வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகள்.( tamil motivational)


வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகள்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்தால் ஏதாவது ஒரு வழியில் நாம் முன்னேறி விடுவோமா? மாட்டோமா? என்று பலரது மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் இதை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் தயவு செய்து செய்யாதீர்கள்.
எவையெல்லாம் நாம் செய்யலாம், எவையெல்லாம் நாம் செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம். (Tamil motivational stories)

1. திட்டமிடுதல்.

உங்களது வாழ்க்கையில் நீங்கள் தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கென்று ஏதாவது ஒரு திட்டம் தோன்றும் இதை செய்தால் நம் வாழ்க்கையில் முன்னேறிவிடலாமா? இல்லை, அதை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாமா? என்று ஏதாவது ஒரு எண்ணம் உங்களுக்குள் தோன்றும். அப்படி உங்கள் மனதில் தோன்றும் எண்ணத்தை தயவுசெய்து நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்களே அதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள் அது சரியாக வருமா? இல்லை சரியாக வராதா? என்று உங்களுக்கே தோன்றும். நாம் அதை மற்றவர்களிடம் சொல்லும் போது அவர்கள் உங்களிடம் நெகட்டிவாக மட்டுமே பேசுவார்களே தவிர உங்களிடம் பாசிட்டிவாக பேச மாட்டார்கள். உங்களுக்குள் தோன்றிய திட்டத்தை உங்கள் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளலாம். மற்ற யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களின் நண்பனாக இருந்தாலும் சரி அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் நாம் எதை நினைக்கின்றோமோ? அது நமக்கு மட்டுமே சரியாக வரும் ஆனால் மற்றவர்களின் பார்வையில் அது சரியாக இருக்காது. அதனால் அவர்கள் உங்களை நெகட்டிவாக தான் பேசுவார்கள். 

உண்மையில் அவர்கள் நீங்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு திட்டத்தை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் இது சரியாக இருக்கும் நீ முயற்சி செய்! என்று ஒரு பாசிட்டிவாக எப்போதும் பேச மாட்டார்கள். அப்படி பாசிட்டிவாக பேசினால் அவர்களை எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடாதீர்கள். (Tamil motivational stories)

2. திட்டத்தை செயல்படுத்துதல்.
உங்கள் மனதில் தோன்றிய திட்டத்தை செயல்படுத்த அதற்கென்று ஒரு நேரம் உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒதுக்கியாக வேண்டும். நீங்கள் காலையில் 9:00 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பினாலும் கூட வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுமுறை உங்களுக்கு இருந்தால் அந்த நாள் உங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு என்ன வழியோ அதை செய்யுங்கள். உங்கள் மனதில் தோன்றிய திட்டத்தை நீங்கள் செயல்படுத்தி விட்டால் அதுவே உங்கள் முதல் வெற்றி. யார் எதைப் பற்றி சொன்னாலும் கூட எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்களுக்கு என்ன வேண்டுமோ? என்று உங்களுக்கு தான் தெரியும். ஆதலால் அந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்துங்கள்.(Tamil motivational stories)

3. பொறுமையாக இருத்தல்.
நீங்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்திய பிறகு அது எடுத்த உடனே வெற்றியை கண்டிப்பாக தராது நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இன்னும் உங்களுக்கு தெளிவாக கூற வேண்டுமென்றால் நீங்கள் ஒரு டீ கடை ஒன்று வைத்தால் அது முதல் நாளிலேயே பல்லாயிரம் வருமானம் கண்டிப்பாக வராது. முதலில் உங்கள் கடைக்கு ஒரு சில வாடிக்கையாளர்கள் வருவார்கள் அவர்கள் நீங்கள் போட்டுக் கொடுத்த டீ குடித்து விட்டு அந்த டீ மிகவும் சுவையாக இருந்தால் அவர்கள் மற்ற நண்பர்களிடம் சொல்லுவார்கள். அதன் பிறகு அவர்களின் நண்பர்கள் கடைக்கு வர உங்களின் வருமானம் பெறுக ஆரம்பிக்கும். ஆதலால் ஒரு திட்டத்தை செயல்படுத்திய பிறகு காத்திருப்பது மிகவும் அவசியமானது. (Tamil motivational stories)

4. விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை
நீங்கள் செயல்படுத்திய திட்டம் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்கிறீர்கள். நாம் எந்த இடத்தில் தவறு செய்கிறோம். என்பதை முதலில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் பிறகு தவறு செய்த இடத்தில் இருந்து மீண்டும் அதை விடாமுயற்சியுடன் ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் அத்தனை முறை நீங்கள் எழுந்து நிற்க தயாராக இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் உங்களின் விடாமுயற்சியை கண்டு அந்த ஆண்டவனே இவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறானே! இவனுக்கு கண்டிப்பாக நாம் உதவி செய்தாக வேண்டும் என்று மனம் இறங்கி உங்களின் திட்டத்தை வெற்றி பெற செய்வார். உங்களின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து நீங்கள் செயல்படுத்திய திட்டத்தில் முழு தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.(Tamil motivational stories)

5. கடந்து வந்த பாதையை மறவாத இருத்தல்.
நீங்கள் செயல்படுத்திய திட்டம் மிகச் சிறப்பாக சென்ற பிறகு, நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களுக்கு அதிக வருமானம் வந்த பிறகு , நீங்கள் எந்த இடத்தில் இருந்து உங்கள் வாழ்க்கையை தொடங்கினீர்கள் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். நீங்கள் கடந்து வந்த பாதையை நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகு ஒரு முறையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களைப் போல உங்களின் கஷ்ட காலங்களில் உங்களுக்கு உதவி செய்பவர்களை நீங்கள் அவர்களை மறக்கக் கூடாது அவர்கள் கஷ்டப்படும் காலத்தில் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு மேலும் மேலும் வெற்றி தேடி தரும் இல்லையென்றால் செல்வம் பெருகும்.(Tamil motivational stories)

6. பெருமையாக பேசுதல் வேண்டாம்.
நீங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களிடம் நிறைய செல்வங்கள் சேர்ந்த பிறகு உங்களைப் பற்றி நீங்களே மற்றவர்களிடம் பெருமையாக பேசுதல் வேண்டாம். மற்றவர்கள் யாராவது உங்களைப் பற்றி பெருமையாக பேசினாலும் கூட அந்த இடத்தில் இருந்து சிறிய புன்னகையுடன் பேசிவிட்டு அங்கிருந்து விலகி சென்று விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் கஷ்ட காலத்தில் கண்டிப்பாக உதவி இருக்க மாட்டார்கள். நீங்கள் எப்போது மீண்டும் கீழே விழுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். எனவே நீங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களைப் பற்றி நீங்களும் பெருமையாக பேசுதல் இருக்கக் கூடாது. மற்றவர்கள் யாராவது பெருமையாக பேசினால் நீங்கள் அந்த இடத்தில் இருக்க கூடாது. ஏனென்றால் அவர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசும் போது உங்களை அறியாமலே உங்களுக்கு தலைகனம் என்னும் ஒரு அரக்கன் உங்கள் தலையில் ஏறிக்கொள்ள வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.(Tamil motivational stories)

 இறைவன் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை கண்டிப்பாக தருவார். அந்த வாய்ப்பை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி பெறலாம். வாய்ப்பை சரியாக பயன்படுத்தாவிட்டால் உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு. இறைவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பதை அதை யார் தடுத்தாலும் அதை நிறுத்த முடியாது. உங்களுக்கென்று ஒன்று படைக்கப்பட்டிருந்தால் அது எந்த விதத்திலாவது உங்களை வந்து சேரும். இறைவன் கொடுக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இறைவன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களுக்கு செல்வம் சேர்ந்த பிறகு உங்களுக்கு தலைகனம் எனும் ஒரு அரக்கன் மட்டும் உங்களது தலையில் ஏறிக் கொண்டால் நீங்கள் அளவுக்கதிகமாக ஆட்டம் போட்டாள் இறைவன் உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை பறித்துக் கொள்வார்.
மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம். அதனால் உங்களிடம் பணம் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரி இருத்தல் வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கையில் இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் வெற்றி பெறலாம் வெற்றி பெற்ற பிறகு கடந்து வந்த பாதையை எக்காரணத்தை கொண்டும் மறக்க வேண்டாம்.

நன்றி! வாழ்க வளமுடன்!

இதே போல மேலும் பல பயனுள்ள கருத்துக்களை கேட்க விரும்பினால் நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்..

https://telegram.me/realtamilstories

இதுபோன்ற மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது யூடியூப் சேனல்யை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
https://www.youtube.com/channel/UCKyBu3ioVKQlQhEoBmwkPxw





Post a Comment

0 Comments