சிவ பக்தனும் கோடாரியும் (tamil magical stories)

சிவ பக்தனும், கோடாரியும் (tamil magical stories)

ஒரு ஊரில் முட்டி என்று ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு கடின உழைப்பாளி. அவனது குடும்பத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவன் எண்ணம். இவன் தொழில் என்னவென்றால் காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்வதே ஆகும். தினமும் சென்று மரங்களை வெட்டி விற்றால்தான் இவனது வீட்டில் அன்று அடுப்பு எரியும். அந்த அளவுக்கு ஒரு ஏழ்மையான குடும்பம் கூட, எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பான். இவன் ஒரு தீவிர சிவ பக்தன் ஆவான். அவன் தொழிலுக்கு செல்லும் வழியில் சிவன் கோயில் உள்ளது தினமும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்ட பிறகு வேலைக்கு செல்வான்.

.                          (Tamil magical stories)

முட்டிக்கு குழந்தைகள் இருக்கின்றன. வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும்போது குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு செல்வான். முட்டி வீட்டுக்கு வரும்போது அவனது பிள்ளைகள் அப்பா இன்றைக்கு என்ன வாங்கி கொண்டு வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாகவே அவன் உழைக்கும் நேரம் அதிகமானது. இதை புரிந்து கொண்ட அவனது மனைவி தோட்ட வேலைக்குச் செல்வாள். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைக்க வேண்டியதாக இருந்தது. இப்படியே ஒரு சில நாட்கள் சென்று கொண்டிருந்தது. முட்டி தினமும் பயன்படுத்தும் கோடாரி அதன் முனைகள் வளைந்து இருந்தது.

முட்டிக்கு இன்னொரு கோடாரி வாங்கும் அளவிற்கு கையில் பணம் இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். சிவபெருமானை சென்று வழிபட்டான். கடவுளிடம் சென்று எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்க மாட்டான். இன்றைய பொழுது நன்றாக சென்றால் சரி என்று வேண்டிக் கொண்டு வந்துவிடுவான். அன்று முழுவதும் ஒரு மரம் வெட்டுவதற்கு ஒரு பொழுது ஆகிவிட்டது. தினமும் மூன்று அல்லது நான்கு மரங்களை வெட்டி சந்தைக்கு எடுத்துச் செல்வான் ஆனால் அன்று ஒரு மரம் மட்டுமே வெட்டி எடுத்துக் கொண்டு சென்றதால் அவனுக்கு வியாபாரம் எதுவும் நடக்கவில்லை. அன்று குறைந்த அளவு மட்டுமே வருமானம் அவனுக்கு கிடைத்தது.

இதை சென்று அவன் மனைவியிடம் கூறினான். அவன் மனைவி உங்களிடம் இருந்த பணத்தை வைத்து மற்றொரு கோடாரி வாங்கி இருக்கலாம் அல்லவா என்று கேட்டாள். ஆனால் அதற்கு முட்டி நான் இன்னொரு கோடாரி வாங்கி இருந்தால் நாளை நம்மால் உணவு உண்ண முடியாது மேலும் பட்டினியால் நமது பிள்ளைகள் வாடும் என்பதால் இன்னொரு கோடாரி வாங்க எனக்கு மனமில்லை என்று கூறினான். நான் வணங்கும் அந்த சிவபெருமான் தான் எனக்கு ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும் என்று தனது மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தான். அன்று இரவு அப்படியே சென்று விட்டது. மறுநாள் காலை பொழுது விடிந்தது. முனை வளைந்த கோடாரியை எடுத்துக்கொண்டு தன் தொழிலுக்கு புறப்பட்டான்.

வழக்கம்போல சிவபெருமான் கோவிலுக்கு சென்றேன் கடவுளை வேண்டி விட்டு தன் தொழிலுக்கு புறப்பட்டான். இன்னொரு கோடரி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். அவன் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தான். தூரத்தில் ஒரு முயல் இருப்பதைக் கண்டான். அதை பிடிக்கலாம் என்று ஒரு முற்பட்டான். திடீரென அந்த முயல் ஒரு முட்புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. அந்த முட்புதருக்குள் சென்றேன் அங்கே இருக்கிறதா என்று பார்த்தான். ஆனால் அங்கு முயல் இல்லை அதற்கு பதிலாக அவன் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கோடாரி அங்கு இருந்தது.

இதைக்கண்ட முட்டி முயல் தானே இருக்க வேண்டும். பிறகு எப்படி கோடாரி இங்கு வந்தது என்று யோசித்தான். அந்தக் கோடாரியை எடுத்து பார்த்தான். மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படாத முட்டி. நம்மைப்போல ஒரு மரவெட்டி தான் இந்த கோடாரியை இங்கு வைத்திருக்க வேண்டும். யாராவது வந்து கேட்டால் இந்த கோடாரியை கொடுத்துவிடலாம் என்று கையில் எடுத்துக் கொண்டான். பிறகு காட்டுக்குள் சென்று  தன்னிடம் இருந்த கோடரியை வைத்து மரத்தை வெட்ட ஆரம்பித்தான். அவன் வைத்திருந்த கோடாரி மிகவும் பழுது ஆனதால் மரத்தை வெட்ட மிகவும் சிரமமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்..

சரி நம்மிடம் மற்றொரு கோடாரி இருக்கிறது அல்லவா அதை வைத்து மரத்தை வெட்டலாம் என்று நினைத்தான். கோடாரியின் உரிமையாளர் வந்து கேட்டால் அதை கொடுத்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டு அந்த கோடாரியை எடுத்து மரத்தை வெட்டத் தொடங்கினார். ஆனால் அந்தக் கோடரி ஒரு மந்திர கோடாரி என்று அவனுக்கு தெரியாது. வழக்கம் போல மரத்தை வெட்ட ஆரம்பித்தான். ஒரு மரத்தை வெட்டுவதற்கு அவனுக்கு ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் அவனுக்கு கிடைத்த கோடரியால் மரத்தை பத்து நிமிடத்தில் வெட்டினான். முட்டிக்கு ஒரு ஆச்சரியம். என்ன இது இந்த மரம் இவ்வளவு வேகமாக வெட்டி விட்டோம் என்று நினைத்தான். மீண்டும் மற்றொரு மரத்தை வெட்ட ஆரம்பித்தான்.

அந்த மரத்தையும் பத்து நிமிடங்களில் வெட்டி முடித்தான். முட்டிக்கு ஒரு ஆச்சரியம் என்ன இந்த கோடாரி இவ்வளவு வேகமாக வெட்டி விடுகிறது என்று ஆச்சரியப்பட்டான். அன்று ஒரு நாள் முழுவதும் 20 மரங்களை வெட்டி முடித்தான். அதை சந்தைக்கு எடுத்து கொண்டு சென்று விற்பனை செய்தான். அன்று ஒரே நாளில் அவன் இதுவரை கண்டிராத பணத்தை பார்த்தான். கைநிறைய பணத்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றான். அவன் மனைவியிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினான். இந்த கோடாரியின் உரிமையாளர் வந்து கேட்டால் என்ன சொல்வது என்று அவன் மனைவி கேட்டாள். அதற்கு உரிமையாளர் வந்து கேட்டால் கோடாரியை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று முட்டி கூறினான்.

நான் கூட அவர் வந்து கேட்டால் நீ தர மாட்டாயோ! என்று நினைத்தேன். ஆனால் நீ அவருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாய். உன் நல்ல மனசுக்கு கண்டிப்பாக எல்லாம் நல்லதே நடக்கும் என்று அவன் மனைவி கூறினாள். அன்று இரவு அவள் ஒரு நாள் சம்பாதித்த பணத்தை வைத்து அவன் ஒரு மாத காலம் வாழலாம் அந்த அளவிற்கு அவன் கைகளில் பணம் இருந்தது. இருந்தாலும் கூட முட்டி அடுத்தநாள் மீண்டும் வேலைக்குச் சென்றான். வழக்கம்போல மரத்தை வெட்டி விற்று அதை பணத்தை சம்பாதித்தான். இப்படியே ஒரு ஒரு சில மாதங்கள் சென்றன. நான் எதிர்பார்த்த அளவிற்கு மேலே வளர்ந்து விட்டான். அவன் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நல்லது செய்ய ஆரம்பித்தான்.

திடீரென ஒரு நாள் முட்டி மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும் போது. அந்தப் பக்கம் ஒரு மனிதர் வந்தார். ஐயா எனது கோடாரியை நீங்கள் பார்க்கிறீர்களா என்று கேட்டார். முட்டி ஆச்சரியமாக நின்றான். அந்தக் கோடரியை கொடுக்க மனமில்லை என்றாலும் அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அவர் கேட்டபோது ஐயா இந்தக் கோடாரியா என்று பாருங்கள் என்று முட்டி கேட்டான். ஆம் இந்த கோடரி தான் என்று அந்த மனிதர் கூறினார். இந்த கோடரியை நான் இவ்வளவு நாட்கள் தொலைத்துவிட்டேன். எங்கே தேடியும் கிடைக்கவில்லை. நான் கடைசியாக இந்தக் காட்டில் தான் மரத்தை வெட்டினேன்.

அதனால்தான் நான் இங்கு வந்த தேடிப் பார்க்கலாம் என்று வந்தேன். என்று அந்த மனிதன் கூறினார். இந்தாருங்கள் ஐயா உங்கள் கோடாரி என்று பெருந்தன்மையாக அவரது கோடாரி அவருக்கு கொடுத்தான்.
அந்த மனிதர் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். கோடரியை கொடுத்தபிறகு முட்டி திரும்பி நின்று என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் இருந்த மற்றொரு கோடாரியை எடுத்து மரத்தை வெட்ட ஆரம்பித்தான்.
அப்போது திடீரென முட்டி என்று அவன் பெயரை யாரோ உச்சரிப்பது போல் உணர்ந்தான். எதுவும் இருக்காது என்று நினைத்தான். மீண்டும் அவனது பெயரை யாரோ அழைப்பது போல் உணர்ந்தான்.

முட்டி பின்னால் திரும்பிப் பார் என்று யாரோ அழைத்தார். பின்னால் திரும்பி பார்த்தான். அவன் தினமும் வணங்கும் தெய்வம் அவன் கண்கள் முன்னே தோன்றியது. சிவபெருமானைக் கண்டதும் ஐயனே உங்களைக் காண நான் என்ன தவம் செய்தேனோ என்று ஆச்சரியமாகக் கேட்டான். சிவபெருமானை பார்த்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான். நான் உங்களுக்கு இவ்வளவு நாட்கள் ஒரு பரீட்சை வைத்தேன் அதில் நீங்கள் முழுமையாக வெற்றி பெற்று விட்டீர்கள். இந்த கோடாரி இனி உங்களுக்கு தான் சொந்தம் என்று சிவபெருமான் கூறினான். மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமல் நீங்கள் நேர்மையாக பொருளைத் திருப்பிக் கொடுத்தீர்கள்.

அந்த நேர்மைக்கான பரிசு இது என்று அந்த கோடாரியை மீண்டும் அவரிடமே கொடுத்தார். அந்த மனிதர் உருவில் வந்தது நீங்கள் தானா என்று முட்டி கேட்டான். ஆம் என்று சிவபெருமான் கூறினார். எவ்வளவு காசு பணம் சம்பாதித்தாலும் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார். மற்றவர்களுக்கு உதவியும் செய்கிறீர்கள். அதற்கு தான் இந்த பரிசு. என்னை நம்பியவர்களை நான் என்றும் கைவிட்டதில்லை என்று சிவபெருமான் கூறினார். நன்றி ஐயனே என்று முட்டி கூறினான். எனக்காக ஒன்று மட்டும் செய்யுங்கள் என்று சிவபெருமான் கூறினார். அதற்கு முட்டி சொல்லுங்கள் ஐயனே என்று பணிவுடன் கேட்டார்.

நீங்கள் இந்தக் காட்டில் எத்தனை மரங்களை வெட்டினாலும் சரி அதற்கு ஈடாக ஒவ்வொரு மரத்தை நீங்கள் நட்டு வைக்க வேண்டும் என்று அவர் கேட்டார். அப்படியே செய்கிறேன் ஐயனே என்று முட்டி கூறினான். பிறகு அங்கிருந்து சிவபெருமான் மறைந்து விட்டார். முட்டி எப்பொழுது போல செயல்பட ஆரம்பித்தான். காட்டில் மரங்களை நட்டு வைக்க முட்டி ஆரம்பித்தான். அவனது வாழ்க்கை மிகவும் அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.( Tamil magical stories)

இந்த கதையில் வருவது போல தான் அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமல் இருந்தால் நமக்கான பொருள் கண்டிப்பாக அந்த கடவுள்  தருவார்.

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிரவும். இதுபோன்ற கதையை உடனுக்குடன் கேட்க வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள நமது telegram chennal join செய்து கொள்ளவும். வேறு எந்த மாதிரியான கதைகள் வேண்டும் என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.

https://telegram.me/realtamilstories

Post a Comment

0 Comments