஈடுபட்டதை மீண்டும் பார்த்தான்.(tamil stories)

வீட்டிற்கு வந்த பின்பு ராமு கிட்டுவிடம் பேசவில்லை. சாப்பிடாமல் படுத்துக் கொண்டான். மகன் மனது கஷ்டப்படுகிறது என்று வேலைக்கு செல்லாமல் இருப்பதா என்று யோசித்துக் கொண்டிருந்தான். விடியற்காலை வந்தது கிட்டு வேலைக்கு செல்லவில்லை. தனது தந்தை வேலைக்கு செல்லவில்லை என அறிந்ததும் ராமு சந்தோஷமடைந்தான். ஆனாலும் கிட்டுவால் வேலை பார்க்காமல் இருக்க முடியவில்லை. ராமு பள்ளிக்குச் சென்றதும் கிட்டு வேலைக்கு புறப்பட்டான். கிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்டு வருவதைக் ராமு கண்டதும் கோபமாக பள்ளிக்குச் சென்றான். மகனை எப்படியாவது சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று. கிட்டு நினைத்தான்.(tamil stories)

ராமு பள்ளிக்குச் சென்றதும் அங்கு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் கிட்டுவை பற்றி புகழ்ந்து பேசினர். நமது கிராமத்தில் மட்டும் தான் டெங்கு மலேரியா போன்ற வியாதிகள் வரவில்லை அதற்கு முக்கிய காரணம் நமது பள்ளி மாணவன் ராமுவின் தந்தை கிட்டு தான் என்று பெருமையாக கூறினார். கிட்டு பள்ளிக்கு வராததால் அவரது மகன் ராமு இந்த விருதை பெறுவார் என்று பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் விருதை வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றான். தனது வகுப்பு ஆசிரியரிடம் சென்று ஐயா எதற்கு இந்த விருது எனது தந்தைக்கு வழங்கினார்கள் என்று கேட்டான்.(Tamil stories)

ராமு உனது தந்தை செய்யும் பணி ஒரு பொதுப் பணி. அவரது துப்பரவு தொழிலில் ஈடுபடுவதால் தான் நாம் நோயில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று ராமுக்கு புரியும்படி வகுப்பாசிரியர் எடுத்துக் கூறினார். தனது தந்தையின் வேலையை புரிந்துகொண்ட ராமு. தனது தந்தையை நினைத்து பெருமை அடைந்தான். ராமுவின் நண்பர்கள் வருத்தமடைந்து மன்னித்துவிடு என்று ராமுவிடம் கேட்டனர். மாலை பள்ளி முடிந்ததும் விரைவாக வீட்டிற்குச் சென்ற ராமு அம்மா, அப்பா எங்கே என்று கேட்டான். உனது தந்தை வேலைக்கு சென்றுள்ளார் என்று ராமுவின் தாயார் கூறினார். தந்தை வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற ராமு தனது தந்தை தெருவை சுத்தம் செய்வதைப் பார்த்தான்.

அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்களது தொழிலைப் பற்றி நான் இப்போது புரிந்து கொண்டேன். இனிமேல் நானும் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்று கூறினான். கிட்டுவால் இதை நம்பமுடியவில்லை. என்ன ஆயிற்று என்று கேட்டபோது பள்ளியில் நடந்ததை ராமு கிட்டுவிடும் கூறினான். கிட்டு விருதைப் பற்றி கவலை கொள்ளாமல் தனது மகன் நமது தொழிலை பற்றி புரிந்து கொண்டான் என்று மிகவும் சந்தோசமடைந்தார்.  ராமு தனது தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறான்.

துப்புரவு பணியாளர்கள் இல்லையென்றால் நமது வீட்டிற்கு முன்னால் உள்ள கழிவுகள் அப்படியே தான் இருக்கும். துப்புரவு பணியாளர்களை மதிப்புடன் நடத்த கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை ஒருபோதும் இகழ்ந்து பேச வேண்டாம். அவர்கள் இருப்பதால்தான் நாம் நோயில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அனைத்தும் துப்புரவு தொழிலாளர்களும் இந்த கதை சமர்ப்பணம்..

இந்த கதையை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிரவும்.

இது போன்ற கதைகளை படிக்க நினைத்தால் நமது telegram channel join செய்து கொள்ளவும் லிங்க் கீழே உள்ளது.
https://telegram.me/joinchat/jinhMcVDrJU1MDNl

Post a Comment

2 Comments

thanks for your comments