ஓநாய் மனிதன் (tamil horror stories)
ஒரு ஊரில் வீரா எனும் இளைஞன் ஒருவன் இருந்தான். அந்த ஊரில் மிகவும் பலசாலியான ஒரு இளைஞன் என்றால் அது வீராவை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு மிகவும் பலசாலியாக இருப்பான். மற்றவர்களுக்கு மிகுந்த உதவியும் செய்வான். இவனுக்கு பக்கத்து ஊரில் மிகவும் நெருக்கமான பாலா என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். பாலா பக்கத்து ஊர் என்பதால் அடிக்கடி சந்திக்க செல்வான். தற்போது வீரா அதிக வேலை சுமை காரணமாக கடந்த இரு வருடங்களாக தனது நண்பனை காண செல்லவில்லை. இருந்தாலும் கூட நண்பனைப் பற்றி ஒரு சிந்தனை அவனுக்கு எப்போதும் இருக்கும். அந்த ஊரில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு முதல் குரல் விரா தான் கொடுப்பான்.
(tamil horror stories)பாலாவின் வீட்டிற்கு சென்றதும். வீரா குளித்துவிட்டு வா இரவு சாப்பாடு சாப்பிடலாம் என்று பாலா கூறினான். வீரா குளித்து விட்டு வெளியே வந்தான் இருவரும் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டனர். மணி சரியாக 09:30 ஆனது. வீரா சீக்கிரம் வா நாம் உறங்கச் செல்லலாம் என்று பாலா கூறினான். ஏன் பாலா என்ன ஆயிற்று என்று வீரா கேட்டான். நாம் இரவில் வெளியே சுற்றிப் பார்க்கச் செல்லலாம் என்று வீரா கூப்பிட்டான். இல்லை வீரா இந்த ஊர் நல்ல நிலைமையில் இல்லை. ஏன் என்ன ஆயிற்று என்று வீரா கேட்டான். நீ கடைசியாக வந்து சென்ற பிறகு இந்த ஊரில் பல அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.(tamil stories)
என்ன பாலா கூறுகிறான். அமானுஷ்யமான விஷயங்களா என்று வீராஆச்சரியமாக கேட்டான். எங்கள் ஊரில் ஓநாய் போன்ற உருவமுடைய ஒரு மனிதன் சுற்றி வருகிறான். அவன் கண்களில் படும் ஆடுகளையும் மாடுகளையும் ஒரு சில சமயம் மனிதர்களையும் கூட தாக்குவான். ஆடுகளையும் மாடுகளையும் தன் இறையாக்கிக் கொள்வான். அதனாலேயே இரவு 10 மணிக்கு மேல் இந்த ஊரில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்று பாலா கூறினான். இதை நம்பாமல் வெளியே போன ஒரு சில மனிதர்களின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அதில் ஒருவர் மட்டும் ஓநாய் மனிதன் இடம் அடிபட்டு உயிருக்குப் போராடிய நிலைமையில் நாங்கள் மீட்டோம். அவர்தான் கூறினார். ஓநாய் வடிவில் ஒரு உருவம் சுற்றி வருகிறது என்று. இதைக் கேட்ட நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றோம். இரவு 10 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேம்.(tamil horror stories)
இதனால்தான் நான் உன்னை காண ஊருக்கு வர முடியவில்லை என்று பாலா வருத்தமுடன் தெரிவித்தான். இரவு 10 மணி ஆனால் அந்த ஓநாய் மனிதனின் அலறல் சத்தம் கேட்கும் எனக்கு மிகவும் பயமாக இருக்கும் என்று பாலா மிகவும் பயத்துடன் தெரிவித்தான். அன்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர். காலைப் பொழுது விடிந்தது இதற்கு ஏதாவது வழிகள் இருக்க வேண்டுமென்று ஒரு சித்தரிடம் கேட்கச் சென்றனர்.(tamil horror stories)
சித்தரை காண பாலாவும் வீராவும் விரைவாக புறப்பட்டு சென்றனர். சித்தரை கண்டதும் பாலாவின் ஊரில் நடக்கும் செயல்களைப் பற்றி வீரா சித்தரிடம் கூறினான். சித்தர் அனைத்தையும் அமைதியாக கேட்டறிந்தார். வீரா இதற்கு கண்டிப்பாக வழிகள் இருக்க வேண்டும் சற்று பொறுமையாக இரு நான் இதற்கு என்ன வழிகள் இருக்கிறது என்று ஆலோசித்து உனக்குக் கூறுகிறேன் என்று சித்தர் தெரிவித்தார். ஒரு சில மணி நேரங்கள் ஆனது. சித்தர் என்ன கூறுவார் என்று தெரியாமல் பாலாவும் வீராவும் அமைதியாக காத்துக்கொண்டிருந்தனர். சித்தர் தவ நிலையில் இருந்து கண்களைத் திறந்தார். வீரா இங்கே வா என்று கூறினார். இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சித்தர் கூறினார்.(tamil horror stories)
அந்த ஓநாய் மனிதன் நம்மைப் போன்று ஒரு சாதாரண மனிதன் தான். ஒரு சாபத்தினால் அவன் தற்போது ஓநாய் மனிதன் போல இருக்கிறான். இவன் ஒரு மனிதன் என்பதால் அழிக்க முடியாது. இவனை மாற்றுவதற்கு ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கிறது. சித்தரே அந்த வழி என்னவென்று எங்களுக்குக் கூறுங்கள் அதன்படி நாங்கள் செய்கின்றோம். என்று வீரா கூறினான். சொல்கிறேன் என்ற சித்தர் கூறினார். அந்த வழி என்னவென்றால் அந்த ஓநாய் மனிதன் உடன் நேருக்கு நேராக நின்று சண்டையிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே முடியும் என்று சித்தர் கூறினார். அது அவ்வளவு சுலபம் அல்ல அவன் மிகவும் பலசாலி.(tamil horror stories)
வரும் சித்திரை பௌர்ணமி அன்று அந்த ஓநாய் மனிதனின் சக்திகள் சற்று குறையும் அந்த நேரம் பார்த்து சண்டையிட்டால் அந்த ஓநாய் மனிதனை வீழ்த்த முடியும் என்று சித்தர் கூறினார். சித்தருக்கு நன்றி கூறிவிட்டு பாலாவும் வீராவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தனது ஊருக்குள் வந்தன. அன்று இரவு பொழுது மீண்டும் ஓநாய் மனிதனின் சத்தம் கேட்டது. விடியற்காலை பொழுது வந்தது. பாலாவும் வீராவும் ஒன்றாக சென்று ஊர் பொதுமக்களிடம் அந்த விஷயத்தைக் கூறினர். இதைக்கேட்ட ஊர்மக்கள் அந்த ஓநாய் மனிதன் இடம் யார் சண்டையிடுவது என்று குழம்பி இருந்தனர். இது மிகவும் கடினம் என்று ஊர் பொதுமக்கள் கூறினர். பாலா இதற்கு இது ஒன்றுதான் வழி என்று கூறினார்.(tamil horror stories)
ஊர் பொதுமக்கள் நீ சண்டையிட வேண்டியதுதானே என்று பாலாவிடம் கேட்கின்றனர். ஆனால் பாலா எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றான். தனது நண்பன் தலைகுனிவை கண்ட வீரா நான் அந்த ஓநாய் மனிதன் உடன் சண்டை இடுகிறேன் என்று தைரியமாக கூறினான். பாலா இல்லை வீரா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். இல்லை பாலா கண்டிப்பாக நான் தான் சண்டை இடுவேன் என்று வீரா கூறினான். ஒருவழியாக பொதுமக்களையும் பாலாவையும் வீரா சம்மதிக்க வைத்தான். சித்திரை பௌர்ணமி வருவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் உள்ளன அதற்குள் நான் தயாராக வேண்டும் என்று வீரா கூறினான். வீரா மிகவும் தைரியசாலி எதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று துணிவுடன் இருப்பான்.(tamil horror stories)
இரண்டு தினங்கள் முடிந்தது அன்று இரவு 8 மணி ஆனது முழு நிலவும் காட்சி தெரிந்தது. வீரா தனக்கு விருப்பமான தெய்வத்தை வணங்கினான். ஊர் பொதுமக்களும் பாலாவும் வீராவை தயார் படுத்தினர். தங்கள் ஊரில் உள்ள கோயில்களில் பூஜை செய்து தெய்வத்தை வழிபட்டனர். இரவு ஒன்பது முப்பது மணி ஆனது. ஊர் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். ஆனால் பாலா நான் உன்னுடன் இருக்கிறேன். உன்னுடன் போராடுகிறேன் என்று கூறினான். இல்லை பாலா நீயும் வீட்டிற்குள் செல் என்று வீரா கூறினான். பாலாவை வீட்டிற்குள் அனுப்பி வைத்தான். ஆனால் பாலாவிற்கு மனமில்லை வீட்டில் இருந்தபடியே என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான்.(tamil horror stories)
இரவு 10 மணி ஆனது தூரத்தில் ஓநாய் மனிதன் வரும் சத்தம் கேட்டது. தெய்வத்தின் மீது உள்ள நம்பிக்கையில் வீரா தனியாளாக அதை எதிர்க்கத் துணிந்து நின்றான். ஓநாய் மனிதன் வீராவை பார்த்தான். முதன்முதலாக ஓநாய் மனிதனை கண்ட தைரியமாக அதை எதிர்த்து துணிந்து நின்றான். அந்த ஓநாய் மனிதன் வீராவை பார்த்து வேகமாக ஓடி வந்தான். தயார் நிலையில் நின்ற வீரா அதன் வேகத்தை நோக்கி நின்றான். வேகமாக வந்த ஓநாய் மனிதன் வீராவை தூக்கி எறிந்தான். சித்தர் கூறியது போல அதன் பலம் குறைவாக இருக்கும் என்று வீரா நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதன் வீரம் சற்றும் கூட குறையவில்லை.
வீராவை தூக்கி எறிந்தது. வீராவை அடித்தது. ஆனாலும் கூட வீரா அதை எதிர்த்து சண்டையிட்டான். வீராவின் முழு சக்தியை பயன்படுத்தினான். ஆனாலும் கூட அந்த ஓநாய் மனிதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. வீட்டிலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த பாலா இனிமேலும் பொறுக்க முடியாது எனது உயிர் போனால் போகட்டும் என்று வெளியே வந்தான். தனது நண்பனை அடித்துக்கொண்டிருந்த ஓநாய் மனிதனை பாலா கட்டையை எடுத்து அடிக்க சென்றான். ஆனால் அந்த ஓநாய் மனிதன் பாலாவை திருப்பித் தாக்கினான். பாலாவும் வீராவும் அடிப்பட்ட நிலையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நின்றனர். பாலாவும் வீராவும் சேர்ந்து தாக்கலாம் என்று முடிவு செய்தனர்.(tamil horror stories)
இருவரும் சேர்ந்து தாக்கியதால் அந்த ஓநாய் மனிதன் ஆல் எதுவும் செய்ய முடியவில்லை. இருவரின் வீரத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஓநாய் மனிதனை மிகவும் வேகமாக தாக்கினர். அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓநாய் மனிதன் வீரம் அடக்கப்பட்டது. பௌர்ணமி தினத்தன்று ஓநாய்மனிதனின் சக்தி அடங்கியது. வீரம் அடைக்கப்பட்டதால் சாபத்திலிருந்து விமோசனம் அடைந்தது. ஓநாய் மனிதன் வடிவத்திலிருந்து சாதாரண மனிதனாக மாறினான். எனது வீரம் அடைக்கப்பட்டதால் என்னை மனிதனாக மாற்றியதற்கு உங்கள் இருவருக்கும் நன்றிகள் என்று அந்த மனிதன் கூறினான். உங்கள் இருவருக்கும் நன்றி கூறிவிட்டு அந்த ஓநாய் மனிதன் மறைந்தான்.
ஒருவழியாக அந்த ஊருக்கு விடிவுகாலம் பிறந்தது. பாலாவும் வீராவும் ஊருக்கு விடிவை தேடித் தந்தனர். அந்த ஊர் மக்கள் அனைவரும் உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றிகள் என்று கூறினர். இனி இரவுப்பொழுதில் அச்சமில்லாமல் உறங்கலாம் என்று வீரா கூறினான். பாலா இனி உனக்கு ஊர் நன்றாக இருக்கும். நான் ஊருக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வீரா அங்கிருந்து புறப்பட்டான்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்..
இது போன்ற கதைகளை மறக்காமல் படிப்பதற்கு நமது telegram channel join செய்து கொள்ளவும். லிங்க் கீழே உள்ளது.
0 Comments
thanks for your comments