மதுவா? நண்பனா? ( Tamil stories)
ஒரு ஊரில் ராம் , சிவா என்று இரு நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார்கள். ராம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத இளைஞன். சிவா ஒரு சில காரணங்களுக்காக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான். ஆனால் சிவா தினமும் குடிக்க மாட்டான். என்றேனும் ஒரு நாள் அவனுக்கு தோன்றினால் மட்டும் மது குடிப்பான். சிவா மது அருந்துவது ராமிற்கு பிடிக்காது. ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று அவனை திட்டுவான். ராம் எது கூறினாலும் சிவா நம் நண்பன் தானே திட்டுகிறான் என்று எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். ராம் இடம் நீ வேண்டுமானால் ஒரு முறை முயற்சி செய்து பார் என்று கூறுவான். ( தமிழ் சிறுகதைகள்)
அந்த ஊரில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள். இருவருமே மதுப்பழக்கம் போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாதவர்கள் என்று ஊர் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ராமுக்கு மட்டும் தெரியும் சிவா ஒரு சில காரணங்களினால் குடிப்பான் என்று. ராம் ஒருமுறை சிவாவிடம் சென்று நீ இந்த பழக்கத்தை விட்டுவிடு என்று கேட்டான். நான் எதற்காக மது குடிக்கிறேன் என்று உனக்கு தெரியாதா என்று ராமிடம் கேட்டான். எல்லாவற்றையும் தெரிந்த ராம் தனக்குத் தெரியாதது போலவே நடித்தான். சிவா கொஞ்சம் போதையில் இருந்தான். சரி நீ எதற்கு குடிக்கிறாய் என்று என்னிடம் கூறு என்று ராம் கேட்டான். ( Tamil stories)
ராம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தெரியாததுபோல் நடிக்கிறாய் என்று சிவா கேட்டான். அதற்கு ராம் இல்லை எனக்கு உண்மையாகவே தெரியாது நீ என்ன காரணம் என்று கூறு என்று கேட்டான். நான் மீண்டும் கூறுகிறேன் என்று கூறினான். நான் மீனா என்ற ஒரு பெண்ணை காதலித்தேன் அது உனக்கு தெரியும் அல்லவா என்று சிவா கேட்டான். எனக்குத் தெரியாது நீ உனது முழுக்கதையும் கூறு என்று ராம் கேட்டான். நானும் அந்த பெண்ணும் உயிருக்குயிராக காதலித்து வந்தோம். நான் காதலிக்கும் சமயத்தில் என்னிடம் சரியான வேலை இல்லை இருந்தாலும் பரவாயில்லை என்று அவளை நான் காதலித்து வந்தேன். எங்களது காதல் வாழ்க்கை இப்படியே சென்று கொண்டிருந்தது.(tamil stories)
ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவளின் தந்தை அதை பார்த்து விட்டார் மறுநாள் என்னை அழைத்து பேசினார். என்னைப் பற்றி எல்லா விவரங்களையும் அவரிடம் கூறினேன். ஆனால் என்னிடம் சரியான வேலை இல்லை என்று என்னை நிராகரித்தார். அந்தப் பெண் என்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தன் தந்தையிடம் கூறினாள். ஆனாலும் கூட அவரது தந்தை கேட்கவில்லை. அவளின் தந்தை அழுத காரணத்தினால் மீனா இன்னொரு பையனை திருமணம் செய்ய சம்மதித்தாள். எனது கண் முன்பே அவர்களின் திருமணம் நடைபெற்றது. கடைசியாக மீனாவை பார்த்து வாழ்த்துக் கூறிவிட்டு அங்கிருந்து வந்தேன். (தமிழ் சிறுகதைகள்)
அன்று முதல் குடிக்க ஆரம்பித்தவன் தான் நான் இன்று வரை என்னால் அவளை மறக்க முடியவில்லை. அதனால் தான் இந்த மதுவை குடிக்கிறேன் அவளது நினைவு எப்பொழுது எல்லாம் எனக்கு வருமோ அப்பொழுது எல்லாம் நான் குடிப்பேன் என்று ராமிடம் சிவா கூறினான். இவன் போதையில் உளற ஆரம்பித்து விட்டான் என்று ராம் சிவாவை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றான். சிவாவை எப்படியாவது இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று ராமுக்கு நீண்ட நாள் எண்ணமாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். சிவாவிற்கு தெரியாமல் ராம் மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வருவதற்கு என்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருந்தான்.( தமிழ் நிஜக் கதைகள்)
ராம் ஒரு மருத்துவரை அணுகி உங்கள் நண்பர் சிவா சாப்பிடும்போது இதை அந்த உணவில் அவருக்குத் தெரியாமல் கலந்து கொடுங்கள் அவருக்கு மது பழக்கம் மறைந்துவிடும் என்று மருத்துவர் கூறினார். வீட்டிற்கு வந்த ராம் எப்பொழுதும் போல இருந்தான். சிவா சாப்பிடும் பொழுது அவனுக்கு தெரியாமல் அந்த மருந்தை உணவில் கலந்து கொடுத்தான். இப்படி ஒரு சில மாதங்கள் கழிந்தன. சிவாவிற்கு மது சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் மறைந்தது. ராமிடம் கூறுவான் எனக்கு இப்பொழுது எல்லாம் மது சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதில்லை என்ன ஆயிற்று என்று எனக்கே தெரியவில்லை என்று கூறினான்.(tamil stories)
ஆனால் ராம் எப்படியோ இவன் மது பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டான் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் சிவாவிற்கு தெரியும் என்னை இந்தப் பழக்கத்திலிருந்து மீட்டது ராம் தான் என்று
ஆனால் சிவா ராமுக்கு தெரியாதது போலவே நடித்தான். வழக்கம் போல இருவரும் செயல்பட ஆரம்பித்தன. சிவா மது பழக்கத்திலிருந்து முற்றிலும் குணம் அடைந்தான். இருவரும் அலுவலகத்தில் நன்றாக பணியாற்றி வந்தனர். அந்த அலுவலகத்தில் புதிதாக இன்னொருவர் சேர்ந்தார். ஆனால் ராம் சிவா எப்பொழுதும் போல யாரோ ஒருவர் வந்து சேர்ந்து கொண்டார் என்று நினைத்து. அவர்களின் வேலையை செய்து வந்தனர்.
புதிதாக சேர்ந்த நண்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் அந்த அலுவலகத்தில் ஒரு பெரிய பதவியில் இருந்தார். இந்த அலுவலகத்திற்கு யார் நன்றாக உழைக்கிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வேலையை கொடுத்தால் அதை சரியாக யார் முடிப்பார் என்று ஒரு கணிப்பு வைத்திருந்தார். அதேபோல ராம் மற்றும் சிவா இருவருமே அலுவலகத்தில் நன்றாக பணியாற்றி வந்தனர். அவருக்கு ராம் மற்றும் சிவா இவர்களிருவரும் பற்றி ஒரு அளவிற்கு தான் தெரியும். அலுவலகத்தில் நன்றாக இவர்கள் இருவருமே பணியாற்றுகிறார்கள் இவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று அவர் நினைத்தார். இவர்கள் இருவருக்கும் என்ன செய்யலாம் என்று யோசித்தார்.(tamil stories)
ஒருநாள் வீட்டிற்கு அழைத்து வந்து இவர்கள் இருவருக்கும் விருந்து கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். ஏனென்றால் அந்த அலுவலகத்தில் நன்றாக பணிபுரிபவர்கள் என்று பார்த்தால் ராம் மற்றும் சிவா இவர்கள் இருவருமே நல்ல உழைப்பாளிகள். ராம் மற்றும் சிவாவிடம் அவர் நீங்கள் நாளை மறுதினம் என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். எதற்கு இவர் நம்மை வீட்டிற்கு அழைக்கிறார் என்று தெரியாமல் ராம் ,சிவா முழித்துக் கொண்டிருந்தனர். சரி அவர் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்று ராம் கூறினான். இரண்டு நாட்கள் கழித்து அவர் வீட்டிற்கு இவர்கள் இருவரும் சென்றனர். இந்த அலுவலகத்தில் நல்ல பணியாளர்கள் நீங்கள்தான் அதனால்தான் உங்களுக்கு நான் ஒரு விருந்து கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.
ராம் மற்றும் சிவா இருவரும் சந்தோஷம் அடைந்தனர். மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.சாப்பிட்டு முடித்த பிறகு பேசலாம் என்று அமர்ந்தனர். நீங்கள் என்னை ஒரு நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். ராம் மற்றும் சிவா இருவரும் யோசித்தனர். அதற்கு முன்பாகவே அவர் நம் நட்பை பெருமைப்படுத்தும் விதமாக இந்த மதுவை நீங்கள் பருகுங்கள் என்று கூறினார். ராம் ,சிவா இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இந்த மதுவை குடித்தால்தான் எனது நட்பு உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.(tamil stories)
ராம் ஒருபக்க யோசித்தான் இவரின் நட்பு கிடைத்தால் நாம் மேலும் மேலும் வளரலாம் என்று நினைத்தான். ஆனால் சிவா திடீரென எழுந்து இந்த மதுவை நான் குடித்தால் தான், உங்களின் நட்பு எனக்கு கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட நட்பு எனக்குத் தேவையில்லை என்று கூறினான். கோபமடைந்த சிவா ராமை பார்த்து வா செல்லலாம் என்று கூறினான். ராம் ,சிவா இருவரும் வெளியே வந்து சிவா ஏன் இவ்வாறு அவரிடம் கூறினாய் என்று கேட்டான். நீ மதுவை குடிப்பயா என்று சிவா கேட்டான் இல்லை நான் குடிக்க மாட்டேன் என்று ராம் கூறினான். அதனால் தான் நான் அவ்வாறு கூறினேன் அந்த மதுபழக்கம் நமக்கு வேண்டாம் என்று கூறினேன்.
மனம் வருத்தம் அடைந்த அந்த நண்பர் என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்களிடம் அவ்வாறு கூறி இருக்கக்கூடாது என்று கூறினார். நீங்கள் மது பருக வேண்டாம் எப்பொழுதும் போல உங்களது வேலையை அலுவலகத்திற்கு தாருங்கள் என்று கூறி மன்னிப்பு கேட்டார். சரி பரவாயில்லை விடுங்கள் என்று கூறிவிட்டு ராம், சிவா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
0 Comments
thanks for your comments