ஒரு ஊரில் ஒரு காகம் தன் அழகான வீட்டை ஒரு மரத்தின் கிளையில் கட்டியிருந்தது. அந்தக் கூட்டில் காகம் ஒரு முட்டையை இட்டு அடைகாத்து வந்து கொண்டிருந்தது. காலைப் பொழுதில் உணவைத் தேடி வெளியே சென்று விட்டு மீண்டும் மாலை பொழுதில் தான் வந்து சேரும். அன்று காலைப் பொழுதில் காகம் வழக்கம் போல உணவை தேட வெளியே சென்று விட்டது. அந்த நேரத்தில் அதே கூட்டில் கூடு கட்ட தெரியாத சிட்டுக்குருவி ஒன்று காகம் இல்லாத நேரத்தில் வந்து ஒரு முட்டையை இட்டுச் சென்றது. அந்த சிட்டுக்குருவிக்கு ஞாபக மறதி என்பதால் எந்த கூட்டில் முட்டை இட்டேம் என்பதை மறந்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டது. மாலைப்பொழுதில் காகம் தன் கூட்டிற்கு வந்தது. (tamil kids stories)
காகம் தன் கூட்டிற்கு வந்தபோது அங்கு இன்னொரு முட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. என்ன இது நமது கூட்டில் இன்னொரு முட்டை இருக்கிறது. என்பதை கண்டு அதிர்ச்சியாக இருந்தது. பரவாயில்லை இந்த முட்டையும் நாம் அடைத்துக்கொள்ளலாம் என்று காகம் நினைத்தது. இப்படியே ஒரு சில நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஒரு சில நாட்களில் முட்டையிலிருந்து காக்கை குஞ்சும், சிட்டுக்குருவி முட்டையிலிருந்து சிறிய சிட்டுக்குருவியும் முட்டையிலிருந்து வெளியே வந்தது. வெளியே வந்த காக்கை குஞ்சம், சிட்டுக்குருவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது. (tamil kids stories)
இரண்டு குஞ்சுகளும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்ட போது காக்கை குஞ்சு என்னை போல் நீ இல்லையே என்று நினைத்தது. அதேபோல சிட்டுக்குருவியும் என்னைப் போல நீயும் இல்லையே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டது. அது மாலை வேலை என்பதால் காக்கை தனது உணவை எடுத்துக் கொண்டு கூட்டிற்கு வந்தது. வந்து பார்த்ததும் இரண்டு குஞ்சுகளும் முட்டையில் இருந்து வெளியே வந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தது. காக்கைக் தன் இரண்டு குஞ்சுகளயும் ஒன்றாகவே நினைத்தது. இந்த மாலை வேளையில் தன் இரண்டு குஞ்சுகளுக்கும் காகம் தான் கொண்டு வந்த உணவை இரண்டு குஞ்சுகளுக்கும் கொடுத்தது. எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் இரண்டு குஞ்சுகளுக்கும் ஒன்றாகவே உணவை கொடுத்து வந்தது. (tamil kids stories)
இப்படியே ஒரு சில நாட்கள் கழிந்தன. காகமும் சிட்டுக்குருவியும் நன்றாக வளர்ந்து விட்டன. திடீரென்று ஒரு நாள் மாலை வேளையில் தன் அம்மா காகம் வீட்டிற்கு வந்த பிறகு உணவை சாப்பிட்ட பின்பு நல்ல மழை பெய்தது. அந்த மழையில் ஒரு மின்னல் அந்த மரத்தை தாக்கவே அங்கிருந்த தாய் காகம் தன் இரண்டு குஞ்சுகளையும் காப்பாற்றி விட்டு மரணம் அடைந்தது. தன் அம்மா இறப்பை நினைத்து இரண்டு குஞ்சுகளும் வருத்தம் அடைந்தது. இனிமேலும் அந்த மரத்தில் வாழ முடியாது என்று நினைத்து காகமும் சிட்டுக்குருவியும் ஒன்றாக பறந்து வேறு ஒரு மரத்திற்கு சென்றது. அந்த மரத்தில் ஏற்கனவே பல கூடுகள் இருந்த நிலையில் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றன. (tamil kids stories)
அப்போது அந்த சிட்டுக்குருவி நம் இதே மரத்தில் நமக்கென்று ஒரு கூடு கட்டிக் கொள்ளலாம் என்று காக்கை இடம் சொன்னது. காகமும் அதற்கு சரி என்று சொன்னது. சிட்டுக்குருவிக்கு கூடு கட்ட தெரியாத நிலையில் காக்கை மட்டும் கூடு கட்ட ஆரம்பித்தது. சிட்டுக்குருவி அந்த காக்கைக்கு உதவி புரிந்தது. ஒரு வழியாக அந்த கூட்டை இருவரும் சேர்ந்து கட்டி விட்டனர். அங்கிருந்த மற்ற பறவைகள் இவர்களை சற்று வித்தியாசமாக பார்த்தன. ஒன்று காகம் இன்னொன்று சிட்டுக்குருவி இவர்கள் இரண்டு பேரும் எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும் என்று நினைத்து இவர்களிடம் கேட்டது. அதற்கு சிட்டுக்குருவியும் காகமும் நாங்கள் சிறுவயது முதல் ஒன்றாகத்தான் வளர்ந்து வருகின்றோம் என்று கூறியது.(tamil kids stories)
அங்கு புதிதாக கட்டி வந்த கூட்டில் சிட்டுக்குருவியும் காகமும் ஒரு சில நாட்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். மற்ற பறவைகளுக்கு இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருப்பதைக் கண்டு பொறாமை கொண்டு இருந்தனர். அங்கிருந்து மற்ற பறவைகள் இவர்கள் இரண்டு பேரையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டினர். அதற்கு என்ன செய்யலாம் என்று மற்ற பறவைகள் யோசித்துக் கொண்டிருந்தன. முதலில் காக்கையுடனும் சிட்டுக்குருவியுடனும் ஒன்றாக நாம் பழக வேண்டும் என்று நினைத்து அதேபோல் ஒன்றாக பழக ஆரம்பித்தன. (tamil kids stories)
காக்கை இல்லாத நேரத்தில் சிட்டுக்குருவி உடன் சென்று நட்பாக பேசுவது போல நடித்து காக்கை பற்றி தப்பு தப்பாக பேசி சிட்டுக்குருவி நம்ப வைக்க மற்ற பறவைகள் முயற்சித்தது. அதேபோல் சிட்டுக்குருவி இல்லாத நேரத்தில் காக்கையுடன் சென்று சிட்டுக்குருவியைப் பற்றி தப்பு தப்பாக பேசியது மற்ற பறவைகள். இந்த சிட்டுக்குருவியும் காகையும் ஒன்றாக வளர்ந்த காரணத்தால் இவர்களைப் பற்றி மற்றவர்கள் யார் எது சொன்னாலும் இருவரும் பரிமாறிக் கொள்வார்கள். சிட்டுக்குருவி காக்கையிடம் உன்னைப்பற்றி பஎன்னிடம் கூறினார்கள் என்றும் காக்கை சிட்டுக்குருவியிடம் உன்னைப் பற்றி என்னிடம் இவ்வாறு கூறினார்கள் என்றும் இருவரும் தங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். (tamil kids stories)
இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தாய்காகம் இவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான புத்தியை கூறியிருந்தது. அந்த காரணத்தால் இருவரும் தற்போது இவர்களைப் பற்றி யார் என்ன கூறினாலும் பகிர்ந்து கொள்கின்றனர். மறுநாள் காலை அதேபோல நடந்தது. உணவு தேடி காகம் வெளியே சென்று இருக்கிறது என்று நினைத்த மற்ற பறவைகள் சிட்டுக்குருவி இடம் வந்து காக்கை பற்றி கூறும் போது அந்த நேரத்தில் காக்கை வந்தது. காக்கை வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பறவைகள் நீங்கள் எங்களைப் பற்றி என்ன கூறினாலும் நாங்கள் நம்பப் போவதில்லை. நாங்கள் இவ்வாறு தான் இருக்க போகின்றோம் என்று கூறியது.
அதைக் கேட்ட மற்ற பறவைகள் எதுவும் பேச முடியாமல் மீண்டும் தங்கள் இடத்திற்கு சென்றது. சிட்டுக்குருவி மற்ற பறவைகளிடம் என்னை முட்டையிட்டு சென்றது வேண்டுமானால் என் இன்னொரு சிட்டுக்குருவியாக இருக்கலாம். ஆனால் என்னை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது என் தாய் காகம் தான் என்று பெருமிதமாக கூறியது. நாங்கள் என்ன ஜாதி மதம் என்று நாங்கள் பார்க்கவில்லை நீங்கள் ஏன் எங்களை பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று மற்ற பறவைகளிடம் கேட்டது. மற்ற பறவைகள் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றது. அந்தப் பறவைகள் சென்றதும் சிட்டுக்குருவியும் காகையும் நாம் இதே போல எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டது. (tamil kids stories)
இதே போல் தான் நம்முடைய வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்கும் பல நபர்களைப் பிரிக்க வேண்டும் என்று மற்றவர்கள் சதி திட்டம் தீட்டி பிரிக்க முயற்சிக்கின்றார்கள். எந்த ஜாதி மதம் என்று பார்க்காமல் ஒற்றுமையாக இருப்போம். ஒற்றுமையாக இருந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் ஜாதி மதம் பார்க்காமல் பழகும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம்...
இதைப் போல பல கதைகளை கேட்க வேண்டும் என்று நினைத்தால் நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்..
https://telegram.me/realtamilstories
0 Comments
thanks for your comments