மனிதனை காப்பாற்றிய நாய்(Tami stories)
ஒரு ஊரில் கொம்பன் என ஒருத்தன் இருந்தான். அவனுக்கு தாய் தந்தை யாரும் கிடையாது. அந்த ஊரில் மற்றவர்கள் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்வான். இவன் தினசரி வாழ்க்கை என பார்த்தால் எதுவும் கிடையாது. மற்றவர்களுக்கு மிகவும் பயப்படுவான் மிகுந்த பயந்த குணம் உள்ளவன். இதனால் அங்குள்ள அனைவரும் கொம்பனை பயந்த பையன் என கூறுவர். ஆனாலும் கூட கொம்பன் மற்றவர்களுக்கு உதவிகளை அதிகமாக செய்வான். அந்த ஊரில் ஒரு சிலருக்கு இவனை பிடிக்கும் மற்றொரு சிலருக்கு பிடிக்காது. இவன் தூரத்தில் வந்தால் கூட விலகிச் செல்வர். இவனுக்கு நண்பண் என யாரும் அந்த ஊரில் கிடையாது.
tamil storiesஇவனது வாழ்க்கை இப்படியே சென்றுகொண்டிருந்தது ஒரு நாள் இரவு நமக்கு என்று யாரும் இல்லையே என்று நினைத்து வேதனை அடைந்தான். அன்று இரவு முழுவதும் தூங்காமல் நம்மை அடித்தால் கூட கேட்க யாருமே இல்லையே என்று வருத்தம் அடைந்தான். இதற்கு ஏதாவது மாற்று வழி செய்ய வேண்டும் என்று யோசித்தான். மறுநாள் காலை பொழுது விடிந்தது இவன் எப்பொழுது போல் மற்றவர்களுக்கு உதவி செய்த தொடங்கினான். அந்த ஊரில் அனைவரும் அவனை வேலைக்காக மட்டுமே பயன்படுத்துவர். அந்த ஊரில் ஒருவர் கொடுத்த வேலைக்காக அவன் வெளியூர் செல்ல நேர்ந்தது. அதன்படி அடுத்த நாள் அவன் வெளியூர் சென்று மூட்டைகளை இறக்கிவிட்டு நின்று கொண்டிருந்தான்.( Tamil stories)
அப்போது திடீரென ஒரு மரத்தின் பின்னால் ஒரு சத்தம் கேட்டது. மரத்தின் பின்னால் என்னதான் இருக்கிறது என்று சென்று பார்த்தான். அங்கு ஒரு நாய்க்குட்டி ஒன்று அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அது பசியால் துடித்துக் கொண்டிருந்தது. நாய்க்குட்டியை கண்டதும் கொம்பனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அதை ஏன் கத்துகிறது என்று கூட அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. சரி இதற்கு என்ன செய்வது என்று அருகில் உள்ள ஒருவரிடம் கேட்டான் அது பசிக்காக கத்துகிறது என்று அவர் கூறினார். மனம் கலங்கிய கொம்பன் அந்த நாய்க்குட்டிக்கு பால் வாங்கி ஊற்றினான் பாலை குடித்து விட்டு அந்த நாய்க்குட்டி இவனை அண்ணாந்து பார்த்தது.(tamil stories)
பிறகு கொம்பன் ஊருக்கு செல்லலாம் என்று பேருந்து நிலையத்திற்குச் சென்றான் அவன் பின்னாலேயே அந்த நாய்க்குட்டி வந்தது. இது எதற்கு பின்னால் வருகிறது என்று தெரியாமல் அவன் முழித்துக் கொண்டு இருந்தான். அவன் எவ்வளவு விரட்டியும் அந்த நாய்க்குட்டி அவனை விட்டு செல்லவில்லை. சரி என்று அந்த நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏறினார். ஆனால் பேருந்து நடத்துனர் நாய்க்குட்டியை ஏற்ற அனுமதிக்காததால் அவன் வேறு வழியில்லாமல் நாய்க்குட்டியை தூங்கிக்கொண்டே பத்து மைல்கள் நடந்தே சென்றான். ஒரு வழியாக அவனது ஊருக்கு வந்து அடைந்தான்.(tamil stories)
அவன் வசிக்கும் வீட்டுக்கு சென்றபோது அக்கம்பக்கத்தினர் கொம்பா எதற்கு இந்த நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு வந்தாய் உன்னைக் கவனித்துக் கொள்ளவே இங்கு ஆள் இல்லை. பிறகு எதற்கு இந்த நாய்க்குட்டி என்று வினவினர். ஆனால் கொம்பன் பரவாயில்லை எனக்கு இந்த நாய்க்குட்டி இருக்கிறது அந்த நாய்க்குட்டிக்கு நான் இருக்கிறேன் என்று கூறினான். அந்த நாய்க்குட்டிக்கு குட்டி என பெயர் வைத்தான். பிறகு அந்த நாய்க்குட்டிக்கு அவன் சாப்பிடும் சாப்பாட்டில் பாதி அளவு அந்த நாய்க்குட்டி கொடுத்தான். இப்படியே ஒரு சில காலங்கள் கழிந்தன நாய்க்குட்டி ஆனது வளர்ந்து பெரிய நாய்க்குட்டி ஆக மாறியது. குட்டி கொம்பன் மீது மிகவும் பாசமாக இருக்கும்.(tamil stories)
கொம்பன் எங்கிருந்து குட்டி என அழைத்தாலும் அது ஓடி வந்து அவன் முன்னால் நிற்கும். கொம்பன் மனதில் எவ்வளவு நாள்தான் இவ்வாறு ஊர் மக்கள் சொல்லும் வேலை செய்துகொண்டு அவர்களின் பின்னால் எத்தனை நாள்தான் வாழப்போகிறோம் என்று யோசித்தான். வேறு ஏதாவது வேலை தேடலாம் என்று யோசித்தான். ஒரு அரிசி மண்டியில் மூட்டை தூக்க சேர்ந்தான். இவன் கடின உழைப்பை கண்ட முதலாளி கொம்பனுக்கு உத்தியோகத்தில் காசோலையை சேர்த்து வழங்கினார். இவன் ஒரு கடின உழைப்பாளி தெரிந்துகொண்ட முதலாளி அவனைப் பற்றி மற்றவரிடம் பெருமையாகப் பேசுவார். ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்றாலும் கொம்பனை அழைத்து தான் முதலில் கூறுகிறார் அந்த அரிசி மண்டியில் கொம்பன் நல்ல உழைப்பாளியாக திகழ்ந்து வந்தான்.(tamil stories)
முதலாளி கொம்பனை பற்றி புகழ்ந்து பேசுவது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை.எப்படியாவது இந்தக் கொம்பனை விரட்ட வேண்டும் என்று நினைத்தனர். அதற்கு அவர்கள் சதி திட்டம் தீட்டினர். அன்று ஒரு நாள் இரவு இந்த அரிசி மண்டியில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒருவர் உடல்நலக்குறைவால் அன்று பணிக்கு வர முடியவில்லை. அதற்கு பதிலாக அன்று ஒருநாள் இரவு மட்டும் கொம்பனை காவல் பணி பார்க்கும்படி முதலாளி அன்பாக கூறினார். சரிங்க.. என்று கூறிவிட்டு கொம்பன் தனது காவலாளி பணியை பார்க்கத் துவங்கினான். கொம்பன் உடன் அவனது வளர்ப்புப் பிராணியான குட்டியும் கூட இருந்தது.
கொம்பனை பிடிக்காத ஒரு சிலர். இன்று இந்த அரிசி மண்டியில் திருட்டு போனால் கொம்பனனை தான் முதலாளி சந்தேகப்படுவார் என்று திட்டம் தீட்டினர். கொம்பன் ஒரு பயந்த சுபாவம் கொண்டவன் என்று அவர்கள் தெரிந்து கொண்டனர். ஆனால் அப்போது அவர்களுக்கு தெரியாது கொம்பனிடம் ஒரு தைரியமான பலசாலி இருக்கிறான் என்று. அரிசி மண்டியில் திருடுவதற்காக அவர்கள் சுவர் ஏறிக் குதித்தனர். இதைப் பார்த்த கொம்பன் அவர்களை பிடிக்க சென்றன். அவன் பின்னால் குட்டியும் சென்றது. அங்கிருந்த நான்கு பேரும் கொம்பனை கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாமல் கொம்பன் குட்டி என்னை காப்பாற்று என கதறினான்.
தூரத்தில் இருந்து ஓடி வந்த குட்டி அந்த நான்கு பேரையும் விரட்டியடித்தது 4 பேரின் கால்களையும் கடித்து குதறியது. கொம்பனை அடித்ததற்காக அந்த நான்கு பேரையும் ஓட ஓட விரட்டியது குட்டி நாயை கண்ட அவர்கள் தலைதெறிக்க ஓடினர். அவர்களை விரட்டி அடித்த பின் கொம்பன் இடம் வந்து அவனது கால்களை சுற்றி சுற்றி வந்தது. கொம்பன் நல்லவேளை குட்டி நீ என்னை காப்பாற்றினாய். முதலாளி நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் நீ காப்பாற்றினாய் என்று பெருமையாக கூறினார். காலைப் பொழுது விடிந்தபின் முதலாளியிடம் அனைத்தையும் கூறினான். முதலாளி கொம்பனையும் குட்டியையும் பாராட்டினர். பிறகு அந்த நான்கு பேரையும் வேலையை விட்டு அனுப்பினார். தற்போது வரை குட்டியும் கொம்பனும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அனைத்தும் நம் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
இந்த கதையை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
0 Comments
thanks for your comments