ஏழை விவசாயி ( Tamil stories)

ஏழை விவசாயி...( Tamil stories)

ஒரு ஊரில் குப்பன் எனும் விவசாயி ஒருவன் இருந்தான். மிகவும் நேர்மையானவன் யார் மனதையும் காயப் படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டான். அவனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய அளவு வருமானம் கிடைத்தாலும் அதை வீண் செலவு செய்யாமல் தன் குடும்பத்திற்காக கொண்டுபோய் சேர்ப்பான். குப்பனுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நமது குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதே அவன் ஆசை. தன் குழந்தைகளை படிக்க வைத்து பெரிய உயர் அதிகாரிகளாக கொண்டு வர வேண்டும் என்று தன் மனைவியிடம் அடிக்கடி கூறுவான். 

.            ( Tamil stories)

இப்படியே சில காலங்கள் போய்க்கொண்டிருந்தனர். தனது விவசாயத்திற்கு ஆறுகளில் வரும் தண்ணீரை மட்டுமே நம்பிக் கொண்டு இருப்பான். அவன் பயிரிட்டு இருந்தபோது திடீரென நீர்வரத்து என்பது குறைவாக ஆரம்பித்தது. நீர்வரத்து குறைவதைக் கண்ட குப்பன் பக்கத்து விவசாயிகளிடம் கேட்டான். ஆம் குப்பா எங்களது தோட்டத்திற்கும் நீர்வரத்து என்பது மிகவும் குறைந்து வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் நாங்களும் தவிக்கின்றோம் என்று மற்ற விவசாயிகள் கூறினர். இதே நிலைமை நீடித்தால் ஒரு சில வாரங்களில் பயிரானது முற்றிலும் கருகி விடும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனைக் கேட்ட குப்பன் மனமில்லாமல் அங்கிருந்து நடந்தான். (Tamil stories)

வீட்டிற்கு சென்று தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். குப்பன் மனைவி கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறினாள்.
என்ன செய்வது என்று தெரியாமல்  தவித்து கொண்டிருந்தான் . குப்பன் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் அனைத்தும் கருகும் நிலைமைக்கு வந்தது. பயிர்கள் கருகுவதை கண்ட குப்பன் மிகவும் வருத்தமடைந்தான். கோவிலுக்கு சென்றான்.  கடவுளிடம் தன் வேதனைகள் அனைத்தையும் கூறி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். மழைநீர் ஆவது வரவேண்டும் என்று மிகவும் வேதனை அடைந்து கூறினான். பயிர்கள் கருகுவதைக் கண்ட மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.(tamil stories)

குப்பன் அந்த விவசாயி செய்ததைப்போல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று  நினைத்தான். பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அந்த முடிவை மாற்றிக் கொண்டான். பிறகு அந்த ஊர் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டம் திரட்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆலோசித்தனர். அதன்படி அந்த விவசாயத்திற்கு என்று ஒரு கிணறு வெட்டலாம் என்று ஆலோசித்தனர். இதுவும் நல்ல யோசனை தான் என்று அங்கிருந்த அனைத்து விவசாயிகளும் கூறினர். நீர் வரத்து குறைந்துவிட்டது கிணறு வெட்டினால் எவ்வளவு அடி ஆழம் செல்லும் என்பது தெரியாது என்று விவசாயிகள் வினவினர். ஆனால் குப்பன் மட்டும் எவ்வளவு அடி சென்றாலும் பரவாயில்லை கண்டிப்பாக நான் கிணறு வெட்டுவேன் என்று கூறினான்.(tamil stories)

நீரோட்டம் பார்க்கும் ஒருவனை வைத்து  தண்ணீர் எந்த திசையில் செல்கிறது என்பதை பார்த்து அதன்படியே கிணறு வெட்டலாம் என்று கூறினார். நீரோட்டம் செல்லும் திசையை கண்டறிந்தனர். மறுநாள் முதல் குப்பன் கிணறு வெட்ட ஆரம்பித்தான். மற்ற விவசாயிகளும் சேர்ந்து குப்பனுக்கு ஆதரவாக கிணறு வெட்டினார். இப்படியே பல மாதங்கள் கழிந்தது அவர்கள் பயிரிட்டு இருந்த அனைத்தும் கருகின. கிணறு ஆனது 80 அடி ஆழத்திற்கு சென்றது ஆனாலும் கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று மனம் வருத்தம் அடைந்தனர். ஆனால் குப்பன் மட்டும் மனம் தளராமல் இன்னும் இருபது அடி ஆழம் தோண்டி பார்க்கலாம் என்று நினைத்தான்.(tamil stories)

மற்ற விவசாயிகள் அனைவரும் குப்பன் இடம் இது வேலைக்கு ஆகாது அதை விட்டு விட்டு வா என்று அனைவரும் கூறினர். ஆனால் குப்பன் நான் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறினான். இரவு பொழுது வந்தது அடுத்த 20 அடியை தோண்ட ஆரம்பித்தான். மற்ற விவசாயிகள் அனைவரும் சென்ற நிலையில் குப்பன் தனித்து குழியைத் தோண்டி கொண்டிருந்தான். 100 அடியை கடந்து குப்பன் தோண்டினான். போகப்போக மண் ஈரமாக வந்ததை குப்பன் அறிந்தான். மண் ஈரமாக உள்ளது கண்டிப்பாக நீர் இன்னும் சற்று  தோன்றினால் வந்துவிடும் என்று குப்பன் இன்னும் வேகமாக தோண்ட ஆரம்பித்தான். சற்று இருந்ததைவிட மண் மிகவும் ஈரப்பதமாக வந்தது. (Tamil stories)

100 அடியை கடந்து தோன்றியபின் மண் மிகவும் ஈரமாக வந்ததை அடுத்து குப்பன் மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளானான்.
தனது கடப்பாறையை எடுத்து மிகவும் வேகமாக குழியை தோன்றினான். திடீரென தண்ணீரானது அவன் முகத்தில் பீச்சி அடித்தது. குப்பன் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் வந்தவுடன் ஈரப்பதமான மண்ணை எடுத்து தன் முகத்தில் பூசிக் கொண்டான். தண்ணீர் மிக வேகமாக வந்தது மிகவும் ஆனந்தம் அடைந்தான். மறுநாள் காலை விடிந்தது குப்பன் என்ன செய்கிறான் என்று பார்க்க அனைத்து விவசாயிகளும் வந்தனர். அங்கு வந்த விவசாயிகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அந்தக் கிணற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததைக் கண்ட ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் ஆனந்தம் அடைந்தனர்.(தமிழ் கதைகள்)

குப்பன் எங்கே என்று அனைத்து விவசாயிகளும் தேடினர். பக்கத்தில் இருந்த கோவிலில் குப்பன் மண்டியிட்டு தெய்வத்திற்கு நன்றி கூறினார். குப்பனை கண்ட ஊர்மக்கள் தண்ணீர் வராது என்று நினைத்தோம் ஆனால் தண்ணீர் வருவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தோம் என்று அனைவரும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 120 அடி ஆழத்தில் தான் தண்ணீர் வந்தது என்று குப்பன் தெரிவித்தான். நமது ஊருக்கு தண்ணீர் வந்துவிட்டது என்று தெரிந்து அனைத்து ஊர் மக்களும் குப்பனை பாராட்டினர். தண்ணீர் வந்ததைக் கண்ட மக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.(தமிழ் சிறுகதைகள்)

பிறகு அந்த ஊரில் விவசாயம் செழிப்பாக நடக்க ஆரம்பித்தது. குப்பன்  தோட்டத்தில் பயிரிட்டு வழக்கம்போல் விவசாயம் பார்க்க ஆரம்பித்தான். அவர்கள் எப்போதும் பயன்படுத்தும் ஆற்றில் தண்ணீர் வந்தது கிணற்றில் நீர் ஆனது அதிகரித்தது. விவசாயிகள் அனைவரும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் மிகவும் ஆனந்தமாக விவசாயம் பார்க்க ஆரம்பித்தனர். 
கஷ்டமான சூழ்நிலையிலும் விடாமுயற்சியால் தனது ஊருக்கு தண்ணீர் கொண்டு வந்தான் குப்பன்.
அதேபோல் நாமும் எந்த ஒரு செயலை செய்தாலும் விடா முயற்சி என்பது இன்றியமையாதது. விடாமுயற்சி தான் வெற்றியைத் தேடித் தரும்.(தமிழ் விவசாய கதைகள்)

அனைத்து விவசாயிகளுக்கும் இந்த கதை சமர்ப்பணம்...

இந்தக் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்குப் பகிரவும்.
 

Post a Comment

1 Comments

thanks for your comments