கனவில் வந்த தேவதை...
ஒரு ஊரில் ராஜா எனும் ஒருத்தன் இருந்தான். அவன் தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறார். தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்து விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறான். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத இளைஞனாக இருந்தான். அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் ராஜாவை பிடிக்கும். ராஜாவிற்கு தனது பெற்றோரை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவனது தினசரி வாழ்க்கையில் தினமும் வேலைக்கு செல்வான் பிறகு வீட்டிற்கு வந்து வீட்டு வேலை ஏதாவது செய்வான் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நல்ல பிள்ளையாக இருந்தான்.
ராஜாவிற்கு திருமண வயது நெருங்கிக் கொண்டிருந்தது. ராஜாவின் பெற்றோர் ராஜா உனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நானும் உனது தந்தையும் முடிவு செய்துள்ளோம். என்று கூறினார். சரி அம்மா உங்கள் விருப்பம் என்று தெரிவித்தான். அப்போது அவனுக்கு தெரியாது அவனது வாழ்க்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்னவென்று. ஆனால் மற்றவர்களை போல ராஜாவுக்கு காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அன்று எப்போது போல ராஜா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்று விட்டான். என்றைக்கும் இல்லாத அளவில் அவன் பணிபுரியும் அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்தது அந்த அசதியில் நன்றாக உறங்கினான்.(tamil love stories)
அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வெகு தொலைவில் இருந்து ஒரு பெண் அவனை நோக்கி ஓடி வருவதை உணர்ந்தான். அவனது அருகில் ஓடிவந்து ஏன் என்னை இவ்வளவு காலமாக காக்க வைக்கிறாய் என்று கேட்டாள் செய்வதறியாமல் திகைத்து நின்றான் ராஜா. கண்டவுடன் காதல் எனும் வார்த்தைகளுக்கு இப்போதுஅவன் காதலில் விழுந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்து அவன் சொன்ன கவிதை.(tamil love stories)
""அந்த விண்மீன்கள் கூட தோற்றுப் போகும் உன் கண்களைக் கண்டால். அழகான ரோஜாவில் இதழ்கள் கூட உன் அழகைப் பார்த்தால் தலைகுனிந்து நிற்கும்""
என்றான். ஆனால் ராஜாவிற்கு தெரியாது அவன் கனவில் உளறிக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்மணி இன்னும் என்னை காக்க வைக்காதே என்றால் திடீரென உறக்கத்திலிருந்து ராஜா விழித்துக்கொண்டான்.
தான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் படுக்கை அறையில் இருந்து எழுந்து அமர்ந்தான் சற்று யோசித்தான். யார் இந்த பெண் என்னிடம் வந்து ஏன் அவ்வாறு கூறவேண்டும் என்று யோசித்தான் மணி சரியாக ஐந்து மணி ஆனது. அவன் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டேன் விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று நினைத்தான். (Tamil Love Stories)
அன்று விடிந்த பிறகு எப்பொழுதும் இல்லாமல் ராஜா அன்றைக்கே நேரமாக தனது வேலையை பார்க்க சென்றான். அவன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சற்று நின்று யோசிக்க ஆரம்பித்தான். அவன் ஒரு விதமான குழப்பத்திலேயே யார் இந்த பெண் என்று யோசித்துக்கொண்டே இருந்தான். இப்படியே ஒரு சில நாட்கள் கடந்தது. ராஜா தனது தினசரி வாழ்க்கையிலிருந்து சற்று தடுமாற்றமான நிலையில் இருந்தான்.
திடீரென ஒருநாள் அவன் கனவில் கண்ட பெண்ணை நேரில் பார்த்தான். அதுவரைக்கும் அந்த பேருந்து நிறுத்தத்தில் யாரிடமும் பேசாத ராஜா அந்த பெண்ணை பார்த்தவுடன் தனியாக நின்று வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான். அந்தப் பெண் வேறொரு பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தாள் தினசரி ராஜா செல்லும் பேருந்து வந்தது ஆனால் அவன் பேருந்தில் ஏற வில்லை. அந்த பெண்ணை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான் அந்தப் பெண் எந்த பேருந்தில் ஏற போகிறாள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெண் செல்லும் பேருந்து வந்ததும் அதே பேருந்தில் ராஜாவும் ஏறினான். அந்தப் பெண்ணை பார்த்தபடி செய்வதறியாமல் திகைத்து போனாரன். அந்தப் பெண்ணைப் பார்த்த கணம் முதல் ராஜா அந்த பெண்ணின் நினைவாகவே இருந்தான். இப்படியே சில நாட்கள் கழிந்தது.(tamil love stories)
அந்தப் பெண்ணிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று ராஜா ஏங்கினான். அந்த பெண் திடீரென ராஜாவிடம் வந்து உங்களிடம் சற்று பேச வேண்டும் என்று கூறினார். ராஜாவின் உடல் நடுங்குகின. அந்தப் பெண் ஏன் என்னை தினமும் பின் தொடர்ந்து வருகிறாய் என்று கேட்டால் ராஜா தன் கனவில் கண்ட எல்லாவற்றையும் அந்தப் பெண்ணிடம் கூறினான். அந்தப் பெண் சற்று வியப்பாக ராஜாவை பார்த்தாள். எனக்கு உங்களின் மீது காதல் எதுவும் கிடையாது. என்று கூறினால் நீங்கள் உண்மையாகவே என்னை விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிய வேண்டுமென்றால். உங்களின் மீது உள்ள காதலை நான் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று ராஜா கேட்டான்.(tamil love stories)
நீங்கள் தினமும் என்னைப் பின் தொடர வேண்டாம் என்றாள். அந்தப் பெண்ணின் நிலையை எடுத்து உணர்த்தினாள். அந்தப் பெண்ணின் நிலையை உணர்ந்த ராஜா நான் கனவில் கண்ட என் முதல் தேவதை நீங்கள் தான் என்றான். உங்களைத் தவிர வேறு எந்த ஒரு பெண்ணையும் என் வாழ்நாளில் நான் பார்த்தது கிடையாது என்று கூறினார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையானது என்றால் எனக்காக ஒரு சில வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றாள். அந்தப் பெண் மீண்டும் நாளைக்கு இதே இடத்தில் உங்களது பதிலை கூறுங்கள் என்றாள். (Tamil love stories)
வீட்டிற்கு சென்ற ராஜா தனது பெற்றோர் அவன் திருமணத்திற்காக ஒரு பெண்ணின் போட்டோவை காட்டினார்கள் ஆனால் ராஜா எனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறினான். ராஜாவின் தாய் ஏன் போட்டோவை பார்க்காமல் வேண்டாம் என்று கூறுகிறாய் என்று கேட்டார். ராஜா எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
மறுநாள் அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்ற ராஜா நான் உங்களுக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்றும் கூறினான். அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் மௌனமாக சென்றாள்.
பெயர் தெரியாத அந்த பெண்ணிற்காக
தற்போது வரை அந்த பெண் என்ன கூறுவாள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் ராஜா.
தொடரும்...
0 Comments
thanks for your comments