நெடுஞ்சாலை ( tamil stories)
ஒரு ஊரில் ஒரு பெண்மணி ஒரு நெடுஞ்சாலையில் ஒரு பயணமாக சென்று கொண்டிருக்கிறார். வெகுதூரம் செல்ல வேண்டி இருந்ததால் அந்தப் பெண் தனியாக தனது காரை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த கார் திடீரென பழுதாகி நின்றது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் அந்தப் பெண்மணி. காரில் என்ன பிரச்சனை என்னவோ தெரியவில்லை. அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அந்தப்பெண் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். நெடுஞ்சாலையில் இருப்பதால் யாராவது வந்து நமக்கு உதவலாம் என்று நினைத்தார். நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் கைநீட்டி உதவி கேட்டார் ஆனால் எந்த ஒரு வாகனமும் நிற்கவில்லை.
. ( தமிழ் கதைகள்)மனம் வேதனை அடைந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பெண் காரின் ஓரமாக சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார். அங்கு ஜான் என்னும் ஒருவர் வந்தார். என்ன ஆயிற்று என்று அவரிடம் கேட்டார். கார் பழுதாகி நின்று விட்டது என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் இடம் உதவி கேட்டேன் ஆனால் யாரும் காரை நிறுத்தவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். கவலைப்படாதீர்கள் நான் உங்களது வாகனத்தை சரி செய்து தருகிறேன் என்று ஜான் கூறினார். அவன் ஒரு கார் மெக்கானிக் என்பதால் காரை பார்த்தவுடன் தெரிந்து கொண்டார்.(Tamil stories)
நீங்கள் நினைக்கும் அளவிற்கு காரில் ஒன்றும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை ஐந்து நிமிடத்தில் நான் உங்களுக்கு காரை சரி செய்து தருகிறேன் என்று ஜான் கூறினான். பிறகு சொன்னது போல காரை சரி செய்து கொடுத்தான். காரில் உள்ள பழுது நீக்கப்பட்டது கார் இயங்க ஆரம்பித்தது. ஜானை பார்த்து உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை என்று அந்த பெண்மணி கூறினார். பிறகு தனது வாகனத்தில் இருந்த பணத்தை எடுத்து ஜானிடம் கொடுத்தார். ஆனால் தான் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டார். அந்தப் பெண்மணி நான் உங்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று கேட்டார். அதற்கு ஜான் எனக்கு பணம் எதுவும் தேவை இல்லை.( தமிழ் சிறுகதைகள்)
நீங்கள் செல்லும் வழியில் இதே போல் யாராவது வழியில் தவித்தாள் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அந்தப் பெண்மணி மீண்டும் நன்றி கூறிவிட்டு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய ஆரம்பித்தார். ஒரு சில தூரங்கள் சென்றதும் அந்த பெண்மணிக்கு பசிக்க ஆரம்பித்தது. ஏதாவது சாப்பிட்டு ஆகவேண்டும் என்று நிலைமைக்கு அந்தப் பெண்மணி வந்தார். நெடுஞ்சாலை என்பதால் காரை ஒருபுறம் ஓட்டிக்கொண்டு ஏதாவது கடை தென்படுகிறதா என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் செய்தார். ஒரு சில தூரங்கள் சென்றதும் ஒரு கடை அந்த பெண்மணிக்கு தென்பட்டது.
உடனடியாக அந்த காரை நிறுத்திவிட்டு அந்தப் பெண்மணி அந்த கடைக்குள் சென்றார். அந்தக் கடையில் ஒரு கர்ப்பிணிப் பெண் பணியாற்றி வந்தாள். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பெயர் ஜெசி ஆகும். காரில் இருந்து வந்த அந்தப் பெண்மணி சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று ஜெசி இடம் கேட்டார். உங்களுக்கு சாப்பிட என்ன வேண்டும் என்று ஜெசி கேட்டாள். எனக்கு இப்போது பாலும் ரொட்டியும் சாப்பிடத் தாருங்கள் என்று ஜெசி இடம் கூறினார். அந்தப் பெண்மணியின் மனதில் ஜெசி நிலைமை பார்த்ததும் கண்டிப்பாக இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஜெசி அந்தப் பெண்மணிக்கு பாலும் ரொட்டியும் கொடுத்தார். அந்தப் பெண்மணி அதை சாப்பிட்டார்.
அந்த பெண்மணி சாப்பிட்டு முடித்து விட்டு சாப்பாட்டிற்காக விலை எவ்வளவு என்று கேட்டார். முப்பது ரூபாய் கொடுங்கள் என்றேன் ஜெசி கூறினாள். அந்த 30 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு அந்தப் பெண்மணி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அந்தப் பெண்மணி சாப்பிட்ட தட்டை எடுக்கலாம் என்று சொல்லும்போது ஜெசி ஆச்சரியப்படும் வகையில் அந்தத் தட்டின் அடியில் 5 ஆயிரம் ரூபாய் காசோலை இருந்தது. இதைப் பார்த்தவுடன் ஜெசி அந்தப் பெண்மணி பணத்தை தவற விட்டு சென்றுவிட்டார் என்று நினைத்தாள். அந்தக் தட்டின் அடியில் காசோலையும் அந்த பெண்மணியின் கைப்பேசி எண்ணும் இருந்தது. அந்த கைப்பேசி நம்பரை கண்டதும் ஜெசி உடனடியாக கைபேசியை எடுத்து அழைத்தாள்.
அந்தப் பெண்மணி தனது கைப்பேசியில் எடுத்து பேசினார். நீங்கள் எங்களது கடையில் சாப்பிட்டுவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் காசோலையை மறந்துவிட்டு சென்று விட்டீர்கள் நீங்கள் அந்த காசோலையை திரும்ப வந்து வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என்று ஜெசி அன்பாக கூறினாள். ஆனால் அந்தப் பெண்மணி காலைப் பொழுதில் நெடுஞ்சாலையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி ஜெசி இடம் கூறினாள். நான் இன்று யாருக்காவது உதவி செய்ய வேண்டுமென்று நினைத்தேன் உனது நிலைமையை நான் பார்த்ததும் உனக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து தான் அந்தப் பணத்தை நான் அங்கு வைத்துவிட்டு வந்தேன் என்று அந்தப் பெண்மணி ஜெசியிடம் கூறினாள்.
ஜெசி மிகவும் சந்தோஷம் அடைந்தாள். அன்று மாலை ஜெசி வீட்டிற்குச் சென்றாள். தனது கணவனிடம் நடந்த நிகழ்வைப் பற்றி கூறினாள். இதை தெரிந்ததும் ஜெசியின் கணவன் மிகவும் சந்தோசமடைந்தான். உனது பிரசவ செலவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன் அந்த கடவுளாக பார்த்து அந்தப் பெண்மணியின் மூலம் நமக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் என்று ஜெசியின் கணவன் கூறினான். அதற்கு ஜெசி நீங்கள் சொல்வதும் சரிதான் நாம் யாருக்காவது செய்யும் உதவி கண்டிப்பாக நம்மை வந்து சேரும் என்று அடிக்கடி நீங்கள் கூறுவீர்கள் அதை நான் இப்போது உணர்கிறேன் என்று ஜெசி கூறினாள்.
இந்தக்கதையில் ஜெசியின் கணவன் யார் என்று பார்த்தால் அந்தப் பெண்மணிக்கு நெடுஞ்சாலையில் காரை பழுது பார்த்த ஜான் தான் ஜெசியின் கணவன். அந்தப் பெண்மணி ஜானுக்கு காசை கொடுத்தால் ஜான் அதை வாங்கவில்லை ஆனால் ஜெசி மூலமாக அவர்களின் பிரசவ செலவிற்கு அந்தக் காசோலை கிடைத்திருக்கிறது.
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் மற்றவர்களுக்கு எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி கண்டிப்பாக ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
0 Comments
thanks for your comments