நேரம்(Tamil stories)
நமது வாழ்க்கையில் நேரம் என்பது இன்றியமையாத ஒன்று. நேரத்தை போக்குவதால் எந்த ஒரு பலனும் இல்லை. அந்த நேரத்தை வீணடித்து வாழ்க்கையில் தோல்வி அடைந்த நிற்கும் அப்பு மற்றும் குப்பு அவர்களின் வாழ்க்கையைப் பற்றி இந்த கதையில் பார்க்கலாம்..
அப்பு மற்றும் குப்பு இருவரும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரு தனியார் துறையில் வேலை பார்த்து வருகின்றனர். அப்பு எப்போதும் நேரம் தவறாமல் கடைபிடிப்பவன். எந்த ஒரு வேலை கொடுத்தாலும் அதை நேரத்திற்கு செய்து முடிக்க வேண்டும் என்று நினைபவன் தன்னிடம் வந்து யாரும் எந்த ஒரு கேள்வி கேட்கக் கூடாது என்று நினைப்பவன். ஆனால் குப்பு எல்லா வேலையும் செய்து முடிப்பான் ஆனால் நேரத்தை மட்டும் கடைப்பிடிக்க மாட்டான். இவர்கள் இருவருமே ஒரே வயது உடையவர் இருவரும் ஒன்றாக படித்தனர். ஒன்றாக வளர்ந்து வந்தனர். நல்ல நண்பர்களும் கூட இவர்கள் இருவரும் தற்போது ஒரே துறையில் வேலை பார்த்து வருகின்றனர்.(tamil stories)
அப்பு எப்போதும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பான். நமது வாழ்க்கையை எப்படியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்று மிகுந்த சிந்தனையுடன் செயல்படுவான். தனது பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மிகுந்த கவனத்துடன் இருக்கிறான். வேலை முடிந்த பிறகு வெளியில் எங்கும் செல்லாமல் நேரடியாக வீட்டுக்கு தான் வருவான். வீட்டிற்கு வந்தேன் தனது தாயாருக்கு உதவியாக இருப்பான். எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாதவன். அவன் பணிபுரியும் துறையில் அப்புவிடம் ஒரு வேலை கொடுத்தால் அது கண்டிப்பாக செய்து முடிப்பான் என்று அனைவரும் நம்பிக்கையுடன் கூறினர். அதற்கு ஏற்ப அப்பவும் அனைத்து வேலைகளையும் தனியாளாக நின்று செய்து முடிப்பான்.(tamil stories)
குப்பு காலையில் மிகவும் சோம்பேறித்தனமாக எழுந்து அலுவலகத்திற்கு மிகவும் மெதுவாக செல்லுவான். வாழ்க்கை பற்றி எந்த ஒரு கவலையும் இருக்காது. அடுத்து என்ன செய்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க மாட்டான். ஆனால் யாராவது வந்து உதவி என்று கேட்டால் தயங்காமல் நின்று செய்வான். இவனுக்கு ஒரு உதவி வேண்டும் என்றால் அது அப்பு இடம் மட்டுமே கேட்பான் வேறு யாரிடமும் கேட்க மாட்டான். அப்பு இவனிடம் கூறுவது ஒன்று மட்டும்தான் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் விரைந்து செய்து முடிக்க பார் என்பான். ஆனால் குப்பு மெதுவாக செய்துகொள்ளலாம் என்ன ஒரு அவசரம் என்று பொறுமையாக கேட்பான்.(tamil stories)
இவர்கள் இருவரும் பணிபுரியும் துறையில் ஒரு பதவி ஒன்று காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு யார் தகுந்தவர் என்று ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் நிர்வாகம் இருந்தது. அப்பு மற்றும் குப்பு இருவரும் நல்ல நண்பர்கள். நான் யார் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று தீர்மானம் செய்யப்பட வேண்டும் என்று கூறினர். அதன்படி அந்த துறையின் மேலாளர் இவர்கள் இருவரைப் பற்றியும் ஒரு அறிக்கை தாருங்கள் என்று கூறினார். ஒரு சில நாட்கள் கழிந்தது அப்புவின் திறமையும் குப்புவின் திறமையும் சோதித்து பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருவருக்கும் ஒரு பணியை கொடுத்தனர். இருவருமே சரியான முறையில் அந்த பணியை செய்து முடித்தனர் அப்பு எப்பொழுதும் போல் விரைவாக செய்து முடித்தான் அதை நிர்வாகத்திடம் கொடுத்தான். வழக்கம் போல குப்பு தாமதமாகவே வேலையை செய்து முடித்தான். இருவரும் வேலையை நன்றாக செய்து முடித்துள்ளனர் என்று தெரியவந்தது.இதில் யார் சிறந்தவர்கள் என்று எப்படி தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. (Tamil stories)
கிளை மேலாளர் இருவர்களின் திறமையானது ஒன்றாகத்தான் உள்ளது என்று கூறினார். வேலை என பார்த்தால் இருவருமே சரிசமமாக உள்ளனர். நேரத்தை கடைபிடிப்பவன் என்று பார்த்தால் அது அப்பு மட்டுமே. குப்பு வேலையை செய்து முடிக்கிறான் ஆனால் நேரம் எடுத்துக் கொள்கிறான் என்று கிளை மேலாளர் கூறினார். ஆகையால் இந்த பணிக்கு அப்புவை தேர்வு செய்கிறேன் என்று கிளை மேலாளர் முடிவு செய்தார். அப்புவிற்கு வாழ்த்துக்கள் கூறி விட்டு குப்பு இங்கே வா என்று கூறினார். நீ நேரத்தை கடைப்பிடிக்கதால் இந்தப் பதிவிற்கு நீ தகுதியானவன் அல்ல என்று அப்புவை தேர்வு செய்தேன். என்று கூறினார். இனிமேலாவது நீ நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.(tamil stories)
சிறிதும் மனம் தளராமல் குப்பு அப்புவிடம் வாழ்த்துக்கள் கூறினான். உனக்கு பதவி வழங்கியதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்று குப்பு கூறினான். இருவருமே நல்ல நண்பர்களாக இன்று வரைக்கும் இருக்கின்றனர்.
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொண்டது என்னவென்றால் வாழ்க்கையில் நேரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. நேரத்தை மிகவும் துள்ளியமாக செலவழிக்க வேண்டும். தயவு செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். எந்த ஒரு செயலையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடவேண்டாம். உங்களால் முடிந்தால் அந்த செயலை அல்லது வேலையை அன்றே செய்து முடிக்கப் பாருங்கள். நாளை என்பது முடியாதவன் கூறும் வார்த்தையாகும். எந்த ஒரு செயலையும் நன்றே செய் அன்றே செய்.. என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து காட்டலாம். நேரத்தைக் கடைபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் கூட மற்றொருவரால் தட்டி செல்லப்படும். கடைசியில் வாய்ப்பு நம்மை விட்டுச் சென்று விட்டது என்று கலங்கி எந்த ஒரு பலனும் இல்லை. வாய்ப்பு என்பது ஒரு முறை மட்டும் தான் அதற்கு தயாராக இருங்கள்...
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்...
0 Comments
thanks for your comments