தந்தை சொல்லை தட்டாதே! ( Tamil kids stories)
ஒரு நீளமான ஆற்றில் தந்தை மீன் மற்றும் மகன் மீன் என இரண்டு மீன்கள் வசித்து வந்தது. அந்த ஆற்றில் பல உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு உயிரினங்களும் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். குட்டி மீன் எப்பொழுதும் தந்தை மீன் அரவணைப்பிலேயே வாழ்ந்து வரும். குட்டி மீன் சிறிது சிறிதாக வளர்ந்து வந்தது. தந்தை மீன் அந்த குட்டி மீனை ஒரு தகப்பன் தன் மகனை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டுமோ? அந்த அளவிற்கு பார்த்துக் கொண்டு வந்தது. அந்த குட்டி மீனுக்கு உணவு அளிப்பது அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தந்தை மீன் 🐟🐟 செய்து வந்தது.
. ( Kid's stories)குட்டி மீன் ஒரு அளவுக்கு பெரிதாக வளர்ந்தது. சிறிது சிறிதாக குறும்புத்தனம் செய்து வந்தது. ஆனால் தந்தை மீன் அதை கண்டித்தது. பெரியவர்களிடம் எப்படி எல்லாம் பேச வேண்டும். எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும். என்று குட்டி மீனுக்கு தந்தை மீன் பாடம் கற்றுக் கொடுத்தது. குட்டி மீனுக்கு ஒரு ஆசை வந்தது. இந்த ஆறு எவ்வளவு தூரம் செல்கிறது எப்படியாவது ஒரு முறையாவது சென்று இந்த ஆற்றை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தது. தன் தந்தையிடம் இதைப்பற்றி கேட்டுப் பார்க்கலாம் என்று குட்டி மீன் முடிவு செய்தது. அடுத்த நாள் காலையில் குட்டி மீன் வேகமாக எழுந்தது. சரி தன் தந்தையிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தது. (Tamil kids stories)
குட்டி மீன் தன் தந்தையிடம் சென்று அப்பா நான் இந்த ஆற்றை ஒரு முறையாவது சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறியது. தந்தை மீன் குட்டி மீன் ஆசைப்படுவது போல சரி வா! சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று கூறியது. இல்லையப்பா நான் தனியாக சென்று சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று குட்டி மீன் கூறியது. ஆனால் தந்தை மீன் இல்லை நான் உன்னுடன் வருகிறேன் என்று கூறியது. நீ தனியாக செல்வதாக இருந்தால் எங்கும் செல்ல வேண்டாம் என்று தந்தை மீன் கண்டித்து கூறியது. குட்டி மீனுக்கு சரி இந்த முறை தந்தையுடன் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தது.
சரி வாருங்கள் அப்பா, சென்று எனக்கு சுற்றி காட்டுங்கள் என்று குட்டி மீன் கேட்டது. தந்தை மீன் ஆபத்தில்லாத பகுதியாகச் சென்று குட்டி மீனுக்கு சுற்றி காட்டியது. பாதுகாப்பான பகுதிக்கு தந்தை மீன் கூட்டிக் கொண்டு சென்றது. குட்டி மீன் தந்தையின் பின்னால் சென்று கொண்டிருந்தது. ஒரு ஆபத்தான பகுதி வந்தவுடன் அப்பா இந்தப் பாதையில் நாம் செல்லலாம் என்று குட்டி மீன் கேட்டது. அதற்கு தந்தை மீன் அந்தப் பகுதியில் நாம் செல்லக் கூடாது அது மிகவும் ஆபத்தான பகுதி என்று கூறியது. ஆனால் அந்த குட்டி மீனுக்கு அந்தப் பகுதியில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. சுற்றிப் பார்த்தது போதும் செல்லலாம் வா! என்று தந்தை மீன் கூறியது.(tamil kids stories)
சரி அப்பா என்று குட்டி மீன் கூறியது பிறகு அங்கிருந்து இரண்டு மீன்களும் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அந்த குட்டி மீன் நாளைக்கு எப்படியாவது அந்த இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது. சரி எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தது. தந்தையும் உணவு எடுத்து எடுக்கச் செல்லும் போது நாம் இங்கிருந்து புறப்பட்டு சென்று அந்தப் பகுதியை சுற்றி பார்க்கலாம் என்று குட்டி மீன் முடிவு செய்தது. மறுநாள் காலை பொழுது விடியும் வரை குட்டி மீன் காத்திருந்தது. காலைப் பொழுதும் விடிந்தது தந்தை மீன் வழக்கம்போல உணவு எடுத்து வர சென்றது.
தந்தை மீன் வெளியே செல்வதை பார்த்து விட்ட குட்டி மீன் 🐟🐟🐟 அங்கிருந்து புறப்பட்டு அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று புறப்பட்டது. தந்தை மீன் நேற்று கூட்டிக் கொண்டு சென்ற வழியில் குட்டி மீன் சென்றது. அந்தப் பகுதி வந்தவுடன் சிறிதும் கூட யோசிக்காமல் அந்த குட்டி மீன் அதற்கு உள்ளே சென்றது. உணவு எடுக்கச் சென்ற தந்தை மீன் வீட்டிற்கு வந்ததும், குட்டி மீனை காணவில்லை என்றதும் பதறிப் போனது. என்ன செய்வதென்று தெரியாமல் தந்தை மீன் திகைத்து போய் நின்றது. வெளியில் சென்று குட்டி மீன்னை தேடிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தது. தந்தை மீன் தனது வீட்டை விட்டு வெளியே சென்றது. குட்டி மீன் எங்கே போயிருக்கும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தது.
ஆபத்தை உணராத குட்டி மீன் அந்த குகைக்குள் சென்றது. அந்த குகையில் சுறா மீன்கள் இருப்பதை அந்த குட்டி மீன் கண்டது. யார் இவர்கள் நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியாமல் அந்த குட்டி மீன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. சுறா மீன்கள் நமக்கு ஒரு உணவு கிடைத்து விட்டது என்று சந்தோசமாக இருந்தது. அந்தக் குட்டி மீன் இன்னும் உள்ளே வருவதற்காக சுறா மீன்கள் காத்துக்கொண்டிருந்தன. கள்ளம் கபடம் இல்லாத அந்த குட்டி மீன் மேலும் முன்னேறி உள்ளே சென்றது. தந்தை மீன் நேற்று நாம் சுற்றிப் பார்த்த இடத்தை சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தது.
தந்தை மீன் வேகமாக நீந்தி கொண்டு அந்த இடத்திற்குச் சென்றது. அந்த ஆபத்தான குகையைக் கண்டதும் தந்தை மீன் சற்று யோசித்தது. நேற்று இந்த குகைக்குள் செல்ல வேண்டுமென்று குட்டி மீன் அடம்பிடித்தது ஆனால் நாம் அதை செல்ல வேண்டாம் அங்கு ஆபத்து உள்ளது என்று கூறினோம். ஒருவேளை குட்டி மீன் இந்த குகைக்குள் சென்று விட்டதா?என்று தந்தை மீன் 🐟🐟🐟 குழப்பமாக நின்றது. ஒருபுறம் குட்டி மீன் சுறா மீன்களை நெருங்கியது. சுறா மீன்கள் அந்த குட்டி மீனை சுற்றிவளைத்தனர். வா நான் உன்னை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் எனக்கு கிடைத்த உணவு நீதான் அருகில் வா என்று மீன்கள் கூச்சலிட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் குட்டி மீன் திகைத்து நின்றது.
தப்பித்து ஓடி விடலாம் என்று முடிவு செய்தது அங்கே பாருங்கள் உங்களை யாரோ அழைக்கிறார்கள் என்று சுறா மீன்களைப் பார்த்து சொல்லிவிட்டு குட்டி மீன் அங்கிருந்து வேகமாக நீந்த ஆரம்பித்தது எங்கு செல்வது என்று தெரியாமல் வந்த வழியை மறந்து மேலும் முன்னோக்கி சென்றது. மறுபுறம் தந்தை மீன் 🐟🐟🐟 இந்த குகைக்குள் தான் சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டு அந்த குகைக்கு உள்ளே சென்றது. வேகவேகமாக நீந்திக்கொண்டு தந்தை மீன் உள்ளே சென்றது. சுறா மீன்கள் குட்டி மீனை துரத்திக் கொண்டு சென்றனர். குட்டி மீன் என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுக்கொண்டே நீந்திக் கொண்டு சென்றது.(tamil kids stories)
அந்தக் குட்டி மீன் கத்துவது தந்தை மீனுக்கும் கேட்டது. அந்தக் குரல் குட்டி மீனின் குரல் தான் என்று தந்தை மீன் முடிவு செய்தது. தந்தை மீன் வேக வேகமாக முன்னேறியது. குட்டி மீன் சுறா மீன்களின் பிடியில் வசமாக சிக்கிக்கொண்டது. தந்தை மீன் வேகமாக நீந்தி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. சுறா மீன்கள் தந்தை மீனை பார்த்தனர். நமக்கு மற்றொரு உணவு கிடைத்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டனர். தந்தை மீன் இந்த சுறா மீன்களுடன் நம்மால் சண்டையிட முடியாது இவைகளின் கவனத்தை திசை திருப்பி விட்டு நாம் இங்கிருந்து தப்பிக்க மட்டுமே முடியும் என்று முடிவு செய்தது. சுறா மீன்கள் இடம் பேச்சுக் கொடுத்தது.
எங்களைவிட ஒரு பெரிய மீன் அங்கு இருக்கிறது என்று அதன் கவனத்தை திசை திருப்பியது. இவைகளை விட பெரிய மீன் இருக்கிறதா என்று சுறா மீன்கள் யோசித்தனர். இருக்கலாம் வாருங்கள் நாம் சென்று அங்கு பார்க்கலாம் என்று சுறா மீன்கள் முடிவு செய்தனர். சுறா மீன்கள் தந்தை மீன் சொன்னதை உண்மை என நம்பி முன் நோக்கி சென்றனர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி தந்தை மீன் குட்டி மீனை காப்பாற்றி அங்கிருந்து வேக வேகமாக நீந்தி பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சுறா மீன்கள் அந்த இடத்தில் பெரிய மீன்கள் இல்லை என தெரிந்ததும் கோபமுற்று அந்த இடத்திற்கு வந்தனர் ஆனால் அங்கு தந்தை மீனும் குட்டி மீனும் அங்கு இல்லை.
இதைக்கண்ட சுறா மீன்கள் மீண்டும் அவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக அவர்களையும் சும்மா விட கூடாது என்று முடிவு செய்தனர். தந்தை மீன், குட்டி மீனை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்றனர். நான் நேற்று உன்னிடம் கூறினேன் அல்லவா? நீ ஏன் அங்கு சென்றாய் என்று குட்டி மீன் இடம் கேட்டது. மன்னித்துவிடுங்கள் தந்தையே நான் நீங்கள் கூறியதை கேட்கவில்லை. இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன் என்று குட்டி மீன் வருத்தத்துடன் தெரிவித்தது. தந்தை மீன் அதற்கு, இனிமேல் இவ்வாறு செய்யாதே நான் சொல்வதைக் கேள் என்று அன்பாக கூறியது...
இந்தக் குட்டி மீனைப்போல தான் நம்மில் பலபேர் தந்தை சொல்வதைக் கேட்காமல் அவர்களையும் கஷ்டப்படுகிறோம்.தந்தை சொல்வதைக் கேட்டால் நமக்கு தான் நன்மை கிடைக்கும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து காட்டலாம்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்.
0 Comments
thanks for your comments