தங்கக்குதிரையும், முட்டாள் சிப்பாய்களும் (tamil kids stories)

தங்கக்குதிரையும், முட்டாள் சிப்பாய்களும்..( Tamil stories)

ஒரு ஊரில் நெடுமாறன் என மன்னர் ஒருவர் இருந்தார். அவர் எப்பொழுதும் தன் நாட்டு மக்கள் பற்றியே நினைத்து பார்த்துக் கொண்டிருப்பார். நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். மாதத்திற்கு ஒரு முறை தன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் நிலையை கேட்டறிவார். அவரது அரண்மனையில் பல சிப்பாய்கள் இருந்தாலும் ஒரு நான்கு முட்டாள் சிப்பாய்கள் இருந்தனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அந்த அளவுக்கு முட்டாள்களாக இருந்தனர். இதைப்பற்றி மன்னரும் அறிவார் ஆனால் அவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு காவல் பணியில் வைத்திருந்தார்.

                             (tamil kids stories)

மன்னர் ஒரு முறை தன் நாட்டு மக்களின் நிலையை அறிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஒரு காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது ஒரு முனிவர் ஒருவர் காலில் காயங்களுடன் படுத்திருந்தார். மன்னர் அந்த முனிவரிடம் சென்றபோது அவரது காலில் பாம்பு கடித்து இருந்தது தெரியவந்தது. இதை அறிந்த மன்னர் அந்த முனிவருக்கு முதலுதவி செய்து அவரது உயிரை காப்பாற்றினார். முனிவர் கண்விழித்து பார்த்தார். என்னை காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி என்று கூறினார். நான் தவத்தில் இருந்தபோது ஒரு விஷப் பாம்பு என்னை கடித்து விட்டது என்று கூறினார். நல்ல வேளை நீங்கள் என்னை காப்பாற்றி விட்டீர்கள் என்று முனிவர் கூறினார்.

மன்னா உங்கள் பெயர் என்ன என்று முனிவர் கேட்டார். முனிவரே எனது பெயர் நெடுமாறன் நான் இந்த நாட்டின் அரசன் என்று கூறினார். நீங்கள் மட்டும் என்னைக் காப்பாற்ற விட்டால் நான் அந்த இறைவனிடம் சரணடைந்து இருப்பேன் என்று முனிவர் கூறினார். என்னைக் காப்பாற்றிய உங்களுக்கு நான் ஒரு பரிசு தர விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார். பெரியவர்கள் சொல்லை தட்ட கூடாது என்பதற்காக மன்னர் தங்கள் விருப்பம் என்று பணிவுடன் முனிவரிடம் கூறினார். முனிவரின் சக்தியால் ஒரு தங்க குதிரையை அவருக்கு பரிசாக கொடுத்தார். இந்த தங்கக்குதிரை 21 நாட்களில் உயிர் பெறும் என்று கூறினார்.

இந்த குதிரை உயிர் பெற வேண்டுமென்றால் இதற்கு தினமும் பூஜை செய்து வரவேண்டும். எந்த ஒரு காரணத்தைக் காட்டிலும் பசும்பாலை இதன் மேல் ஊற்ற கூடாது என்றும் நான் 21 நாட்கள் கழித்து உங்களது அரண்மனைக்கு வருகிறேன் என்று முனிவர் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அரண்மனைக்கு வந்த மன்னர் தங்கத் குதிரையை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தார். அரண்மனையில் உள்ள நான்கு முட்டாள் சிப்பாய்கள் இதைப் பற்றி எதுவும் அவர்களுக்குத் தெரியாது. தினமும் பூஜை செய்ய வேண்டும் என்று மட்டுமே அவர்களுக்கு தெரியும். ஆனால் பாலை ஊற்ற கூடாது என்பது அவர்களுக்கு தெரியாது.

மன்னர் மீண்டும் ஒருமுறை தன் நாட்டு மக்களின் நிலையை அறிய சென்றார். மன்னரின் மனதில் ஒரு கேள்வி இந்தத் தங்கத் குதிரையால் என்ன பலன் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். மன்னர் தன் அரண்மனையை விட்டு வெகுதூரம் சென்றார். நாட்டு மக்களின் நலன்களை விசாரித்தார். 21 நாட்களில் 15 நாட்கள் முடிந்தன. மன்னர் மக்களை காண செல்ல வேண்டுமென்பதால் பூஜை செய்யும் பொறுப்பை தலைமை சிப்பாய் இடம் கூறிவிட்டு சென்றார். அதன்படி தலைமை சிப்பாயும் சிறப்பாக பூஜையை செய்து வந்தார்.  மன்னர் வருவதற்கு இன்னும் ஒன்பது நாட்கள் உள்ளன. அதுவரைக்கும் பூஜையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று தலைமை சிப்பாய் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார். அதன்படி பூஜையும் சிறப்பாக செய்து வந்தார்.

முனிவர் கூறிய 21-ஆம் நாள் முடியும் தினம் அன்று. மன்னரும் அன்று தன் நாட்டு மக்களின் நிலையை அறிந்து விட்டு வர வேண்டிய தருணம். முனிவரும் அன்று அரண்மனைக்கு வருவார். என்பதால் மன்னர் விரைவாக அரண்மனைக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்த நான்கு சிப்பாய்களும் சேர்ந்து அந்தக் குதிரைக்கு நாமும் பூஜை செய்யலாம் என்று கூறினர். தலைமை சிப்பாய் அவர்கள் மன்னர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யப் போனார். அந்த வேலை பார்த்து நான்கு முட்டாள் சிப்பாய்களும் பூஜை செய்கிறேன் என்று கூறிவிட்டு அந்த தங்க குதிரையின் மேல் பாலை ஊற்றி விட்டனர்.

பாலானது அந்தக் குதிரையின் மேல்பட்டதும் அந்த குதிரை ஆனது அப்படியே கரைந்து போனது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர் சிப்பாய்கள். அந்த இடம் பார்த்து தலைமை காவலாளி வந்தார். என்ன காரியம் செய்து விட்டீர்கள் என்று மிகவும் கோபமாக அவர்களைப் பார்த்து திட்டினார். யார் உங்களை பூஜைக்கு அழைத்தது என்று கூறினார். யாரும் எங்களை கூப்பிடவில்லை நாங்கள் தான் இந்த குதிரைக்கு பூஜை செய்ய வேண்டுமென்று விரும்பப்பட்டோம் என்று கூறினார். என்ன செய்வதென்று தெரியாமல் தலைமை காவலாளி விழித்துக் கொண்டிருந்தார். மன்னர் வருகிறார் என்று முழக்கமிட்டனர். மன்னர் அரண்மனையில் உள்ளே வந்தார். நேராக பூஜை அறைக்கு சென்றார்.

அங்கு குதிரையின் நிலையை பார்த்து மிகவும் கோபமடைந்தார். தலைமைச் சிப்பாய் அங்கு நடந்ததை கூறினார். இந்த முட்டாள் சிப்பாய்களை கோட்டையை விட்டு வெளியேற்றுங்கள் என்று மன்னர் கோபமாகக் கூறினார். அந்த நேரம் பார்த்து முனிவர் உள்ளே வந்தார். முனிவரே நீங்கள் சொன்னது போல் நாங்கள் பூஜை செய்து வந்தோம் ஆனால் இந்த முட்டாள் சிப்பாய்கள் பாலை ஊற்றி விட்டன என்று  மன்னர் கூறினார். சிறிதும் தளராத முனிவர் கவலைப்படாதீர்கள் மன்னா எல்லாம் ஒரு வித நன்மைக்காகத் தான் இருக்க வேண்டும் என்று பெருமையாக கூறினார். முனிவரே இருந்தாலும் அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று மன்னர் கூறினார். இவர்களை என்ன செய்வது என்று முனிவரிடம் மன்னர் கேட்டார்.

மன்னா சற்று பொறுமையாக இருங்கள் இந்தக் குதிரையைப் பற்றி நான் விளக்குகிறேன் என்று கூறினார். இந்தக் குதிரையை 21 நாட்களில் பூஜை செய்தால் உங்களுக்கு கோடான கோடி பொற்காசுகள் கிடைக்கும் என்பதால்தான் இந்தக் குதிரையை உங்களுக்குக் கொடுத்தேன். ஆனால் பொற்காசுகளை கண்டால் கண்டிப்பாக மனம் தளரும். உங்களின் மக்களை நீங்கள் கவனிக்க மறந்து இருப்பீர்கள். அதனால்தான் என்னவோ இந்த குதிரை உங்களுக்கு கிடைக்காமல் இந்த சிப்பாய்களால் குதிரை கரைந்துவிட்டது. இதுவும் ஒரு நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள் மன்னா என்று முனிவர் பெருமையாக கூறினார். இதைக் கேட்ட மன்னர் தங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி என்று முனிவரிடம் கூறினார். உங்களின் நல்ல மனதிற்கு நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் மன்னராக இருப்பீர்கள் என்று முனிவர் ஆசீ வழங்கினார். இந்த முட்டாள் சிப்பாய்கள் செய்த தவறால் உங்களுக்கு வரவேண்டிய  மாபெரும் தீமை உங்களை விட்டு விலகியது என்று கூறி விட்டு அங்கிருந்து முனிவர் புறப்பட்டு  சென்றார்.

இந்த கதையின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் நடக்கும் அனைத்து  நன்மைகளும் நல்லதாக இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் ஆனால் அந்த செயல்களுக்குப் பின்னால் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கும்.


Post a Comment

0 Comments