அதிசய சைக்கிள் ( tamil magical stories)
ஒரு ஊரில் திருமன் என்று ஒருத்தன் இருந்தான். அவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. அந்த குழந்தையின் பெயர் ராஜா. திருமண் ஒரு கடின உழைப்பாளி. அவனது பெற்றோர் அவனுக்கு என்று கொடுத்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டும் தான். இந்த சைக்கிளை அவர்கள் பரம்பரை பரம்பரையாக உபயோகித்து வந்தனர். அந்த ஒரு சைக்கிளை திருமனுக்கு உனது சொத்து இதுதான் என்று அவனிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஒப்படைக்கும் பொழுது அந்த சைக்கிள் சற்று பழுதாகி இருந்தது சரி தனது வீட்டில் ஒரு ஓரமாக இருக்கட்டும் என்று திருமன் வைத்திருந்தான். திருமன் மகன் ராஜா வளர்ந்து 15 வயது சிறுவனாக இருந்தான்.
. (Tamil magical stories)ராஜாவுக்கு தனது அப்பாவின் பரம்பரை சொத்ததான அந்த சைக்கிளை ஓட்ட வேண்டும் என்பதுதான் அவனது ஆசை. அதற்காக தன் தந்தையிடம் நான் எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலமுறை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த சைக்கிள் பழுதாகி நின்று இருக்கிறது உனக்கு நான் வேற ஒரு சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று திருமன் கூறியிருந்தான். ஆனால் ராஜா எனக்கு இந்த சைக்கிள் தான் வேண்டும் என்று அடம் பிடித்தான். சரி செய்து தருகிறேன் என்று திருமன் வெறும் வார்த்தையாக கூறினான். ராஜா, அப்பா கண்டிப்பாக சைக்கிளை சரிசெய்து தருவார் என்று நம்பிக் கொண்டிருந்தான். அப்படியே ஒரு சில வருடங்கள் கழிந்தன.( Tamil magical stories)
ஊரில் ராஜாவின் நண்பர்கள் சைக்கிள் ஓட்டுவதை கண்டதும் ராஜாவுக்கு அந்த சைக்கிளை எப்படியாவது ஓட்டி ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது.பிறகு தனது தந்தையிடம் சைக்கிளை சர்வீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் அடம்பிடித்தான். வேறு வழியில்லாமல் திருமன் அந்த சைக்கிளை சரி செய்து கொடுத்தான். சைக்கிளை சரி செய்ததும் ராஜாவுக்கு மிகவும் சந்தோஷம். ஒரு விதத்தில் திருமன் சந்தோசமாக இருந்தான் ஏனென்றால் அவனது பரம்பரை சைக்கிளை சரி செய்ய நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக தனது பரம்பரை சைக்கிளை இப்போது சரி செய்து ஓட தயார் நிலையில் உள்ளது என்பதை பார்த்ததும் திருமன் மிகவும் சந்தோஷமடைந்தான்.( Tamil magical stories)
ராஜா அந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது நண்பர்களிடம் காட்ட சென்றான். ராஜாவிற்கு ஒரு அளவுக்குதான் சைக்கிள் ஓட்டத் தெரியும். இருந்தாலும் கூட சைக்கிள் ஓட்டுவதை கற்றுக்கொள்ளலாம் என்று மிகவும் ஆர்வமாக இருந்தான். ராஜா அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்ட ஆரம்பித்தான். ராஜா ஓட ஆரம்பித்ததும் சைக்கிள் ஒரு புறமாக சாய்ந்தது ஆனால் சைக்கிள் கீழே விழவில்லை. ராஜா கீழே விழுந்துவிட்டான். ஆனால் சைக்கிள் மட்டும் நேராக நின்று கொண்டிருந்தது. இதைக் கண்டதும் ராஜா ஆச்சரியமாக சைக்கிளை பார்த்தான். என்ன இது நாம் கீழே விழுந்து விட்டோம். ஆனால் சைக்கிள் கீழே விழவில்லை என்று ஆச்சரியமாக நின்றான்.(tamil magical stories)
ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இது அவர்களது பரம்பரை சைக்கிள் என்பதால் இதற்கு முன் இந்த சைக்கிள் எப்படி இருந்தது என்பது பற்றி ராஜாவுக்கும் தெரியாது அவன் தந்தைக்கும் இது தெரியாது. ராஜா படிப்படியாக சைக்கிளை ஓட்ட கற்றுக் கொண்டான். ஒரு வழியாக சைக்கிளில் மேலே ஏறி அமர்ந்து முழுவதுமாக ஓட்ட கற்றுக்கொண்டான். ஒருநாள் ராஜா பள்ளிக்கு சைக்கிளில் செல்லலாம் என்று முடிவு செய்தான். தனது தந்தையிடம் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். பள்ளிக்கு நேரமானதால் ராஜா விரைவாகச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். சைக்கிளில் உள்ள கைப்பிடியில் ஒரு வித்தியாசமான ஒரு பட்டன் இருந்தது.(tamil magical stories)
ராஜாவின் கைகள் தெரியாமல் அதன்மீது பட்டது. ராஜாவின் மனதில் பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. திடீரென அந்த சைக்கிள் நொடிப்பொழுதில் பள்ளியை சென்றடைந்தது. ராஜாவிற்கு ஒரு ஆச்சரியம் சைக்கிள் எப்படி இவ்வளவு வேகமாக வந்தது என்று ராஜாவுக்கு. தெரியவில்லை. நான் எப்படி இவ்வளவு வேகமாக பள்ளிக்கு வந்து அடைந்தேன் என்று தெரியாமல் குழப்பமாக நின்றான். சரி மாலையில் வந்து சைக்கிளை பார்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கு உள்ளே சென்றான். ராஜாவுக்கு சைக்கிளில் ஏதோ உள்ளது என்று எண்ணம் தோன்றியது அது என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.( Tamil magical stories)
அன்று முழுவதும் ராஜா எப்பொழுதும் மாலை நேரமாகும் என்று காத்துக் கொண்டிருந்தான். மாலைப்பொழுது வந்தது மணி சத்தம் கேட்டதும் ராஜா வேக வேகமாக சைக்கிள் இடம் சென்றான். காலையில் நடந்ததை பற்றி யோசித்தான்.
மீண்டும் சைக்கிளின் மீது ஏறி அமர்ந்து சுற்றி முற்றி பார்த்தான். மீண்டும் அவனது கைகள் அந்த பட்டன் மீது பட்டது அப்போது அவன் மனதில் விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். ராஜா கண்களை மூடித் திறக்கும் பொழுது அவன் வீட்டிற்கு சென்றடைந்தான். ராஜாவிற்கு எதுவும் புரியவில்லை அவன் தந்தையிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தான். அவன் தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறினான்.(tamil stories)
ராஜாவின் தந்தை அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது நீ சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கு என்றார். அவர்களுக்கு பரம்பரை சைக்கிளை பற்றி திருமனுக்கு
ஒன்றும் தெரியாது. ராஜா இரவு படுக்கை அறைக்குச் சென்றதும் சைக்கிள் எப்படி இவ்வளவு வேகமாக வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்படியே அவன் படுத்து உறங்கிவிட்டான். அவன் கனவில் சைக்கிள் பறப்பது போன்று கனவு கண்டான். மறுநாள் காலைப் பொழுது விடிந்தது வழக்கம்போல ராஜா பள்ளிக்கு புறப்பட தயாரானன். பள்ளிக்கு செல்லலாம் என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு மெதுவாக சென்று கொண்டிருந்தான். ஆனால் ராஜாவிற்கும் அவனது தந்தைக்கும் இந்த சைக்கிளில் பற்றி முழுமையான விவரங்கள் எதுவும் தெரியாது.(tamil stories)
அந்த சைக்கிளில் உள்ள பட்டனை ராஜா மீண்டும் தட்டினான். அவன் மனதில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது திடீரென சைக்கிள் பறக்க ஆரம்பித்தது. ராஜா பயந்து நடுங்கினான். நான் கனவில் கண்டது போல் சைக்கிள் பறக்கிறது என்று என்று நினைத்தான். எப்படியாவது கீழே இறக்க வேண்டும் என்று நினைத்தான் அதன்படி சைக்கிள் கீழே இறங்கியது. ராஜாவிற்கு எதுவும் புரியவில்லை. பிறகு சைக்கிளை உற்று நோக்கினான் அதில் ஒரு பட்டன் இருப்பதைக் கண்டான். மீண்டும் அந்த பட்டனை அழுத்தி சைக்கிள் பறக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் சைக்கிள் பறக்கவில்லை.(tamil stories)
சைக்கிள் ஏன் பறக்கவில்லை என்று யோசித்தான். சரி சைக்கிளின் மீது ஏறி அமர்ந்து அந்த பட்டனை அழுத்தி மனதிற்குள் ஏதாவது நினைக்கலாம் என்று முடிவு செய்தான். சைக்கிளின் மீது ஏறி பட்டனை அழுத்தினால் மீண்டும் பறக்க வேண்டும் என்று நினைத்தான். சைக்கிள் பறக்க ஆரம்பித்தது. ராஜாவிற்கு மிகவும் சந்தோசம். சைக்கிள் பறக்கிறது என்று. மீண்டும் அந்த பட்டனை அழுத்தி கீழே இறங்க வேண்டும் என்று நினைத்தான் அதேபோல் சைக்கிள் இறங்கியது. பிறகுதான் ராஜாவுக்கு தெரியவந்தது இது ஒரு அதிசய சைக்கிள் என்று. தன் தந்தையிடம் சென்று நடந்ததையெல்லாம் கூறினான். ஆனால் அவன் தந்தையை நம்பவில்லை. வாருங்கள் அப்பா உங்களை பறக்க வைக்கிறேன் என்று ராஜா கூறினான்.(magical stories)
இருவரும் சைக்கிளில் அமர்ந்து கொண்டனர். ராஜா பட்டனை அழுத்தி பறக்க வேண்டும் என்று நினைத்தான் சைக்கிள் பறந்தது. ராஜாவின் அப்பாவிற்கு எப்படி சாத்தியம் என்று தெரியாமல் குழப்பமாக இருந்தார். இருவரும் கீழே தரையிறங்கினர். திருமன் யோசித்தான்.
எனது தந்தையின் மரணப்படுக்கையில் இருக்கும் போது இந்த சைக்கிளை எனக்கு கொடுத்தார். அதன் கூடவே ஒரு ஓலைச் சுவடிகளையும் என்னிடம் கொடுத்தார். அது எங்கே இருக்கிறது என்று யோசித்தான். ஓலைச்சுவடியை தேடி கண்டு பிடித்தான்.
அதில் இந்த சைக்கிளின் மீது அமர்ந்து கொண்டு பட்டனை அழுத்தி எங்கு செல்ல வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.(magical stories)
அந்த சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை கொண்டு சேர்க்கும் என்று அந்த ஓலைச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது. ராஜா அவரின் தந்தை இதை படித்துவிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். நம்மிடம் ஒரு அதிசய சைக்கிள் உள்ளது என்று இருவரும் சந்தோஷம் அடைந்தனர். அந்த ஓலைச்சுவடியை முழுவதுமாக படித்து அந்த சைக்கிளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டனர். திருமன் ராஜாவிற்கு நன்றி கூறினார் நீ மட்டும் அடம் பிடிக்கவில்லை என்றால் இந்த சைக்கிளை பற்றி நமக்குத் தெரிந்து இருக்காது என்று திருமன் கூறினான்.
பிறகு திருமன் அந்த சைக்கிளை பயன்படுத்தி வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறத் தொடங்கினான். வாழ்க்கையில் பெரிய அளவிற்கு முன்னேற்றமடைந்து மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்...
நமது வாழ்க்கையில் நமக்கு எந்தப் பொருள் எப்போது கொடுக்கவேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும். ஆகையால் உங்கள் உழைப்பில் கவனம் செலுத்துங்கள் அதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்
https://telegram.me/realtamilstories
0 Comments
thanks for your comments