நீங்க டிரைவர் இல்ல...(tamil stories)
ஒரு ஊரில் சிவா எனும் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஓட்டுநர் தொழிலில் மிகவும் ஈடுபாடு அதிகம் என்பதால் சிறுவயது முதலே ஓட்டுநராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருப்பான். அவனது தந்தை ஓட்டுநர் என்பதால் சிவா விற்கும் ஓட்டுனர் வேலையில் மிகவும் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது சிவா தனது 12ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தன் தந்தையிடம் நானும் உங்களைப் போல் ஒரு ஓட்டுனராக வேண்டும், அப்பா என்று கூறினான். ஆனால் அதற்கு சிவாவின் அப்பா மறுப்பு தெரிவித்துவிட்டார். அப்பா இவ்வாறு கூறி விட்டார் என்று சிவா சற்று மனம் வேதனை அடைந்தான். எப்படியாவது ஓட்டுனர் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிவா மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான். (Tamil stories)
தன் தந்தையிடம் சென்று அப்பா எனக்கு ஓட்டுனர் வேலையை கற்றுக் கொடுங்கள். எனக்கு அது கண்டிப்பாக எதற்காவது உபயோகப்படும் என்று கூறினான். சரி இவன் கற்றுக்கொண்டால் இவனது வாழ்க்கை கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என்று சிவாவின் தந்தை நினைத்தார். நான் உனக்கு கற்றுத் தருகிறேன். நாளை விடியற்காலை பொழுது தயாராக இரு என்று சிவாவின் தங்கை கூறவே சிவா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். மறுநாள் காலை முதல் சிவா ஓட்டுனர் வேலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். மூன்று மாதங்களிலேயே சிவா வேலையை நன்றாக கற்றுக் கொண்டான். ஓட்டுனர் வேலையில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்ததால் பள்ளிப்படிப்பை கவனிக்காமல் விட்டுவிட்டான். (Tamil stories)
தனது பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்த அளவு மதிப்பெண் மட்டுமே எடுத்தான். சிவாவின் தந்தை மிகவும் கோபமடைந்து அவனைத் திட்டினார். சிவா மனம் தளராமல் நான் ஏதாவது கல்லூரி படிப்பைத் தொடர்கிறேன் என்று கூறினான். சிவா சொன்னது போலவே அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை சேர்ந்து நல்லபடியாக படித்து முடித்து வெளியே வந்தான். அவன் கல்லூரி படிப்பை முடித்ததும் சிவாவின் தந்தை நீ என்ன வேலைக்கு போகலாம் என்று இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு சிவா நான் மற்றவரிடம் சென்று கைகட்டி நின்று வேலை பார்ப்பதைவிட எனக்கு ஓட்டுநர் தொழில் தெரியும். அதை வைத்து ஏதாவது முயற்சி செய்கிறேன். என்று சிவா கூறினான். (Tamil stories)
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சிவாவின் தந்தை கூறினார். சிவாவின் தந்தை எவ்வளவு எடுத்துக்கூறியும் சிவா ஓட்டுனர் வேலை தான் செய்வேன் என்று கட்டாயமாக நின்றான். அடுத்த ஓரிரு வாரங்களிலேயே சிவா ஒரு நல்ல கம்பெனியில் ஓட்டுநர் வேலைக்காக சேர்ந்தான். அங்கு வேலை பார்ப்பவர்கள் தினமும் அழைத்து வருவது. அவர்களை பத்திரமாக கொண்டு போய் சேர்ப்பது என்று அவனது தினசரி வாழ்க்கை தொடங்கியது. அவன் சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வைத்து ஒரு கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்கு தகுந்தது போலவே சிறிது சிறிதாக பணத்தை சேமிக்க ஆரம்பித்தான். இப்படியே அவன் தினசரி வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. (Tamil stories)
ஒரு முறை அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை அழைத்துவர செல்லும்போது அவர் வர கால தாமதம் ஆனது. அவர் உயர் அதிகாரி என்பதால் சிவா எதுவும் பேசாமல் அவர் வரும்வரை காத்திருந்தான். நீண்ட நேரம் ஆனதால் சிவா தனது அலைபேசியில் அவரை தொடர்பு கொண்டான். அப்போது அந்த நபர் நீ ஒரு சாதாரண டிரைவர் தானே உன்னால் சற்று பொறுத்து இருக்க முடியாதா? என்று திட்டினார். மற்றவர்களிடம் திட்டு வாங்குவது இதுதான் சிவாவிற்கு முதல் தடவை. அந்த உயர் அதிகாரி வீட்டில் இருந்து புறப்பட மிகவும் நேரம் எடுத்துக் கொண்டார் அதனால் சிவா தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அந்த உயர் அதிகாரி சிவாவை திட்டியதால் மிகவும் மனம் வருத்தம் அடைந்தான். (Tamil stories)
அந்த உயரதிகாரி மிகவும் காலதாமதமாக வந்து காரில் அமர்ந்தார். சிவாவை பற்றி நீ ஒரு சாதாரண ஓட்டுனர் தானே நீ என்னை கேள்வி கேட்கிறாயா? என்றும் பேசினார். சிவா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். ஏனென்றால் அவன் ஒரு கார் வாங்கும் வரை அவன் அமைதியாகத்தான் இருக்கவேண்டும். வீட்டிற்கு சென்றதும் சிவாவின் முகம் வாடியிருந்தது. சிவாவின் தந்தை உணர்ந்தார். என்ன ஆயிற்று என்று கேட்டபோது சிவா அங்க நடந்த எல்லாவற்றையும் கூறினான். அதற்காகத்தான் நான் உன்னை ஓட்டுனர் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறினேன் என்று சிவாவின் தந்தை கூறினார். (Tamil stories)
சிவாவின் தந்தை இதற்கு முன் தான் பட்ட அவமானங்களை சிவாவிடம் பகிர்ந்தார். இருந்தாலும் கூட சிவா எனக்கு இந்த தொழில் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் நான் இதயே தொடர்கிறேன். என்று கூறினார். விரைவில் கார் வாங்க வேண்டும் அதற்கு என்ன வழியே அதைப் பார் என்று சிவாவின் தந்தை கூறினார். சரியப்பா அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்று கூறினான். அடுத்த நாள் மீண்டும் வழக்கம்போல தனது பணியை பார்க்க சிவா புறப்பட்டுச் சென்றான். ஒரு ஆறு மாதங்களுக்குப் பிறகு சிவா கார் வாங்குவதற்கு தேவையான பணத்தை சேர்த்துவைத்தான். எப்படியாவது ஒரு காரை வாங்கி ஆக வேண்டும் என்று முயற்சி செய்தான். (Tamil stories)
தனது நண்பர்களிடம் விசாரித்து சிவா நினைத்தது போலவே ஒரு காரை வாங்கி விட்டான். தனது தந்தையிடம் சென்று நான் கார் வாங்கி உள்ளேன் என்று சந்தோஷமாக தெரிவித்தான். சிவாவின் தந்தை அதை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி என்றார். இனிமேலாவது நீ சொந்தமாக உனது காரில் ஒரு தொழிலைச் செய் காரில் பயணிப்பவர்கள் இடம் சற்று பொறுமையாக பேசு அவர்கள் எது கூறினாலும் அமைதியாகவே பேசு என்று சிவாவிடம் கூறினார். சரியப்பா நான் அவ்வாறு நடந்து கொள்கிறேன் என்று கூறினார். மீண்டும் சிவா அவன் கார் வாங்குவதற்கு முன்னால் செய்து கொண்டிருந்த டிரைவர் வேலையை சொந்தமாக கார் வைத்து இயக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்தான். (Tamil stories)
சிவாவின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கார் வாங்கியது பிடிக்காமல் காரை என் வீட்டிற்கு முன்னால் நிறுத்தாதே! என்று அவனிடம் அடிக்கடி சண்டையிட்டு கொண்டிருந்தார். மற்றொருபுறம் சிவா வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள மேலாளர் அவனிடம் கடுமையாகவே நடந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார். சிவா இந்த இரண்டையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நம் முன்னேற்ற பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். ஆனாலும் கூட அவர்கள் பேசும் வார்த்தைகளால் சிவா சற்று கஷ்டப்பட்டான். சிவாவின் பக்கத்து வீட்டுக்காரர் நீ உனது காரை வேறு எங்கேயாவது நிறுத்திக் கொள் என்று தினமும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.(Tamil stories)
சிவாவின் தந்தை நான் எப்படியாவது வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்கிறேன் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். சிவாவின் வீட்டின் முன்னால் காரை நிறுத்துவதற்கு போதிய இட வசதிகள் கிடையாது. இப்படியே ஒரு புறம் போய்க்கொண்டிருக்க திடீரென்று ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு நடு இரவில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது அடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அழுது கொண்டிருந்தனர். இதை அறிந்த சிவா வாருங்கள் எனது காரில் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறினான். (Tamil stories)
அந்த பக்கத்து வீட்டுக்காரர் நான் உன்னை எத்தனையோ தடவை காரை இங்கே நிறுத்தாதே! என்று சொல்ல சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ என் குழந்தை காப்பாற்றுவதற்கு முன்னால் வந்து நிற்கிறாய் என்று மனம் வருத்தம் அடைந்தார். பேசிக்கொண்டிருக்க நேரமில்லை விரைவாக வாருங்கள் என்று சொல்லி காரில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்று கூறினார். அதற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர் நன்றி என்று கூறினார். அதற்கு மருத்துவர் உங்களை விரைவாக இங்கு கொண்டு வந்து சேர்த்த அந்த ஓட்டுனருக்கு நன்றி கூறுங்கள் என்று பெருமிதத்துடன் கூறினார். (Tamil stories)
பக்கத்து வீட்டுக்காரர் சிவாவிடம் சென்று நான் உன்னை எத்தனையோ தடவை திட்டி இருக்கிறேன். ஆனால் நீ அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் என் குழந்தையை காப்பாற்றி இருக்கிறாய். உண்மையில் நீ டிரைவர் இல்லை என் குழந்தையை காப்பாற்றிய சாமி என்று கூறினார். சிவா மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் பரவாயில்லை என்று கூறினான். அடுத்த நாள் காலை அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மேலாளருக்கு இந்த செய்தி தெரிய வரவே சிவாவிடம் வந்து பேசினார். என்னை மன்னித்து விடு சிவா நான் உன்னை சாதாரண ஓட்டுனர் என்று எவ்வளவோ முறை கீழ்த்தனமாக பேசியிருக்கிறேன். ஆனால் நீ எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் ஒரே மாதிரியாய் இருக்கிறாய். உனக்குத் துன்பம் நினைத்தவனுக்கு கூட நீ நன்மை செய்கிறாய் என்னை மன்னித்துவிடு சிவா என்று மேலாளர் கூறினார். (Tamil stories)
பரவாயில்லை. ஓட்டுநர் வேலை என்பது உங்களைப் பொறுத்தவரை சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் நான் சிறு வயது முதலே ஓட்டுநராக வேண்டும் என்ற ஆசையில் இந்த தொழிலை மிகவும் விரும்பி நான் மேற்கொண்டு வருகிறேன். இனிமேலாவது யாரையும் தவறாக எண்ணி பேச வேண்டாம் முக்கியமாக அவர் செய்யும் தொழிலை பற்றி பேசாதீர்கள் என்று வருத்தத்துடன் கூறினார். அதற்கு அந்த மேலாளர் இனிமேல் நான் பேசமாட்டேன் என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.. (Tamil stories)
இந்த கதையில் வருவது போலத்தான் ஓட்டுனர்களை நாம் தவறாக எண்ணி பேசி விடுகிறோம். ஆனால் அவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பத்திரமாக கொண்டு போய்ச் சேருகிறார்கள். நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு சிறிய நன்றி சொல்வோம்..
இந்த கதை அனைத்து ஓட்டுநர்களுக்கும் சமர்ப்பணம்..
மேலும் இது போன்ற கதைகளை உடனுக்குடன் கேட்க வேண்டும் என்று நினைத்தால் நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்
0 Comments
thanks for your comments