நரியின் தந்திரம் (tamil kids stories)
ஒரு அடர்ந்த வனப்பகுதியில் ஒரு புத்திசாலி நரி ஒன்று வசித்து வந்தது. மற்ற நரிகளை விட இந்த நரியை சற்று புத்திசாலித்தனமாக இருக்கும் ஆலோசித்து நல்ல ஒரு முடிவை எடுக்கும்.அந்த காட்டில் வளரும் விலங்குகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்த நரி சென்று சுமூகமாக தீர்த்து வைக்கும். அந்த அளவிற்கு ஒரு திறமையான நரி என்று கூட சொல்லலாம். பிறந்ததிலிருந்து இந்த நரி தனியாகவே வளர்ந்து வருகிறது. இதற்கு நண்பன் என்று கூட யாரும் கிடையாது. அதனாலேயே ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் தனியாளாக நின்று போராடும் அளவிற்கு இந்த நரி புத்திசாலித்தனமாகவும் வலிமை மிக்கதாகவும் இருக்கிறது.
tamil kids storiesஅந்த வனப்பகுதியில் ஒரு நீரோடை ஒன்று உள்ளது அனைத்து மிருகங்களும் அங்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும். அந்த நீரோடையில் ஒரு முதலை ஒன்று வசித்து வருகிறது. ஏதாவது மிருகங்கள் தண்ணீர் குடிக்க வந்தால் அதை அப்படியே இழுத்து போட்டு உணவாக மாற்றிக் கொள்ளும். மிகவும் வலிமைமிக்க முதலையாக அந்த நீரோடையில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த முதலை இருக்கும் வரை வேறு எந்த ஒரு முதலை தண்ணீருக்குள் வர அனுமதிக்காது. இந்த முதலைக்கு அந்த நரியை எப்படியாவது பிடித்து உணவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப் இருந்தது அதற்கு பல நாட்களாக காத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த நரி தண்ணீர் குடிக்க வரும் போது எப்படியாவது தப்பித்து விடும்.( Tamil kids stories)
அந்த நீரோடையில் உள்ள முதலை மற்ற மிருகங்களை மிகவும் அதிகமாக வேட்டையாடி உணவாக உட்கொண்டு இருக்கிறது. இதனால் மனம் வருத்தம் அடைந்து மற்ற மிருகங்கள் எப்படியாவது அந்த முதலையை இங்கிருந்து விரட்ட வேண்டும் என்று நரி இடம் சென்று கூறினர். ஆனால் நரிக்கு தெரியாது .அந்த முதலை நம்மை வேட்டையாட வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறது என்று. இதனால் நரி அந்த முதலை இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கலாம் என்று முடிவு செய்தது.நான் இதற்கு ஒரு திட்டம் தீட்டி வைத்திருக்கிறேன் நான் சொன்னது படி செய்யுங்கள் என்றும் நரி கூறியது. அதன்படி முதலை வசிக்கும் நீரோடைக்கு சென்று முதலை அவர்களே உங்களிடம் பேசவேண்டும் சற்று வெளியே வாருங்கள் என்று அன்பாக கேட்டது.(tamil kids stories)
நீரோடையில் இருந்த முதலை வெளியே தலையை நீட்டி பார்த்தது. நான் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது இன்று எப்படியாவது இந்த நரியை வேட்டையாடி விட வேண்டுமென்று முதலை திட்டம் தீட்டியது. முதலில் வெளியே வந்து சொல்லுங்கள் என்று பணிவாக கேட்பது போல் நடித்தது. நீங்கள் மிருகங்களை வேட்டையாடுவது மிகவும் அதிகமாகி விட்டது நீங்கள் இங்கிருந்து பக்கத்து காட்டிற்குச் சென்று விடுங்கள் என்று அன்பாக கூறியது. நான் வேட்டையாடுவது அதிகமாகி விட்டதா என்று முதலை வியப்பாக கேட்டது. நான் எனது வயிற்றுப் பசிக்காக தான் வேட்டையாடுகிறோன். மிகவும் பாவமாக முதலை கூறியது. நானும் உங்களை நண்பன் போலத்தான் பார்க்கிறேன் என்று முதலை கூறியது.
நீங்கள் என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என்று முதலை சொன்னது. முதலையின் மனதில் இந்த நரியை இன்று எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. அதன்படி மிகவும் அன்பாகப் பேசிக் கொண்டிருந்தது. நீ என்னருகில் வந்து பேசு நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் நான் உன்னை நண்பனைப் போலதான் பார்க்கிறேன் என்று முதலை அன்பாக பேசியது. முதலையின் அன்பான பேச்சில் நரி சற்று ஏமாந்து போனது. அப்படியே அருகில் சென்றது. நான் இனிமேல் மிருகங்களை வேட்டையாட மாட்டேன் நீ என் அருகில் வந்து பேசி என்று முதலை மீண்டும் கூறியது. முதலையின் பேச்சை நம்பிய நரி அருகில் சென்றது. எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று முதலை சீறிப் பாய்ந்தது.(tamil kids stories)
ஆனால் சுதாரித்துக் கொண்ட நரி தப்பிக்கலாம் என்று முயற்சி செய்யும்போது முதலையிடம் வசமாக மாட்டியது. ஏய் நரி நான் உன்னை வேட்டையாட வேண்டும் என்றுதான் உன்னிடம் அன்பாக பேசுவது போல் நடித்தேன். இப்போது நீ என்னிடம் வசமாக மாட்டிக் கொண்டாய் என்று முதலை கூறியது. நரியின் கால்கள் மட்டும் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டது. நரி சற்று பொறுமையாக சிந்தித்தது. முதலை அவர்களே நீங்கள் என் கால்கள் என்று நினைத்து மரத்தின் வேரை பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நக்கலாக கூறியது. என்னது நான் வேரைப் பிடித்துக் கொண்டிருக்கிறேனா. என்று வாயை திறக்க சிக்கிய கால்களை எடுத்துக்கொண்டு நரி மேலே சென்றது.(tamil kids stories)
ஏய் முதலை எனது காலங்கள் உனது வாயில்தான் இருந்தது. நான் எப்படி உன்னை ஏமாற்றினோன் என்று
பார்த்தாயா என்று நக்கலாக கூறியது. ஏய் நரி என்னை ஏமாற்றி விட்டாய் என்று முதலை வேகமாக நீரோடையில் இருந்து வெளியே வந்தது. ஏற்கனவே திட்டம் தீட்டி வைத்திருந்தது போல முதலையை பின்னால் வரச் செய்தது. நரி முன்னோக்கி செல்ல பின்னே முதலை துரத்திக் கொண்டு வந்தது. முதலையின் மனதில் நரி நம்மை கண்டு பயந்து தான் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டது. ஆனால் முதலைக்கு நரியின் தந்திரம் என்னவென்று தெரியாது. நரியை வேகமாக விரட்டி சென்றது.(tamil kids stories)
வெகு தூரம் சென்ற பிறகு மற்ற மிருகங்கள் அனைத்தும் நரியின் யோசனைப்படி ஒரு பெரிய குழியை தோண்டி அதில் முதலையே விழ செய்யலாம் என்று திட்டம் தீட்டி வைத்திருந்தனர். அதன்படி நரி அந்தக் பள்ளத்தை கண்டதும் தாவியது ஆனால் முதலை மாட்டிக் கொண்டு. அனைத்து மிருகங்களும் முதலையை கோபமாக பார்த்தனர். முதலையே நீ எத்தனை நாட்களாக எங்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் பார்த்திருக்கிறாய் என்று நாங்கள் அறிவோம். உன்னை அழிக்கலாம் என்று பார்த்தோம் ஆனால் நீங்களும் எங்களைப் போல் ஒரு ஜீவன் தான் என்று கருத்தில் கொண்டு உங்களை வேறு ஒரு காட்டிற்கு மாற்றுகிறோம் என்று மிருகங்கள் கூறின. பிறகு அனைத்து மிருகங்களும் ஒன்றாக சேர்ந்து முதலையை ஆள் இல்லாத காட்டிற்கு அனுப்பி விட்டன.(tamil kids stories)
இனிமேல் அந்த காட்டில் அனைத்து மிருகங்களும் சந்தோசமாக இருக்கும். நரியின் தந்திரத்தை அறியாத முதலை வசமாக மாட்டிக் கொண்டது.
எந்த ஒரு பிரச்சினை நமக்கு வந்தாலும் அதை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிரவும்..
0 Comments
thanks for your comments