ஒரு பெரிய மரத்தில் ஆண் குருவி பெண் குருவி என இரண்டு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தப் பெரிய மரத்தில் எந்த விதமான ஒரு வெளிச்சமும் இருக்காது. பகல் பொழுது எல்லாம் இனிமையான சூரிய வெளிச்சத்தில் குருவிகள் பொழுதைக் கழிக்கும் ஆனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் என்ன நடக்கும் என்பதைக் கூடத் தெரியாமல் குருவிகள் வாழ்ந்து வந்தன. இரவு பொழுது வந்தால் குருவிகள் சற்று பயத்துடன் இருக்கும். ஆண்குருவி எப்பொழுதும் பகல் பொழுதில் தன் உணவைத் தேடி அலையும் பெண்குருவி முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் பெண் குருவி முட்டை பொரிக்கும் நிலையில் இருந்தது.
இரவு நேரம் வந்து விட்டால் இரண்டு குருவிகளும் தனது குஞ்சுகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்து ஆலோசித்து கொண்டிருக்கும். ஆண் குருவி பெண் குருவி இடம் இந்த இரவில் எப்படி நமது குஞ்சுகளை வளர்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை என்று பெண் குருவியிடம் கூறியது. வேறு ஏதாவது வெளிச்சம் உள்ள பகுதியில் நமது கூட்டை மாற்றி அமைக்கலாம் என்று பெண்குருவி கூறியது. ஆனால் ஆண் குருவி இந்த ஒரு மரம் தானே நமக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. வேறு யாராவது இடம் உதவி கேட்டு பார்க்கலாம் என்றும் பெண்குருவி கூறியது. நாளை வெளியே செல்லும் போது யாராவது இடம் ஆலோசனை கேட்டு வருகிறேன் என்று கூறியது. (Tamil kids stories)
அன்று வெளியே செல்லலாம் என்று புறப்பட்டது ஆண் குருவி. ஆனால் எதிர்பாராத விதமாக முட்டையிலுள்ள குஞ்சு வெளியே வந்தது. முட்டையிலிருந்து வெளியே வந்த குஞ்சை பார்த்து இரண்டு குருவிகளும் மிகவும் சந்தோஷம் அடைந்தது. முட்டையிலிருந்து வெளியே வந்த குட்டி குருவிக்கு பசி எடுத்தது அதன் பசியைப் போக்க ஆண்குருவி விரைவாக நான் சென்று உணவை தேடி வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றது. வேகமாக சென்று உணவை தேடிக் கொண்டிருந்தது. குட்டி குருவிக்கு பசிக்கும் என்று நினைவில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கும் எண்ணத்தை மறந்து போனது. உணவை விரைவாக தேடி எடுத்து தனது கூட்டிற்கு வேகமாக பறந்து சென்றது. உணவிற்காக காத்திருந்த பெண் குருவிக்கும் சின்ன குருவி குஞ்சுவிற்கும் உணவை பரிமாறியது.(tamil kids stories)
இப்படியே ஒரு சில நாட்கள் கழிந்தது திடீரென ஒருநாள் சின்ன குருவி தன் அப்பாவான பெரிய ஆண் குருவியிடம் ஏனப்பா நம் வீடு இரவில் மட்டும் வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது என்று கேட்டது. பகலில் உள்ளதைப் போல் நமக்கு இரவிலும் வெளிச்சம் கிடைக்காதா என்று கேட்டது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இரண்டு குருவிகளும் தவித்தன. தன் குட்டி குருவியிடம் கவலைப்படாதே நான் வரும்பொழுது வெளிச்சத்துடன் வருகிறேன் என்று கூறியது. மறுநாள் வழக்கம்போல் உணவைத் தேடிச் சென்றது ஆண் குருவி. அங்கு தன் பழைய நண்பனைச் சந்தித்து. பிறகு ஆண் குருவியின் நிலையை எடுத்துக் கூறியது. கவலைப்படாதே உனது கூட்டிற்கு வெளிச்சத்தை ஏற்பாடு செய்யலாம் என்று கூறியது. இரவுப் பொழுது வரும் வேலையானது இரண்டு குருவிகளும் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தது. திடீரென ஆண் குருவியின் நண்பனுக்கு தூரத்தில் ஒரு வெளிச்சம் தென்பட்டது. நண்பா அங்கே பார் அங்கு தெரிகிற வெளிச்சம் மின்மினிப்பூச்சி அந்தப் பூச்சியை பிடித்து கொண்டு உன் வீட்டிற்கு செல் கண்டிப்பாக வெளிச்சம் கிடைக்கும் என்றது. அதன்படி மின்மினிப் பூச்சியைப் பிடித்து கொண்டு தன் வீட்டிற்கு வேகமாக சென்றது.(tamil kids stories)
தன் அப்பா வருகைக்காக காத்திருந்த குட்டிக் குருவி குஞ்சு. உனக்காக அப்பா ஒன்று கொண்டு வந்துள்ளேன் என்று ஆண்குருவி கூறியது. அது என்ன அப்பா என்று குட்டி குருவி ஆசையாக கேட்டது இந்த மின்மினிப் பூச்சியை நமது கூட்டில் வைத்தால் வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும் என்றது. ஆனால் குட்டிக் குருவி குஞ்சு அப்பா எனக்கு இந்த வெளிச்சம் போதவில்லை என்று கூறியது. ஆண் குருவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றது. அன்று இரவில் பெண் குருவி தன் பிள்ளையான குட்டி குருவிக்கு எடுத்துரைத்து தூங்க வைத்தது. குட்டிக் குருவி தூங்கிய பிறகு ஆண் குருவி இடம் வெளிச்சத்திற்கு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியது.(tamil kids stories)
மறுநாள் மீண்டும் தன் நண்பரை சந்தித்து நடந்ததைக் கூறியது ஆண் குருவி. ஆண் குருவியின் நண்பன் நண்பா உனக்கு அந்த வெளிச்சம் போதுமானதாக இருக்கும் என்று கூறியது. அதற்கு ஆண்குருவி இல்லை எனக்கு இன்னும் அதிக வெளிச்சம் தேவை என்று கூறிவிட்டு பறந்து சென்றது ஆண் குருவி. ஆண் குருவி மேலே பறந்து கொண்டிருக்கும் பொழுது நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை கண்டது. இந்த நெருப்பு எடுத்துக் கொண்டு நம் வீட்டிற்கு சென்றால் வெளிச்சம் அதிகமாக வெளிச்சம் கிடைக்கும் என்று நம்பியது.ஒரு முனையில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது மறுமுனையில் எதுவும் இல்லாமல் இருந்தது அதை ஆண்குருவி பிடித்துக் கொண்டு எடுத்துக் கொண்டு சென்றது. ஆனால் அப்போது தெரியாது அந்த நெருப்புப் நெருப்பு கட்டை தன் வம்சத்தை இல்லாமல் ஆக்கிவிடும் என்பது. (Tamil kids stories)
வீட்டிற்கு சென்றவுடன் அந்த நெருப்பு கட்டை பார்த்து குட்டிக் குருவி நம் வீட்டிற்கு அதிக வெளிச்சம் கிடைக்கிறது என்று சந்தோஷம் அடைந்தது. வெளிச்சம் கிடைத்த சந்தோஷத்தில் மூன்று குருவிகளும் உறங்கிக் கொண்டிருந்தது. நெருப்பு கட்டை படிப்படியாக எறிந்து குருவிக் கூட்டில் அடியில் வந்தது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் அந்த குருவி கூடானது தீப்பிடித்து எரியும் தருவாயில் இருந்தது. நெருப்பு அருகில் எறிவது கூட தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தது. தீ மிக அருகில் வந்தது எதிர்பாராதவிதமாக ஆண் குருவியின் நண்பன் தூரத்திலிருந்து பறந்து வந்து தன் நண்பனின் குடும்பத்தை காப்பாற்றியது.நண்பா நீ மட்டும் வரவில்லை என்றால் என் குடும்பம் உயிருடன் இருந்திருக்காது என்று கண்ணீருடன் தெரிவித்தது. நண்பா நான் தான் கூறினேன் அந்த மின்மினிப்பூச்சி வெளிச்சம் உனக்கு போதுமானது என்று நீ ஏன் கேட்கவில்லை என்று கேட்டது. இல்லை வீட்டிற்கு அதிக வெளிச்சம் வேண்டும் என்ற பேராசையில் நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று வருத்தத்துடன் தெரிவித்தது. இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என்று கூறியது. வெளிச்சம் நிறைந்த பகுதியில் குருவி புதிதாக தன் வீட்டைக் கட்டியது. தன்னிடம் இருப்பதை வைத்து ஆண்குருவி வாழக் கற்றுக் கொண்டது. குட்டி குருவிக்கும் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது.
இந்த கதையின் மூலம் நம்மிடம் என்ன உள்ளதே அதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் குருவி கதையின் மூலம் கூறப்பட்டுள்ளது.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
0 Comments
thanks for your comments