சொன்னால் புரியாது பட்டால்தான் புரியும் (tamil kids stories)

சொன்னால் புரியாது பட்டால்தான் புரியும் ( tamil kids stories)

ஒரு ஊரில் பாரி என்று ஒருத்தன் இருந்தான். அவன் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருந்தான். பாரியின் தாய் நீ அரசு வேலைக்கு மட்டும் முயற்சி செய்யாதே ஒரு தனியார் துறையில் பணிபுரிந்து கொண்டு பிறகு அரசு வேலைக்கு முயற்சி செய் என்று கூறினார். அதுபோல பாரி ஒரு தனியார் துறையில் பணிக்கு சேர்ந்தான். பாரிக்கு நாய்க்குட்டி வளர்க்க வேண்டும் என்பதே வெகு நாள் ஆசையாக இருந்தது. ஆனால் இவரின் தாயார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் கூட நாய்க்குட்டியை வளர்க்க வேண்டும் என்பது பாரியின் நீண்ட நாள் ஆசை.


பாரியின் தாயார் ஏன் நாய்க்குட்டி வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றால் இதற்கு முன் அவர்கள் வளர்த்த இரண்டு நாய்க் குட்டிகளும் இறந்து போனது. பாரியின் தாயார் மிகவும் மன வேதனை அடைந்தார். இதன் காரணமாகவே பாரின் தாயார் நாய்க்குட்டி வேண்டாம் என்று நிராகரித்து வந்தார். இப்படியே ஒரு சில வருடங்கள் கழிந்தன. ஆனால் பாரியின் மனதில் நாய்க்குட்டி எப்படியாவது வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது. தனது தாயிடம் சென்று எப்படியாவது ஒரு நாய்க்குட்டி வளர்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தான். இவன் மேலும் மேலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தது பாரியின் தாயாரின் கொண்டு வா என்று கூறினார்.

அதன்படி பாரியும் ஒரு நாய்க்குட்டியை தேட ஆரம்பித்தான். இவன் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பெண் நாய் ஒன்று குட்டிகள் ஈன்று இருந்தது. இதைக் கண்டதும் பாரிக்கு மிகவும் சந்தோஷம். எப்படியாவது இந்த நாய்க்குட்டி கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தான். அதன்படி நாய்க்குட்டி கண்களை திறக்க காத்துக்கொண்டிருந்தான். பெண் நாய் ஈன்று இருந்த அனைத்து குட்டிகளும் கண்களைத் திறந்தன. பாரி அந்த இடத்திற்குச் சென்று எந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்தான். அதில் வெள்ளை நிறத்தில் ஒரு ஆண் நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான். வீட்டுக்குச் சென்றதும் தன் தாயிடம் நாய்க்குட்டியை காட்டினான்.

நாய்க்குட்டியை விரும்பாது பாரியின் தாயார் சரி நீ தான் வளர்க்க வேண்டும் என்று கூறினார். சரி அம்மா நானே வளர்க்கிறேன் என்று பாரி கூறினான. அன்று இரவு நாய்க்குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு உறங்கலாம் என்று சென்றான். ஆனால் நாய்க்குட்டி சிறியதாக இருந்ததால் தனிமையில் இருக்க பயப்பட ஆரம்பித்தது‌. இரவு நேரம் 12 மணிக்கு நாய்க்குட்டி கத்த ஆரம்பித்தது. பாரி கண்விழித்து நாய்க்குட்டி இடம் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். அவன் அருகில் இருந்ததால் நாய்க்குட்டி கத்தவில்லை இப்படியே ஒரு மாதங்களாக பாரி சரியாக தூங்காமல் நாய்க்குட்டி கவனித்து வந்தான்.

மூன்று மாதங்கள் கழித்து நாய்க்குட்டி சற்று பெரியதாக வளர்ந்தது. நாய்க்குட்டியை பெரிதும் கண்டுகொள்ளாத பாரியின் தாயார் நாய்க்குட்டியை சற்று உற்று நோக்கினார். என்னவென்று தெரியாமல் நாய்க்குட்டியை அவருக்குப் பிடித்தது. அன்று முதல் அந்த நாய்க்குட்டியை பாரியின் தாயார் உணவளித்து பராமரித்து வந்தார். ஒருமுறை பக்கத்து வீட்டு குழந்தைகள் பாரியின் தாய் மடியில் வந்து அமர்ந்து விளையாடி கொண்டிருந்தன. இதைக் கண்ட நாய்க் குட்டி செய்வதறியாமல் அந்தத் தாயை சுற்றி சுற்றி வந்தது. பாரியின் தாயின் மடியிலிருந்து உராய்ந்தபடி படுத்துக் கொண்டது. ஏற்கனவே பாரியின் தாயின் மடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

இந்த நாய்க் குட்டியும் குழந்தை போல மடியில் உராய்ந்தபடி படுத்ததை பார்த்ததும் பாரியின் தாய்க்கு இந்த நாய்க்குட்டியை மிகவும் அதிகமாக பிடித்தது. இப்படியே ஒரு வருடங்கள் கழிந்தன நாய்க்குட்டியை பத்திரமாக பார்த்துக் கொண்டு வந்தனர். ஒருமுறை இந்த நாய்க்குட்டி வீட்டை விட்டு வெளியே சென்றது. நாய்க்குட்டியை காணவில்லை என்று பதறிப்போன பாரி மற்றும் அவரது தாயார் நாய் குட்டி எங்கே இருக்கிறது என்று தேடிச் சென்றனர். ஒரு வழியாக நாய்க்குட்டியை தேடி கண்டுபிடித்தனர். அன்று இரவு அந்த நாய்க்குட்டிக்கு பாரி அறிவுரைகளைக் கூறினான். ஒன்றும் புரியாத நாய்க்குட்டி அவனை வித்தியாசமாக பார்த்தது.

இந்த நாய்க்குட்டி வெளியே சென்று வந்ததிலிருந்து இதனுடைய செயல்கள் சற்று மாறுபட்டது. பாரியின் சொல் பேச்சை இது எதுவும் கேட்கவில்லை. நாய்க்குட்டியின் கட்டை அவிழ்த்து விடவில்லை என்றால் அது கத்த ஆரம்பித்து விடுகிறது. பாரி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்குள்ளேயே நாயை அவிழ்த்து விட்டான். வீட்டிற்கு உள்ளே நாய்க்குட்டி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தது. ஒருமுறை வீட்டின் கதவைத் திறந்து நாய்க்குட்டி வெளியே ஓடி விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் பாரி நாய்க்குட்டியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தான். இப்படியே நாய்குட்டி ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே சென்றது.

பாரி நாய்க்குட்டி இடம் அமர்ந்து நீ வெளியில் அதிகமாக சென்றால் மற்ற நாய்கள் உன்னை கடித்து விடும் தயவுசெய்து வெளியில் சொல்லாதே என்று நாய்க்கு பொறுமையாக புத்திமதி கூறினான். நாய்க்குட்டி மீண்டும் பாரியை பார்த்தது. நாய்க்குட்டி இடம் அமர்ந்து புத்திமதி கூறிய பின்பு செல்லாமல் அப்படியே ஒரு மாத காலம் இருந்தது. பிறகு மீண்டும் நாய்க்குட்டி கட்டை அவிழ்த்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே சென்றது. இந்த முறை நாய்க்குட்டி தெருவில் உள்ள மற்ற நாய்களிடம் சிக்கி கொண்டது. மற்ற நாய்கள் அனைத்து சேர்ந்து இந்த நாய்க்குட்டியை கடித்துக் குதறியது.

ஒரு சில ரத்த காயங்களுடன் நாய்க்குட்டி வீட்டை நோக்கி வந்தது. நாய்க்குட்டியை பார்த்ததும் பாரிக்கு மனமில்லை. நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்றான். மருத்துவர் நாய்க்குட்டியை பார்த்துவிட்டு சிறுகாயங்கள் மட்டும்தான் உள்ளது மற்றபடி வேறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறினார். ஒரு சில மருந்துகளை நாய்க்குட்டிக்கு கொடுங்கள் என்று மருத்துவர் கூறினார் பிறகு நாய்க்குட்டியை தூங்கிக்கொண்டு பாரி மீண்டும் வீடு திரும்பினான். நாய்க்குட்டி இடம் அமர்ந்து நான் என்ன சொன்னேன் நீ வெளியில் சென்றால் மற்ற நாய்கள் உன்னை கடித்து விடும் என்று சொன்னேன் அதை கேட்காமல் நீ வெளியில் சென்றாய்.

இப்போது உன் நிலைமையைப் பார்த்தாயா என்று பாரி நாய்க்குட்டியை தீட்டினான். நாய்க்குட்டிக்கு சற்று உரைக்கும் படி அதன் மொழியில் அழுத்தமாகக் கூறினான். நாய்க்குட்டி மீண்டும் ஒரு மாதிரியாக பார்த்தது. மற்ற நாய்கள் இதை கடித்த பிறகு இந்த நாய்க்குட்டி வீட்டை விட்டு வெளியில் செல்வதில்லை. சொன்னால் புரியாது பட்டால் தான் புரியும் என்பதற்கு இந்தக் கதை ஒரு எடுத்துக்காட்டு.

இந்த நாய்க்குட்டியை போல தான் நம் வீட்டில் பெற்றோர்கள் கூறும் வார்த்தைகளை கேட்காமல் நாம் வெளியில் செல்கிறோம் பிறகு அடிப்பட்டு அவர்களையும் வருத்தமடையச் செய்கிறோம். பெற்றோர்கள் கூறுவது உங்கள் நலனுக்காக மட்டுமே பெற்றோர்கள் சொல்வதை தயவு செய்து பொறுமையாக கேளுங்கள்..

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
மேலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க விரும்பினால் நமது telegram chennal join செய்து கொள்ளவும்

https://telegram.me/realtamilstories

Post a Comment

0 Comments